Monday, November 15, 2010

டிக்கெட் போட்டாச்சா...!

திருமணம் என்று முடிவானதும் பிரியத்திற்குரிய நண்பர்கள் அனைவருக்கும் நேரில்தான் அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என்று நானும் திருவும் ஏகமனதாக முடிவெடுத்தோம். ஆனால், வாழ்வியல் தேவைக்கென வரித்துக்கொண்ட வேலை அதற்கு வகை செய்யவில்லை. சிலருக்குத்தான் நேரில் அழைப்பிதழ் கொடுக்க முடிந்தது. பலருக்கு கொடுக்க இயலவில்லை. விடுப்பு இல்லை என்பதைத் தாண்டி பலரது முகவரிகள், தொலைபேசி எண்கள் கைவசம் இல்லையென்பதும் ஒரு காரணம்.

காதலியை மனைவியாக்கும் தருணம் எத்தனை கம்பீரமானது. என் தோள்கள் விடைத்திருக்கின்றன. என் முகம் புன்னகையால் ததும்பிக்கொண்டிருக்கிறது. என் கால்கள் இன்னமும் பூமிக்கு வரவில்லை. என் சந்தோச தருணத்தில் என் அன்பிற்குரியவர்களின் இருப்பும், அருகாமையும் அவசியமென மனம் இரைஞ்சுகிறது. என் பிரியத்திற்குரியவர்களே, இந்த இணைய அழைப்பையே உங்களை நேரில் சந்தித்து கரங்களை இறுகப் பற்றி அழைத்ததெனக் கொள்ளுங்கள்.

வருகிற வியாழனன்று (18-11-2010) திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமண்ய சுவாமி ஆலயத்தில் காலை 9 மணி முதல் 10.30க்குள் உறவினர்கள், நண்பர்கள், எழுத்தாளுமைகள், சிந்தனையாளர்கள் சூழ என் காதலியின் கைத்தலம் பற்றுகிறேன். உங்களது வருகையும், வாழ்த்துக்களும் அவசியம்.

39 comments:

எஸ்.கே said...

இனிய திருமண வாழ்த்துக்கள்!

ஜீவா ஓவியக்கூடம் said...

இனிய வாழ்த்துக்கள் செல்வேந்திரன்...இனி உங்கள் திருமண நாட்களில் என்னை நினைவு கூறுங்கள்...எனக்கும் அது திருமண நாள்தான்!

butterfly Surya said...

வாழ்த்துகள் செல்வா.

நேரிலும் வாழ்த்த வருகிறேன்.

டிக்கெட் போட்டாச்சு.

சங்கவி said...

வாழ்த்துக்கள் செல்வேந்திரன்...

காற்றில் எந்தன் கீதம் said...

வாழ்த்துக்கள் நண்பரே ..........

காற்றில் எந்தன் கீதம் said...

வாழ்த்துக்கள் நண்பரே ..........

velayutham said...

வாழ்க வளமுடன்...
v.விஜயன்

ஒவ்வாக்காசு said...

தங்களுடன் அறிமுகம் இல்லை என்றாலும், உங்கள் பதிவுகளின் வாசகன் என்ற முறையில் வரவேண்டும் என்று விருப்பம் தான்... ஆனாலும் அலுவல் காரணமாக வர இயலாத சூழ்நிலை... மனம் நிறைந்த வாழ்த்துக்கள் செல்வா... வளர்ந்து செழிக்கட்டும் ஆயிரங்காலத்து பயிர்...

நட்புடன்,
ஒவ்வாக்காசு.

vaanmugil said...

வரோம்........ வரோம்.....

நேசமித்ரன் said...

நல்வாழ்த்துகள் செல்வேந்திரன் !

D.R.Ashok said...

அனைத்து பேறுகளும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்

Happy Life.. :)

ச்சின்னப் பையன் said...

வாழ்த்துகள்!

நிஜாம் ராஜா said...

உங்கள் காதலில் நானும் ஒரு சிறு பங்காவது இருக்கின்றேன் என்று நினைக்கும்போது உண்மையிலேயே ஒரு வெற்றிக்காதலில் பங்கெடுத்த ஆனந்தம் கண்களில் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றது(எனக்குத்தான் அந்த குடுப்பனை இல்லை)இந்த நல் வேலையில் உங்கள் இருவருடனும் இருக்க முடியவில்லையே என்று மிகவும் வருந்துகின்றேன். எனினும் விலைமதிக்க முடியாத வேண்டுதல்களை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். உங்கள் வேலையிலோ அல்லது திரு(க்குறள்)மண வாழ்க்கையிலோ ஏதோ ஒரு நிமிடமாவது என்னையும் நினைவு கூறுவீர்கள் என்று நம்புகின்றேன் (உங்களின் இந்த இரு முக்கியமான தருணங்களிலும் ஆரம்பம் முதல் இறுதி வரை கூடவே இருந்தவன் என்ற முறையில்....வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கும் திருக்குறள் அக்காவிற்கும்.....உண்மையிலேயே பெருமையாகவும் கர்வமாகவும் உள்ளது...

மதார் said...

Puthu mappilaiku vazhthukal.

பரிசல்காரன் said...

வாழ்த்துகள் நண்பா!

தீபாவளி முடிந்து திருப்பூர் எப்படி இருக்குமென்பது உனக்குத் தெரியும்.. அதுவும் ‘புள்ளை புடிக்கற’ வேலையில் இருக்கும் எங்களின் நிலை...

எங்க போகப்போற.. பொண்ணு எங்கூருதானே... வா.. வா... வெச்சுக்கறேன்...

Suganyajeyaram said...

உங்களது திருமண வாழ்க்கை இனிதே தொடங்க வாழ்த்துக்கள்...

பாலராஜன்கீதா said...

மனம் நிறைந்த வாழ்த்துகள்.

தியாகு said...

வாழ்த்துகள் செல்வா.

Karthik S said...

வாழ்த்துகள்

தேவன் said...

இனிய திருமண வாழ்த்துக்கள்!
தமிழினி மணிகண்டன்

தேவன் said...

இனிய திருமண வாழ்த்துக்கள்!

தமிழினி மணிகண்டன்

Travis Bickle said...

I wish both of you every happiness in life!

Sure said...

எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்

☼ வெயிலான் said...

திருமணத்திற்கு நேரில் வரலாமென்றிருந்தேன்.
ஆனால், வாழ்வியல் தேவைக்கென வரித்துக்கொண்ட வேலை அதற்கு வகை செய்யவில்லை. விடுப்பு இல்லை.

இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்!

கோவையில் சந்திக்கலாம்.

பாலகுமார் said...

இனிய திருமண வாழ்த்துக்கள் செல்வா.

உமாஷக்தி said...

பிரியமான செல்வாவுக்கும் என் அன்பான அரசிக்கும், மனமார்ந்த வாழ்த்துக்கள்....நேரில் வந்தும் சொல்ல ஆசைப்பட்டேன்....டிக்கெட் கூட எடுத்தாச்சு....ஆனா இங்க சின்ன ப்ராப்ளம். போன்ல சொல்றேன்...எங்கே இருந்தாலும் உன்னை வாழ்த்தும் இதயம் நானென்று உனக்குத் தெரியும்தானே?

Wish you both a long and happy married life!

anitha said...

காதல் மனைவியை கைப்பிடிக்க போகும் நண்பன் செல்வா அவர்களுக்கு

எங்கள் இனிய திருமண வாழ்த்துக்கள்

இளங்கோ said...

வாழ்த்துகள்.

சுரேகா.. said...

உளமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே!!

இளங்கோ said...

வாழ்த்துக்கள்.....!

இளங்கோ said...

வாழ்த்துக்கள்.....!

தமிழ்நதி said...

அன்புள்ள செல்வேந்திரன்,

நான் சென்னையில் இல்லை. அதனால் வரமுடியவில்லை. இருந்திருந்தால் நிச்சயமாகக் கலந்துகொண்டிருந்திருப்பேன். உங்களை நினைக்கும்போதெல்லாம் சிரித்தபடி பேசும் உங்கள் முகம்தான் நினைவில் வருகிறது. அதே சிரிப்பு மாறாமல் உங்கள் திருமண வாழ்விலும் நீடிக்க எனது வாழ்த்துக்கள். திருக்குறளரசிக்கும் எனது அன்பைச் சொல்லுங்கள். நண்பர்கள் மத்தியில் திருமணம் செய்யக் கொடுத்துவைத்திருக்க வேண்டும். வாழ்த்துக்கள் செல்வா-திருக்குறளரசி.

Rajasekaran said...

செல்வேந்திரன்...

காதல் கரங்கள் சேர்ந்தால்
வாழ்வில் வசந்தம் வீசும்
உள்ளத்தில் நீர் சுமந்த
உண்மையான அன்பிற்காய்
மனம் நிறைந்த வாழ்த்துகள்...

ராஜசேகரன், ஹைதராபாத்

Rajasekaran said...

செல்வேந்திரன்...

காதல் கரங்கள் சேர்ந்தால்
வாழ்வில் வசந்தம் வீசும்
உள்ளத்தில் நீர் சுமந்த
உண்மையான அன்பிற்காய்
மனம் நிறைந்த வாழ்த்துகள்...

ராஜசேகரன், ஹைதராபாத்

pazha.chandrasekaran said...

மணமக்கள் வாழ்க மகிழ்வுடன் பல்லாண்டு...

மிக்க மகிழ்ச்சி.தொடங்கட்டும் நல்லறம்..

வாழ்க வளமுடன்!

அன்புடன் அருணா said...

இனிய திருமண வாழ்த்துக்கள் பூங்கொத்தோடு!

கிருபாநந்தினி said...

ஸாரி செல்வாண்ணே! இப்பத்தான் பாக்க முடிஞ்சுது. லேட்டானாலும், வாழ்த்துக்கள்! :)

phantom363 said...

belated (very) congrats :) :) he he he.. just also saw the blog re your daughter's arrival :)

got introduced to your blog just about an hour ago..fast tracking !!

best wishes. enjoy your baby. they grow too fast !!

God Bless your young family. and yourself !

phantom363 said...

best (late) wishes for a fruitful married life. he he .. got introduced to your blog only today..also saw your daughter's arrival. heartiest congrats. God Bless your young family. and yourself too. !!