தமிழினி


பாதசாரிக்கு அறிமுகம் தேவையில்லை. நம் காலத்தின் மகத்தான எழுத்தாளர்களுள் ஒருவர். அவரது ‘காசி’யினால் கவரப்படாதவர்கள் தமிழிலக்கிய உலகில் இல்லை ( “கடவுள் இல்லைன்னு சொல்லலை... இருந்தா நல்லாருக்குமே..” என்கிற தசாவதார க்ளைமாக்ஸ் டயலாக் காசியில் இருந்துதான் டூமில் செய்யப்பட்டது!) கவிதைகள், கதை, கட்டுரை என தொடர்ந்து எழுத்தியக்கத்தில் இருப்பவர். தமிழினியின் ஆசிரியர்.

தமிழினியில் தொடர்ந்து அவர் எழுதி வரும் ‘மன நிழல்’ பத்தி எழுத்தில் பெரும்புதுமை. அப்பத்திகள் ‘பேய்க்கரும்பு’ என்றும் ‘அன்பின் வழியது உயிர் நிழல்’ என்றும் இரு தொகுதிகளாக வெளி வந்திருக்கின்றன. அற்புதமான புத்தகங்கள்.

தமிழின் முதன்மையான இரு இலக்கியப் பத்திரிகைகளுள் ஒன்று பிறர் நுழைய இயலா சிறு குழுவாகவும் மற்றொன்று படைப்பிலக்கியத்தை பொடனியில் அடித்து விரட்டி விட்டு சினிமாவைப் பற்றியே அதிகம் பேசும் வண்ணத்திரையாகவும் மாறி விட்டது. உயிர் எழுத்து, தமிழினி, வார்த்தை போன்றவை படைப்பிலக்கியத்திற்கான நல்ல தளமாக இருந்து வந்தன. துரதிர்ஷ்டவசமாக ‘வார்த்தை’ நிறுத்தப்பட்டு விட்டது.

தமிழினியின் சர்க்குலேசன் மெச்சும்படி இல்லை என்பது தனிப்பட்ட முறையில் எனக்கும் அண்ணாச்சிக்கும் மிகுந்த வருத்தம் தருவதாக இருந்தது. இலக்கிய ஆர்வம் மிக்கவர்கள் பெருமளவில் இயங்கும் வலையுலக நண்பர்களிடமிருந்து சந்தாக்கள் திரட்டி தருவதாக பாதசாரியிடம் வாக்களித்திருக்கிறோம்.

ஓராண்டு முழுவதும் தமிழினியைத் தபாலில் பெற ஆண்டுச் சந்தா ரூ.240/- மட்டுமே.

***

ஜெயந்தா எழுத்தாளர்களை நேர்காணல் செய்யும் நிகழ்ச்சியொன்றினை நட்ட நடு ராத்திரியில் பொதிகையில் ஒளிபரப்புகிறார்கள். கவிதை, சிறுகதைகள் எழுதுவதற்கான பயிற்சிப்பட்டறைகளை அவ்வப்போது நடத்தி வருகிறார்களே அதன் மூலம் ஒருவர் படைப்பாளி ஆகிவிட முடியுமா என்கிற கேள்விக்கு எழுத்தாளர் சங்கர நாராயணன் பரமஹம்சரின் கதையொன்றினை பதிலாகச் சொன்னார்.

‘எனக்கு எப்போது ஸ்வாமி ஞானம் கிடைக்கும்?’ என்றான் சீடன் ஒருவன். தினமும் மந்திர உச்சாடனம் செய்து அதன் பின் திராட்சை பழமும் தின்று வந்தால் ஞானம் கிட்டும் என்றார் ராமகிருஷ்ணர். எத்தனை திராட்சை பழங்கள் தின்ன வேண்டும் என்று கேட்டான் சீடன். எத்தனை தடவை மந்திரம் சொல்ல வேண்டும் என்று கேட்காமல் திராட்சையைப் பற்றி கேட்கிறாயே... உனக்கு ஞானம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்றாராம் பரமஹம்சர்.

***

வ.ஸ்ரீனிவாசன் வார்த்தை இதழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர். நல்ல கட்டுரைகளாலும், சிறுகதைகளாலும் வார்த்தையை அலங்கரித்து வந்தவர். இவர் கோயம்புத்தூரில்தான் வசிக்கிறார் என்பதை ஜெயமோகன் சந்திப்பின் போதுதான் தெரிந்து கொண்டேன். பன்னெடுங்காலமாக இலக்கியத் தளத்தில் இயங்கும் வ.ஸ்ரீனிவாசனின் வலைப்பக்கங்களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். சொல்வனத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

***

ஆத்தூர் செந்தில் குமார் என்கிற பெயர் விவசாயிகள் மத்தியில் பிரபலம். விவசாய பத்திரிகைகளின் வாயிலாக உழவர்களோடு உரையாடிக்கொண்டிருப்பவர். விவசாயம் அவரது பன்முகங்களுள் ஒன்றுதான் பேசத் துவங்கினால் சாகுந்தலம், மிர்தாத், நீட்ஷே, ஓஷோ என நீளும் அவரது அறிவின் நீட்சி பிரமிப்பூட்டும். அவரும் வலை எழுதி வருகிறார்.

Comments

Ashok D said…
தோ வலைப்பூ, ஏக் சிற்றிதழ்...
தாங்கஸ்ங்ண்ணா...
செல்வா,
தமிழினி ஆண்டு சந்தாவினை யாருக்கு, எவ்வாறு செலுத்த வேண்டும்?
அய்யா நான்தான் பர்ஸ்ட் . அறியாத பல விசயங்கள் தெரிந்துகொண்டேன் .பகிர்வுக்கு நன்றி .
சரிதான் அவர் காசி கதை மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. காசி வேறு யாருமில்லை அது நாம் தான் என ஒரு நிலைக்குத் தள்ளிவிடுகிறார்.

தமிழினியை அவர் தான் நடத்துகிறாரா?

முகவரி தர முடியமா சந்தாவுக்கு?

நன்றி.
//பரமஹம்சரின் கதை//

நான் என்னமோ எதோனு நினைச்சேன்.. :)
போட்டாச்சு... போட்டாச்சு
ஒரு வருட சந்தா தொகையை உங்கள் வங்கி கணக்கில் போட்டாச்சு செல்வா .
இம்முயற்சி சிறக்கட்டும்.
Kumky said…
வாசித்தேன் செல்வா..

ஆவன செய்யப்படும்.

:-))
Thamira said…
நற்குறிப்புகள்.
Nathanjagk said…
வசந்தகுமார் அவர்களின் தமிழினி பதிப்பக வெளியீடா இது?
தமிழினி புத்தகங்கள் ஆன்லைனில் எப்படிப் ​பெறுவது என்ற விவரம் அறிந்தால் குறிப்பிடவும். நன்றி!