விகடனும் நட்சத்திர உதிர்தல்களும்

I

விகடனில் இல்லாவிட்டாலும் அங்கே நிகழும் நட்சத்திர உதிர்தல்கள் பற்றி நண்பர்கள் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அது விகடனின் உள்விவகாரம் என்றாலும் உதிர்தல்கள் பற்றிய என் பொதுவான அபிப்ராயங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இன்றைய தேதிக்கு தமிழின் பிற ஊடகங்களிலும், திரையுலகிலும் கோலோச்சிக்கொண்டிருக்கிற மீடியா பெர்சனாலிட்டிகளில் விகடனின் தயாரிப்புகள் என என்னால் சுமார் நூறு பேரையாவது சொல்ல முடியும். இதன் பொருள் விகடனில் பணி செய்தால் திறமைசாலிகளாகி விடுவார்கள் என்பதல்ல. திறமையான நபர்களை அடையாளம் கண்டுகொள்வதில் விகடன் தவறுவதில்லை என்பதுதான். நட்சத்திரங்கள் நகரும்போது அவர்கள் புதிய நட்சத்திரங்களை உருவாக்குகிறார்கள்.

சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள், இணைய தளங்கள், புதிது புதிதாய் துவக்கப்படும் பத்திரிகைகள் என சந்தர்ப்பங்களின் சாளரங்கள் திறந்திருக்கிற சூழலில் இடம்பெயர்ச்சி சாதாரணமானது. நட்சத்திரங்கள் ஓரிடத்திலேயே தங்கி விடுவதில்லை.

எவர் இருப்பினும் இல்லாது போயினும் அன்றாடப் பணிகளும், வளர்ச்சிப் பாதையிலான பயணமும் தொடர்ந்து கொண்டிருப்பதும்தான் ஒரு அமைப்பின் ஆரோக்கிய அடையாளம். தங்களது இருப்பை வாசகர்களுக்குக் காத்திரமாக உணர்த்திக் கொண்டிருந்தவர்களில் பலர் இப்போது இல்லையென்றபோதும் விகடன் தயாரிப்புகளில் எவ்வித 'ஸ்லாக்கினெஸ்'ஐயும் காண முடியவில்லை.

வலைப்பூக்களில் அல்லது சிறு பத்திரிகைகளில் மட்டுமே இயங்கி வருகிற எழுத்தாற்றல் மிக்க பலரும் தங்களது திறனை நிரூபிப்பதற்கான தளம் உருவாகி இருப்பது கூடுதல் சிறப்பு. விகடன் என்றில்லாமல் பதிவர்களுள் பலர் பல்வேறு பத்திரிகைப் பணிகளில் பரிமளிப்பதைக் காணமுடிகிறது.

நட்சத்திரங்களின் ஒளிவெள்ளம் 757, அண்ணா சாலையில் மட்டும் இல்லாமல்... உயரே, உயரே சென்று ஒளிர்ந்தால்தான் விகடனுக்குப் பெருமை.

II

"நான் விகடனெல்லாம் படிக்கிறதே இல்லை, அட்டையைக் கிழிச்சிட்டா குமுதம், குங்குமம், விகடன் எல்லாம் ஒண்ணுதான், விகடனை பாத்ரூமில்தான் படிக்க முடியும்" வகையரா அறிவுஜீவி வெர்ஷன்களில் எனக்கு ஒருபோதும் ஏற்பில்லை. தமிழ் வாழ்வியலோடு இயைந்து இருக்கிறவர்கள் தவிர்க்க முடியாதது விகடன் என்பது என் அபிப்ராயம். அதன் மீதான கடுமையான விமர்சனங்கள் சர்க்குலேஷன் வளர்ச்சிக்குத்தான் உதவி இருக்கிறதே தவிர வீழ்த்தி விடவில்லை என்பதுதான் கடந்த காலங்களின் நிதர்சனம். ஆனால், பன்னிரு ஆண்டுகளாக விகடனின் வாசகன் என்கிற ரீதியில் அதன் உள்ளடக்கத்தில் நான் இழந்ததும், இழந்ததாகக் கருதுவதும் மிக மிக அதிகம்.

1) சுஜாதாவின் அனுபவக்குறிப்புகளான 'கற்றதும் பெற்றதும்' கொடுத்த சுவாரஸ்யத்தின் சுவை. அவரது மறைவுக்குப் பின்னர் அன்றாடங்களை ஓட்டிய அனுபவத் தொடர் இல்லாதது ஒரு குறை. இன்றைய தேதிக்கு இதற்கு 'ஆப்ட்'னான நபர் சாருநிவேதிதா!

2) சாரு, ஜெமோ, எஸ்.ரா, பிரான்ஸின் கிருபா போன்ற தீவிர இலக்கியவாதிகளை பெரும்வாசகத்திரள் அறிய ஒரு தளமாக இருந்தது விகடன்தான். இந்தப் பட்டியல்களில் விகடன் தவறவிட்டவர்கள் அல்லது இன்னும் பயன்படுத்தாமல் இருப்பவர்கள் அ.முத்துலிங்கம், கண்மணி குணசேகரன், வா.மு. கோமு, தியோடர் பாஸ்கரன், சுகுமாரன், பால் ஸர்க்காரியா....

3) குவாண்டனமோ சிறைக் கைதிகள் ரத்தத்தால் கடல் நுரையில் எழுதிய கவிதைகளை, குஜராத் கலவரத்தின் உண்மை முகம் காட்டும் அறிக்கையை, முகம்மது அப்சலின் நேர்காணலை இன்னும் எத்தனையோ விஷயங்களை உயிர்மையில் வாசிக்கிறேன். விகடன் மாதிரி ஜாம்பவான் நிறுவனங்கள் கொணர்கிற செய்திகளைக் காட்டிலும் பிரமாதமாய் தருகிறார் மனுஷ்யபுத்திரன்.

4) மணிரத்னம், பி.ஸி.ஸ்ரீராம், சந்தோஷ் சிவன், ரவி.கே. சந்திரன், கமல்ஹாசன், பாலுமகேந்திரா மாதிரி சினிமா ஜாம்பவான்களின் பேட்டிகளுக்குத்தான் ஆசைப்படுகிறேன். கஞ்சா கறுப்பு, வெற்றி கொண்டான், நமீதா போன்ற நிலைய வித்வான்கள் எரிச்சலூட்டுகிறார்கள்.

5) என்னைப் போல் முந்தாநாள் பெய்த மழையில் முளைத்தவர்களுக்கு கடந்த கால சுவாரஸ்யங்களை அறிய விகடன் பொக்கிஷம் ஒரு வாய்ப்பு. ஆனால், 'மணிமொழி நீ என்னை மறந்து விடு' என்பதெல்லாம் சமூக விரோதச் செயல்!

6) கூகிளாண்டவனின் வளர்ச்சிக்குப் பின் 'லாங் ஜம்ப்' அடித்து தாண்டுவது மதன் பதில்களைத்தான்.

7) கொடி மரத்தையும், பலி பீடத்தையும் கடந்தால் கருடாழ்வாரைச் சேவிக்கலாம். மேற்கில் ஏழு நிலைக் கோபுரம், கிழக்கே ஒன்பது நிலைக்கோபுரம் என்றெல்லாம் கோவிலின் 'ப்ளூ பிரிண்ட்'ஐ எழுதுவதற்குப் பெயரா ஆன்மீக தொடர்?! இதெல்லாம் உலகம் முழுக்க இருக்கிற கோவில்களின் பொதுவான அமைப்பு முறை. வேளுக்குடி பேசுகிறார், அனந்தபத்மனாச்சாரியாரின் உபன்யாசம் என்று எஸ்.எம்.எஸ்ஸினாலே மக்கள் போட்டது போட்டபடி கிளம்புகிறார்கள். காஷ்யபன்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கவேண்டிய காலம் இது!

8) தொட்டிலில் இருக்கும்போதே ஓஷோவையும், ஜிட்டுவையும் படித்தவர்களுக்கு 'சங்கரம் பிள்ளை' யாரென்பது நன்றாகவே தெரியும். ( இந்த 'இன்னோவெட்டிவ் சாமியாரின்' சமீபத்திய தத்துவத்தெறிப்பு "இப்போதும் நாட்டில் 65 சதவீத ஜனத்தொகை விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறது. இது எப்படி இருக்கிறது என்றால், 100 பேர் சாப்பிடுவதற்கு 65 பேர் சமைப்பதைப் போல இருக்கிறது. 100 பேர் சாப்பிட 8 அல்லது 10 பேர் சமைத்தால் பரவாயில்லை. 65 பேர் அதில் ஈடுபட்டால்? அரிதான மனித சக்தியை வீணாக விரயமாக்க்கும் இதை விட பெரிய முட்டாள்தனம் வேறு என்ன இருக்க முடியும்?" ஜனங்களின் வறுமையும், தேசத்தின் பஞ்சமும் இவர்களைப் போன்றவர்களுக்கு தெரிந்திருந்தால்தான் ஆச்சர்யமே... அவருடனா பஞ்சாயத்தை தனியாக வைத்துக்கொள்ளலாம்) நீண்டகால நிலைய வித்வான் போட்டியில் கவிஞர். வாலியைப் பின்னுக்குத் தள்ளிய பெருமை இவருக்கே!

9) கருணாநிதி எதிர்ப்பு அரசியல் நிலைப்பாடு என்பது எனக்கு கொள்ளை இன்பம். ஆனால், அதை ஜூவியோடு நிறுத்திக்கொள்ளாமல் விகடனில் எசப்பாட்டை தொடர்வது கொஞ்சம் சங்கடம்.

10) விகடன் சினிமா விமர்சனங்களின் நேர்மையில் கோட்டம் விழுந்து விட்டது. வாசகர்கள் தரமான விமர்சனங்களுக்குத் தவறாமல் நாடுவது 'பிளாக்குகளையே' என்பது ஞாநியின் அருள்வாக்கு. யதார்த்த நாயகனும் அதை வழிமொழிந்திருக்கிறார். 'ண்ணா'வின் படங்களை விமர்சனத்தில் வாரு, வாரென்று வாறிவிட்டு, மார்க்குகளையும் வாரி வழங்குவதில் விகடன் ஒரு வள்ளல் என்பதும் மாமுனியின் அபிப்ராயம்.

பட்டியலிடுவது என்று வந்து விட்டால் பத்து எண்ணிக்கையைத் தாண்டாமல் இருப்பது வலையுலக மரபு என்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

Comments

//'ண்ணா'வின் படங்களை விமர்சனத்தில் வாரு, வாரென்று வாறிவிட்டு, மார்க்குகளையும் வாரி வழங்குவதில் விகடன் ஒரு வள்ளல் என்பதும் மாமுனியின் அபிப்ராயம்.//

சகா, இது அவரை குறிக்குமென்றால் உங்கள் அப்சர்வேஷன் தவறு. 37,39,40.. க்டைசி மூன்று படங்களுக்கு விகடன் தந்த மதிப்பெண்கள்
செல்வேந்திரன்,
உங்கள் கருத்துக்களை தெளிவாக, நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
Ashok D said…
பத்தும் பாஸ். 10/10 :)
/) சுஜாதாவின் அனுபவக்குறிப்புகளான 'கற்றதும் பெற்றதும்' கொடுத்த சுவாரஸ்யத்தின் சுவை. அவரது மறைவுக்குப் பின்னர் அன்றாடங்களை ஓட்டிய அனுபவத் தொடர் இல்லாதது ஒரு குறை. //

ஈடில்லா இழப்பு...
//பட்டியலிடுவது என்று வந்து விட்டால் பத்து எண்ணிக்கையைத் தாண்டாமல் இருப்பது வலையுலக மரபு என்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்//

அப்போ இன்னும் நிறைய இருக்கோ....
Thamira said…
வெள்ளிக்கிழமை காலையில் கல்லூரி/அலுவலகம் செல்லும் முன்னரே வாங்கிவந்து கிளான்ஸ் பார்த்துவிட்டுதான் செல்லும் வழக்கம் 15 வருடங்களாக. மாலையில் வந்து கூட படிக்கபொறுமையிருக்காது. நைஸாக கல்லூரி/அலுவலகம் கொண்டு சென்று வாசிப்பதும் நடக்கும். அப்படி ஒரு அடிக்ஷன்.

சுமார் ஓராண்டாக நிலைமை அப்படியில்லை. விகடன் மாறிவிட்டதா? நான் மாறிவிட்டேனா என என்னால் நிஜமாகவே கணிக்கமுடியவில்லை. டிரெயினில் போகும்போது கூட விகடன் வாங்குவதற்குப்பதிலாக ராஜேஷ்குமார் நாவல் படிக்கலாம் (அவரும் இன்னும் அதையேத்தான் வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறாரா என பார்க்கலாமே) என்றே தோன்றுகிறது.

பட்டியலிட்டிருந்த அத்தனை விஷயங்களும் என் மனதிலிருப்பவை. ஜக்கி வாசுதேவ் மீது கொஞ்சம் மரியாதை உண்டு. அவரா இப்படிச்சொல்லியிருக்கிறார் என ஆச்சரியம் கொண்டேன். பிறகு விகடனின் சமீபத்திய கருணாநிதிக்கு எதிரான நிலை, உங்களைப்போல இல்லாமல் என்னை மிகவும் கடுப்பேற்றும் செயலாக இருக்கிறது.

(விகடனில் படைப்புகள் வர தொடர்ந்து முயற்சித்துவரும் வேளையில் ஒரு வளரும்(?) எழுத்தாளர்(?) இப்படியெல்லாம் எழுதலாம் இல்லையா? ஹிஹி.. செல்வா பதிவை அப்படி எத்தனை பேர் படித்துவிடப்போகிறார்கள் என்ற நம்பிக்கைதான்)
செல்வா...

உங்க பல கருத்துகளோட நானும் உடன்படறேன். அதையெல்லாம் நீங்க சொல்லியிருந்த விதமும் (ரைட்டப்) ரொம்ப ரொம்ப நல்லாருக்கு!
Unknown said…
அருமையான பதிவு செல்வேந்திரன்.
(சென்ற வருடம் விகடனில் ஒரு முறை என் கவிதைகளும் வெளிவந்திருக்கிறது)
மணிஜி said…
தீர்க்கமான அலசல் செல்வா...விகடன் வழுக்கி கொண்டிருக்கிறது(அட்டை வழவழப்பை சொல்லவில்லை)
selventhiran said…
சகா, ரசிகனாக இல்லாமல் நல்ல சினிமாவின் ஆர்வலனாக நீங்களே அந்த மார்க்குகள் சரிதானா என்று சொல்ல வேண்டும்.

அன்பின் வாசு, வருகைக்கு நன்றி!

வாங்க அசோக்

வருகைக்கு நன்றி சூரியன்

வாங்க பித்தன்

ஆமூகி, ஜக்கியின் இந்த வெர்ஷன் நடப்பு இதழ் காட்டுப்பூவில் கேள்வி பதில் பகுதியில் வெளியாகி இருக்கிறது. எழுத்தாளன் வாசகனும்தான். வாசகன் வாடிக்கையாளன். வாடிக்கையாளனின் புகாரும், எதிர்பார்ப்பும் நிறுவனத்திற்கு பலமா? பலவீனமா?

வாங்க பரிசல்!

வருகைக்கு நன்றி செல்வராஜ் ஜெகதீஸன்
//கஞ்சா கறுப்பு, வெற்றி கொண்டான், நமீதா போன்ற நிலைய வித்வான்கள் எரிச்சலூட்டுகிறார்கள்.//

எத வித்தவங்க?
//உங்கள் அப்சர்வேஷன் தவறு. 37,39,40.. க்டைசி மூன்று படங்களுக்கு விகடன் தந்த மதிப்பெண்கள்//


வெத்து பேப்பருக்கு அத்தனை மார்க் போட்டதே தப்புகிறார்னு நினைக்கிறேன்!
நல்ல சினிமா ஆர்வலன் என்றால் என்னால் எந்த தமிழ்ப்படத்தையும் பார்க்க முடியாது. நாடோடிகளிலும் குத்துப் பாட்டு உண்டு. நான் சொல்ல வந்தது விஜயின் படங்களுக்கு அவர்கள் குறைந்த ம்திப்பெண்களே வழங்குகிறார்கள்.37,39 எல்லாம் நல்ல மார்க்கா?

கந்தசாமிக்கு 42 தெரியுமா? கில்லி -45, திருமலை-43, போக்கிரி, சிவகாசி, சச்சின் -42. இதைப் பார்த்தால் கடைசி மூன்று படத்திற்கு சரியான மார்க்கைத்தான் தந்தாங்க. 37 கூட அதிகம்ன்னு நீங்க நினைச்சா, அது விகடனோட ஸ்கேல். எல்லோருக்கும் அப்படித்தான். விஜய் மீது எந்த கரிசனமும் இல்லை..
சகா, விகடனில் விசாரிச்சு சொல்லுங்க. கடந்த 6 ஆண்டுகளில் யாருடைய படம் முகப்பு அட்டையை அதிக முறை அலங்கரித்தது என்று..

அப்படி போடும்போது விற்பனை அதிகரித்தது உண்டா? விகடனும் மக்கள் டேஸ்ட்டே மகேசன் உணவு என்று செயல்படுபவர்கள்.. அதேத்தான் விஜயும் செய்கிறார். விஜயை பிடிக்காமல் போகலாம். ஆனால், அவரை தவிர்க்க முடியாது. மாஸ் இல்லை என்று ஒதுக்க முடியாது
Mothiyoci said…
ellam ok tan nanba... India vin perumpanmaiyana tholil vivisayam enpathil ungaluku ena kindal ? enaku puriyala?...
நான் படிக்கிற விகடன் நாணய விகடன் அதை பத்தி ஒன்னுமே சொல்லலையே நைனா
:))
Unknown said…
செல்வா...
நானும் விகடன் வாசகன்தான். சமீப காலமாக எரிச்சலடைந்து போயிருக்கும் வாசகன். விகடனைக் குறை கூறியிருக்கிறேன். ஆனால் உங்கள் கோணம் வித்தியாசமானது. சுஜாதா அம்பலத்தில் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லும்போது ஒரு முறை சொன்னார், “அறிவாளிகள், குறை கூறுவதோடு மட்டும் நின்றுவிடாமல் நிவர்த்திக்கவும் முயற்சிக்க வாழ்த்துகிறேன்” என்று.. அதை ஓரளவுக்கு செய்திருக்கீங்க சகா
Karthik said…
வீட்டில் விகடன் இன்னும் இருக்கிறது. ஆனால் அம்மாவே, 'ஆஸ்ட்ரேலியன் டீம் மாதிரி ஆயிட்டிருக்கு'ன்றாங்க. :(
Kumky said…
இந்த வீச்சைத்தான் ரொம்ப நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
10க்கு 10ம் பாஸ் செல்வா...
ஜக்கி விஷயத்தில் மாற்றுகருத்து உள்ளது.அது என்றாவது ஒரு நாள் நேரில்.

வா மு கோ மு வை விடுபட்ட பட்டியலில் கொண்டு வந்தமைக்கு நன்றி.

கோவை வருகையில் தனி டின்னர் தருகிறேன் செல்வா...என் பாணியில் அல்ல...உங்கள் பாணியில் ஓ கே வா.
ஆனா உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு செல்வா அண்ணே

:)
Karthikeyan G said…
REPLY FOR THAT SAAMIYAAR, If you are a capital-poor, labour-rich country, using more people in agriculture is not unproductive, it’s the best use of your resources. Using high-tech equipment which does away with people is, in those terms, a highly unproductive use of your resources.
அங்கே குட் ஷாட் தான்.இங்கே சிக்ஸர் செல்வா.சாதாரண சிக்ஸர் இல்லை. தலைவர் கங்குலி அடிப்பாரே, லாங் ஆனில் நூல் பிடித்து..அப்படியான சிக்ஸர் இது.
selventhiran said…
வாங்க வால்!

கார்க்கி, நான் பூடகமாக சொன்னதை நீங்கள் மகேசனின் டேஸ்ட் என்று பகிரங்கமாக சொல்கிறீர்கள். ஆனாலும் புள்ளி விபரப் புலி அய்யா நீர்!

சும்மா மற்றும் கார்த்திக்கேயனுக்கான பதில்:

நியாயமாக தனிப்பதிவு போடவேண்டிய அளவிற்கான விஷயம் இது. இந்தியா ஒரு விவசாய நாடு. நாம் உலகின் பசி போக்கியவர்கள். இன்றைக்கு உள்நாட்டுத் தேவையைக் கூட பூர்த்தி செய்ய துப்பில்லாதவர்களாக அரிசி எந்த நாட்டில், பருப்பு எந்த நாட்டில், கோதுமை எந்த நாட்டில் என விலை விசாரித்துத் திரிகிறது அரசாங்கம். இந்த நிலைக்கு முக்கியக்காரணம் விவசாயிகள் தங்களது குலத்தொழிலை விட்டொழித்ததும், விளைநிலங்கள் சீரழிக்கப்பட்டதும், நீர் ஆதாரங்களைப் பலப்படுத்துவதில் காட்டிய மெத்தனமுமே. நாடு எதிர்கொண்டிருக்கிற பஞ்சத்தை அறியாமல் இத்தனை பேர் விவசாயம் செய்ய வேண்டிய அவசியமென்ன என பசுமையின் ஆர்வலனாகத் தன்னைக் காட்டிக்கொண்டிருக்கிற ஒரு சாமியார் கேட்கிறாரே என்கிற என் கவலை உங்களுக்குப் புரியுமென நம்புகிறேன்.

மங்களூரார், உமக்கு உள்குத்து ஜாஸ்திய்யா!

கிருத்திகன் வருகைக்கு நன்றி!

கார்த்திக், உங்க அம்மாவின் பதம் அருமை!

ஆஹா, கும்க்கீ வருகிறார் என்றால் கொள்ளை இன்பம். எப்போது வருகிறீர்கள்?!

வாங்க நேசமித்திரன் கிண்டலுக்கு நன்றி!

நர்சிம், லாங் ஆனில் நூல் பிடித்து...ம்... ஏக்கம்தான் வருகிறது... 20-20 வரட்டும். வருகைக்கு நன்றி!
விகடனிடம் ஒரு அந்நியத்தன்மை
வந்துவிட்டதாக எனக்கு மட்டும்தான்
தோன்றுகிறதோ என்று நினைத்தேன்..

பரவாயில்ல !

ஊருக்குள்ள நிறையபேர்
வீட்டுப்பாடம் எழுதலை! :))


நல்ல வெளிச்சமிடல் நண்பரே!
Karthikeyan G said…
//நாடு எதிர்கொண்டிருக்கிற பஞ்சத்தை அறியாமல் இத்தனை பேர் விவசாயம் செய்ய வேண்டிய அவசியமென்ன என பசுமையின் ஆர்வலனாகத் தன்னைக் காட்டிக்கொண்டிருக்கிற ஒரு சாமியார் கேட்கிறாரே//


சாமியார் தவறாகத்தான் சொல்லியிருக்கிறார், அனால் நீங்கள் வேறுமாதிரி தவறாக புரிந்துகொண்டீர்கள் என தோன்றுகிறது.

அந்த சாமியார் போல பலரும் தவறாக சொல்லிக் கொண்டிருப்பது இதைத்தான் "நம் நாட்டில் 70 கோடி பேர் உற்பத்தி செய்பதை விட அதிகமாக அமெரிக்காவில் 5 கோடிபேர் உற்பத்திசெய்து விடுகிறார்கள். நாமும் இதைபோல் மனிதர்களுக்கு பதில் மெசின்களை உபயோகப்படுத்தி மனிதவளத்தை மிச்சப்படுத்தி அதை வேறு முறையில் பயன்படுத்தலாம்." இதற்கான பதில்தான் என் முந்தைய பின்னூட்டம்.
Unknown said…
அன்பு செல்வா நான் கிட்டத்தட்ட 35 வருடங்களாக விகடன் படித்துவருகிறேன்.. ஆனால் அசோகனை ஆசிரியராக போட்ட காலத்திற்கு பிறகு விகடனின் தரம் மிகவும் கீழிறங்கிவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ப. சீனிவாசன் அதை மாற்ற முயற்சி செய்கிறார் என்றாலும் பல தவறுகள் தொடர்ந்து செய்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். சினிமாவை மட்டுமே தங்களின் பத்திரிகை விற்பனைக்கான முக்கிய ஆயுதமாக வைத்திருக்கின்றனர். பேசாமல் சினிமா பத்திரிகையாகவே மாற்றிவிடலாம். அது மட்டுமல்லாது ஆங்கில கலப்பு மிக அதிகம். இருப்பதிலேயே இது தான் இருப்பதிலேயே மிகவும் மோசம்.
இதோட ஒரு நகல விகடனுக்கு அனுப்பி வச்சா அவுங்களும் யோசிப்பாங்கள்ள??
அதிலை said…
விகடன் டீம் சிதைந்து விட்டது .... அதான் இந்த அங்கலாய்ப்பு...
அசோகனை விட கண்ணனுக்கே (குறிப்பாக விஜய் ஜால்ரா) அதிக பங்கிருப்பதாக நினைக்கிறேன்...
பாத்து செய்ங்க பாஸ் ...
முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில், வெள்ளிக்கிழமை காலேஜ் முடிஞ்சவுடன், சைக்கிள் எடுத்துட்டுபோய் விகடன் வாங்கி படிக்காத வாரம் கிடையாது செல்வா.

மூன்றாம் மற்றும் இறுதி ஆண்டுகளில், வெள்ளிக்கிழமை காலையிலேயே விகடன் வாங்கி, சுவாரஸ்யம் தாங்காமல் லீவ் போட்டு FULL DAY படித்த நாட்களும் நிறைய.

இப்போதெல்லாம் விகடன் படித்து ஆறு மாதம் ஆகிறது... வேலை வெட்டி இல்லாத வெட்டியான பொழுதுகளில் கூட விகடனை படிக்க மனம் மறுக்கிறது... பல சமயம் கடைகளில் தொங்க விட்டுருக்கும் வால் பேப்பரை பார்ப்பதே கூட எரிச்சல் வருகிறது. எல்லா வெகுஜன பத்திரிக்கைகளும் வீழ்ந்த பிறகு கடைசியாக விகடனும் வீழ்ந்து விட்டது என்றே தோன்றுகிறது.

கிளாஸ்-ல நல்ல படிக்கற பையன் தப்பு பண்ணும் போது கிடைக்கும் தேர்ந்த ஆசிரியரின் அறிவுரையை போல் உள்ளது உங்கள் பதிவு. நன்றி செல்வா.

விழித்துகொள்ளுமா விகடன்????

வேண்டுகோள்:
விகடன் திருந்தாத பட்சத்தில், கிழக்கு பதிப்பகம் பழைய விகடனின் பார்முலாவை பின்பற்றி ஒரு வார இதழ் கொண்டு வரலாம். அதற்கான முயற்சியும், திறமையும் கிழக்கு-வசம் இருப்பதாக நம்புகிறேன்.

ஒவ்வாக்காசு.
Unknown said…
விகடனின் சமீபத்தைய இழப்புகளில் ராஜுமுருகன், நா.இரமேஷ்குமார், திலகவதி மூவர் அதிமுக்கியமானவர்கள். இவர்கள் விகடனை விட்டு விலகிய பின்னர், விகடனின் நிரூபர்கள் டேபிளிலேயே உட்கார்ந்து முழு பேட்டியையும் எழுதுகிறார்கள் என்பதாக மொத்த பத்திரிக்கையுலகிலும் பேசிக்கொள்கிறார்கள். வெளியேற்றுவது எல்லா அலுவலகத்திலும் நடைபெறுவது சகஜம். அதன் பின், திறமையானவர்களை வைத்து வெற்றிடத்தை நிரப்ப விகடன் தவறிவிட்டது.
//கும்க்கி said...
ஜக்கி விஷயத்தில் மாற்றுகருத்து உள்ளது.அது என்றாவது ஒரு நாள் நேரில்.//

மசினகுடிக்கு ஆறு டிக்கெட் போடலாமா?

செல்வா... ஆண்டவன் உம்மை ரட்சிப்பாராக!
த.செ.ஞானவேல், டி.அருள்எழிலன் மற்றும் சி.திலகவதி ஆகியோர் விட்டுச்சென்ற இடங்கள் இன்னும் விகடனில் நிரப்பப்படவில்லை. விகடன் படித்து ஆறு மாதம் ஆகிறது.... நல்லா இருங்கடே....

ஒவ்வாக்காசு.
இன்னுமா விகடனை நம்புறீங்க செல்வேந்திரன்?
இந்த ஊரு இன்னுமா விகடன நம்பிட்டு இருக்கு? நல்ல பத்திரிகை சீரளிஞ்சி போற ஆற்றாமை தான் உங்க பதிவு. உங்களுக்கு நேரடித்தொடர்பு இருக்கும் பட்சத்தில் விகடனுக்கு ஒரு பராதி எழுதி போடுங்க. (வியாபார உலகில அதல்லாம் செவிடன் காதுல ஊதுன சங்கு மாதிரி)

// நியாயமாக தனிப்பதிவு போடவேண்டிய அளவிற்கான விஷயம் இது. இந்தியா ஒரு விவசாய நாடு. நாம் உலகின் பசி போக்கியவர்கள். இன்றைக்கு உள்நாட்டுத் தேவையைக் கூட பூர்த்தி செய்ய துப்பில்லாதவர்களாக அரிசி எந்த நாட்டில், பருப்பு எந்த நாட்டில், கோதுமை எந்த நாட்டில் என விலை விசாரித்துத் திரிகிறது அரசாங்கம். இந்த நிலைக்கு முக்கியக்காரணம் விவசாயிகள் தங்களது குலத்தொழிலை விட்டொழித்ததும், விளைநிலங்கள் சீரழிக்கப்பட்டதும், நீர் ஆதாரங்களைப் பலப்படுத்துவதில் காட்டிய மெத்தனமுமே. நாடு எதிர்கொண்டிருக்கிற பஞ்சத்தை அறியாமல் இத்தனை பேர் விவசாயம் செய்ய வேண்டிய அவசியமென்ன என பசுமையின் ஆர்வலனாகத் தன்னைக் காட்டிக்கொண்டிருக்கிற ஒரு சாமியார் கேட்கிறாரே என்கிற என் கவலை உங்களுக்குப் புரியுமென நம்புகிறேன் //

உண்மை ரெம்பவே சுடுகிறது.
taaru said…
எப்பிடி [ஞாயிறை கை மறைப்பார் இல்..]
இருந்த வி-
இப்பூடி [#$#@%^&*()(*&^%$#@!#$%]
ஆயிடுச்சே?!!

"கருவாச்சி" "கற்றதும் பெற்றதும்" "16 வயதினிலே -விமர்சனம்" "வந்தா - வென்றா [ர்கள்]" etc., எல்லாம் போச்சே...

செல்வே,
இப்பெல்லாம் "வி" ய பாத்தா வீல் ல் ல் ல்...
selventhiran said…
தண்டோரா வருகைக்கு கொஞ்சம் லேட்டான நன்றி

புரிதலுக்கும், புரிய வைத்தமைக்கும் நன்றி கார்த்திகேயன்

சுந்தர்

பிரேம்

அதிலை

ஒவ்வாக்காசு

சுகுமாரன்

பரிசல்

தங்கமணி

நாஞ்சில் நாதம்

டாரு

சுரேகா

வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி
விகடனின் தீவிர வாசகன் நான். இங்கு பின்னூட்டமிட்டுள்ள பெரும்பாலானவர்களின் நேர்மறை அனுபவங்கள் எனக்கும் உண்டு. ஆனால் சமீப காலமாக விகடனில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் , மேலோட்டமாகப் புரட்டியவுடன் அதைத் தூக்கி வீசவே தூண்டுகின்றன. சந்தாவை நிறுத்தி விடலாமென்றால் , வீட்டினருக்காகத் தொடர வேண்டியிருக்கிறது. பாரம்பரியமாகக் கட்டிக்காத்த பெருமையை , விரிவான வாசகர் கூட்டத்தை விகடன் இழந்து கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனம்.
விகடனின் தீவிர வாசகன் நான். இங்கு பின்னூட்டமிட்டுள்ள பெரும்பாலானவர்களின் நேர்மறை அனுபவங்கள் எனக்கும் உண்டு. ஆனால் சமீப காலமாக விகடனில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் , மேலோட்டமாகப் புரட்டியவுடன் அதைத் தூக்கி வீசவே தூண்டுகின்றன. சந்தாவை நிறுத்தி விடலாமென்றால் , வீட்டினருக்காகத் தொடர வேண்டியிருக்கிறது. பாரம்பரியமாகக் கட்டிக்காத்த பெருமையை , விரிவான வாசகர் கூட்டத்தை விகடன் இழந்து கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனம்.
Rajan said…
//கந்தசாமிக்கு 42 தெரியுமா? கில்லி -45, திருமலை-43, போக்கிரி, சிவகாசி, சச்சின் -42. இதைப் பார்த்தால் கடைசி மூன்று படத்திற்கு சரியான மார்க்கைத்தான் தந்தாங்க. 37 கூட அதிகம்ன்னு நீங்க நினைச்சா, அது விகடனோட ஸ்கேல். எல்லோருக்கும் அப்படித்தான். விஜய் மீது எந்த கரிசனமும் இல்லை..///வீராசாமிக்கு போட்டத விடவா ! மத்த கதை எதுக்குங்க எஸ் எம் எஸ் படத்த டைட்டானிக் லெவலுக்கு தூக்கிபிடிச்சு சன் டிவி லெவலுக்கு காமெடி பண்ணி ........ ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா !
சாரு ஜெமோ எல்லாம் வந்து சொல்வதெல்லாம் உண்மை !, செய்யாததை செய்யுன்னு ஆரம்பிக்கரவரைக்கும் பழக்கத்துக்காக பதினஞ்சு ரூவா செலவு பண்ணலாம் ( நம்மூர்ல தான்யா பழக்கத்துக்காக பாலிடால் கூட குடிப்போமே !)

Popular Posts