ஜெயமோகனுடன் ஓர் உரையாடல்

அரங்கசாமி, அருண் எனும் இரு இலக்கிய ஆர்வலர்கள் எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு வாசகர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். கோவையில் வருகிற 23-01-10 அன்று (சனிக்கிழமை) மாலை 5:30 மணிக்கு கலந்துரையாடல் துவங்கும். நிகழ்வின் சிறப்பு அம்சமாக எழுத்தாளர் நாஞ்சில் நாடனும் கலந்து கொள்ள இருக்கிறார். தமிழின் தனித்துவம் மிக்க இருபெரும் எழுத்தாளுமைகளை ஒரு சேர சந்திப்பதும், உரையாடுவதும் வாசகர்களுக்கு கிட்டியிருக்கும் அரிதான வாய்ப்பு. உள்ளூர் மற்றும் வெளியூர் பதிவுலக நண்பர்களும் உரையாடலில் கலந்து கொள்ளும்படி அன்போடு அழைக்கிறோம்.

வெளியூர் நண்பர்கள் தங்களது வருகையை தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் உறுதி செய்தால், தங்குமிடம், உணவு ஏற்பாடுகள் செய்ய ஏதுவாகும். துபாய் பதிவர் சென்ஷி ஏராளமான சந்தேகங்களுடன் நிகழ்விற்கு வருவதாக முதல் சீட்டை ரிசர்வ் செய்திருக்கிறார்.

டிஸ்கி:

‘நாடு இருக்கிற நெலமைல சிறுகதை ரொம்ப அவசியமா?’ ‘ சிறுகதைகள் எத்தனை பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்?’ ‘ பத்திரிகைகளில் படைப்புகள் பிரசுரமாக யாரைப் பார்க்க வேண்டும்?’ என்பன போன்ற ஆர்.டி.எக்ஸ் கேள்விகளைக் கேட்கும் 'கலகக்காரர்கள்' அன்றைய தினம் வேறு ஏதேனும் முக்கிய வேலைகளை வைத்துக்கொள்ளும்படி தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைக்கிறேன்.

Comments

//நாடு இருக்கிற நெலமைல சிறுகதை ரொம்ப அவசியமா?’ ‘ சிறுகதைகள் எத்தனை பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்?’ ‘ பத்திரிகைகளில் படைப்புகள் பிரசுரமாக யாரைப் பார்க்க வேண்டும்?’ என்பன போன்ற ஆர்.டி.எக்ஸ் கேள்விகளைக் கேட்கும் 'கலகக்காரர்கள்' அன்றைய தினம் வேறு ஏதேனும் முக்கிய வேலைகளை வைத்துக்கொள்ளும்படி தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைக்கிறேன்.//

:)))
என்னாது!

கலககாரர்களுக்கு அனுமதியில்லையா!?
///நாடு இருக்கிற நெலமைல சிறுகதை ரொம்ப அவசியமா?’ ‘ சிறுகதைகள் எத்தனை பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்?’ ‘ பத்திரிகைகளில் படைப்புகள் பிரசுரமாக யாரைப் பார்க்க வேண்டும்?’ என்பன போன்ற ஆர்.டி.எக்ஸ் கேள்விகளைக் கேட்கும் 'கலகக்காரர்கள்' அன்றைய தினம் வேறு ஏதேனும் முக்கிய வேலைகளை வைத்துக்கொள்ளும்படி தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைக்கிறேன்///

அடேயப்பா, எத்தனை சர்வாதிகாரம்! கோரிக்கை என்பதா தெரியல! ஒரு இண்டலக்சுவல் நக்கலாகவே படுகிறது! ஏன் செல்வா, எல்லோரும் உங்களை மாதிரியே சிந்திக்கவேண்டும் அல்லது நீங்கள் விரும்புவது மாதிரியே நடந்துகொள்ளவேண்டும்? இந்த சந்திப்பை ஏற்பாடு செய்யும் அந்த ஆர்வலர்களில் ஒருவராகவே நீங்கள் இருப்பினும், இலக்கிய சந்திப்புகளுக்கான ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்க உங்களுக்கு எப்படி இவ்வளவு வானளாவிய சுதந்திரம் வந்தது? வருத்தமாயிருக்கு!!

உங்களுக்கும், உங்கள் இல்லத்தாருக்கும், என் மனம் நிறைந்த பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
டிஸ்கி நல்லாயிருக்கு ... ஆனால் டிஸ்கினா என்னங்க ... நான் பெங்களூரிலியே வேறு வேலையைத் தேட வேண்டியது தான் போல ... :)
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...
கோவையில் நடைபெறும் இடம்..? நேரம்..?
RaGhaV said…
இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.. :-)
நல்ல விஷயம், நல்லா நடக்க வாழ்த்துக்கள்......
உங்களுக்கு என் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்
முயற்சிக்கிறேன்.
பொங்கல் நல்வாழ்த்துகள்.
நாடு இருக்கிற நெலமைல

Popular Posts