Wednesday, September 30, 2009

காஸ்ட் கட்டிங் காதல் !




ரிசஷன், ஸ்லோ டவுன் பஞ்சாயத்துக்கள் விடுகிற பாடில்லை. விலைவாசி உயர்வும் குறைகிற பாடில்லை. 'காஸ்ட் ஆஃப் லிவிங்'கைப் போலவே ஏகிறிப் போயிருக்கிறது 'காஸ்ட் ஆஃப் லவிங்'கும். கலவரத்தில் இருக்கும் காதல் மன்னர்களின் அவசரகால நிதி நெருக்கடியை அரசாங்கம் கண்டு கொள்ளாததால் காதல் செலவினங்களை கட்டுக்குள் வைக்க அசத்தலான யோசனைகளை வழங்கி இருக்கிறோம். இவை உண்மையான காதலர்களுக்கும், காதல் எனும் பெயரில் கழிசடைத்தனம் செய்வோர்களுக்கும் பொதுவானவையே!

வீக் எண்ட் வீக்கம் குறைய

காதலியோடு கிளம்புவதற்கு முன் ஆர்.சி புக், லைசென்ஸ், இன்ஸூரன்ஸ் பேப்பர்களையெல்லாம் பத்திரமாக வீட்டிலேயே வைத்துவிட்டுக் கிளம்புங்கள். வெள்ளுடை வேந்தர்கள் மறிக்கும்போது 'சத்தியமா காசு இல்ல சார்... வண்டியை வேணா வெச்சுக்கோங்க...' என்று உருண்டு புரண்டு கதறுங்கள். ஐய்யோ பாவம் என்று அப்போதைக்கி நம்ம ஜிகிடி காசு கொடுத்து 'காதல் வாகனத்தை' மீட்டுக்கொடுக்கும். அப்பாலிக்கா எப்பவாவது 'அவுட்டிங் போலாமான்னு' கேட்டுப்பாரு....

சினிமா இனிமா

'ஆர்.கேதான் என் தலைவன்னு' ரத்தத்தில் அடித்துச் சத்தியம் பண்ணுங்க... திருவண்ணாமலை, மருதமலை, மலை மலை, அழகர் மலைன்னு மலைவாழ் மனிதனா மாறி அடுத்தடுத்து கூட்டிப்போய் அதகளப்படுத்துங்க... சினிமான்னாலே பொண்ணு இனிமா ஆயிடும்.

இண்டர்வெல் கார்டு போடுறதுக்கு பத்து நிமிஷத்துக்கு முன்னாடியே 'பாஸ் லைன்ல இருக்காருன்னு...'செல்போனோட ஜகா வாங்கிடுங்க... பாப்கார்ன் கொள்ளையர்கள் பட்டறையை எடுத்து வச்சதுக்குப் பிறகு உள்ளே போய் 'ஹனீ, பாப்கார்ன் இல்ல... பன்னுதான் இருக்காம்...!'

பக்தி ஸ்பெஷல்

உபன்யாசம், ஹரிகதா, நாமசங்கீர்த்தனம்னு எங்கே எது நடந்தாலும் இழுத்துக்கிட்டுப் போங்க... பக்திதான் என் சக்தின்னு உளறுங்க... 'வேயுறுதோளிபங்கன் விடமுண்ட கண்டன்னு' மிட் நைட்ல மெஸெஜ் அனுப்புங்க...'ஆஹா... பையன் அகோரி ஆயிட்டா'ன்னு பாப்பா பறந்துடும்.

இஸபகலா

கவியரங்கம், இலக்கியக்கூட்டம் தொடங்கி ஓய்வு பெற்ற நூலகருக்கு பாராட்டு விழா வரைக்கும் ஒரு எலக்கியக் கூட்டத்தையும் மிஸ் பண்ணிடாதீங்க. 'பின் நவீனத்துவத்தின் உள்ளீடற்ற வெளிகளில் நிகழும் கட்டற்ற பிரதியானது இஸங்களின் பொருண்மைத் தத்துவத்தைப் பகடி செய்வது குறித்த நுட்ப அவதானிப்பு இல்லாதவனெல்லாம் என்ன எழுத்தாளனென்று' ஆத்திரமாக வாதாடுங்கள். ரிபரன்ஸூக்கு 'பாழி' மாதிரி பயங்கரவாத நாவல்களை வைத்துக்கொள்ளுங்கள். அப்புறம் பாருங்க சாயங்காலம் 'ஸ்பெஷல் கிளாஸ்' இருக்கும்பா பொண்ணு... இதுக்கு மேலயும் தாக்குப்பிடிக்கிற தாட்சாயிணிகளுக்கு இருக்கவே இருக்கிறது எம்.எல்.எம் மீட்டிங்!



காபிபோஸா

கக்கத்துல ஒரு பிளாஸ்க்கும், கையில ஒரு சமஹன் பாக்கெட்டுமாவேத் திரியுங்க... பாப்பா பவளவாய் திறந்து 'லெட் அஸ் ஹேவ் எ காஃபி'ன்னு கேட்டதும் 'கோகேய்ன் ரொம்ப பித்தம்... சுண்டிப்போகும் ரத்தம்... சுக்குக்காப்பித்தான் சுத்தம்'னு டண்டணக்கா போடுங்க...

டேஞ்சர் டேட்டாஸ்

மிஸ்டு கால் கொடுக்கிறது ஒரு வகையான மன வியாதின்னு ருத்ரன் பேட்டி கொடுத்திருக்கிறார். ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் டான்சில் வளர்ந்து அதுவே கேன்சராகிடும் அபாயம் இருக்கிறது என்று வெர்ஜினியா பல்கலைக்கழகம் கண்டு பிடித்திருக்கிறது. ஹேர் ஸ்பிரே யுஸ் பண்ணின பல பேருக்கு மூளைக் கொதிப்பு வந்துள்ளது என போர்பர்ஸில் போட்டிருக்கிறான். லிப்ஸ்டிக் போட்டால் குடல் புண் வரும்னு ஈ-மெயில் வந்ததுன்னு களேபர கலவர டேட்டாக்களை அரை மணி நேரத்திற்கு ஒருக்கா சொல்லிக்கிட்டே இருங்க...

டிரஸ்

துணிதான் காதலுக்கு சனி. ஆடைகளைப் பரிசளிக்கிற காதல்கள் அரைக்காதல்கள். எதுவும் நிலைத்ததில்லையென செண்டிமெண்ட் புரூடா விடுங்கள். அப்படியும் கேட்காத கிளிகளுக்கு பத்து வருஷத்துக்கு முன்னாடி வந்த படையப்பா சுடிதாரை எடுத்துக்கொடுங்கள்.

பப்பராக்கா பஃபே

டிஸ்கொதேக்கு இழுத்துக்கிட்டு போற அல்ட்ரா அழகு சுந்தரியா?! கவலையே வேண்டாம். பஃப்புக்குள்ள நுழைஞ்சதும் கர்ச்சீப்பை எடுத்து நெத்தியில கட்டிக்கிட்டு 'அண்ணாத்தே ஆடுறார்... ஒத்திக்கோ... ஒத்திக்கோ'ன்னு குத்தி எடுத்துறுங்க... அடுத்தடுத்து அஞ்சலை சாங்குக்கு ஆடினீங்கனா பயவுள்ள... எழவுக்கு ஆடுறவன்னு பட்சி பறந்துடும்.

கிரேட் எஸ்கேப்பூ

பிறந்த நாள், நியூ இயர் என மடிக்கு வெடி வைக்கும் நாட்களில் கவனமாக கண் காணாத இடங்களில் அப்ஸ்ஹாண்ட் ஆவது நல்லது. கால் பண்ணினா 'ஸ்வைன் ப்ளூ' சிம்டம்ஸ் இருக்குன்னு சொல்லுங்க. ஒரு மாசம் ஆனாலும் பார்ட்டி உங்களைத் தேடாது.

மவனே காஸ்ட் கட்டிங் ஐடியா தர்றேன்னு காதலையே கட்டிங் பண்ண பாக்கேறியேடா பாவிங்கறீங்களா...! லூஸ்ல விடுங்க பாஸூ...!

டிஸ்கி: 30-09-09 தேதியிட்ட குமுதம் இதழில் வெளியான 'காஸ்ட் கட்டிங் காதல்' எனும் எனது விநோத வஸ்துவின் கரட்டு வடிவம். இப்படி எழுதியதற்காக 'இரண்டு பாட்டியாலா சுடிதார்கள்' அபராதம் என்கிறாள் கேண்டி!

25 comments:

ச.பிரேம்குமார் said...

ஆ.வி.ய விட்டு குமுதத்திற்கு தாவியாச்சா? ம்ம், இந்த கட்டுரை எழுதியதற்கு கேண்டி உம்மை போண்டி ஆக்கக்கடவது ;)

D.R.Ashok said...

//'வேயுறுதோளிபங்கன் விடமுண்ட கண்டன்னு' மிட் நைட்ல மெஸெஜ் அனுப்புங்க//
வாய்விட்டு நிறைய பேர் சிரித்துயிருப்பர்.

காதல் கட்டிங் ஐடியாஸ்.

கார்க்கி said...

குமுதத்தில் பேர் பார்த்தவுடன் சந்தேகம். ஆனால் செல்வா சாயல் இல்லையே என்று நல்லவர் ஒருவரிடம் உறுதிப்படுத்திக் கொண்டேன்.

சுடிதார் எங்க வாங்க போறீங்க சகா?

சுடிதார் வாங்க எங்க போறீங்க சகா?

ஒரே அர்த்தம்தான் இல்ல? தமிழ் வாழ்க..

பித்தன் said...

செல்வா நல்லா தானே இருந்தீங்க..... நானும் ஒன்னுக்கு பத்து தடவை உங்கள் தளம்தானான்னு உத்து உத்து பார்த்து கன்பீஸ் ஆனேன். நமக்கு இந்த கருமம் பிடிச்ச லவ்வு எப்பவுமே வரலே. ஒரு சந்து போந்து விடாம அலைஞ்சும் எந்த ஜந்தும் என்ன ஏறெடுத்தும் பார்க்கலே. அதனாலே ஆகையாலே.... அதாகப் பட்டது...... லூசா இருக்கும் பித்தன் இத லூஸ்ல விட்டுட்டான்....

சூரியன் said...

/இண்டர்வெல் கார்டு போடுறதுக்கு பத்து நிமிஷத்துக்கு முன்னாடியே 'பாஸ் லைன்ல இருக்காருன்னு...'செல்போனோட ஜகா வாங்கிடுங்க... பாப்கார்ன் கொள்ளையர்கள் பட்டறையை எடுத்து வச்சதுக்குப் பிறகு உள்ளே போய் 'ஹனீ, பாப்கார்ன் இல்ல... பன்னுதான் இருக்காம்...!'//

ஹி ஹி ஹி இஹ்ஹி..

Anonymous said...

//அப்படியும் கேட்காத கிளிகளுக்கு பத்து வருஷத்துக்கு முன்னாடி வந்த படையப்பா சுடிதாரை எடுத்துக்கொடுங்கள். //

அப்படி ஒண்ணு வந்துச்சா என்ன!!

(படையப்பா வந்தப்போ நான் இந்தியாவுல இல்லை)

ஜெட்லி said...

//'ஆர்.கேதான் என் தலைவன்னு' ரத்தத்தில் அடித்துச் சத்தியம் பண்ணுங்க... திருவண்ணாமலை, மருதமலை, மலை மலை, அழகர் மலைன்னு மலைவாழ் மனிதனா மாறி அடுத்தடுத்து கூட்டிப்போய் அதகளப்படுத்துங்க... //

நல்லா ஐடியா அண்ணே.....

ஆனா நீங்க கடைசியில் சொன்ன
மாதிரி... பொண்ணு நம்மளை உட்டு
ஓடி போய்டும்.....

மங்களூர் சிவா said...

அபராதம் ரொம்ப கம்மியா இருக்கே!
:))

taaru said...

ஓம் வேயுறுதோளிபங்கன் விடமுண்ட கண்டன் துணை...
இன்னிலிருந்து "செல்வே தான் என் தலைவன்..." இது சத்தியம்.. சத்தியம்...
செலவே இல்லாத ஐடியாவெல்லாம் அருமை தலைவா..

வாழ்த்துக்கள் "விநோத வஸ்து" வுக்கு.

அதுக்காக "பாட்டி யாலா" சுடிதாரா? நெம்ப வயசானதோ? எப்பிடி???

நேசமித்ரன் said...

பிகர் பிச்சிட்டு போய்டுமே பாஸு!
குமுதம் தாவிடீங்களா நல்லது வாழ்த்துக்கள் !

KaveriGanesh said...

வாழ்த்துக்கள் செல்வா.

Deepa (#07420021555503028936) said...

//மங்களூர் சிவா said...
அபராதம் ரொம்ப கம்மியா இருக்கே!
//

:-) repeat!

வால்பையன் said...

திருமணம் ஆன பின் ”ஜூலி கணபதி” படத்துக்கு கூட்டிட்டு போனேன்!

அதன் பின் சினிமா என்றாலே பூரிகட்டையை பார்க்கிறாள்!

காதலுக்கு பிரச்சனையேயில்லை!

3 ருபா பார்க் டிக்கெட்
மூன்று மணிநேர கடலை!

Karthik said...

ஆஹா! :)

ஸ்ரீ said...

சரிதான்...:-)))))))))))))))))

RaGhaV said...

//காஸ்ட் கட்டிங் காதல் !//
எப்படித்தான் யோசிபீங்களோ..?!!!

பட்டையை கிளப்புகிறது பதிவு..
வாழ்த்துக்கள் செல்வா.. :-)))

ஆதிமூலகிருஷ்ணன் said...

இதுவும் நல்லாத்தானிருக்குதுபா.. ஆனா டிபிகல் வாரயிதழ் ஃபார்மெட். கொஞ்சம் மாத்திருக்கலாமோ?

யோசனைகளை விடவும் படங்களின் ரசனை தூக்கல்.!

யாழினி said...

:)

kalapria said...

அத்தனையும் ஒரே சமயத்தில யோசிச்சதா...தூளான ஃப்ளோவா இருக்கு....எதுக்கும் சித்தனாதன் ஜவ்வாது விபூதி ஒரு பாக்கெட் வங்கி வச்சுக்கிட்டு இதெல்லாம் பண்ணலாம் போனால் போகட்டும் போடான்னு பூசிக்கிட்டு போகர்ட்ட போயிரலாம்...

Kirubanandhini said...

நியாயமானவரா இருந்தா, இதே போல யோசனைகளைப் பொண்ணுங்களுக்கும் அடுத்த பதிவுல சொல்லுங்க, பார்ப்போம்!

பட்டாம்பூச்சி said...

வாழ்த்துக்கள் செல்வா :)))
Thanks for the message too :)

K said...

dear selventhiran,

i enjoy reading blogs but not a regular visitor to anybody.this is my first comment on a blog.one of ur ideas says something about coffee...its caffiene n not cocaine,cocaine is a drug. i checked all the comments but there was no corrections, so far.just for ur info but hope tat was a spelling mistake.keep writing. cheers...Joy.

செல்வேந்திரன் said...

யோவ் பிரேமு, சாபம் ஒரு பூமராங்!

வாங்க அசோக்.

வார்த்தை விளையாட்டில் நீயொரு பார்த்திபன் சகா!

பித்தன், காமெடி வருமான்னு டிரை பண்ணிப்பார்த்தேன். வரல...

வாங்க சூரியன்

வாங்க சின்ன அம்மிணி, படையப்பா சுடிதார் பல பேரை படாதபாடு படுத்திச்சு...

வாங்க ஜெட்லி

மங்களூரார் ஏன் இந்த கொலவெறி

வாங்க ட்றாரு... எப்படிய்யா உச்சரிக்கிறது 'தாரு' ஓக்கேவா :))

நேசமித்திரன், தாவ என்ன இருக்கிறது. கிடைக்கிற இடத்துல எழுதிக்க வேண்டியதுதான்.

வாங்க காவேரி கணேஷ்

தீபா, அதுக்கே 2,750/-க்கு ஓலை கொடுத்திட்டான் (எனக்கு ஒரு டிசர்ட் ரூ.100/- ஜீன்ஸ் ரூ.400/- :( )

வால், ஜூலி கணபதியாய் இருக்கப் போய் பூரிக்கட்டையோடு தப்பித்தீர். விஜய் படமென்றால் விளைவைக் கற்பனை செய்து பாரும்...

வாங்க கார்த்திக்

வாங்க ஸ்ரீ

வாங்க ராகவ்

வாங்க ஆமூகி, காமெடி என் பேட்டை இல்லை போலருக்கு...

வாங்க யாழினி

ஹா ஹா கலாப்ரியா சார்... சூப்பர்

கிருபாநந்தினி, சொல்லிட்டாப் போச்சு

வாங்க பட்டாம்பூச்சி

கே - வருகைக்கும் சுட்டியமைக்கும் நன்றி. தாங்கள் சொல்வதுதான் சரி. தகவல் பிழை.

SiSulthan said...

////////இண்டர்வெல் கார்டு போடுறதுக்கு பத்து நிமிஷத்துக்கு முன்னாடியே 'பாஸ் லைன்ல இருக்காருன்னு...'செல்போனோட ஜகா வாங்கிடுங்க...//////////

என் ஐடியாவ எப்படி கண்டுபிடிச்சீங்க?
நான் எப்பவும் குறிப்பிட்ட டைமுக்கு செல்லில் அலாரம் செட் பண்ணிவிட்டுதான் சந்திப்பேன், பதினைந்தாவது நிமிசத்தில் அலாரம் அடிக்கும், செல்லை எடுத்து ”எஸ் பாஸ் , ஐ ஆம் ஆன் த வே???”
எஸ்கேப்..................

Arangasamy.K.V said...

இந்தனையும் தாண்டிதானே கேண்டி ?

நல்லாருக்குப்பா :)