சொந்த விஷயங்கள்

இணைய வசதிக்காக தட்டழிந்தேன். ரிலையன்ஸ், ஏர்டெல், பி.எஸ்.என்.எல் என அனைவரும் கை விரிக்க கட்ட கடைசிக்கு 'போட்டான் பிளஸிடம்' சரணடைந்தேன். பின்னே நான் ஒருத்தன் பதிவு எழுதாவிட்டால் தமிழ் என்ன ஆகும்?!

***

ஜனவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் திருப்பத்தூரில் இருக்க தலைப்பட்டிருக்கிறேன். திருப்பத்தூர் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த பதிவுலக அன்பர்கள் பாதுகாப்பான இடங்களில் பதுங்கிக் கொள்ளும்படி எச்சரிக்கப்படுகிறார்கள்.

***

முடியலத்துவத்தின் தங்கை சிரியலிஸம் மலர்ந்திருக்கிறாள். கடந்த இரு மாதங்களாக மல்லிகை மகள் இதழில் கவிதைத் தொடர் வெளியாகி வருகிறது. ஒரு சாம்பிள்:


முதுமை

காலா, என்னருகே வாடா!
ஓர் இருக்கை தருகிறேன்
கொஞ்ச நேரமேனும்
பேசிவிட்டுப் போடா...!

இதெல்லாம் ஒரு கவிதையான்னு கேட்டு யாரும் முஷ்டியை முறுக்கப்படாது.

***

'காலசர்ப்ப தோஷம்' இருக்கிறது என்று ஜோதிட சிகாமணிகள் கட்டையைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். சுவாமி ஓம்காரை துரத்தி பிடித்தேன். "அதெல்லாம் ஒன்றும் பயப்படத் தேவையில்லை கருணாநிதி, ரஜினிகாந்த், ராகுல் காந்தி என வி.ஐ.பிக்களுக்கு மட்டுமே வருகின்ற ஹை-கிளாஸ் தோஷம் அது. 33 வயதிற்குப் பின் முடியலத்துவத்திற்கு சர்வதேச அந்தஸ்து கிடைக்கும்" என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.

***

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கென எங்களது நிறுவனம் சார்பாக "ப்யூச்சர் பெர்ஃபெக்ட்" என்றொரு நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. அடியேனும் ஒரு பேச்சாளனாக கூட்டத்தோடு கோவிந்தா போட்டு வருகிறேன்.

ஆங்கிலத்திற்கு இணையாக அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழியாக ஸ்பானிஷ் மாறி வருகிறது. அதற்கு காரணம் மெக்ஸிகோவிலிருந்து நிகழும் இடப்பெயர்வு என்பதை விளக்கும் பொருட்டு "அமெரிக்காவிற்கு கீழேயுள்ள நாடு எது?" என்று மாணவர்களிடம் கேட்டேன்.

"பாகிஸ்தான்" என கோரஸாக பதில் வந்தது.

டெக்னிக்கலி ராங்! பொலிட்டிக்கலி ரைட்!

Comments

//டெக்னிக்கலி ராங்! பொலிட்டிக்கலி ரைட்!/
இப்படி கூட முடிச்சு போட்டு விடலாமா?
RaGhaV said…
//நான் ஒருத்தன் பதிவு எழுதாவிட்டால் தமிழ் என்ன ஆகும்?!//
நெத்தியடி.. ;-)

//"பாகிஸ்தான்" என கோரஸாக பதில் வந்தது.//
சூப்பர் காமெடி..

//சிரியலிஸம்//
வாழ்துக்கள்.. :-)
வாங்க வாங்க! இடைவெளி சாஸ்தியா போச்சு! அரியர்ஸோட காம்பென்சேட் பண்ணிடுங்க!
வாழ்த்துக்கள்!
கருணாநிதி, ரஜினிகாந்த், ராகுல் காந்தி - இவர்கள் எல்லாம் என் மேல் மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள் ;)
Raju said…
அக்டோபர் மாத குங்குமத்தில் பக்கத்துக்கு ஒன்னுன்னு கவிதை எழுதியிருந்தீங்களா செல்வா..?
அது நீங்களா..?
after a very long time. athu sari neenga ezhuthaamaa vittaa tamil enna aavurathu
Ashok D said…
ரொம்ப நல்லா இருக்கு... கவிதை மாதிரி குட்டி குட்டியா.. அழககழகா.. சுவையா..... கடைசிவரி :)
//'காலசர்ப்ப தோஷம்' இருக்கிறது என்று ஜோதிட சிகாமணிகள் கட்டையைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். சுவாமி ஓம்காரை துரத்தி பிடித்தேன். "அதெல்லாம் ஒன்றும் பயப்படத் தேவையில்லை கருணாநிதி, ரஜினிகாந்த், ராகுல் காந்தி என வி.ஐ.பிக்களுக்கு மட்டுமே வருகின்ற ஹை-கிளாஸ் தோஷம் அது. 33 வயதிற்குப் பின் முடியலத்துவத்திற்கு சர்வதேச அந்தஸ்து கிடைக்கும்" என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.//


நான் தான் அப்பவே சொன்னேன்ல, உங்களுக்கு சினிமாவுல நடிக்க வாய்ப்பு கிடைக்கும்னு!

”இணையதளபதி” செல்வேந்திரன் வாழ்க!

பட்டத்துக்கு காப்பிரைட் வாங்கிகோங்க!
//"அமெரிக்காவிற்கு கீழேயுள்ள நாடு எது?" என்று மாணவர்களிடம் கேட்டேன்.

"பாகிஸ்தான்" என கோரஸாக பதில் வந்தது.

டெக்னிக்கலி ராங்! பொலிட்டிக்கலி ரைட்!//

அப்ப சீனாவுக்கு கீழே உள்ள நாடு இலங்கை!

சரியா!?
//டெக்னிக்கலி ராங்! பொலிட்டிக்கலி ரைட்!//

சரிதான்.:-)))
//'காலசர்ப்ப தோஷம்' //

காலம்பூரா பொண்டாட்டி ரொம்ப கடிக்கும் போல.

:)
//பின்னே நான் ஒருத்தன் பதிவு எழுதாவிட்டால் தமிழ் என்ன ஆகும்?!//
அதானே...........

//டெக்னிக்கலி ராங்! பொலிட்டிக்கலி ரைட்!//
சூப்பர் :)
மீ த பர்ஸ்ட் :D :D
//டெக்னிக்கலி ராங்! பொலிட்டிக்கலி ரைட்!//

இது செல்வேந்திரன்

விட்ட குறை தொட்ட குறை எல்லாம் வட்டியோட வேணும் தலைவரே
Unknown said…
ரொம்ப காக்க வச்சுப் போட்டீர்
//டெக்னிக்கலி ராங்! பொலிட்டிக்கலி ரைட்! ///

;-)
Thamira said…
எம்.எம்.அப்துல்லா said...
//'காலசர்ப்ப தோஷம்' //

காலம்பூரா பொண்டாட்டி ரொம்ப கடிக்கும் போல.
//

அப்ப அது எனக்கும் இருக்குன்னு நினைக்குறேன்.!
butterfly Surya said…
ஆஹா. நேற்றுதான் கேட்டேன். இணையம் வந்து விட்டதா..?

கலக்குங்க செல்வா.
\\முதுமை

காலா, என்னருகே வாடா!
ஓர் இருக்கை தருகிறேன்
கொஞ்ச நேரமேனும்
பேசிவிட்டுப் போடா...!// முதுமையின் தனிமையை இதைவிட அழகாகவும் நச்சென்றும் சொல்ல முடியுமென்று தோன்றவில்லை! Superb!
CS. Mohan Kumar said…
//திருப்பத்தூர் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த பதிவுலக அன்பர்கள் பாதுகாப்பான இடங்களில் பதுங்கிக் கொள்ளும்படி எச்சரிக்கப்படுகிறார்கள்.// என்னங்க விக்கிக்கு நேர் எதிரா இருக்கீங்க. அவங்க திருப்பூர், ஈரோடு இப்படி பல இடத்துக்கு சிறப்பு அழைப்பலரா போய் வர்றாங்க..:)))

//காலா, என்னருகே வாடா!
ஓர் இருக்கை தருகிறேன்
கொஞ்ச நேரமேனும்
பேசிவிட்டுப் போடா...!//

நல்லா தானே இருக்கு!!

//அடியேனும் ஒரு பேச்சாளனாக கூட்டத்தோடு கோவிந்தா போட்டு வருகிறேன்.//

இது நல்ல விஷயம். படிப்பு (புத்தகம் மற்றும் புத்தகம் தாண்டி) & தனி திறமை -இவற்றின் அவசியம் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்

அப்பப்போ எழுதுங்க பாஸ்
Ganesan said…
வந்துட்டியா ராசா,

படிச்சு எம்பூட்டு நாளாச்சு.

வரிசயா 10 பதிவு போடுப்பா.

உனக்கு புண்ணியமா போகும்.
\\டெக்னிக்கலி ராங்! பொலிட்டிக்கலி ரைட்!// இதைத் தமிழ்ல எப்படிச் சொல்றது? இன்னொரு கேள்விங்ணா..! சுயம் பிரம்மாஸ்மின்னா என்ன?
வெகுநாட்களுக்குப் பிறகு இடுகையிட்ட செல்வேந்திரனுக்கு வாழ்த்துக்கள்.
:)
taaru said…
Photon Plus வாழ்க...

abdullah sap காலம் பூரா தீண்டும்... நோ கடி.. தீண்ட தீண்ட...

//சுயம் பிரம்மாஸ்மின்னா என்ன?//ஆமா, என்ன??!

//இதெல்லாம் ஒரு கவிதையான்னு கேட்டு யாரும் முஷ்டியை முறுக்கப்படாது. //
அதானே.. இதெல்லாம் ஒரு கவிதையா??...இல்ல!! சிரியலிசம்...

//"பாகிஸ்தான்"// அருமை செல்வே...!!!
taaru said…
//33 வயதிற்குப் பின் முடியலத்துவத்திற்கு//
அதாவது இன்னும் சில மாதங்களில்...அப்படி தானே அண்ணே..
டெக்னிக்கலி ராங்! பொலிட்டிக்கலி ரைட்! //
ஹாஹாஹா... ரசித்தேன்.

Popular Posts