துளிர்

என்னவாயிற்றெனக் கேட்காத நபரில்லை. பிழைப்பு - உழைப்பு - களைப்பு என ஏதேதோ சொல்லிச் சமாளித்தாலும் ‘சலிப்பு’ என்பதே உண்மை. கீழ்மைகளின் கூடாரத்தின் கீழ் நின்று கூச்சல் என்ன வேண்டிக் கிடக்கிறது என்று வாளாவிருந்துவிட்டேன். பொருள் முதல் வாத காரணங்களுக்காக அறச்சார்பை அடமானம் வைப்பவர்களைக் கண்டு பொருமிக்கொண்டும், மொத்தக் கோபத்தையும் புத்தகங்களின் மீது செலுத்திக்கொண்டும் காலம் கழித்தேன்.

யாராவது பிளாக்கரென அறிமுகம் செய்தால் வெட்கமாக இருக்கிறது. தனிமையில் சந்தித்து ‘செல்வேந்திரெனச் சொல்லுங்கள்... போதும்’ என இரைஞ்ச தோன்றுகிறது. இயங்கு தளத்தை மாற்றேன் என்கிறாள் கேண்டி. பத்துப் பதினைந்து பத்திரிகைகள் வாசலில் காத்துக் கிடப்பதாக நினைப்பு அவளுக்கு. பதறியபடி வரும் மின்னஞ்சல் விசாரணைகளில் விரவிக்கிடக்கும் அன்பிற்காகவேனும் எழுதியாக வேண்டும்.

***
இடைப்பட்ட காலத்தில் முதலாம் ஆண்டு தமிழினி இதழ்களின் தொகுப்பு, மெலிஞ்சி முத்தனின் வேருலகு, யுவன் சந்திரசேகரின் வெளியேற்றம், பேயோனின் சேஷ்டைகள், பாதசாரியின் அன்பின் வழியது உயிர்நிழல் (மறுவாசிப்பு), பேய்க்கரும்பு (மறுவாசிப்பு), மனோஜின் புனைவின் நிழல், ஜெயமோகனின் எழுதும் கலை, அனற்காற்று ஆகிய புத்தகங்களை வாசித்து முடித்தேன்.

***

கனடாவில் வாழத் தலைப்பட்ட ஈழ எழுத்தாளர் மெலிஞ்சி முத்தன். இவரது ‘வேருலகு’ நாவல் மிகக்குறைவான பக்கங்களில் (53) போர் கலைத்துப் போட்டதொரு கடலோரக் கிராமத்தின் (அரிப்புத் துறை) வாழ்வைக் குறுக்கு வெட்டில் வைக்கிறது. தமிழ் நாவல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நெய்தல் நிலப்பதிவுகளில் இதுவும் ஒன்று. முத்தன் இயல்பில் கவிஞர் என்பதால் காட்சிகள் கனலும் கவித்துவத்தோடு நகர்கின்றன. எளிய மனிதர்கள் உன்னதர்களாகவேச் சித்தரிக்கப்படும் வழமையிலிருந்து விலகி இவரது பாத்திரங்கள் பலகீனங்களோடும், கீழ்மைகளோடுமே உலா வருகின்றன.

இந்த அருமையான நாவலின் அட்டைப் படம் மிகச் சுமாராக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது என் அபிப்ராயம். நூலை பத்துப் பேருக்குச் சிபாரிசு செய்தேன். என்னைத் தவிர எவருக்கும் பிடிக்கவில்லை.

***

வெயில் வட்டம் சிறுகதை தந்த அனுபவத்தில் ‘புனைவின் நிழலை’ வாசிக்கத் துவங்கினேன். பதினைந்து சிறுகதைகளும் அருமை. குறிப்பாக ‘அட்சர ஆழி’ எத்தனை விசித்திரமான வாசிப்பனுபவம்.

***

அடர்த்தியான நெரிசலோடு நகர்ந்து கொண்டிருந்தன வாகனங்கள். வழக்கம் போல பத்துப் பைசாவிற்குப் பிரயோசனமில்லாதவற்றைப் பற்றி யோசித்துக்கொண்டே என் ஈருளியைச் செலுத்திக்கொண்டிருந்தேன். திரும்ப வேண்டிய வளைவில் திடீரென சைகை ஏதும் செய்யாமல் திரும்பி விட்டேன். பின்னிருக்கையில் புதுமனைவியை இருத்தி வந்த அடியேனின் வழித்தோன்றல் நிலை தடுமாறி விழப்போய், சமாளித்து ‘லூஸாடா நீ...!’ என்றான் ஆத்திரத்துடன்.

’எப்படித் தெரியும்’ என்றேன் ஆச்சர்யத்துடன். கொல்லென சிரித்து வைத்தாள் அவன் இல்லாள். இவள் வீட்டை விசாரிக்க வழியிலேன் பன்னிருகை கோலப்பா...!

***

ஜெயமோகனுடன் காடு புகுவதாகத் திட்டமிட்டிருந்த தினத்தில் கடும் காய்ச்சல் கண்டேன். நோய்கள் தாயை நினைவூட்ட ஏற்படுத்தப்பட்டவை. இரண்டு நாட்களாய் திறக்காத அறைக்குள் அடைபட்டுக் கிடந்தேன். சுடு சோற்றிற்கும் சுள்ளென்ற ரசத்திற்கும் மனம் ஏங்கியது. அண்ணாச்சியிடம் சொன்னால் மிளகு ரசமும், கானத் துவையலும் கிடைக்கும். விஜி எனில் பருப்பு ரசம். அண்ணியிடம் கேட்டால் தக்காளி ரசத்தோடு தேடி வந்திருப்பார்கள். ஆனால், செல்போன் கைக்கெட்டும் தொலைவில் இல்லை. அறையின் ஏதோவொரு மூலையில் அவ்வப்போது ஒலித்து அடங்கியது. தேடி எடுக்கத் திராணி இல்லை.

இரண்டு நாட்களாய் ஆளைக் காணோம். அலுவலகத்திலும் இல்லை. போனையும் எடுக்கவில்லையென ஏதோ மனக்கணக்குப் போட்டு வீட்டுக்கே தேடி வந்த சந்தியாவின் கார் டிரைவர் கொண்டு வைத்த ஹாட் பாக்ஸில் முல்லைப் பூ சாதமும், திப்பிலி ரசமும் இருந்தது. அன்பெனும் தெய்வம்தான் இவளென்பதுணர்ந்தேன்.

***

மொளீ வளர கல்லைக் கட்டித் தொங்கவிடும் மாநாட்டுப் பந்தலுக்கு எதிரே பபாஸியின் புத்தகக் கண்காட்சி அரவம் இல்லாமல் நடந்து முடிந்தது. மாலை வேளையில் தமிழினி ஸ்டாலில் வசந்தகுமார், நாஞ்சில் நாடன், பாதசாரி, சு.வேணுகோபால், கோணங்கள் ஆனந்த், கால.சுப்ரமண்யம், செல்வ.புவியரசன் என கச்சேரி களை கட்டும். சிரிக்கச் சிரிக்கப் பேசிக் கலைவோம்.

முடிந்து மூட்டை கட்டுகிற நாளில் எனக்கு முப்பது, நாற்பது புத்தகங்களைப் பரிசளித்தார். நான் நல்லெழுத்துக்காரனாய் வரவேண்டுமென்பதில் என்னைக்காட்டிலும் முனைப்பு மிக்கவர்.

***

மனதில் மின்னலென உதிக்கும் ஒற்றை வாக்கியத்தை ஊதிப்பெரிதாக்கி பெரும் வாழ்வைப் படைக்கிறவர்கள். பெரும் வாழ்வையே ஒரு வாக்கியத்திற்குள் அடைக்க முடியுமா என முயற்சிப்பவர்கள். இருதரப்பின் இருப்பும் தேவையாகத்தான் இருக்கிறது. ஜெயன் ஒரு வகை. காசி ஒரு வகை. என் மனக்காளான் தனி வகை.

Comments

அப்பாடி, மீண்டு(ம்) எழுத வந்துவிட்டீர்களா? மிக்க சந்தோஷம் தம்பி.

அடிக்கடி எழுதுங்கள் தோன்றுவதை.

//அடர்த்தியான நெரிசலோடு நகர்ந்து கொண்டிருந்தன வாகனங்கள். வழக்கம் போல பத்துப் பைசாவிற்குப் பிரயோசனமில்லாதவற்றைப் பற்றி யோசித்துக்கொண்டே என் ஈருளியைச் செலுத்திக்கொண்டிருந்தேன். திரும்ப வேண்டிய வளைவில் திடீரென சைகை ஏதும் செய்யாமல் திரும்பி விட்டேன். பின்னிருக்கையில் புதுமனைவியை இருத்தி வந்த அடியேனின் வழித்தோன்றல் நிலை தடுமாறி விழப்போய், சமாளித்து ‘லூஸாடா நீ...!’ என்றான் ஆத்திரத்துடன்.

’எப்படித் தெரியும்’ என்றேன் ஆச்சர்யத்துடன். கொல்லென சிரித்து வைத்தாள் அவன் இல்லாள்.//
சேட்டைக்காரனப்பா நீ!
எழுதாத காலங்களில் உங்களைத் தேடாவிட்டாலும் இதை எழுதியதைப் படிக்கையில் அன்பு அதிகமாகிறது.

இந்த எழுத்துக்காக சில நாட்கள் இடைவெளி இருந்தாலும் தகும்.

ரசனையான எழுத்து.
Mahi_Granny said…
இவ்வளவு நாள் கழித்து வந்ததை சரி செய்து விட்டீர்கள் . என்ன அருமையான எழுத்து . சலிப்பை தூர போட்டு விட்டு தொடருங்கள் . வாழ்த்துக்களுடன் mahi granny
Unknown said…
I too welcome Selvendran
அன்பின் செல்வேந்திரன்
பல்வேறு சிந்தனைகளை அழகாகத் தொகுத்தமை நன்று

நல்வாழ்த்துகள் செல்வேந்திரன்
நட்புடன் சீனா
நீயி ரஜினி மாதிரி. என்னைக்கி வந்தாலும் ஹிட்டு.

:))
//வெயில் வட்டம் சிறுகதை தந்த அனுபவத்தில் ‘புனைவின் நிழலை’ வாசிக்கத் துவங்கினேன். பதினைந்து சிறுகதைகளும் அருமை. குறிப்பாக ‘அட்சர ஆழி’ எத்தனை விசித்திரமான வாசிப்பனுபவம்//

அதைத்தான் நானும் உணர்ந்தேன், மேலும் புனைவின் நிழல் தொகுப்புடன் ஒப்பிடுகையில் வெளிவட்டம் மிகச் சாதாரணமான கதையாகவே எனக்குப் பட்டது

மெலிஞ்சி முத்த்தனின் புத்தகம் இன்னும் போதிய கவனிப்பைப் பெறவில்லை என்றே நானும் நினைக்கிறேன்
கணேஷ் said…
மகிழ்ச்சி...தொடருங்கள்..........
Aranga said…
அய்யா ,

நீங்க பிளாகில் எழுதி பிய்த்தது போதும்,

போய் நாவல் எழுதற வேலையை பாருங்க ,பதிப்பாளர் தயார் , 15 வாசகர்களும் தயார் , என்ன தயக்கம் , பொங்கலை தின்று பொங்கியெள வேண்டியதுதான் :)
Anonymous said…
உன்னைப் போன்ற நல்லதொரு சிற்பி அம்மிகொத்தி அயர்ந்து போவது வாழ்க்கையின் விசித்திரங்களிலொன்று செல்வா. புற்களுக்கிடையில் வளரும் பயிரென காலம் புரட்டிப்போட்டது கண்டேன்.

உனக்கான காலம் வரும் காத்திரு அதுவரை.

உன் மொழிநடைதான் உன் பலம்.
//யாராவது பிளாக்கரென அறிமுகம் செய்தால் வெட்கமாக இருக்கிறது.//

அவ்வ்வ் இது என்ன ஒய் "அந்த இடத்தில்" பிரச்சினை மாதிரி சமாச்சாரமா? எதுக்கு வெட்கம்?

***********
சஞ்சய் கிட்ட சொல்லியிருந்தா ரவா ரசம் வந்திருக்கும் (உப்புமா)
vaanmugil said…
துளிர்!!!!-அருமை
துளிர்விட்டமைக்கு நன்றி மென்மேலும் துளிர் விடுக!
Romeoboy said…
\\இடைப்பட்ட காலத்தில் முதலாம் ஆண்டு தமிழினி இதழ்களின் தொகுப்பு, மெலிஞ்சி முத்தனின் வேருலகு, யுவன் சந்திரசேகரின் வெளியேற்றம், பேயோனின் சேஷ்டைகள், பாதசாரியின் அன்பின் வழியது உயிர்நிழல் (மறுவாசிப்பு), பேய்க்கரும்பு (மறுவாசிப்பு), மனோஜின் புனைவின் நிழல், ஜெயமோகனின் எழுதும் கலை, அனற்காற்று ஆகிய புத்தகங்களை வாசித்து முடித்தேன்.//

ஹி ஹி ஹி உங்களை எப்படி முந்தி கொண்டு செல்வது என்று தெரியவில்லை.. அடுத்த முறை கோவை வரும் போது கண்டிப்பா உங்களை சந்திக்கணும். கே அண்ணாச்சி கிட்ட என்னை பற்றி கொஞ்சம் சொல்லுங்க..
சுயமே பயம் :)
nirmal said…
"நோய்கள் தாயை நினைவூட்ட ஏற்படுத்தப்பட்டவை"

அருமை!
கண்டேன் நல்ல ஒரு எழுத்தை மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி......
//நோய்கள் தாயை நினைவூட்ட ஏற்படுத்தப்பட்டவை./

அருமை!

உணர்ந்திருக்கிறேன்,
உணர்ந்து கொண்டும் இருக்கிறேன் !
Anonymous said…
16 வாசகியும் வெயிட்டிங்.. சீக்கிரம் எழுதி முடி. இத்தனை சொன்னையே. அந்த கல்யாண மேட்டர் மட்டும் விட்டுடையே செல்வா :)))
Thamira said…
அழகான விஷயங்கள் உங்கள் ரசனையான எழுத்தில்.. சுவாரசியம்.!

(கேள்வி 1: ஈருளின்னா ஈர் பிடுங்க பயன்படுமே அதுவா.? :-)
கேள்வி 2: அதாரு சந்தியா? கேண்டிக்கு தெரியுமா? :-))
அருமையான சந்தர்ப்பத்தை காய்ச்சல் தடுத்து விட்டது போலும், ஜெயமோகன் அவர்களிடமிருந்து பயணக் கட்டுரையை எதிர்பார்த்து வாசிக்கும் வாசகன் நான், அதுபோல் உங்களிடமும் எதிர்பார்த்தேன், முடியாமல் போயிற்று எனக்கும் ஏமாற்றமே
Anonymous said…
ஆதி அதை என்னிடம் கேளூங்க : சந்தியா என்பவர் செல்வாவின் வருணனையில் - ஆகச்சிறந்த அழகி, ( ஐய்யோ செல்வா மறந்துப்போச்சே ) அடர்கானத்தேவதை, ம்ம்ம் இன்னும் இருக்கு. நினைவு வந்ததும் சொல்றேன்
Deepa said…
ரசித்தேன். தொடர்ந்து எழுதுங்கள்.
Karthik said…
//நோய்கள் தாயை நினைவூட்ட ஏற்படுத்தப்பட்டவை.

எவ்வளவு உண்மை. போனவாரம் அனுபவிச்சேன்.
/விசித்திர வியாபாரி வி.கே அண்ணாச்சி. /

யாருங்க இவரு? கொஞ்சம் டீடெய்லா சொல்லுங்களேன். (இவர் மாதிரி ஒருத்தரப் புடிச்சா நல்லாருக்குமே)
Unknown said…
அழகு..!அகத்தை போல்,,,!
வினோ said…
அருமை செல்வா... ரொம்ப நாட்களுக்கு அப்புறம். உங்கள கோவையில சந்திக்க முடியாம போச்சே...
Thamira said…
@மயில்

அது அடர்கானமா இருக்காது, நல்லா கேட்டுப்பாருங்க. யாராவது துவையல் வச்சிறப்போறாங்க.

அடர்கானகத்தேவதையா இருக்கும்.! :-))))
Kumky said…
தமிழ்ல எழுதி தொலைங்கைய்யா...

என்ன ஒரு இம்சை...சே.

இப்படியே கனவுல ,மூழ்கி திலைக்கறதோட இருக்க வேண்டீயதுதானே...

(அபாரம்..அற்புதம்..ஆஹா..ஓஹோ)
(இது பயத்தில் போடப்படும் பின்னூட்டங்களுக்காக)
butterfly Surya said…
என்ன சொல்லி பாராட்ட..?

சல்லிப்பய..
vijee said…
i too like it...
selventhiran said…
மாதவராஜ் அண்ணா

பரிசல்

மகி கிராணி

செல்வராஜ் ஜெகதீசன்

சீனா

கணேஷ்

அண்ணாச்சி

கிரி

நிர்மல்

பித்தன்

ஆயில்யன்

ராகவேந்திரன்

தீபா

கார்த்திக்

சிவசங்கர்

சிவக்குமரன்

பேரரசன்

சூர்யா

வீஜீ

- வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பல.

வினோ, உலகம் ரொம்ப இத்துணுண்டு. சந்திக்கலாம்.

கும்கீ, உங்களுக்கா புரியலை.


ச.முத்துவேல், உங்களுக்குத் தெரியாதா அவரை?



ஆமூகி, சிண்டு முடிக்கிறதுல நீர் எல்கேஜி. கீழ்க்காணும் அம்மையார்கிட்ட டியூசன் எடுத்துக்கலாம்.

மயில், வாழ்வோடு விளையாடுவதே வேலையாப் போச்சு :) அது ‘வன தேவதை’

உள்குத்து வெயிலான் ஒழிக!

ரோமியா, கே அண்ணாச்சி. காசியா?!

குசும்பா, ரவா சாம்பார்தான் தெரியுமாம் அவருக்கு.


அப்துல்லாண்ணே அதெல்லாம் இருக்கட்டும். கூப்பிட்டா போனை எடுக்க மாட்டேன்கிறீரே என்ன கணக்கு?

அருண்மொழி வர்மன், வெயில்வட்டத்தின் கதைப்பரப்பு என் நோஸ்டால்ஜியோவோடு ஒத்துப் போவதால் கூடுதல் ஈர்ப்பு.

அரங்கசாமிண்ணே, கூடவே புக்கு வந்தததும் குதறித்தள்ளவும் ஆட்கள் தயார். அதான் பயம்மா இருக்கு.
மொழியின் அடர்த்தி கூடியிருக்கிறது செல்வா.. நண்பர்கள் சொல்வது போல புத்தகத்துக்கு தயாராகலாம்னு நினைக்கிறேன்.. வாழ்த்துகள்..:-)))
Saravana kumar said…
நன்றாக இருந்தது.

பிரதியங்காரக மாசானமுத்துவின் வெளிநாட்டு சொற்பொழிவு என்ன ஆச்சு செல்வா அண்ணா ?
நீண்ட இடைவேளை எடுத்துக் கொண்டு வந்தாலும் அடர்வான எழுத்தோடு வந்திருக்கிறீர்கள். வாசிக்க சுவாரஸ்யம் குறையாமல் இருக்கிறது. வாழ்த்துகள் செல்வா.
ரீடரில் இரண்டுதான் படிக்காத இடுகை என்று காட்டியது! இத்தனை நாட்களில் இரண்டுதான் எழுதியிருக்கிறீர்களா என்றுதான் உள்நுளைந்தேன்.

பத்து இடுகைகளை மொத்தமாக வாசித்த அனுபவம்!
Deiva said…
I am regular reader on your blog but hasn't left comment on your blog. Hope you are feeling better. Welcome back

Popular Posts