டிக்கெட் போட்டாச்சா...!
திருமணம் என்று முடிவானதும் பிரியத்திற்குரிய நண்பர்கள் அனைவருக்கும் நேரில்தான் அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என்று நானும் திருவும் ஏகமனதாக முடிவெடுத்தோம். ஆனால், வாழ்வியல் தேவைக்கென வரித்துக்கொண்ட வேலை அதற்கு வகை செய்யவில்லை. சிலருக்குத்தான் நேரில் அழைப்பிதழ் கொடுக்க முடிந்தது. பலருக்கு கொடுக்க இயலவில்லை. விடுப்பு இல்லை என்பதைத் தாண்டி பலரது முகவரிகள், தொலைபேசி எண்கள் கைவசம் இல்லையென்பதும் ஒரு காரணம்.
காதலியை மனைவியாக்கும் தருணம் எத்தனை கம்பீரமானது. என் தோள்கள் விடைத்திருக்கின்றன. என் முகம் புன்னகையால் ததும்பிக்கொண்டிருக்கிறது. என் கால்கள் இன்னமும் பூமிக்கு வரவில்லை. என் சந்தோச தருணத்தில் என் அன்பிற்குரியவர்களின் இருப்பும், அருகாமையும் அவசியமென மனம் இரைஞ்சுகிறது. என் பிரியத்திற்குரியவர்களே, இந்த இணைய அழைப்பையே உங்களை நேரில் சந்தித்து கரங்களை இறுகப் பற்றி அழைத்ததெனக் கொள்ளுங்கள்.
வருகிற வியாழனன்று (18-11-2010) திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமண்ய சுவாமி ஆலயத்தில் காலை 9 மணி முதல் 10.30க்குள் உறவினர்கள், நண்பர்கள், எழுத்தாளுமைகள், சிந்தனையாளர்கள் சூழ என் காதலியின் கைத்தலம் பற்றுகிறேன். உங்களது வருகையும், வாழ்த்துக்களும் அவசியம்.

Comments
நேரிலும் வாழ்த்த வருகிறேன்.
டிக்கெட் போட்டாச்சு.
v.விஜயன்
நட்புடன்,
ஒவ்வாக்காசு.
Happy Life.. :)
தீபாவளி முடிந்து திருப்பூர் எப்படி இருக்குமென்பது உனக்குத் தெரியும்.. அதுவும் ‘புள்ளை புடிக்கற’ வேலையில் இருக்கும் எங்களின் நிலை...
எங்க போகப்போற.. பொண்ணு எங்கூருதானே... வா.. வா... வெச்சுக்கறேன்...
தமிழினி மணிகண்டன்
தமிழினி மணிகண்டன்
ஆனால், வாழ்வியல் தேவைக்கென வரித்துக்கொண்ட வேலை அதற்கு வகை செய்யவில்லை. விடுப்பு இல்லை.
இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்!
கோவையில் சந்திக்கலாம்.
Wish you both a long and happy married life!
எங்கள் இனிய திருமண வாழ்த்துக்கள்
நான் சென்னையில் இல்லை. அதனால் வரமுடியவில்லை. இருந்திருந்தால் நிச்சயமாகக் கலந்துகொண்டிருந்திருப்பேன். உங்களை நினைக்கும்போதெல்லாம் சிரித்தபடி பேசும் உங்கள் முகம்தான் நினைவில் வருகிறது. அதே சிரிப்பு மாறாமல் உங்கள் திருமண வாழ்விலும் நீடிக்க எனது வாழ்த்துக்கள். திருக்குறளரசிக்கும் எனது அன்பைச் சொல்லுங்கள். நண்பர்கள் மத்தியில் திருமணம் செய்யக் கொடுத்துவைத்திருக்க வேண்டும். வாழ்த்துக்கள் செல்வா-திருக்குறளரசி.
காதல் கரங்கள் சேர்ந்தால்
வாழ்வில் வசந்தம் வீசும்
உள்ளத்தில் நீர் சுமந்த
உண்மையான அன்பிற்காய்
மனம் நிறைந்த வாழ்த்துகள்...
ராஜசேகரன், ஹைதராபாத்
காதல் கரங்கள் சேர்ந்தால்
வாழ்வில் வசந்தம் வீசும்
உள்ளத்தில் நீர் சுமந்த
உண்மையான அன்பிற்காய்
மனம் நிறைந்த வாழ்த்துகள்...
ராஜசேகரன், ஹைதராபாத்
மிக்க மகிழ்ச்சி.தொடங்கட்டும் நல்லறம்..
வாழ்க வளமுடன்!
got introduced to your blog just about an hour ago..fast tracking !!
best wishes. enjoy your baby. they grow too fast !!
God Bless your young family. and yourself !