உதிரிகள்


உங்கள் ஐந்து வயது மகன் ‘ஏ’ ஜோக் அடித்தால் ரசிப்பீர்களா?! நிச்சயமாக மாட்டீர்கள். அதையே யாராவது டிவியில் செய்தால் கைதட்டி ரசிப்பீர்கள். உங்கள் மகனையும் அழைத்து ‘பாரு அந்தப் பையன் பயமே இல்லாமல் எப்படி பேசுறான்னு...’ என்று நல்வழிகாட்டுவீர்கள்.

அசத்த போவது யாரு - நிகழ்ச்சியில் தொட்டிலை விட்டு அப்போதுதான் இறங்கி வந்த பாலகன் ஒருவன் எக்ஸ்டெம்பராக டபுள் மீனிங் ஜோக்கெல்லாம் அடிக்கிறான். இது ‘சைல்ட் அப்யூஸ்’ இல்லையா?! எடுத்தவனுக்கும் மானமில்லை. பார்ப்பவர்களுக்கும் மானமில்லை. இதே ரீதியில் கீழ்க்காணும் நிகழ்ச்சிகள் தமிழ் தொலைக்காட்சிகளில் விரைவில் இடம்பெறலாம் என யூகிக்கிறேன். அவற்றிற்கும் உங்களது மேலான ஆதரவை அளியுங்கள்.

அணு அளவும் துணி இல்லை!

டாப் டென் செக்ஸ் ஸ்கேண்டல்ஸ்!

காஞ்சிபுரம் தேவநாதன் - வாழ்க்கை வரலாற்றுத் தொடர்!

சூப்பர் ஏ ஜோக்ஸ் ஜூனியர்! - தமிழகத்தில் பிஞ்சில் பழுத்தவர்களுக்கான ஒரு மாபெரும் தேடல்!

நாஞ்சில் சொன்னது போல இந்த சேனல்கள் நம் நடுவீட்டில் பீத்துணி அலசுகிறார்கள். நாம் சுரணையற்று ரசிக்கிறோம்.

****

குழந்தைகளுக்கு நான்கு வரி தமிழில் வாசிக்கத் தெரியவில்லை, சும்மாவேனும் பாட ஒரு பக்திப் பாடல் தெரியவில்லை, மரியாதையாகப் பேசத் தெரியவில்லை - இதெல்லாம் அவமானமில்லை. ஆடத்தெரியவில்லையெனில் மொத்த குடும்ப மானமும் போச்சு. வண்டி கட்டிக்கொண்டு பிள்ளைகளை ஆட்ட வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். மானும் மயிலும் மயிரும் தயிரும் ஆடியதன் உறுபலன்!

எல்.கே.ஜி பிள்ளைக்கு ஆட்டம் சொல்லிக்கொடுக்க மாசம் இரண்டாயிரமாம். பரதம், குச்சுப்புடி, தேவராட்டம் என்றா சொல்லிக்கொடுக்கிறார்கள். விஜயசூர்யவிக்ர பிரதிகளை உருவாக்கும் முனைப்புதான் மிஞ்சுகிறது.

உங்கள் குழந்தை கலைஞனாக வேண்டுமா அல்லது ரிக்கார்டு டான்ஸ்காரனாக வேண்டுமா?!

***
ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டால் ஒதுங்கி வழிவிடும் சுரணையைப் பொதுவாக வாகன ஓட்டிகள் இழந்து விட்டார்கள் என்பது புரிகிறது. தகப்பனையோ, மனைவி பிள்ளைகளையோ துள்ளத்துடிக்க ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றாலொழிய மண்டையில் ஏறாது போலிருக்கிறது. அரசாங்கம் எதுக்கெல்லாம்யா க்ளாஸ் எடுக்கறது?!

***
எழுத்தாளன் வாகன ஓட்டியாக இருத்தல் கூடாது. சதா சர்வ காலமும் கழுதையைப் போல மனதினுள் எதையாவது அசை போட்டுக்கொண்டே, ஒன்றின் கிளை பிடித்து மற்றொன்று, அதன் விழுதைப் பற்றி இன்னொன்று என பிரிபிரியாய் செல்லும் அகமனதின் பயணத்தை எந்தப் பயணத்திலும் எழுத்தாளனால் தவிர்க்கவே முடியாது. ஹெல்மெட்டுக்குள் இருப்பவன் கோட்டிக்கார எழுத்தாளன் என்பது ஃபோர் நாட் ஸெவனுக்கோ, பஜேராவுக்கோ தெரியுமா என்ன? சாலை விபத்தில் இறந்தவன் எழுத்தாளனெனில் சந்தேகத்தில் துர்பலனை எழுத்தாளனுக்கே கொடுத்து மோதியவனை மன்னிப்பதுதான் அறம்.

***

உங்களுக்கு ‘செய்தி பூதம்’ ஒன்றினை அறிமுகம் செய்கிறேன். ஆங்கில இலக்கணங்களை ஒரு பாத்திரத்தில் பால் விட்டு கரைத்து தினமும் குடித்து வளர்ந்தவன் போலிருக்கிறது. புவியில் உள்ள சகல ஆங்கில நாளிதழ்கள், அனைத்து ஆங்கில செய்தி சானல்கள், செய்தி தளங்கள் என விழித்திருக்கும் நேரமெல்லாம் செய்திகளைத் தின்றுகொண்டே இருக்கும். தான் படித்த ஊத்த செய்திகளை எவன் மீதாவது வாந்தியெடுக்க உன்மத்தம் கொண்டலையும் இந்த பூதத்துடனேயே அதிக நேரம் இருக்க வேண்டி இருப்பது என் ஊழ்வினை. இதுமாதிரியான பூதங்களுக்கு முட்டாள்கள் வைத்திருக்கும் பெயர் ஜீனியஸ்! உரையாடலைத் துவங்குவதற்காக பூதம் முன்னெடுக்கும் முயற்சிகளை உடனுக்குடன் உடைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.

உ.ம்: ‘யோவ் செல்வேந்திரா... திண்டுக்கல் பாண்டியைப் பார்த்தீரா... துப்பாக்கியை எடுத்தவனுக்கெல்லாம் துப்பாக்கியாலதாம்யா சாவு...!’

‘ஓஹோ! காந்தி எந்த துப்பாக்கியை தூக்கிட்டு திரிஞ்சாரு...?! எதையாவது எதுகூடயாவது ஒட்ட வச்சிகிட்டே திரியப்படாதுண்ணே...!’

***

பரபரப்பான, பளபளப்பான ஒப்பனக்காரவீதிக்கு நேர்பின்புறம் இருக்கிறது ‘ஒக்கிலியர் காலணி’. ஸ்லம்டாக் மில்லியனரில் பார்த்த மும்பை குடிசைகளைக் காட்டிலும் பலமடங்கு கெச்சலாக இருக்கிறது. குடிசைகள், சாக்கடை, நடைபாதையில் குடித்தனம், நிர்வாண குழந்தைகள், ஒவ்வொரு அங்குலத்திலும் வறுமை. அம்மன் கோவில் வாசலில் மூன்று முட்டை தோசைக்கடைகள். ஒரு திண்டில் ஆரத்தி தட்டு வைத்திருக்கிறார்கள் அதையடுத்து முட்டை தட்டுக்கள். இதுமாதிரியான நூறு நகைமுரண்களைக் கண்டேன்.

***
நான் பின்னூட்டங்களுக்கு பதிலூட்டம் அளிப்பதில்லையென்று பொதுவாக ஒரு புகார். அடியேன் சொற்பமாகப் படிக்கிறவன். அற்பமாக எழுதுகிறவன். அவ்வளவுதான் நேரம். நாளொன்றுக்கு பன்னிரெண்டு மணி நேரம் ஆலைக்கரும்பாகப் பிழியப்பட்டு வருகிறவனால் அவ்வளவுதான் முடியும். பதிலூட்டம் எதிர்பார்க்கிறவர்கள் கமெண்ட வேண்டாம் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்!

***
என்னோடு பூப்பந்துகளால் எறிபந்து விளையாடும் தோழர்கள் பரிசலும், கேபிளும். இருவரது சிறுகதைகளும் புத்தகமாக வெளிவருவதில் எனக்கு ஏக மகிழ்ச்சி. அவர்களுக்கு என் வாழ்த்துகள்!

***
ஜனனி ஐயர் எனும் மாடலிங் பெண்ணைப் பற்றி ஏற்கனவே இந்தப் பக்கங்களில் எழுதி இருக்கிறேன். பாலா இயக்கப்போகும் ‘அவன் - இவன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக உயர்ந்திருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துகள்!

Comments

எங்கள் வீட்டில் ஒன்லி டிஸ்கவரி சேனல்!
எப்போதாவது எழுதினாலும் வழுக்கி உள்ளித்துச் செல்லும் எழுத்து உன்னுடையது!

(இப்படிப் பாராட்டும்போது வா போவென ஒருமையில் அழைப்பது ஒரு ஸ்டைல்)

குழந்தைகளைப் பற்றிய உங்கள் பத்திகள் செவிட்டில் அறைந்தது. தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு பார்த்து பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ள வாரிசுகளைப் பழக்க அனுப்பாத - நான் - ஆடல் நிகழ்ச்சிகளின் தாக்கத்தால் டான்ஸ் க்ளாஸுக்கு அனுப்பினேன். வெட்கமாய்த்தான் இருக்கிறது.

//பின்னூட்டத்திற்கு பதில்//

பிரபலமாயிருப்பதன் விலை. கண்டுகொள்ளாதீர்கள்!
ஜனனி ஐயர் மேல எனன் ஸ்பெஷல் இண்ட்ரஸ்டு...:)
கேபிள் சங்கர்
taaru said…
//நம் நடுவீட்டில் பீத்துணி அலசுகிறார்கள். நாம் சுரணையற்று ரசிக்கிறோம்.//
well said...எடுத்து காட்டியமைக்கு நன்றி செல்வே.. இதனால் அந்த நிகழ்சிகளை அறவே வெறுத்தவன் நான்...
Anonymous said…
குழந்தைகள் பற்றிய கருத்து சவுக்கடி..படித்தாலும் திருந்தமாட்டாங்க பெரியவங்களும் சானல்களும்..எதை எதை பெருமை பாராட்டுவது என்பது இலக்கில்லாமல் போகிறது இவர்கள் தங்கள் குழந்தைகளின் திறமையை வளர்க்கும் விதம்....
//குழந்தைகளுக்கு நான்கு வரி தமிழில் வாசிக்கத் தெரியவில்லை, சும்மாவேனும் பாட ஒரு பக்திப் பாடல் தெரியவில்லை, மரியாதையாகப் பேசத் தெரியவில்லை //

இந்த கருத்து முற்றிலும் சரி இதை பற்றி பெரும்பாலோர் கவலைப்படுவதேயில்லை...பல நாட்களாக மனதை உருத்திக்கிட்டே இருந்த விஷயங்களை சபைக்கு கொண்டு வந்திருக்கீங்க செல்வா...
Sanjai Gandhi said…
முதல் இரண்டும் அதிகாரத்தின் உரையாடல்.. குழந்தைகளையும் சமூகத்தையும் ஒரு வட்டத்துக்குள் அடைக்கப் பார்க்கிறீர்கள். எழுத்தாளைனையும் குழந்தையயும் கட்டுப் படுத்த நினைக்கும் சமுதாயம் எப்படி உருப்படும்?

பின்னூட்டம் மேட்டரில் உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு.. பின்னூட்டத்துக்கு பதில் எதிர்பார்க்கும் ஒரே சமுதாயம் நம் தமிழ்சமுதாயம் தான்.. நன்றி XYZ என்ற பதிலில் என்ன ஆனந்தம் கிடைக்கிறதோ தெரியவில்லை.. நானும் பின்னூட்ட பதிலுக்கு எதிரானவன்.. ஆனாலும் செய்கிறேன்.. :)

எல்லாம் நல்லா தான் இருக்கு.. இந்த ஜனனி ஐயரை விடறதா ஐடியாவே இல்லையா? அம்மாடி திரு.. இங்கிட்டு வந்து என்னான்னு கொஞ்சம் கேளும்மா.. தாங்க முடியலை.. :))
ஜனனிக்கு வாழ்த்துக்கள்.
பிரத்தியங்கார மாசானமுத்துவே எழுதுன மாதிரி உக்கிரம்!

// உரையாடலைத் துவங்குவதற்காக பூதம் முன்னெடுக்கும் முயற்சிகளை உடனுக்குடன் உடைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன் //

ம்.....
Indian said…
//ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டால் ஒதுங்கி வழிவிடும் சுரணையைப் பொதுவாக வாகன ஓட்டிகள் இழந்து விட்டார்கள் என்பது புரிகிறது. தகப்பனையோ, மனைவி பிள்ளைகளையோ துள்ளத்துடிக்க ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றாலொழிய மண்டையில் ஏறாது போலிருக்கிறது. அரசாங்கம் எதுக்கெல்லாம்யா க்ளாஸ் எடுக்கறது?!//

எடுக்கணும் செல்வா. எங்கே எடுக்கிறார்கள்? அமெரிக்காவில் நான் நேரில் கண்டது, சிறார் பள்ளிகளில் சிறுவர்களை சாலைகளில் நடத்திச் சென்று, சாலைச் சந்திப்புகளில் நிறுத்தி, பேருந்துகளில் அழைத்துச் சென்று சாலைப் பாதுகாப்பு விதிகளைச் சொல்லித் தருகிறார்கள்.

நம் நாட்டில் இதன் தொடக்கப் புள்ளி எது? முதலில் பாடம் படிக்கவேண்டியது பெற்றோர்களா இல்லை நம் வருங்கால சந்ததிகளா? வீட்டில் விவாதித்ததில் விடையேதும் இல்லை.
மணிஜி said…
இந்த பின்னூட்டதிற்கு பதிலை எதிர்பார்க்கவில்லை!!
நீங்க சொன்ன புதிய நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!!!

:-)))
//நம் நடுவீட்டில் பீத்துணி அலசுகிறார்கள். நாம் சுரணையற்று ரசிக்கிறோம்.//

சரியான நெத்தியடி...
எனக்கும் பின்னூட்டமெல்லாம் போட வேண்டாம்..!

நானும் ரொம்ப டயர்டாத்தான் இருக்கேன்..!
அன்பின் செல்வேந்திரன்

நல்லதொரு இடுகை - நல்ல கொள்கை - மறுமொழிகளுக்கு மறுமொழி இடுவதில்லையென. மழலைச் செலவங்கள் பற்றிய ஆதங்கம் புரிகிறது.....

ஆம்புகன்ஸிற்கு வழி விட வேண்டும். இல்லை எனச் சொல்ல வில்லை -அதற்காக சபிக்கணுமா

நல்வாழ்த்துகள்
செல்வாண்ணே! ஆச்சரியமா, முதல்முறையா உங்க கருத்துக்களோடு நான் ஒத்துப்போறேன்னு நினைக்கிறேன். குறிப்பா, முதல் மூணு விஷயம்... நெத்தியடி! மரமண்டைங்களுக்கு உறைக்கிற மாதிரி இன்னும் ஸ்ட்ராங்கா எழுதியிருக்கலாம். பரவாயில்லை. எழுதின வரைக்கும் சந்தோஷம். இதை நானும் எழுதணும்னு நினைச்சிருந்தேன். நீங்க முந்திக்கிட்டீங்க. வாழ்த்துக்கள்!
tt said…
அறியாப் பருவம்( Id ), குழந்தைப் பருவம்( Childhood ), விடலைப் பருவம்( Adolesence ), பெற்றோர் பருவம்( Parental ) ஆகிய நான்கு பருவங்களில், ஒரு குழந்தை தனது பெற்றோர்களை ஆதர்சமாகக் கொண்டு வளரத் துவங்குகிற குழந்தைப் பருவம் ஒரு மனிதனின் முழு வாழ்க்கைக்கும் முக்கியமான பருவம். இந்த வயதில் அவர்களைப் பதமாக வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிற பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஊடகங்களால் மாசுபடுத்தப் பட்டவர்களாக இருந்தால், இந்தப் பருவத்தைக் கடக்கும் குழந்தைகள் குழந்தைத்தனத்தை இழந்து, தேவையற்ற முதிர்ச்சியும், மனப் பிறழ்வும் கொண்டவர்களாக மாறிப் போவார்கள்.
Anonymous said…
Adangaman karuthkkal..
Alagana Nadai..

Katiyila pora Channels ellam Olinthal than Nadu Munnerum...

Adangapatu enna ciamudikirathu..
Namaku piditha visiathai eduthukondu
Pidikatha visiathai Maranthuvidukren...

Nandri Valga Valamudan..
(Englishla type paniyatharuku Manikavum)

V.V.S
Group.
எப்போதாவது எழுதினாலும் வழுக்கி உள்ளித்துச் செல்லும் எழுத்து உன்னுடையது!

என கருத்தும் அதே
selventhiran said…
வால், பரிசில்!, டாரு, மங்களூரான், குளிரான், தண்டோரா, ப்பெரிய பையன், சிதம்ப்ரம், நேர்மைத் தமிழன், சீனா, தமிழ், அண்ணே, காம்ப்ளான் சூர்யா, சிறப்பு விருந்தினர் வருகைக்கும், வாசிப்பிற்கும் நன்றிகள் பல!

கேபிள், எதன் மீதாவது இண்ட்ரஸ்ட் இருக்கத்தானே வேணும் :)

தமிழரசி, கூடிய விரைவில் உங்களது வீட்டிற்கு கும்பலாக வந்து கும்மியடிக்கப்போகிறோம் :)

சஞ்ஜெய், எப்படி உருப்படும் என்பதை விட ‘எப்படிய்யா உருப்படும்?’னு கேட்டா ஒரு ஃபீல் கிடைக்கும்.

இந்தியன், தகவலுக்கு நன்றி. என்னளவில் முயற்சித்துப் பார்க்க முடிகிற யோசனை.

கிருபாநந்தினி, // முதல்முறையா உங்க கருத்துக்களோடு நான் ஒத்துப்போறேன்னு நினைக்கிறேன் // :)
நீங்க சொல்றது எல்லாம் சரி, இப்படி காரசாரமா எழுதிட்டு போட்டா போதுமா ? இது வறைக்கும் நீங்க என்ன செய்திருகீங்க?
selventhiran said…
அய்யா எளயகவி, உம்மிடத்தில் பட்டியல் போட என்ன அவசியம் என்றுதான் யோசனையாக இருக்கிறது ஓய்!
Deepa said…
//அசத்த போவது யாரு - நிகழ்ச்சியில் தொட்டிலை விட்டு அப்போதுதான் இறங்கி வந்த பாலகன் ஒருவன் எக்ஸ்டெம்பராக டபுள் மீனிங் ஜோக்கெல்லாம் அடிக்கிறான். இது ‘சைல்ட் அப்யூஸ்’ இல்லையா?! //
நிச்ச‌ய‌மாக‌. ப‌ல‌மாக‌ ஆமோதிக்கிறேன்.
பாட்டுப் போட்டிகளில் ஆபாச‌ப் பாட‌ல்க‌ளைப்பாட‌ வைப்ப‌தும் அவ‌ற்றுக்கு ஆட‌வைப்ப‌து கூட‌ abuse தான்.
முத‌ல் வ‌ரியில் சொன்ன எடுத்துக்காட்டு ந‌டு ம‌ண்டையில் ந‌ச்!
RRSLM said…
//நீங்க சொல்றது எல்லாம் சரி, இப்படி காரசாரமா எழுதிட்டு போட்டா போதுமா ? இது வறைக்கும் நீங்க என்ன செய்திருகீங்க?//
நாலு பேரை இதை படிக்க வைத்து, பின்பு கொஞ்சம் யோசிக்கவும் வைத்து, கொஞ்சம் சுரணையும் வரவைத்து, மேலும் இதை இதை பின்பற்ற வேண்டும் என்ற தூண்டுகோலாக இருக்கின்றாரே! அதை விட வேறு என்னங்க இவர் செய்யவேண்டும்?