குசலம்!

தொலைபேசி அழைத்தது. எதிர்முனையில் அப்பா.

‘சொல்லுங்கப்பா...’

‘சங்கரா... எங்கப்பா இருக்கே... ஆபிஸ்லயா... வீட்லயா... ஏதும் வேலையா இருக்கியாப்பா...?!’

‘இல்லப்பா வீட்டுலதான் இருக்கேன். சொல்லுங்க... என்ன விஷயம்?’

‘ஒண்ணுமில்லடே... லெச்சுமி வீட்டுக்கு வந்தேன்...ஒங்கிட்ட பேசி மாசமாச்சேன்னு சும்மாதான் கூப்பிட்டேம்பா.’

‘ஏம்பா... சும்மா ஊரு சுத்தாதீங்கன்னு உங்களுக்கு எத்தனவாட்டி சொல்றது. இப்ப லெச்சுமி வீட்டுக்குப் போகலன்னு யாரு அழுதா...இந்த வயசுல இப்படி ஊர் சுத்தாட்டி என்ன?’ என் எரிச்சலைக் கொட்டினேன்.

‘பேரப்புள்ளைகள பாக்கனும்போல இருந்திச்சு... என்னால மெட்ராசுக்கு வந்து உன்னத்தான் பாக்க தோது படல... அதான் திருநெல்வேலிக்கு வந்துட்டேன். ஒங் மருமவன் கண்ணன் கட்டுரைப் போட்டியில பர்ஸ்ட் வந்துருக்கான்டே! அவனுக்கு என்னதாச்சும் வாங்கிக்கொடுக்கனுமேன்னு கிளம்பி வந்தேன்.’

‘என்ன வாங்கிக் கொடுத்தீங்க...?!’

‘காதிகிராப்ட்ல ஒரு நல்ல கடசல் பேனா வாங்கிக் கொடுத்தம்டே’

‘வௌங்கிரும். பத்து ரூவா பேனா வாங்கிக்கொடுக்க பதினைஞ்சு ரூவாக்கி டிக்கெட் வாங்கிட்டு திருநெல்வேலி போகனுமா... அதுவும் கடசல் பேனா... எந்தக் காலத்துல இருக்கீங்க...?’

‘கோவப்படாதா சங்கரா... பேனாவா முக்கியம்... ஒரு நா பேச்சுப்போட்டில இதே கடசல் பேனாவ ஆறுதல் பரிசா வாங்கிட்டு வந்து எங்கிட்ட உனக்குத்தான் மொத பரிசுன்னு பொய் சொன்னே... ஞாபகமிருக்கா...?!‘

‘அப்பா... இந்த நக்கலுக்கு ஒண்ணும் கொறைச்ச இல்ல... இந்த எழவுக்குத்தான் உங்களுக்கு போன் பண்றதே இல்லை’

‘கோவப்படாத சங்கரா... பங்குனி உத்திரத்துக்கு எப்ப வர்ற... டிக்கெட் போட்டுட்டியா... லீவு எத்தன நாள்...?’

‘டிக்கெட்டெல்லாம் போடலை. போன வருஷம் வந்துட்டு பட்ட பாடு போதாதா... வீடெல்லாம் ஒழுகல், பச்சை விறக வச்சிகிட்டு அடுப்படில மல்லுக்கட்டி மல்லுக்கட்டி உஷாவுக்குக் காய்ச்சலே வந்திருச்சி...நாங்க வரலைப்பா...’

‘ஏய் அப்படிச் சொல்லாதடே... நல்ல நாளும் பொழுதுமா ஒத்தப்பயலா நான் வீட்டுக்குள்ள கெடக்கனுமாடே...உனக்கு என்ன வசதி வேணுமோ சொல்லு அதை பண்ணி வச்சிடுதம்டே... பொண்டாட்டி பிள்ளைகளோட ஊருக்கு வாடே...’

‘இப்படித்தான் போனவாட்டியும் சொன்னீங்க...மொதல்ல ஒடைஞ்சி கிடக்கிற ஓடெல்லாம் மாத்துங்க... புள்ளைக வெளையாடுற தார்சாவுல வெயில் விழுது... நல்ல தென்னங்கிடுகாப் பாத்து வேயுங்க... ’

‘செஞ்சுடுறேன் சங்கரா...’

‘யார் கால்ல விழுந்தாவது ஒரு சிலிண்டருக்கு ஏற்பாடு பண்ணுங்க... அடுப்பு நம்ம கணேசன் கடையில வாடகைக்கு எடுத்துக்கலாம்... ரெண்டு நாளைக்கு முன்னாடியே தண்ணி வண்டிக்கு சொல்லி தொட்டிய நெறைச்சி வையுங்க... சுடலிய வரச்சொல்லிடுங்க... பாத்திரம் கழுவ, வீடு பெருக்க ஒத்தாசையா இருக்கும்.’

‘சரிடே’

‘உஷா கன்னியாகுமரி போவனும்னு சொல்லிக்கிட்டே இருக்கா... ஒரு வண்டிக்கு சொல்லிடுங்க... நம்ம மகராசன் வண்டி பஜார்ல நிக்கும். அவன்கிட்டயே சொல்லிடுங்க...அப்புறம் நடுவீட்டு டியூப் லைட்டெல்லாம் ஒழுங்கா எரியுதா... முடுக்குல ஒரு லோ வாட்ஸ் பல்பு போட்டு வையுங்க....’

பேசிக்கொண்டிருக்கும்போதே வாசலில் ஆட்டோ வந்து நின்றது. தினேஷ் ஸ்கூல் பேக், தண்ணீர் பாட்டில், லஞ்ச் கூடை சகிதம் இறங்கினான். இரண்டாம் வகுப்பு படிக்கிற பயலுக்கு எத்தா பெரிய புத்தக மூட்டை என்று நினைத்துக்கொண்டே அப்பாவுடனான உரையாடலைத் தொடர்ந்தேன்.

‘அப்பா... தினேஷூக்கு பல்லு பெலமில்லாம இருக்கு... பதனி கொடுக்கலாம்னு உஷாவோட அப்பா சொன்னார். பண்டாரபுரத்துக்கு போனீங்கன்னா ஜேபி பதனி தருவான். வாங்கி பாரதி மைனி வீட்டு பிரிட்ஜூக்குள்ள வெச்சிருங்க... கெட்டுப்போகாம இருக்கும்’

போனில் இருப்பது தாத்தாதான் என்பதைத் தெரிந்து கொண்ட தினேஷ் என்னிடமிருந்து போனைப் பிடுங்கினான்.

‘தாத்தா! தினேஷ் பேசறன். எப்படி இருக்கீங்க?’

‘ம்... நா நல்லா இருக்கேன். லெச்சுமி அத்தை எப்படி இருக்காங்க? கண்ண மச்சான் இருக்கானா?’

‘ம் இப்பத்தான் வந்தேன் தாத்தா! நீங்க சாப்பிட்டீங்களா?’

‘என்ன சாப்பிட்டீங்க தாத்தா?’

‘கால் வலின்னு சொன்னீங்களே எப்படி இருக்குது தாத்தா?’

‘அன்னிக்கு கண்ணாடிய தொலைச்சுட்டேன்னீங்களே... கிடைச்சுதா தாத்தா?’

சமயங்களில் இரண்டாம் வகுப்பிடம் எம்.பி.ஏ தோற்கும். எனக்கு கொஞ்சம் அழவேண்டும் போல் இருக்கிறது.

Comments

நான் அழுதே விட்டேன் ...
நிரோ said…
//சமயங்களில் இரண்டாம் வகுப்பிடம் எம்.பி.ஏ தோற்கும். எனக்கு கொஞ்சம் அழவேண்டும் போல் இருக்கிறது.//:)..
koodai said…
யதார்த்தம்!!
செல்வா,

செம ஹிட்டு...!

இன்னிக்குதான்யா என் மாப்ள ஜமால் ’லின்க்’ குடுத்தாப்ல.
//சமயங்களில் இரண்டாம் வகுப்பிடம் எம்.பி.ஏ தோற்கும். எனக்கு கொஞ்சம் அழவேண்டும் போல் இருக்கிறது. //

கதை நல்லாயிருந்தது செல்வா. வீட்டை விட்டு வெளியூரில் இருக்கும் பலபேருடைய நிலைமை இதுதான்
அருமை... அருமை...

ஒரு குழந்தையின் மனநிலை நமக்கிருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்.
arul said…
Nandri. Kanneerai varavazhaithamaikku
Ashok D said…
இரண்டாம் வகுப்பு தானே.. போக போக சரியாகிவிடுவான்(!)
கதையை எழுதிட்டு, பிறகு, இரண்டாம் வகுப்பிடம் எம்பிஏ.. போன்ற விளக்கங்களும் கொடுக்க வேண்டுமா என்ன?
உண்மைதான். மிக அருமையான கதை
ஜமால் மாதிரியே நானும்.

அப்பா..

நான் வாய் விட்டு கூப்பிட்டால் 'என்னப்பா'ன்னு சொல்லக்கூடாத நிலையில் அவர்...

:-((
ரொம்ப நல்ல வட்டார வழக்கு செல்வா.
சங்கரா...சங்கரா...
தம்பி, நெகிழ வைத்த சொற்சித்திரம். கடைசி வரி தேவையில்லை என்பது என் கருத்து.
சென்டிமெட்ன்ட் கதையாக இருந்தாலும் விவரிப்பு சுவாரசியம்.

@ அசோக். :-)
Unknown said…
பாடபுத்தகம் படித்த பலர்.... குடும்பத்தை படிக்க தவறினர்... கதையில் பேச்சுமொழி பலே..
மனதில் இப்பொழுது வீட்டு ஞாபகம் - குற்றவாளி கூண்டிலேறி நின்று விட்டது என் மனது !
பத்மா said…
நல்லாருக்கு .பாவம் தான் வயசானதுக .
பத்மா said…
நல்லாருக்கு .பாவம் தான் வயசானதுக .
Jerry Eshananda said…
தலைப்பும் கதையும் கச்திதம்,ரசித்தேன்...
இதயம் கனத்துவிட்டது . பகிர்வுக்கு நன்றி !
இப்படியெல்லாம் பண்னப்பிடாது ஆமா !
நண்பர் ஆயில்யன் ‘பஸ்’ஸில் ரூட் சொல்லி இங்கே வந்தேன்!

நன்றாக இருக்கிறது, தொடருங்கள்!
ரொம்ப பிடிச்சிருந்தது செல்வா.
selventhiran said…
ஜமால், நிரோ, கூடை, சத்ரியன், காலப்பறவை, நாஞ்சில் நாதம், இந்தியன், இராகவன் நைஜிரியா, அருள், அசோக், உழவன், ச்சின்னப்பையன், விக்கினேஸ்வரி, கேவி, முத்துராஜா, ஆயில்யன், பத்மா, கார்த்திக், ஜெரி ஈசானந்தா, ஸ்ரீ, பனித்துளி சங்கர், பா. ராஜாராம், இரா. சிவக்குமரன், சுரேஷ் கண்ணன்
- வருகைக்கும் உற்சாகமூட்டியமைக்கும் நன்றிகள் பல

@ஜ்யோவ் // ரொம்பவும் பழைய பாணியில் எழுதப்பட்ட கதைதான். கதாபாத்திரமே கதையை விவரிக்கும் சப்ஜெக்ட் ஐ வகையரா கதைகளின் முடிவையும் கதாபாத்திரமே பேசியோ / எண்ணியோ / செய்தோ முடிப்பதுதானே வழமை.

@ மாதவராஜ் // கடைசி இரண்டு வரிகளை நீக்கினால் கதை பிடிபட சிரமமாக இருக்கும் என்று நினைத்தேன்.


@ லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் // நாரதகான சபாவில் சுஜாதா இரங்கல் கூட்டத்தில் நீங்கள் பேசியதைக் கேட்டிருக்கிறேன். வருகைக்கு நன்றிகள் பல...
Unknown said…
'அருமை' என்ற ஒற்றை வார்த்தை போதவில்லை எனக்கு...
taaru said…
செல்வே! கடை வரி பார்தோடனே தான் கண்ணீர் பெருகிடிச்சி... அருமை..
kavisankar said…
செல்வாண்ணே இவ்வோள மாதிரி அப்பா இருக்கிறதானலதான் பங்குனி மாசமும் மழை பெஞ்சு வீடு ஒழுகுதோ?
இரண்டாம் வகுப்பில் நாமும் இப்படித்தான்...
ஆனால் இப்ப நாம எம்.ஏ.எல்.... (மேரேஜ் அஃப்டர் லைப்)
Parthi_MC said…
Every day i am looking your blog.your writing is very nice ALWAYS
செல்வேந்திரன்,

மீச்சிறு கதையானாலும்

எதார்த்தத்தை

நறுக்குனு சொல்லியிருக்கீங்க...

எல்லோருக்கும் போல கண்களில் கண்ணீர்...

வாழ்த்துக்கள்....
tt said…
எதார்த்தம்..கனக்க வைக்கும் கடைசி வரிகள்..
RaGhaV said…
கடைசி ஒரு வரியில உருக வச்சிடிங்க செல்வா..
படிச்சி முடிச்சதும் என்ன என்னமோ யோசிக்க வைக்குது.. :-(
Unknown said…
செல்வா,

ஒரு பப்ளிஷரை இப்படியா காக்க வைப்பது என்று மின்னஞ்சலில் கேட்டிருந்தேன். கேட்டதற்கு கை மேல் பலன். இந்தக் கதையையும் பிடிஎஃப்பில் இனைத்து திங்கட் கிழமை அனுப்பி வைக்கிறேன்.
naveen said…
Hi,
How are you? I know you thru 'neeya naana' pgm. Its such a wonderful thing to know about you. Just seen 'neeya naana' today. pls conitnue writing. Best wishes.
"kusalam" really made me cried.
take care,
Jothi
குழந்தையாகவே இருந்திருக்கலாம்..இல்லையா செல்வா?

அழகான , யதார்த்தமான படைப்பு!

வாழ்த்துக்கள்!
நாற்பது வருடங்களுக்கு முன் வெளிவந்திருக்க வேண்டிய நமத்து போன பதிவு. ஓரிரு வாக்கியங்கள நீக்கி விட்டால் ஓரங்க நாடகம் ஆகிவிடும். உங்களது பேட்டை கட்டுரைகள்தான். அதை கவனியுங்கள். இதை போன்ற மட்டமான் குப்பைகளை பாராட்டுபவர்களின் ரசனை பரிதாபத்துக்குரியது.
நாற்பது வருடங்களுக்கு முன் வெளிவந்திருக்க வேண்டிய நமத்து போன பதிவு. ஓரிரு வாக்கியங்கள நீக்கி விட்டால் ஓரங்க நாடகம் ஆகிவிடும். உங்களது பேட்டை கட்டுரைகள்தான். அதை கவனியுங்கள். இதை போன்ற மட்டமான் குப்பைகளை பாராட்டுபவர்களின் ரசனை பரிதாபத்துக்குரியது.
selventhiran said…
ஸ்ரீமதி, ற்றாரு, ஆஸாத் அண்ணா, பார்த்தி, மறத்தமிழன், தமிழ், ராகவ், ஜோதி, சுரேகா வருகைக்கும், வாசிப்பிற்கும் நன்றிகள் பல...

@கவிசங்கர் // எங்க ஊர்ல அப்படித்தான் பாஸூ

@விஜய்கோபால்சுவாமி // அன்பிற்கு நன்றி சகா!

@அருவிப்ரியன் // வருகைக்கும் வெளிப்படையான விமர்சனத்திற்கும் நன்றி சகா... ஆனால் மற்றவர்களின் ரசனையை மட்டம் என்ற முற்றான முடிவிற்கு வரவேண்டியதில்லை :)) நீங்களும் ரசிக்க முடிகிற ஒரு சிறுகதையை எழுத வேண்டும் என்பதை சவாலாகக் கொள்கிறேன் :))

ஆயில்யனின் பஸ்ஸ் மூலமே பலரும் இக்கதையை வாசித்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
Thamira said…
டிபிகல் டெம்பிளேட் கதை. அதுவும் கடைசி வரி வெற்று செண்டிமெண்ட்.!
Jaleela Kamal said…
கடைசியில் பேரன் விசாரிப்பு ரொம்ப நெகிழ்வாய் இருந்தது.
Aranga said…
செல்வாவிடமிருந்து இன்னும் சிறப்பாக எதிர்பார்ப்பது தவறா ?

என்னமோ குறைகிறது.
iniya nanbare,
மிக அருமையான நேர்த்தியான சிறுகதை ..வாழ்த்துகள் எளிமையான வர்ர்தைகளில் , கன்னத்தில் படீர் என்று அறைவது போல் உள்ளது இந்த சிறுகதை .
oru padaippali ella suthanthiramum udayavan, athanaale avan vimarsanakalukkum porppagiraan.. eninum intha sirukathai pazhamayanathu enru sollum vatrippona ithayangalai kavanikka thevayillai, ethechayaka than intha pathivai padikka nernthaalum... uruthiyudan solgiren inru nadakkum visayame kathayin mayyam. ungal padaippukku vazhthukkal
குற்ற உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்.
நல்ல பதிவு.
வினோ said…
கண்களில் நீர் எட்டிப் பார்க்கிறது....

Popular Posts