காமப்பேய்

சிறு மண் கலயம் ஒன்றில் குல்பியை அடைத்து விற்கிறார்கள். வாங்கித் தின்ற பின் வீசியெறிய மனமின்றி கழுவிக் கவிழ்த்தினேன். கவிழ்த்திய மண்பாண்டங்களுக்குள் யட்சி குடியேறி விடுகிறாள். நள்ளிரவில் யட்சியின் ஓலம் கேட்டு சமையலறைக்கு ஓடினால், கொசுக்கள் சுற்றி வளைத்து யட்சியின் ரத்தத்தைக் குடித்துக்கொண்டிருந்தன. கொசுவர்த்தி ஒன்றினைக் கொழுத்தி வைத்த பின் யட்சி நிம்மதியானாள். தான் வரம் கொடுக்கும் வக்கற்றவளென்பதால் வேறு ஏதேனும் கேள் என்றாள்.

ஒருதலையாகவோ தறுதலையாகவோ காதலித்துப் பிரிந்த பெண்ணை பிற்காலத்தில் பாலியல் தொழிலாளியாகச் சந்திக்க நேரிடும் கதைகளை எவரேனும் எழுத முற்பட்டால் தோளில் அமர்ந்துகொண்டு தலையைப் பிடித்து ஆட்டுவாயாக...! என்றேன்.

***
அறுவடை முடிந்த நிலத்தில் வீட்டுப்பெண்களுக்குக் காமப்பேய் ஓட்டும் திருவிழா கொங்கு மண்டலத்தில் நடைபெற்றதாகச் சொல்கிறார்கள். அந்தச் சமயங்களில் பாடப்படுவதுதான் ‘சுங்கிடிச்சாம் சுங்கிடிச்சாம் சுங்கிடிச் சேலை’ எனும் பாடல் என்றும் சொல்கிறார்கள். உண்மையில் அப்படி ஒன்று இருந்ததா அல்லது கவுண்டர் இனப் பெண்களை இழிவு படுத்த எதிர்சாதியினரின் பரப்புரையா என்று தெரியவில்லை.

காமம் பேய்தான் என்பதில் ஐயமில்லை! ஓட்டுவதென்று வந்து விட்டால் ஆணென்ன பெண்ணென்ன?!

***

ரத்த அழுத்தம் உடையவர்கள் அன்னபூர்ணாவில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. உங்கள் சுயமரியாதைக்கும், பொறுமைக்கும் சோதனைகள் வைத்தே சோற்றைப் போடுவார்கள். ஆனாலும் என்னைப் போன்ற தனிக்கட்டைகளுக்கு வேறு போக்கிடம் இல்லை. திரும்பிய பக்கமெல்லாம் அவர்கள்தான் கடை விரித்திருக்கிறார்கள்.

கையில் சாருவின் ‘வாழ்வது எப்படி?’ - ஐ பிரித்து வைத்துக்கொண்டு டேபிளில் அமர்ந்தேன். சர்வர் வந்து என்ன வேண்டுமென்று வினவ 18 பக்கங்கள். ஆர்டர் செய்த தோசை வந்து சேர 22 பக்கங்கள். இரண்டாவதாகக் கேட்ட காபி வருவதற்கு 20 பக்கங்கள். பில் வந்து சேர - மிச்ச சில்லறை வந்து சேர என 86 பக்கங்களுடைய புத்தகத்தைப் படித்து முடித்து விட்டேன். வாழ்வின் எல்லாக் கடமைகளையும் முடித்தாலொழிய இனியொரு முறை இங்கு வரக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.

சரி புத்தகத்திற்கு வருவோம். பதினெழு கட்டுரைகளில் ‘வாழ்வது எப்படி?’ என்ற மென்பொருள் இளைஞர்களைப் பற்றிய கட்டுரையும், ‘மீள முடியாத இசைக் கனவு’ என்ற மைக்கேல் ஜாக்ஸன் கட்டுரையும்தான் தேறியது. மற்றதெல்லாம் சுயபீத்தல்கள்!

***

ரஹ்மானின் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா லண்டனின் ராயல் பெஸ்டிவல் ஹாலில் நடந்தது. மொஸார்ட் போன்ற மாபெரும் மேதைகள் தங்களது இசை நிகழ்ச்சிகளை நடத்திய அரங்கம் அது. உலகெங்கிலும் இருந்து வந்த இசை ஆர்வலர்களின் முன்னிலையில் ரஹ்மானின் இசைக்கோர்வைகளை இங்கிலாந்து இசைக்கலைஞர்கள் இசைத்தனர். ரஹ்மான் ஒரு பார்வையாளராக கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தார்.

லண்டன் சவுத் பேங்க் சென்டர் ஆரம்பிக்கப்பட்ட 78 வருட வரலாற்றில் இங்கே இசைக்கும் முதல் இந்திய இசை ரஹ்மானுடையது. ரோஜா, பம்பாய் மற்றும் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் தீம் இசைக்கோர்வைகளை மட்டும் ரஹ்மானின் ஆஸ்தான கலைஞர்கள் நவீன் (புல்லாங்குழல்) மற்றும் கணேஷ் (வீணை) இசைத்தனர். இசையின் உன்னதங்களைத் தொட்டுத் திரும்பும் இவ்விசைக் கோர்வைகளுக்கு ‘ஸ்டண்டிங் ஒவேஷன்’

நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் பிபிசி மூலம் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ரஹ்மான் பதிலளித்துக்கொண்டிருந்தார். ஒரு கேள்வி: ‘ஏதேனும் ஓர் இசைக்கருவியை நீங்கள் கல்யாணம் செய்துகொள்ளச் சொன்னால், எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?’

‘இதை என் மனைவி கேட்டால் கோபித்துக் கொள்வார்’ என்று வெள்ளந்தியாகப் பதில் சொல்ல அரங்கம் அதிர்ந்தது.

***

மேற்படி சம்பவத்தை வீடியோவாக்கி எனக்கு அனுப்பி வைத்திருந்தது நிஜாம். நார்தம்ப்ரியா யுனிவர்சிட்டியில் (நியூகேஸ்டில்) மேலாண்மை படிக்கிற மாணவன். ஹாரிலால் கதையின் மூலம் சாகாவரம் பெற்ற விடுதியறைத் தோழன். நானும் அவனும் நேர்கோட்டில் சந்திக்கிற ஓரே விஷயம் ரஹ்மான்தான். ஜோதா அக்பர், டெல்லி 6 போன்ற மாஸ்டர் பீஸ்கள் வெளியான சமயங்களில் பல ராத்திரிகள் ரஹ்மானில் லயித்துக் கிடந்திருக்கிறோம். இருவருக்கும் பொதுவான லட்சியமாக இருந்தது ரஹ்மானைச் சந்திப்பதுதான். அவன் ஜெயித்து விட்டான்.

***

நிறைய வெளிநாடுவாழ் நண்பர்கள் அழைக்கிறார்கள். உற்சாகமாக இருக்கிறது. அடுத்தடுத்த வரிகளை நோக்கி நகரும் உந்துதலைப் பெற்றுக்கொள்கிறேன். ஆனால், பேசுகிறவர்களில் பலரும் ‘ரொம்ப நாளாப் பேசனும்னு நினைப்பேன். ஏதாவது சொல்லிடுவீங்களோன்னு தயக்கம்’ என்பதுதான் கவலையளிக்கிறது. நான் எப்போதும் உரையாடலை நேசிப்பவனாக இருக்கிறேன். எழுதுவதைக் காட்டிலும் பேசுவதுதான் பெரும் ஆசுவாசம் அளிப்பதாக இருக்கிறது. நள்ளிரவு நயாகராக்களுடன் மட்டும்தான் ஒவ்வாமை. அது கூட விடிகாலைக் கவலைகளை எண்ணித்தான்!

உன் எழுத்தில் மெலிதான திமிர்த்தனம் தென்படுவதுதான் அவர்களது அபிப்ராயத்திற்குக் காரணம் என்கிறாள் கேண்டி.

***

ட்வீட்டும் நடிகைகளில் எனக்கு செலீனா ஜெட்லீ மீதுதான் காதல் பெருக்கெடுக்கிறது. ஜிம்கானா கிளப் எச்சித்தனமாக நடந்து கொண்ட விவகாரத்தில் செலீனா கொதித்தெழுந்ததும், லெஷ்மி திரிபாதிக்கு ஆதரவு திரட்டியதும் எனக்குப் பிடித்திருந்தது.

மற்ற சமூக வலைதளங்கோடு ஒப்பிடுகையில் ட்வீட்டர் அத்தனை மோசமில்லை. பல சமாச்சாரங்களை ட்வீட்டர் மூலமே தெரிந்து கொள்கிறேன்.

***

Comments

//ஒருதலையாகவோ தறுதலையாகவோ காதலித்துப் பிரிந்த பெண்ணை பிற்காலத்தில் பாலியல் தொழிலாளியாகச் சந்திக்க நேரிடும் கதைகளை எவரேனும் எழுத முற்பட்டால் தோளில் அமர்ந்துகொண்டு தலையைப் பிடித்து ஆட்டுவாயாக...! என்றேன்.//

செல்வேந்திரன் சார் நச்!
ஜெய் said…
முதல் முறையா உங்க பதிவை வாசிக்கறேன், செல்வேந்திரன். இனி வாசிக்காமல் விடமாட்டேன்.

// ஒருதலையாகவோ தறுதலையாகவோ காதலித்துப் பிரிந்த பெண்ணை பிற்காலத்தில் பாலியல் தொழிலாளியாகச் சந்திக்க நேரிடும் கதைகளை எவரேனும் எழுத முற்பட்டால் தோளில் அமர்ந்துகொண்டு தலையைப் பிடித்து ஆட்டுவாயாக...! என்றேன்.// அருமை.

// மற்றதெல்லாம் சுயபீத்தல்கள்! // நச் நேர்மை.

// ஜோதா அக்பர், டெல்லி 6 போன்ற மாஸ்டர் பீஸ்கள் // இது போதும் சார். இனி ரஹ்மான் பத்தி சரியா டிஸ்கஷன் பண்ண ஆள் கிடைச்சாச்சி. :)
RaGhaV said…
//உன் எழுத்தில் மெலிதான திமிர்த்தனம் தென்படுவதுதான் அவர்களது அபிப்ராயத்திற்குக் காரணம் என்கிறாள் கேண்டி.//

:-))
சுவாரஸ்யம் செல்வா
Thamira said…
எல்லாம் வழக்கம் போல..

முதல் பகுதியில் இருக்கும் யட்சியைப் பத்திரமாக வைத்திருங்கள். நிறைய வேலையிருக்கிறது.!
zen said…
Mr.செல்வேந்திரன்
உங்களைப் பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டிருந்தேன். தாங்கள் எப்படி, சாருவின் புத்தகத்தை எல்லாம் ...? I don't think people of your standard should read those (!) books!. They are substandard in my view.
Raju said…
\\//உன் எழுத்தில் மெலிதான திமிர்த்தனம் தென்படுவதுதான்\\

எனக்கு அதுதான் ரொம்ப ரொம்ப புடிச்சுருக்கு..!
Anonymous said…
//பேசுகிறவர்களில் பலரும் ‘ரொம்ப நாளாப் பேசனும்னு நினைப்பேன். ஏதாவது சொல்லிடுவீங்களோன்னு தயக்கம்’ என்பதுதான் கவலையளிக்கிறது//

எனக்கும் தோன்றும் இந்த எண்ணம் அதாவது பிசின்னு சொல்லிடுவீங்களோன்னு....
இங்கேயும் ஏமாந்தேன்:))))
//////நிறைய வெளிநாடுவாழ் நண்பர்கள் அழைக்கிறார்கள். உற்சாகமாக இருக்கிறது. அடுத்தடுத்த வரிகளை நோக்கி நகரும் உந்துதலைப் பெற்றுக்கொள்கிறேன். ஆனால், பேசுகிறவர்களில் பலரும் ‘ரொம்ப நாளாப் பேசனும்னு நினைப்பேன். ஏதாவது சொல்லிடுவீங்களோன்னு தயக்கம்’ என்பதுதான் கவலையளிக்கிறது. நான் எப்போதும் உரையாடலை நேசிப்பவனாக இருக்கிறேன். எழுதுவதைக் காட்டிலும் பேசுவதுதான் பெரும் ஆசுவாசம் அளிப்பதாக இருக்கிறது. நள்ளிரவு நயாகராக்களுடன் மட்டும்தான் ஒவ்வாமை. அது கூட விடிகாலைக் கவலைகளை எண்ணித்தான்!

உன் எழுத்தில் மெலிதான திமிர்த்தனம் தென்படுவதுதான் அவர்களது அபிப்ராயத்திற்குக் காரணம் என்கிறாள் கேண்டி.////////


எங்கோ போய் விட்டது சிந்தனை .
//அறுவடை முடிந்த நிலத்தில் வீட்டுப்பெண்களுக்குக் காமப்பேய் ஓட்டும் திருவிழா//
நல்ல விளைச்சலுக்காக அறுவடை நிலத்திலேயே கூட்ட செக்ஸ் களியாட்டாங்களில்(வழிபாடு முறை ?!?!) ஈடுபடும் வழக்கம் பழந்தமிழர்களுக்கு முன்னம் இருந்ததென ஜெ.மோ எழுதியதுதான் ஞாபகம் வருகிறது.

ரஹ்மானின் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா வீடியோவை இணையமெங்கும் சலித்து தேடி விட்டேன்.
ஏதேனும் சுட்டி/இணைப்பு குடுத்தால் கோடி புண்ணியம். அதோடு, யட்சி நீர் நினைத்தன எல்லாம் செய்யும் கைப்பாவையாக மாற என் குலதெய்வத்தை வேண்டிக் கொள்வேன்.
அருள் said…
// உன் எழுத்தில் மெலிதான திமிர்த்தனம் தென்படுவதுதான் அவர்களது அபிப்ராயத்திற்குக் காரணம் என்கிறாள் கேண்டி. //

அப்படில்லாம் எனக்கு ஒன்னும் தெரியல. நல்லாத்தான் இருக்கு. அனால், சுஜாதா அப்பப்ப ப்ளின்க் அகுராறு.
-Arulmurugan, ramanathapuram.
கொசுவத்தியைக் கொழுத்தி என்பது தவறு.
கொளுத்தி என்பதே சரி.
Kumky said…
குசும்பன் said...
இங்கேயும் ஏமாந்தேன்:))))

அஃதே..அஃதே..
// உன் எழுத்தில் மெலிதான திமிர்த்தனம் தென்படுவதுதான் அவர்களது அபிப்ராயத்திற்குக் காரணம் என்கிறாள் கேண்டி. //


இருக்கும் இருக்கும்.. ஆனால் நேர்ல சந்திச்சு உரையாடும்பொழுது ரொம்ப நார்மலாத்தான் செல்வேந்திரன் இருக்காரு. நம்புங்க :))
selventhiran said…
ஆர்.ஆர், ஜெய், ராகவ், கார்க்கி, ஆமூகி, ராஜூ, தமிழரசி, சங்கர், ஹாஸ்டல் பாய்ஸ் வருகைக்கு நன்றி!

@ நேசமித்திரம் - யோவ் அது என்ன புட்ச்சா ‘சார்’னு?

@ சென் - தமிழ்ச் சூழலில் சாரு தவிர்க்க முடியாதவரும் தவிர்க்கக் கூடாதவருமாக இருக்கிறார். வாழ்வியல் சார்ந்த அவருடைய முஸ்தீபுகளுக்காக அவருடைய இலக்கியப் படைப்புகளை நிராகரிக்க முடியாது. கூடாது.

@ குசும்பா & கும்கீ - கம்பராமாயணம் படிங்க!

@ சிவா - தகவலுக்கு நன்றி. வீடியோ லிங்க் அனுப்புகிறேன்.

@ சென்ஷி - அடுத்தவாட்டி உன்னுடைய சிறுகதைகளைப் பற்றி பேசுவோம்.
Unknown said…
//ஒருதலையாகவோ தறுதலையாகவோ காதலித்துப் பிரிந்த பெண்ணை பிற்காலத்தில் பாலியல் தொழிலாளியாகச் சந்திக்க நேரிடும் கதைகளை எவரேனும் எழுத முற்பட்டால் தோளில் அமர்ந்துகொண்டு தலையைப் பிடித்து ஆட்டுவாயாக...! என்றேன்.//

கானல்நதி படிச்சீங்களா? :))

செம ஓட்டம் செல்வா உங்க எழுத்துல. வரிசையா பழைய கட்டுரைகள படிச்சிட்டு இருக்கேன். :)
வினோ said…
//பேசுகிறவர்களில் பலரும் ‘ரொம்ப நாளாப் பேசனும்னு நினைப்பேன். ஏதாவது சொல்லிடுவீங்களோன்னு தயக்கம்’ என்பதுதான் கவலையளிக்கிறது//

இதை படித்த பின் எனக்கு அந்த மாதிரி எண்ணம் இல்லை என்பது தெரிகிறது. கண்டிப்பா உங்களோட பேசறேன் விரைவில்.

Popular Posts