ஊர் சுற்றி வந்த ஓசை

ரம்யாக்கா, கலைச்செல்வி அக்கா, விஜிராம், சஞ்ஜெய் அண்ணா மற்றும் சித்தர் கைங்கர்யத்தில் திருவேங்கட மலை சென்று வந்தேன். திருப்பதியில் பக்தர்கள் வசதிக்கென எவ்வளவோ செய்கிறார்கள். ஆனால் சுற்றுச்சூழல் சமாச்சாரத்தில் மெத்தனம் காட்டுகிறார்கள்.

திருவேங்கட மலையில் அரியவகை மான்கள், குரங்குகள், பாம்புகள், புனுகுப்பூனைகள், காட்டுக்கோழிகள் என ஏராளமான காட்டுயிர்கள் வசிக்கின்றன. நாராயணகிரி மலைப்பகுதியில் இருக்கும் மர அணில்கள் முக்கியமானவை. கருப்பும் சிவப்பும் கலந்த வண்ணமும், பஞ்சுப்பொதி போன்ற வாலும் உடைய மர அணில்கள் கீரி அளவிற்கு பெரியவை. இந்த முறை மனித பயமற்ற மர அணில் ஒன்றை மிக நெருக்கத்தில் காண நேர்ந்தது. பக்தர்கள் வீசி ஏறியும் ரோபஸ்டாக்களைத் தின்று கொண்டிருந்தது அந்த அணில். ரசாயனங்களால் விளைவிக்கப்பட்ட பழங்களைத் தின்ன பழகிக்கொண்ட அணில் என்னவாகும் என்கிற அச்சம் மலை இறங்கிய பின்னும் மனதிலே இருந்தது.

எத்தனையோ காட்டுயிர்கள் ரசாயனம் கலந்த விளை பொருட்களால் அருகி விட்டன. சமீபத்திய உதாரணம் பிணந்தின்னிக் கழுகுகள். கால்நடைகளுக்குச் செலுத்தப்படும் வலி நிவாரணி மருந்துகளின் தாக்கத்தால் இவற்றின் இனப்பெருக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

திருமலையின் ஏழு சிகரங்களிலும் எங்கு திரும்பினாலும் பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பது வருத்தமளிக்கிறது. ஆந்திர வனத்துறை கொஞ்சம் கடுமை காட்ட வேண்டும் என மலை குனிய நின்றானை வேண்டிக்கொண்டேன்.

***

திருமலையில் உடனே கொண்டு வர வேண்டியது உடை கட்டுப்பாடு. "Mine is 8 1/2 inch" வாசகங்கள் உடைய பனியனும், அரை டிராயருமாக வலைய வரும் ஜெல் மண்டையன்களும், ஸ்லீவ்லெஸ் மென்தோள் மலர் மார்பினள்களும் பக்தியை ஏகத்துக்கும் குலைக்கிறார்கள்.

***

நிருபர் நடந்ததை எழுதுவார். பத்திரிகையாளரோ நடந்தது, நடப்பது, நடக்கப்போவதை எழுதுவார். ஞாநி இரண்டாவது வகை ஆசாமி. நான் புடலைங்காய்த் தனமாக ஒரு காரியம் செய்யத் துணிந்தேன். வருத்தப்பட்டு பாரம் சுமப்பாய் என்று எச்சரித்தார். கேட்டேனில்லை. சுமக்கிறேன்.

எப்போதும் ஞாநி வீட்டில் இருபது இளைஞர்களாவது இருக்கிறார்கள். எந்நேரமும் விவாதம், உரையாடல், நாடக ஒத்திகை என ரசனையான வாழ்க்கை. தமிழ்நாட்டில் இவரளவிற்கு இளைஞர்கள் புடை சூழ வேறு எழுத்தாளர்கள் இருக்கிறார்களா என்ன?!

***

பாஸ்கர் சக்தி, ஈஸ்வரிக்கா, பத்மா, உமா ஷக்தி, அண்ணாமலை, மோட்டார் விகடன் பாலா, தேனி ஈஸ்வர், தீபா, நேகா, சந்தன முல்லை, பைலட் சஞ்ஜெய் என நல்லோர் பலரைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சியாக முடிந்தது சென்னைப் பயணம்.

***

மேனி வருடும் குளிர் நாணி ஓடும் அனல். உலைக்குத் தப்பி மலைக்குள் புகுந்தேன். சீசன் துவங்கியதன் அடையாளமாக ஊட்டி முழுவதும் ஜனத்திரள்.

எந்தத் தருணத்திலும் நிறுவனத்தின் பெயரைச் சொல்லி அரசு இயந்திரங்களை வளைக்கக் கூடாது. குடிக்க கூடாது. பிளாஸ்டிக் கூடாது. கூச்சல் கூடாது என பல கூடாதுகளுக்கு ஒப்புக்கொண்டு உடன் வந்த நண்பர்கள் ஈரக்காற்றில் வாக்குறுதிகளைக் கரைத்தனர்.

கோடை வாசஸ்தலங்கள் ‘பார்’ இல்லை. குடித்து, வாந்தியெடுத்து, உளறி, அடுத்தடுத்த நாட்களில் தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார மலையேறி வர வேண்டுமா?! உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பார்களை வாழ வையுங்கள்.

Comments

Ashok D said…
மலையும் மலைசார்ந்த விஷயங்களும் புதுசு.. கண்ணா.. புதுசு
////////திருமலையின் ஏழு சிகரங்களிலும் எங்கு திரும்பினாலும் பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பது வருத்தமளிக்கிறது. ஆந்திர வனத்துறை கொஞ்சம் கடுமை காட்ட வேண்டும் என மலை குனிய நின்றானை /வேண்டிக்கொண்டேன்.///////


உங்களின் வேண்டுதல் விரைவில் நிறைவேற்றப்படட்டும் .
பகிர்வுக்கு நன்றி !
//மேனி வருடும் குளிர் நாணி ஓடும் அனல். உலைக்குத் தப்பி மலைக்குள் புகுந்தேன். சீசன் துவங்கியதன் அடையாளமாக ஊட்டி முழுவதும் ஜனத்திரள்//

தலைவரே !!!!
Unknown said…
/ஜெல் மண்டையன்களும், ஸ்லீவ்லெஸ் மென்தோள் மலர் மார்பினள்களும்/

Lollu lines...
Rasitthen.
Thamira said…
இந்த வாட்டி தகவல் சொல்லாமல் எஸ்கேப் ஆயிட்டமாதிரி தெரியுது. இருடி. அடுத்தவாட்டி வராமயா போயிடுவ.?
Kumky said…
அடப்பாவிகளா...

சொன்ன சொல்லை காற்றில் பறக்கவிட்டு தான் மட்டும் சவுகர்யமாய் சுற்றுப்பயணம் போய்வந்த சல்லிப்பயலை என்ன சொல்லி திட்டுவது என யோசித்துக்கொண்டிருக்கிறேன்..

எப்போய்யா ஊருக்கு...க.முவிலா..இல்ல க.பி.?


அரை டிராயருமாக வலைய வரும் ஜெல் மண்டையன்களும், ஸ்லீவ்லெஸ் மென்தோள் மலர் மார்பினள்களும் பக்தியை ஏகத்துக்கும் குலைக்கிறார்கள்.

இதுவும் ஒரு வகை தரி சனம்தான்..

அது கிடக்கட்டும் ஊட்டி இன்னமும் ஊட்டியாகவா இருக்கிறது...?
அருள் said…
செல்வேந்திரன், உங்களோட ப்ளாக் அடிக்கடி படிக்கிறேன். ரெம்ப நல்ல எழுதுறீங்க.
congrats....
- Arulmurugan, Ramanathapuram.
திருப்பதி.......வசதியான சாமி! வசதி குறையும் பூமி!

சென்னை...எங்க் ஊரு வெயில் எப்புடி?

கரெக்ட்...ஊட்டி எஸ்.பியும் சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார் !
என்ன செல்வாண்ணே! என் பேர்ல உள்ள கோபம் தணிஞ்சுதா? :) \\திருமலையில் உடனே கொண்டு வர வேண்டியது உடை கட்டுப்பாடு. "Mine is 8 1/2 inch" வாசகங்கள் உடைய பனியனும், அரை டிராயருமாக வலைய வரும் ஜெல் மண்டையன்களும், ஸ்லீவ்லெஸ் மென்தோள் மலர் மார்பினள்களும் பக்தியை ஏகத்துக்கும் குலைக்கிறார்கள்.// ரொம்பச் சரி! திருப்பதியில மட்டுமில்லே; பொதுவாவே பெண்களுக்கு உடைக் கட்டுப்பாடு அவசியம்னு நினைக்கிறவ நான்! இதை நான் சொன்னா மட்டும் வரிஞ்சு கட்டிட்டு எதிர்க்கிறாங்களே, ஏனுங்ணா?
selventhiran said…
அசோக், சங்கர், நேசா, செல்வராஜ், ஹாஸ்டல் பாய்ஸ், சுரேகா,

@ஆமூகி -> ஒரு மீட்டெடுப்புப் பணிக்காக வந்தேன் அண்ணா. அவகாசம் இல்லாததால் யாரிடத்திலும் சொல்லவில்லை.

@கும்க்கீ -> நான் எங்கே பறக்க விட்டேன். வெயில் தார போலாம்யா...

@கிருபாநந்தினி -> நான் மரியாதை கெட்ட தனமாக நடந்து கொண்டதற்கு... பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்? உடை கட்டுப்பாடு பெரிய பதம். யாரையும் எதுவும் கட்டுப்படுத்தாது. கூடாது. உடை பிரக்ஞை என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். இதே ஸ்லீவ்லெஸ் வெண்ணைய் புஜங்களை மொய்க்க அர்த்த ராத்திரிகளில் கூட ஆர்.எஸ். புரத்தில் அலைபவன் நான். கர்ப்பக்கிரகங்களில்தான் கொஞ்சம் உறுத்துகிறது. அதுவும் என் தனிப்பட்ட பிரச்சனைதான் இல்லையா?!

Popular Posts