பேய்க்கரும்பு


உன் கவலைகளும்
நீ ஏற்படுத்தும் கவலைகளும்
என் கவலைகளாக
இருப்பதைக் கவனித்தாயா?!

***

எனக்கான குயில்
எல்லா இடங்களிலுமிருந்து
பாடிக்கொண்டிருக்கிறது
நானோ
உனக்கான பாடலோடு
மன்றாடிக்கொண்டிருக்கிறேன்

***

காற்றைக் கிழித்து
காதில் நுழைகிறது
குயிலோசை
நீ என்னைக் கிழித்து
உன்னைச் சொருகும்
தருணங்களை
நினைத்துக்கொள்கிறேன்.

***

எங்கு சுவைத்தாலும்
இனிக்கின்ற
பேய்க்கரும்பு
நீ!

***

அன்பெனும்
மதயானை
எதைக் கொண்டு அடக்க
எதைக்கொண்டு மறைக்க?!

***

மொழி
கலைத்து ஆடும்
என் சிறுபிள்ளை
விளையாட்டை
நீ கவிதையென்கிறாய்…!

***

(தினகரன் தீபாவளி மலரில் வெளியானவை)

Comments

அருமையான ஆழமான கவிதைகள்..!!
Anonymous said…
மதயானை சுத்தி சுத்தி வருகுது :)
Ashok D said…
முதலும்
முடிவும்
மிகவும்
அழகு
அண்ணே கொஞ்சமும் காண்டு கொள்ளாமல்...

கண்டுகோங்க...

நன்றிங்க..
vaanmugil said…
சூப்பர்...
பாருங்களேன், நிறைய பேர் ஆஹா ஓஹோன்னு பின்னூட்டம் போட்டு பிபிய ஏத்துவாங்க :)
அத்தனை கவிதைகளும் பேய்க்கரும்புகளே !. அருமை அருமை. வாழ்த்துக்கள் !
விஜி said…
ரைட்டு :))