விஜி 25

1. இதுவரை சுமார் 2000 பேர்களுக்கு மேல் விஜியிடம் எஸ்.ஏ.பி ( சேப்) பயிற்சி எடுத்து வாழ்வில் வளம் பெற்றுள்ளார்கள். அவர்கள் அனைவரும் வீட்டு பூஜையறையில் விஜியின் போட்டோவை மாட்டி வணங்கி வருகிறார்கள்.

2. பதிவர் சங்கம் / பேரவை / சிற்றவை / குழுமம் ஆகியவற்றிற்கு முன்னோடி விஜிதான். தலைவர்: விஜி - செயலாளர்: வர்ஷா - பொருளாளர்: பப்பு என உறுப்பினர்களைப் பற்றி கவலைப்படாமல் சங்கத்தை ஆரம்பித்த சிங்கம் அவர்.

3. விஜியின் ஆதர்ச எழுத்தாளர் நர்சிம்தான். அவரது இன்ஸ்பிரேசனில் கருப்புக்கண்ணாடியை மாட்டிக்கொண்டு எங்கேயோ வெறிக்கும் படங்களை வீடெங்கும் மாட்டி வைத்திருக்கிறார்.

4. விஜி பயங்கரமான பெருமாள் பக்தை. திருப்பதி செல்வதென்று தீர்மானித்து விட்டால் பச்சைத் தண்ணீர் பல்லில் படாது. நடந்தே மலையேறி தரிசனம் முடியும்வரை கொலை பட்டினி கிடப்பார்.

5. சின்ன வயதில் பஸ் டிரைவராக வரவேண்டும் என்று ஆசை. ஆனால், கடைசி வரை சைக்கிள் கூட ஓட்டத் தெரியாமல் போய்விட்டது என்பது சொந்த சோகம். அதனால்தான் ராப்பகல் பாராமல் கூகிள் பஸ்ஸில் டூர்ர்ர்ர்ர்ர்...

6. விஜிக்கு பிடிக்கவே பிடிக்காதது காஸிப். யாராவது புறம் பேசினால் பொறுக்கவே மாட்டார். கூட சேர்ந்து பேச ஆரம்பித்து விடுவார்.

7. இரண்டாயிரம் கடன் கேட்டால் இருநூறும், இருநூறு கேட்டால் இருபதும், இருபது ரூபாய் கேட்டால் இரண்டு ரூபாயும் கொடுக்கிற நவீனப் பொருளாதார கொள்கை அவருடையது.

8. சிம்-கார்டு படிவம் நிரப்புவது எப்படி என்றொரு 400 பக்க நூலும், ‘வெளங்குமா?’ என்றொரு கவிதைத் தொகுப்பும் கொணர இருக்கிறார். ராம்மு பதிப்பகம் இரண்டு தொகுதிகளையும் வெளியிட இருக்கிறது. ‘நான் என்னவாவேன்?!’ என்றொரு புத்தகத்தை பதிப்பாளர் ராம் எழுதிக்கொண்டிருப்பதாகவும் தகவல்.

9. ஓரே வீட்டில் மூன்று பதிவர்கள் என்கிற சாதனையோடு நின்று விடாமல் ஒரு பொமரெனியன் வாங்கி அதற்கும் ஒரு பிலாக் துவங்கிக் கொடுக்க இருக்கிறார். காட்டு நாய்கள் பதிவெழுதும்போது வீட்டு நாய் பதிவெழுதினால் என்ன என்பது அவரது வாதம்.

10. ஏழை பாழைகளுக்கு அவ்வப்போது டீ-சர்ட்டுகள், நைட் பேண்டுகள் வழங்குவது வழக்கம். அவர்களும் வரிசையில் நின்று வாங்கி விட்டு வாயார வாழ்த்துவார்கள்.

11. தன் உயிர் நண்பன் பெரிய எழுத்தாளனாக இருப்பதில் வண்டி வண்டியாய் பெருமிதம். தன் தோழியரிடம் சொல்லி பெருமை அடித்துக்கொள்வார்.

12. பால்வாடி, பள்ளிக்கூடம், கல்லூரி என எங்கும் எப்போதும் முதல் மாணவி விஜிதான். அசெம்பிளிக்கு வரிசையில் நிற்கும்போது.

13. தங்க நகைகள் என்றால் விஜிக்கு அறவே ஆகாது. எப்படியோ சேர்ந்துவிட்ட 346 பவுன் நகைகளை வறிய நிலையிலுள்ள கேண்டிக்கு கொடுத்து விடலாமா என்று கனத்த யோசனையில் இருக்கிறார்.

14. திருப்பூர் பதிவர்களுக்குத் தலைவர் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். தலைவி நான்தான் என்று மிட்-நைட்டில் மெஸெஜ் அடிப்பதைக் கண்டு வெயிலான் கலக்கத்தில் இருக்கிறார்.

15. தமிழில் அவருக்குப் பிடிக்காத ஓரே வார்த்தை ‘நற்குடி’

ஸாரி... விஜிம்மா... எவ்ளோ யோசிச்சாலும் பதினைஞ்சு பாயிண்டுக்கு மேல தேறலைம்மா... உனக்கு இவ்ளோ போதும்.

Comments

ஆஹா!

இது புதுசா இருக்கே!
தொடராக எழுத வேற யாரையும் கூப்பிடலையா!?
Thamira said…
கொழுப்பெடுத்தவன்யா நீர். அதுவும் அந்த 13வது பாயிண்ட், ஹிஹி.
Anonymous said…
இப்ப திருப்தியா இருக்குமே உனக்கு :)) எப்படியோ சந்தோசமா இருந்தா சரிதான் :))
Anonymous said…
. தன் உயிர் நண்பன் பெரிய எழுத்தாளனாக இருப்பதில் வண்டி வண்டியாய் பெருமிதம். தன் தோழியரிடம் சொல்லி பெருமை அடித்துக்கொள்வார்//

உன்னை சொல்லலையே ? ஒரு டவுட்டு :))
Kumky said…
ஹா...ஹா....ஹா..

ஒரு ரெண்டு பாயிண்டுத்தான்னே புரிபடவே மாட்டேங்கிது....
Ganesan said…
வஞ்ச புகழ்ச்சியில சேத்துகலாமா இந்த பதிவ?
Kumky said…
நல்ல பதிவு இன்னிக்கு இங்க டேரா போட்டு கும்மலாம்னா கமெண்ட் மாடரேஷன் ஒதைக்குதுங்களே....

ஒடனுக்குடனே பார்த்தான்னே ஒரு வேகம் வரும்...
மீதம் 10 பாயிண்ட்ஸை நான் எழுதட்டுமா :)
selventhiran said…
வாங்க வால், நான் கூப்பிட்டா யார் எழுதப் போறாங்க?

ஆமூகி, தின்னெலிக்காரன் வேற எப்படி ஓய் இருப்பான்?!

கும்க்கீ, மாடரேஷனை எடுத்தா கெழட்டுப்பயலுக அணானி கமெண்ட் போடுவானுகளே...

காவேரி கணேஷ், நீங்க ரொம்ப காமெடியான ஆள். இதில் புகழ்ச்சி எங்கே கண்டீர் :))

தாரணி, அடி பின்னூங்க...
//‘நான் என்னவாவேன்?!’ என்றொரு புத்தகத்தை பதிப்பாளர் ராம் எழுதிக்கொண்டிருப்பதாகவும் தகவல்.//

:))))

கோவிந்தா கோவிந்தா என்று ஆரவாரப்படுத்தும் ரசிகர்கள் கூட்டத்திலிருந்து ஆயில்யன்
சூப்பர் செல்வா.

அந்த 13 பாயிண்ட் ரொம்ப பிடிச்சு இருக்கு. நானும் அதுக்கு சிபாரிசு செய்யறேன்.

// பதிவர் சங்கம் / பேரவை / சிற்றவை / குழுமம் ஆகியவற்றிற்கு முன்னோடி விஜிதான். தலைவர்: விஜி - செயலாளர்: வர்ஷா - பொருளாளர்: பப்பு என உறுப்பினர்களைப் பற்றி கவலைப்படாமல் சங்கத்தை ஆரம்பித்த சிங்கம் அவர்.//

கழகத்தை விட்டுடீங்க..
// . இரண்டாயிரம் கடன் கேட்டால் இருநூறும், இருநூறு கேட்டால் இருபதும், இருபது ரூபாய் கேட்டால் இரண்டு ரூபாயும் கொடுக்கிற நவீனப் பொருளாதார கொள்கை அவருடையது. //

சரி... காங்கிரஸ் அமைச்சரவையில் ஒரு இடம் உண்டுன்னு சொல்லுங்க.
butterfly Surya said…
செல்வா, 25ம்எழுதி முடித்து விட்டீர்களோ என்று பயந்திட்டேன்..

உண்மைய போட்டு உடைச்சிடீங்க..

கடைசி செல்வா பன்ச்.. சூப்பர்.
Vijayashankar said…
திருப்பூரில் எப்ப அடுத்த மீட்டிங்? இந்த வாரக்கடைசி அல்லது அடுத்த வாரம் அங்கு வருகிறேன். நம்ம ஏரியா பி.என்.ரோடு.
RRSLM said…
ஆஹா!
ஒரு முடிவோடுதான் இருப்பீங்க போல இருக்கு!
அன்புள்ள செல்வேந்திரன்!
“கெழட்டுப்பயல்கள் அணானி கமெண்ட் போடுவான்கள்” என்று எழுதியிருக்கிறீர்கள்.
’அனானி’ என்பதே சரி.
Vetri said…
I am looking for a good SAP trainer, Kindly provide the email Id of Viji.

Haris
எல்லா பாயிண்ட்ஸும் ROTFL...!! பதிப்பாளர் ராம் - பாவம்!! :)))
Anonymous said…
//3. விஜியின் ஆதர்ச எழுத்தாளர் நர்சிம்தான். அவரது இன்ஸ்பிரேசனில் கருப்புக்கண்ணாடியை மாட்டிக்கொண்டு எங்கேயோ வெறிக்கும் படங்களை வீடெங்கும் மாட்டி வைத்திருக்கிறார். //

இது மட்டும் நர்சிம்முக்கு தெரியாம பாத்துக்கோங்க
செல்வா,
விஜி தான் மொக்கை குழுமத்தின் லேடி டேமேஜர் இத விட்டுட்டீங்களே?
மணிஜி said…
செல்வா..9&10 ல் ஏதோ உள்குத்து இருப்பதாக புத்தி நினைக்கிறது. மனம் மறுக்கிறது.
Anonymous said…
பய புள்ளைக நம்மள கலாய்க்கறதுன்னா என்னா சந்தோசம், முல்லை, அம்மினி, தாரணி, CEO, கும்க்கி, சித்தப்பூ, எல்லாருக்கும் பதில் தக்க வகையில் தரப்படும் :)
www.bogy.in said…
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in
//
ஜோசப் பால்ராஜ் said...
லேடி டேமேஜர்
//
ஜோசப், ஏன் ஒரே வார்த்தையை ரெண்டு தடவை சொல்லுறீங்க?

அளவில்லா டவுட்டுடன்
வெண்பூ
@வெண்பு

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, போய் காப்பி ஆத்துங்க போங்க!
Anonymous said…
இம்புட்டு கொலைவெறி ஆகாது செல்வா..என்னை கேட்டு இருந்தால் மீதி பத்து பாயிண்ட் எழுதி தந்திருப்பேன்...உஷ் அப்பாடா ரெண்டுபேருக்காகவும் பேசியாச்சி போய் கவிதை எழுதறேன்...
Anonymous said…
பொருத்தது போதும் பொங்கியெழு விஜி....
Sanjai Gandhi said…
//லதானந்த் said...

அன்புள்ள செல்வேந்திரன்!
“கெழட்டுப்பயல்கள் அணானி கமெண்ட் போடுவான்கள்” என்று எழுதியிருக்கிறீர்கள்.
’அனானி’ என்பதே சரி.//

லதானந்த் சார், செல்வேந்திரனை ரொம்ப டீப்பா கவனிக்கிறிங்க போல.. :)
selventhiran said…
அழைப்பை ஏற்று விஜியை கும்மிய பதிவுலக சொந்தங்களுக்கு நன்றிகள் பல!

Popular Posts