Monday, June 29, 2009

வால்மீகி - அபிப்ராய பகிர்வுகள்

துணையை இழந்த அன்றில் பறவையின் ஓலம் திருடனாய் இருந்த வால்மீகியை ராமாயணம் எழுத வைத்தது. தன்னால் பாதிக்கப்பட்டவர்களின் ஓலத்தை எதிர்கொள்ள நேரிடுகிற திருடன் தானும் திருந்தி, தன்னைச் சார்ந்தவர்களும் திருந்தி வாழ வகை செய்யும் படம்தான் “வால்மீகி”. கேட்க நன்றாக இருக்கிற கதை. ஆனால், பார்க்க அப்படி இல்லை என்பதுதான் சோகம்.

ஒரு மசாலா கதையெனில் அதை எத்தனைச் சமரசங்களுடனும் எடுக்கலாம். ஆனால், ஒரு நல்ல விஷயத்தைக் கதையாக்கி வெற்றியும் பெற ஓரே வழி யதார்த்தத்தின் வழி நிற்பதுதான் என்பதை சமீபத்திய படங்கள் தொடர்ந்து நிரூபணம் செய்து வந்தாலும் அனந்தநாராயணன் போன்றவர்கள் அதை எப்படி கோட்டை விடுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

நேர்த்தியான திரைக்கதையோடும், யதார்த்தத்திற்கான உழைப்போடும் எடுத்திருக்க வேண்டிய படம். திரைக்கதை ஓட்டையினாலும், கிண்டர்கார்டன் நடிப்பினாலும் சிக்கல் பண்ணிவிட்டார்கள். அஜயன்பாலா மாதிரியான ஜாம்பவான்கள் யூனிட்டில் இருந்திருக்கிறார்கள். ஒருதடவை ஸ்க்ரிப்டை காட்டியிருக்கலாம்.

இளையராஜா தன் தோல்வியை பகிரங்கமாக ஓப்புக்கொண்டிருக்கிறார். அவரது காலம் மெள்ள முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால் பின்னூட்டத்தில் பக்தமகாஜனங்கள் அம்முவார்கள். அதற்காக சொல்லாமல் இருக்க முடியுமா?! ‘கூட வருவீயோ...’ எனும் கொடுமைக்கார பாடல் காட்சியில் ‘ஏம்மா...கூடத்தான் கொஞ்சம் போயேன்...எழவு ஏழரையைக் கொடுக்கிறானே...’ என முன்சீட்டில் முணுமுணுப்புகள் எழுந்தது. பாடல் காட்சிகளில் லேடீஸ் எழுந்து வெளியே போவதை முதன் முதலில் இந்தப் படத்தில்தான் கண்டேன். ‘என்னடா பாண்டியை...’ மட்டும் மூக்கால் பாடி நிமிர்த்தி இருக்கிறார் இசைஞானி!

அகில் இரண்டு படங்களை வெற்றிகரமாக முடித்தும் இன்னும் நடிக்கச் சிரமப்படுகிறார். கதாநாயகி ‘சைந்தவியை’ அவ்வப்போது நினைவுபடுத்துகிறார். அயோக்கிய கதாநாயகன்களைத் திருத்துவதற்காக நாயகிமார்கள் நாளது தேதிவரை பிரயோகித்து வந்த அறிவுரைகளனைத்தையும் பேசி...பேசி... சாகிறார். சாகடிக்கிறார்.

குழந்தைகளை வைத்துக்கொண்டு போடும் ‘கண்ணப்பநாயனார்’ நாடகக் காட்சிகள் இயக்குனரின் பேட்டை எதுவென்பதைக் காட்டுகிறது. நகைச்சுவை அந்தக் காட்சியோடு தேங்கிவிடுவது படத்திற்குப் பெரிய பலவீனம்.

செகண்ட் ஹீரோயின் மல்லூ வீடியோவில் வரும் முதிர்கன்னியைப் போல இருக்கிறார். கடற்கரையில் அவரைப் புரட்டி தொப்புளை கடல் மண்ணால் அடைத்து...உவ்வேக்...

அஜயன் பாலாவிற்கு நல்ல பாத்திரம். தன்மையாக நடித்திருக்கிறார். அவர் போடும் குத்தாட்டத்தைப் புன்னகையோடு ரசிக்க முடிகிறது. அவருக்காகவேனும் ஒருவாட்டி பார்க்கலாம்.

வால்மீகி – அனுபவக்குறை!

27 comments:

கோபிநாத் said...

\\அவரது காலம் மெள்ள முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது \\

காலங்களை கடந்து நிற்க்கும் இசைக்கு சொந்தகாரர் இசைஞானி. அவருக்கு இந்த காலம் அந்த காலம் எந்த காலங்களிலும் அவர் தான் ராஜா ;)

shabi said...

மார்க் போடலியா............

shabi said...

ME THE FIRST ...........................................

இரா.சிவக்குமரன் said...

\\அவரது காலம் மெள்ள முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது \\

எங்களது இரவு நேர துணைவன்/தோழன் அவர். அவர் சினிமாவில் அடைந்த சிகரம் போதும். இனி அவர் மற்றதில் (திருக்குறள்/இன்ன பிற)கவனம் செலுத்தினால் மிக சந்தோஷமாக இருக்கும்.

Deepa said...

//ஒரு மசாலா கதையெனில் அதை எத்தனைச் சமரசங்களுடனும் எடுக்கலாம். ஆனால், ஒரு நல்ல விஷயத்தைக் கதையாக்கி வெற்றியும் பெற ஓரே வழி யதார்த்தத்தின் வழி நிற்பதுதான் என்பதை சமீபத்திய படங்கள் தொடர்ந்து நிரூபணம் செய்து வந்தாலும் //

Well said

நேசமித்ரன் said...

புகைப்பட ஆல்பத்திற்கு மீசை வரைந்து பார்க்கும் குழந்தையின்

செயலைp போல பழைய ராகங்களுக்கு தூசுதட்டி பார்க்கிறார் போல இப்போதெல்லாம் இளையராஜா

நீங்கள் சொன்னாற்போல் அவர் காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது

கசந்தாலும் நிஜம் நிஜம் தானே..!

லவ்டேல் மேடி said...

கெலம்பீட்டாங்கையா ....... !!! கெலம்பீட்டாங்கையா ....... !! ஒரு க்ரூப்பாத்தேன் கெலாம்பீருக்கீங்க ......!!!

சென்ஷி said...

//
இளையராஜா தன் தோல்வியை பகிரங்கமாக ஓப்புக்கொண்டிருக்கிறார். //

அப்டியா....

Anonymous said...

//"செகண்ட் ஹீரோயின் மல்லூ வீடியோவில் வரும் முதிர்கன்னியைப் போல இருக்கிறார். "//

உன்னை ரொம்ம்ப நல்லவன்னு நினைச்சேனே .........

TAARU said...

செல்வா,
உங்கள் மனதின் விருப்பை நிறைய படித்து இருக்கிறேன்... [ குடும்ப வரலாறு தெரிந்து கொள்ளுதல் .. இன்னும் நிறைய] வாழ்த்துக்கள்..

எனினும் இந்த படத்தோட Background Score பாத்தீங்கன்னா நல்லாவே தெரியும் என் இளை [சை]யராஜா வின் ஆளுமை / வெற்றி... அத விட்டுட்டு தோல்வினு பேச ஆரம்பிக்காதீங்க... அப்படி ஒருக்கால் ராசாவோட காலம் முடிவுக்கு வருவதென்றால் இசையின் காலம் தான் முடிவுக்கு வந்துருச்சுன்னு எழுதணும்... அப்புடி வேணும்னா எழுதிடுங்கோ செல்வா...

அவரு தான் இசை... இசை தான் அவரு....
அவரை "இதுலேயே கிடடா" னு இறைவன் பணித்து இருக்கிறான்...
அதனால........... மிகை படுத்தி எழுத வேண்டாம்...

TAARU said...

மேலும் நாடோடிகள் படத்துல உங்களோட கருத்தை[ குடும்ப வரலாறு] அம்ம பயலுக அண்ணன். சமுத்திரகனி & சசிகுமார் ரொம்பவே அழகாக படமாக்கி இருக்காய்ங்க. அத பத்தியும் எழுதுங்க...
மேலும் நல்லா எழுத வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அய்யனார்.

கார்க்கி said...

நான் கடவுளும் நந்தலாலாவும் கேட்டிங்களா?

ஒரு படம் அவரின் முடிவை முடிவு செய்யுமெனில் அவர் நூறு முறை முடிந்தவர்.ஆயிரம் முறை பிறந்தவர்

வால்பையன் said...

//அஜயன் பாலாவிற்கு நல்ல பாத்திரம். தன்மையாக நடித்திருக்கிறார். அவர் போடும் குத்தாட்டத்தைப் புன்னகையோடு ரசிக்க முடிகிறது. அவருக்காகவேனும் ஒருவாட்டி பார்க்கலாம்.//

டி.வி.டி யில தானே!

ஸ்ரீதர் said...

\\அவரது காலம் மெள்ள முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது \\

sarithaan.

Raghavendran D said...

//இளையராஜா தன் தோல்வியை பகிரங்கமாக ஓப்புக்கொண்டிருக்கிறார். //

நீங்க ரொம்ப Late செல்வா.. இது நடந்து பல காலமாகுது..

Suresh said...

விமர்சனம் என்று போடாமல் அபிப்ராய பகிர்வுகள் :-)

சூப்பர் .

நாடோடி பார்த்தேன் படத்திற்க்கு 98/100 மார்க் போட்டு பதிவு போட்டு இருக்கேன் பார்த்திட்டு கருத்து சொல்லுங்க

நல்ல வேளை வால்மிகி நான் பார்க்கவில்லை விகடன் படம் என்றாலும் உண்மையை சொன்ன உங்களுக்கு ஒரு சபாஷ்..

//ஒரு மசாலா கதையெனில் அதை எத்தனைச் சமரசங்களுடனும் எடுக்கலாம். ஆனால், ஒரு நல்ல விஷயத்தைக் கதையாக்கி வெற்றியும் பெற ஓரே வழி யதார்த்தத்தின் வழி நிற்பதுதான் என்பதை சமீபத்திய படங்கள் தொடர்ந்து நிரூபணம் செய்து வந்தாலும் //

உண்மை

செல்வேந்திரன் said...

கோபிநாத், அவர் ராஜாவாகவே இருக்க வேண்டும் என்பதுதான் என் அவா.
ஷாபி, ஹீரோ பாண்டிதான் பலரோட முகத்துல மார்க் போடுறாரே...
வாங்க சிவா, அப்படியே முடியலத்துவ முன்னோடி திருமழிசை ஆழ்வாரையும் சேர்த்துக்கோங்க...
வாங்க தீபா.
வாங்க நேசமித்திரன்...யுவனும் ராஜாவின் பழைய பாடல்களை ஒரு தட்டு தட்டுகிறார் கவனித்தீர்களா?!
வாங்க லவ்டேல்
சென்ஷி!
யோவ் அணானி, மல்லூ வீடியோ பார்த்தா அவன் கெட்டவனா?!
வாங்க டாறு
கார்க்கி விடுய்யா...
வால், போலீஸ் புடிக்கும்.
வாங்க ஸ்ரீதர்
வாங்க ராகவேந்திரன்
வாங்க சுரேஷ்

Niyaz said...

செகண்ட் ஹீரோயின் மல்லூ வீடியோவில் வரும் முதிர்கன்னியைப் போல இருக்கிறார் - நானும் உணர்ந்தேன்....

Barari said...

TAARU PONDRA VERU ENTHA ISAIYAYUM ARIYAATHA KNMOODI RASIHARKAL IRUKKUM VARAI THAHARA SATHTHAM KETTU KONDU THAAN IRUKKUM.THAMIZANIN AATTU MANTHAI PUTHTHI SAAITHAAL ORE PAKKAM.

சுரேகா.. said...

ஷங்கரின் சிஷ்யரிடம் இன்னும் நிறைய எதிர்பார்த்தேன்!

ஏமாற்றிவிட்டார்.

சரியாத்தான் சொல்லியிருக்கீங்க!

நாஞ்சில் நாதம் said...

வால்மீகி - அபிப்ராய பகிர்வுகள் ம் ம் ம்

விகடனில் 41/100 மார்க் :)))))

பட்டாம்பூச்சி said...

Me the escapuuuuuu!!!!

Selvaraj Jegadheesan said...

"கதாநாயகி ‘சைந்தவியை’ அவ்வப்போது நினைவுபடுத்துகிறார்....

செகண்ட் ஹீரோயின் மல்லூ வீடியோவில் வரும் முதிர்கன்னியைப் போல இருக்கிறார்...."

ரசித்தேன்.

செல்வராஜ் ஜெகதீசன்
அபுதாபி

Anonymous said...

maila pottuyeedaaaaaa,


yenne kuubudalamalla

Anonymous said...

maila pottuyeedaaaaaa,


yenne kuubudalamalla

செல்வேந்திரன் said...

நியாஸ், பராரி, சுரேகா, நாஞ்சில் நாதம், பட்டாம்பூச்சி, செல்வராஜ் ஜெகதீஸன் வருகைக்கு நன்றி!

லதானந்த் said...

சூ[ப்பர் தல!