கொன்னு கொலையெடுத்தல்


குடியிரவு
கொண்டாட்டத்தை
முற்போக்கு, பிற்போக்கென
பேசியே அழித்தானவன்
போடா புறம்போக்கு!
***

முதிர் கன்னிகளை
வாழாவெட்டிகளை
விதவைகளை
வெளித் தெரியாமல்
புணர்பவன்
செத்துச் சொர்க்கம் போவான்.
***


விரையும்
மணல் லாரியிலிருந்து
சொட்டடிக்கும் நீர்
ஆற்றின் குருதியெனக் கொள்க!
***


பரிசுத்த ஆவிக்கும்
பாதிரிக்கும் சண்டை
அழைத்தபோதெல்லாம்
கூப்பிட்ட குரலுக்கு
ஓடோடி வந்த ஆவிக்கு
ஆட்டோ வாடகை
தரவில்லையென்பது
பிரதான புகார்!

Comments

உண்மையிலேயே முடியல..!! :)
RRSLM said…
இதுக்கு பேருதான் முடியலத்துவம்.....Super!
//முதிர் கன்னிகளை
வாழாவெட்டிகளை
விதவைகளை
வெளித் தெரியாமல்
புணர்பவன்
செத்துச் சொர்க்கம் போவான்//


வாவ்!,

நியாயப்படுத்தலையும் நேர்த்தியாக செய்திருக்கிறீர்கள்!
Ashok D said…
1. யார சொல்லறீங்கன்னு தெரியுது.. யார் கிட்டயும் சொல்லமாட்டேன் :)

நான்கும் பிடித்திருந்தது..

ஆற்றின் குருதியென கொள்க
அபாரம்...
ஆற்றின் ரத்தமும், ஆவியின் சண்டையும் அதிகமாய் கவர்ந்தன...
//விரையும்
மணல் லாரியிலிருந்து
சொட்டடிக்கும் நீர்
ஆற்றின் குருதியெனக் கொள்க!
//

The Best தல!
RaGhaV said…
அத்தனையும் பட்டாசு.. :-))
dheva said…
எல்லாமே எதார்த்த உண்மைகள் தல...செம......!
vaanmugil said…
....ஆற்றின் குருதியென கொள்க//

ட்விட்டரில் இட்ட போதே வெகுவாக ரசித்தேன்..

\\.....புணர்பவன்
செத்துச் சொர்க்கம் போவான்//
அருமையான சிந்தனை.
ஆற்றின் குருதி..
சூப்பர்
/// முதிர் கன்னிகளை ///

இது ந.மகுடேஸ்வரனின் "காம கடும்புனலில்" வந்திருகிறது. சரிபார்க்கவும் ...

:-)
/// முதிர் கன்னிகளை ///

இது ந.மகுடேஸ்வரனின் "காம கடும்புனலில்" வந்திருகிறது. சரிபார்க்கவும் ...

:-)