Saturday, September 5, 2009

கண் தானம்

நர்சிம் கண் தானம் குறித்து எழுதியிருந்த பத்தி எப்போதோ குறிப்பெடுத்து வைத்திருந்த கவிதையொன்றை தேடி எடுத்து பதிவெற்றத் தூண்டியது. வாசுதேவ் நிர்மல் எழுதிய சிந்தி மொழிக்கவிதையான இதை வைரமுத்துவின் தொகுப்பொன்றில் படித்த ஞாபகம். பெயர்தான் தெரியவில்லை.

கண் தானம்

நான்
இப்படித்தான்
உயில் எழுத விரும்புகிறேன்

நான் இறந்தவுடன்
என் கண்கள்
பார்வையற்ற ஒருவன் கண்களில்
பதிக்கப்பட வேண்டும்

இந்த
தங்க உலகத்தை
அவன் தரிசிக்க வேண்டும்

ஆடும் அலைகள்
கலர்ப் பறவைகள்
அப்பாவி வண்ணத்துப்பூச்சிகள்
மினுமினுக்கும் நட்சத்திரங்கள்
வானவில்லை பிரசவிக்கும் மேகங்கள்
அத்தனை அதிசயங்களையும்
அவன் தரிசிக்க வேண்டும்

அவன்-
மரணமடைந்தால்
அதே கண்களை
பார்வையற்ற இன்னொருவனுக்குப்
பதிக்க வேண்டும்
இப்படியாக
என் கண்கள்
ஊழியின் எல்லைவரை
யுகங் கடந்து வாழ வேண்டும்

என் கண்கள்
மரணத்தை
வெல்ல வேண்டும்.

கண்தானம் செய்ய இங்கே க்ளிக்குங்கள்.

13 comments:

மங்களூர் சிவா said...

nice!
thanks for the link.

D.R.Ashok said...

சிந்தி கவிதை அற்புதம் செல்வே.

கண் தானம் நர்ஸிமின் பதிவிலேயே பதியம் போட்டாச்சு.

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!!!!

எம்.எம்.அப்துல்லா said...

டெம்ப்ளேட்டில் உதய்சூரியன் நல்லா இருக்குண்ணா :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நல்லாயிருந்தது. பேராசைதான். தொடர் தானம் (குறைந்தபட்சம் இரண்டாவதாவது) சாத்தியமானதா?

SUMAZLA/சுமஜ்லா said...

//என் கண்கள்
மரணத்தை
வெல்ல வேண்டும்.//

நெகிழ்வு!

பித்தன் said...

பகிர்வுக்கு நன்றி செல்வா,

நான், மற்றும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும், கண்தானம் செய்ய எப்பொழுதோ பதிந்து வைத்திருக்கிறோம். இப்பொழுது உடல் தானத்தைப் பற்றி தீவிரமாக என் வீட்டில் உள்ளவர்களுடன் விவாதித்து வருகிறேன். இதில் சில பல சமுதாய, சம்ப்ரதாய சிக்கல்கள் இருப்பதாக பெற்றோர்கள் கருதுகின்றன.

கூடிய விரைவில் அவர்களை சம்மதிக்க வைப்பேன் என்று நம்புகிறேன்.

வால்பையன் said...

நல்ல கவிதை!

நா.இரமேஷ் குமார் said...

//எம்.எம்.அப்துல்லா said...
டெம்ப்ளேட்டில் உதய்சூரியன் நல்லா இருக்குண்ணா :)//
அப்துல்லா அண்ணன் கண்ணுக்கு உதயசூரியன் மட்டும் தான் தெரியும். அதான் தமிழ்நாடும் இன்னும் வெளங்கவேயில்லை!

மண்குதிரை said...

kavithai romba nalla irukku nanba

pakirvukku en nanri

நாஞ்சில் நாதம் said...

//என் கண்கள்
மரணத்தை
வெல்ல வேண்டும்//

நல்லதொரு எத்தனிப்பு.

Sadagopal Muralidharan said...

இந்த பதிவின் நோக்கத்திற்கும், அதையொட்டிய கவிதைக்கும் நன்றி செல்வேந்திரன்.

"நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு." - திருக்குறள்

க. தங்கமணி பிரபு said...

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது எறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm

அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm

என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!