Friday, October 9, 2009

இலக்கிய ஏஜென்ட் - 007


மதனும், ராவும் இணைந்து 'சூரியக்கதிர்' என்றொரு பத்திரிகையை கொணர இருப்பதாகவும், நாமக்கல் தொழிலதிபர் ஒருவர்தான் தயாரிப்பாளரென்றும் யட்சினி சொல்லியது. நவம்பரின் மத்தியில் சந்தைக்கு வரலாம் என்கிறார்கள். புதிது புதிதான பத்திரிகைகளின் வருகை ஆரோக்கியமானதுதான். எல்லா பத்திரிகைகளிலும் நமக்கு வேண்டியவர்களும், வேண்டாதவர்களும் எழுதுகிறார்கள். அப்-டேட்டாக இருக்க எல்லாவற்றையும் வாங்கித்தான் ஆகவேண்டி இருக்கிறது. பாக்கெட் பணால் ஆகிறது.

***

எதிர்வினை அல்லது மாற்று அபிப்ராயங்களுக்கான பேட்டையாக வலை ஒரு போதும் இருந்ததில்லை. வேறெந்த ஊடகங்களிலும் இல்லாத கட்/காப்பி/பேஸ்ட் வசதி இருப்பதனால் எழுதியவன் கேட்கிற நேரடி கேள்விகளை வசதியாக மறந்து விட்டு... ஏதேனும் சில வரிகளையோ, வார்த்தைகளையோ காப்பி, பேஸ்ட் செய்து சித்து விளையாட்டைக் காட்ட வசதியாக இருக்கிறது.

***

நண்பர் ஆர்.ஆர் அமெரிக்காவாசி. பதிவில் எப்போதோ குறிப்பிட்டிருந்த ஸ்டீபன் ஹாக்கின்ஸ் புத்தகத்தை ஞாபகம் வைத்திருந்து வரும்போது வாங்கி வந்ததில் எனக்கு ஏக மகிழ்ச்சியும் பெருமையும். எழுத்தூக்கம் முற்றிலும் வடிந்து தேக்க நிலையில் இருக்கும்போது கிடைக்கும் இதுமாதிரியான பரிசுகள் உற்சாகம் கொள்ள வைக்கின்றன.

***

கார்லோ புரூனியைப் பற்றி ஜொள்ள ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது. ஜாக்குலின் கென்னடிக்கு அடுத்து அழகால் புகழ் பெற்ற அதிபரின் மனைவி. தன்னுடைய அறக்கட்டளை வகைக்காக வளைதளம் ஒன்றைத் திறந்துள்ளார். ரசிக மகா ஜனங்களின் வசதிக்காக

***

நடுக்காட்டில் குடியிருப்பு, சதா பெய்து கொண்டிருந்த மழை, கழுதைப்புலியோடு ஒரு சந்திப்பு, யானைக்கூட்டம் சுற்றி வளைப்பு, வாகனம் சேற்றில் சிக்கிக்கொண்டது, கொஞ்சூண்டு ரத்தம் சிந்தியது என 'ரியல் அட்வெஞ்சர்' டூராக இருந்தது பொக்காபுரம் பயணம். அடர்கானகப்புலியாக இருந்து சமவெளி மானாக மாறிவிட்ட அய்யனார், உமா கதிர், சிவக்குமரன் மற்றும் வெயிலானோடு வனம் புகுந்தது அற்புத அனுபவம்.

இந்தக் காட்டிற்கு நான் செல்வது இது ஐந்தாவது முறை. ஒவ்வொரு முறையும் காடு புதிது புதிதான ரகசியங்களை எனக்காக அவிழ்க்கிறது. காடு குறித்த புரிதல்களும், காட்டின் மீதான நெருக்கமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. காட்டில் வாழ வேண்டும் என்கிற என் ஆதி வெறியைக் கொஞ்சமேனும் தீர்க்க உதவிய வெயிலானுக்கு அழுத்தமான அன்பு முத்தங்கள்.

கழுதைப்புலிகள் குறித்தும் யானைகள் குறித்தும் கடந்த தினங்களில் திரட்டிய தகவல்களைக் கொண்டு இரு கட்டுரைகளை மும்முரமாக எழுதி வருகிறேன்.

***

இணையத்தில் சோவாறிக்கொண்டிருந்தபோது கனடாவில் வசிக்கும் ஈழத்துக் கவிஞர் மயூராவின் வலைப்பூவைக் கண்டறிந்தேன். எளிய மொழியில் எழுதப்பட்ட மென்மையான கவிதைகள் எனக்குப் பிடித்திருந்தது. அதே சமயத்தில் ஈழம் தொடர்பான கவிதைகளில் ஆத்திரமும் அருமையாக வெளிப்பட்டு இருக்கிறது. குறிப்பாக 'எனக்கும் உங்களுக்கும் நீண்டதொரு வழக்கு உண்டு' என்ற நெடுங்கவிதையை கந்தகுரு கவச த்வனியில் வாசிக்க... பக்தி இலக்கியத்தில் மயூராவின் கல்வியும், மொழியில் அவருக்கு இருக்கும் லாவகமும் புலப்படுகிறது.

***

புதிய தலைமுறையின் முதலிரண்டு இதழ்களும் சூடான பக்கோடாவைப் போல விற்றுத் தீர்ந்திருக்கின்றன. ஆனால், இதை வைத்துக்கொண்டு அதன் எதிர்காலத்தை தீர்மானித்துவிட முடியாது என தோன்றுகிறது. இதழின் அமைப்பும் உள்ளடக்கமும் முழுக்க முழுக்க இளைஞர்களை... குறிப்பாக கல்லூரி மாணவர்களை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டிருக்கிறது. கல்லூரி மாணவர்களை பத்திரிகைகள் வாங்க / படிக்க வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்தாம் முடிந்திருக்கின்றன.

முன்னணி கடைகளில் விசாரித்த வரையில் புத்தகத்தை கேட்டு வாங்கிச் செல்வது என்னைப் போன்ற கிழ போல்டுகள்தாம். எர்கோ, காலேஜர் போன்ற இளமை இதழ்களைப் போல இன்னும் கொஞ்சம் இளகு தன்மை இருந்தால் தேவலை என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம்.

பெப்ஸி, கோலா, ஜீன்ஸ், ஸ்டெட், பல்ஸர் போல 'புதிய தலைமுறை'யும் இளைஞர்களின் அடையாளம் ஆனால் மட்டுமே சர்குலேஷன் ரீதியான வெற்றியை பெற முடியும் என யூகிக்கிறேன்.

14 comments:

butterfly Surya said...

"007"

Good.

பிரபாகர் said...

செல்வா,

லேசாக தொப்பை தெரிகிறது. எக்சர்சைஸ் பண்ணுங்க பாஸ்... பதிவில் இருக்கிற மேட்டர விட்டுட்டுட்டு போட்டோவுக்கு கமென்ட் போடுற லொள்ள பாரு, எகத்தாளத்த பாருன்னு ஆச்சி ஸ்டைல் ல முனுமுனுக்கறது கேட்கிறது. யானைப்புலி, ச்சை, கழுதைப்புலி, யானை பற்றி சீக்கிரமா பதிங்க. ஆவலா இருக்கிறோம்.

புதிய தலைமுறை கண்டிப்பாய் வெற்றி பெரும் என எண்ணுகிறேன். well begun half done என சொல்லுவார்கள். அந்த வகையில் ஆரம்ப வெற்றி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என எண்ணுகிறேன். விலையும் குறைவு என்பது பெரிய ப்ளஸ் பாய்ண்ட்.

பிரபாகர்.

தண்டோரா ...... said...

விளம்பரம் தூள் பறத்துகிறார்கள்..கிட்ட தட்ட ஒரு சி..விஷயம் இருந்தால் நிலைக்கும்....

taaru said...

//எனக்கும் உங்களுக்கும் நீண்டதொரு வழக்கு உண்டு//
நல்லதோர் நெடுங்கவிதை...
எனக்கே புரிகிறதே...!! பின்பு எரிகிறது... :-(...

ப்ரொபைல் போட்டோ - 16-வயதினிலே
நீயா நானா - "யூத்-செல்வே"
இந்தப்பதிவு போட்டோ- கிழ போல்டு...

//லேசாக தொப்பை தெரிகிறது..// லேசா இல்லண்ணே!! நல்லாவே தெர்து..

பிரபலமானவங்கன்னாலே ஒரே தொல்லையப்பா...
பிகர மைண்டைன் பண்ணு..
வயிர மைண்டைன் பண்ணுன்னு... ஒரே குஷ்டமப்பா...

வால்பையன் said...

பயண கட்டுரைக்காக ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறேன்!

Karthik said...

அந்த ஸ்டீபன் ஹாக்கிங்க் புக் டைட்டில் சொல்லியிருக்கலாமே..

//கல்லூரி மாணவர்களை பத்திரிகைகள் வாங்க / படிக்க வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்தாம் முடிந்திருக்கின்றன.

எத்தனையோ விஷயங்களை நெட்டில் படிக்கிறோம். தகவல்கள் மட்டும் இல்லை. நிறைய கட்டுரைகள் கூட. ஆனா எந்த பத்திரிக்கை எடுத்தாலும் பத்து நிமிஷம்தான் படிக்க முடியறது. :(

பித்தன் said...

007 கிழ போல்ட், உண்மையாவே தொப்பை கட்டிக் கொடுக்கிறது.....

மங்களூர் சிவா said...

ரைட்டு!

☼ வெயிலான் said...

தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லையே ;)

முரளிகண்ணன் said...

சூரியக்கதிருக்கு விண் நாயகனுக்கு ஏற்பட்ட கதி ஏற்படாமல் இருக்க வாழ்த்துகிறேன்.

ஸ்ரீ said...

நல்ல பதிவு,ஆனா ஏதோ குறையிற மாதிரி தெரியுது.எனக்கு மட்டும்தானா?

ஆப்பு said...

ஐ எம் பேக்!! (*****ஆப்பு*****)
http://evandapirabalam.blogspot.com/2009/10/blog-post.html

விக்னேஷ்வரி said...

ரொம்ப அப்டேட்டா இருக்கணும்னு படிக்காம இருக்குறதுக்கும் சேர்த்து வாங்கி வைக்காதீங்க.

கேட்கிற நேரடி கேள்விகளை வசதியாக மறந்து விட்டு... ஏதேனும் சில வரிகளையோ, வார்த்தைகளையோ காப்பி, பேஸ்ட் செய்து சித்து விளையாட்டைக் காட்ட வசதியாக இருக்கிறது. //
உங்கள் ஆதங்கம் புரிகிறது. விஷயத்தைப் புரிந்து கொள்ளாமல் வீண் வாதம் செய்யும் மூடர்களை மன்னியுங்கள். இல்லையெனில் அது உங்கள் வளர்ச்சியைப் பாதிக்கும்.

பதிவில் எப்போதோ குறிப்பிட்டிருந்த ஸ்டீபன் ஹாக்கின்ஸ் புத்தகத்தை ஞாபகம் வைத்திருந்து வரும்போது வாங்கி வந்ததில் எனக்கு ஏக மகிழ்ச்சியும் பெருமையும். //
அதுக்காக டெல்லியிலிருந்து வரும்போதெல்லாம் ஒன்னும் வாங்கிட்டு வர முடியாது.

ரொம்ப ஜொள்ளுறீங்க போல. அம்மிணி கேண்டி கொஞ்சம் இந்தப் பக்கம் வாங்கம்மா.

வெயிலானுக்கு அழுத்தமான அன்பு முத்தங்கள். //
வெயிலான் பாவம்ப்பா. விட்டுடுங்க. :)

செல்வேந்திரன் said...

சூர்யா, அது சமீபத்தில் கிடைத்த பாராட்டு.

பிரபாகரன், எனது தொப்பையைக் கரைக்க அரும்பாடு படுகிறேன். ஆனால், கோழிகளைக் கண்டால் பாய்ந்து விடுவதால் விலைவாசி மாதிரி எகிறிக்கொண்டே இருக்கிறது வயிறு... உங்கள் வாய் முகூர்த்தப்படி புதிய தலைமுறை வெற்றி கண்டால் மகிழ்ச்சிதான்.

தண்டோரா அண்ணே நீங்க ஒரு புள்ளிவிபரப் புலி!

வாங்க தாரு...

வாங்க வால்!

ஆமாம் கார்த்திக், நெடுங்காலமாக பத்திரிகைகள் கடைபிடிக்கும் டெம்ப்ளேட் சமாச்சாரங்கள் சலிப்பை ஏற்படுத்தத்தான் செய்திருக்கின்றன...

ஆமாம் பித்தன், எப்படிக் குறைப்பதுன்னு யோசனைகள் கொடுங்க... ரொம்ப கவலைப்படறேன்.

மங்களூரார் ரை... ரை...

வெயிலான், த.இ.அ - 1 வழங்கிய பட்டமல்லவா அது...?!

முரளி உங்களுக்கு அபார நினைவு சக்தி

ஸ்ரீ விமர்சனங்களுக்கு நன்றி.

வாங்க ஆப்பு... என்னைப் பத்தியெல்லாம் எழுதினீங்க... குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் பாயும்... :)

விக்கி, கலாய்ப்புக்கு நன்றிகள்.