மனக்காளான்

* பொதுக்காரியத்திற்காக காலையில் ஒரு வட்டத்தையும், வார்டு கவுன்சிலரையும் சந்தித்தேன்; கவுண்டர் ஏன் மகான் என்பது புரிந்தது.


* இன்று ஒருவர் தன்னை 'நேரலை நாராயணன்' என அறிமுகப்படுத்திக் கொண்டார்; எல்லா தொலைக்காட்சி விவாதத்திற்கும் போன் செய்பவராம்!


* நானொரு சூப் வாக்காளன்; நான் ஓட்டு போட்ட வேட்பாளர்கள் இதுவரை ஜெயித்ததில்லை :-(


* ஒளவையாரை ரீமேக் செய்வதென்றால் என் சாய்ஸ் ஃப்ரீத்தி ஜிந்தா!


* ஓர் இலக்கிய வாசகனை சங்கடப்படுத்தும் கேள்வி 'எஸ்ராவோட பெஸ்டு நாவல் எது?'


* ஃப்ரீத்திக்கு நான் கேரண்டி # மேக்ஸ்வெல்!


* பார்த்தீவ் பட்டேல் வைத்திருக்கும் பேட் 'பேபி பிளானட்' கடையில் வாங்கியது.


* தட் மொதல்ல கழுத்துல கட்டிருக்கிற ஷூ லேஸ அவுருடா மொமண்ட்! #
முரளி கார்த்திக்


* பவுலர் நதீமை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் பார்த்திருக்கிறேன்.


* வண்ணதாசன் 2.0 - ராஜூமுருகன்
வண்ணதாசன் 3.0 - நா.முத்துக்குமார்
வண்ணதாசன் 4.0 - மாரி செல்வராஜ்


* நடந்து முடிந்த பிரச்சாரத்தில் வாக்களிக்க வேண்டிய சின்னத்தை மாற்றி சொல்லாததிலிருந்தே அண்ணனின் அரசியல் வளர்ச்சியை எதிரிகள் புரிந்துகொள்ளலாம் # கேப்டன் # தட் சூதும் வாதும் எங்களுக்கும் தெரியும் மொமண்ட்!


* பாகிஸ்தான் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் நாராயணசாமியா?!


* அவுக ஊருல பவுலரெல்லாம் மூக்கப் பாத்துதான் எடுப்பாகளாம்... # பாகிஸ்தான்


* மீச்சிறிய சேவைக் குறைப்பாட்டினையும் கூட சகிக்க இயலாதவனாக மன அமைப்பு மாறியிருப்பதன் அபாயங்களை கவலையோடு யோசித்துக்கொண்டிருக்கிறேன்.


* எங்கே, எவரிடம், எப்போது குரல் உயர்த்திப் பேசினாலும் நஷ்டத்தோடுதான் அமர வேண்டியிருக்கிறது.

* ஒரே லெக்கின்ஸை ஓயாம போட்டு நைட் பேண்ட் கணக்கா ஆக்கிடுறாய்ங்க...


* வாயை மூடி தும்மவும்.

* நவயுகத்தில் 'புரோட்டா ரெடி' என எழுதி மாட்டுவதோடு சிலேட்டின் பயன்பாடு முடிந்து விடுகிறது.


* கமல் காப்பியடிக்கிறார்னு சொல்லலை; காப்பியடிக்காம இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்ல வர்றோம் :-)


* உளுந்த வடையின் முறுகல் மணம் போல பசியை கிளர்த்தக் கூடியது வேறேதும் இல்லை.


* அடி தடையில்லா மின்சாரமே... முருகேசன் சம்சாரமே...


* நஸ்ரியாவுடன் நிச்சயம் ஆகும் முன்பு வரை பஹத் பாஸிலைப் பிடித்திருந்தது.


* பூக்களைத்தான் பறிக்காதீங்க... புருஷனைத்தான் மிதிக்காதீங்க...


* வி வாண்ட் சின்ன கேப்டன் சண்முக பாண்டியன் இன் சென்னை சூப்பர் கிங்ஸ்!


* உன் அத்தனை காதலர்களிலும் நான் சிறந்தவனா - தெரியவில்லை; என் காதலிகளில் நீயே முதன்மையானவள்! # காதுள்ளவர்கள் தின வாழ்த்துக்கள்.

* புலம்பெயர்நாடுகளின் தமிழ்ச்சங்கங்களை ஜனத்தொகையுடன் வகுத்துப்பார்க்கையில் தலா 3 நபர்களுக்கு 4சங்கங்கள் வீதம் உள்ளதென ஆய்வில் தெரியவந்துள்ளது

* ஸ்டீவ் ஸ்டிஃப்ளர் எந்த அணிக்காக தேர்வாகியுள்ளார்? # ipl

* ஏல...ஐயா.. பெரிய கண்ணாடியா மாட்டிட்டு அலையுதியே..சவம் ஆப்பரசன் எதும் பண்ணியிருக்கியாலே..# தட் கிழடுகளுக்குத் தெரியுமா கூலர்ஸ் வாசனை மொமண்ட்!


* ஒரு சிறுகதையில் சிறிய அளவிலேனும் கதை இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள் - நாணப்பன்

* இந்தியா முழுவதிலும் உள்ள நகைச்சுவை நடிகர்களுக்கு பெரிய அச்சுறுத்தல் ராகுல்தான்.

* ஓவ்... மைனியாரே... பழைய பாலுலயா காபி போட்டுத் தாரீய... # ஏதோ இலக்கிய நுண்ணுணர்வு இருக்கிறதால கண்டுபிடிக்க முடியுது; இல்லாட்டி கஷ்டம்.

* அம் ஆத்மி சின்னம் பிஞ்சி விடும் என்றாளே கம் வித் மீ என்றமைக்கு # இதான ஓய் வெண்பாம்?

* கிரிக்கெட்,டென்னிஸ் -புகுந்து கலக்குவது போல பெண்கள் ஜல்லிக்கட்டிலும் கலந்து கொண்டு தாங்கள் சளைத்தவர்கள்  அல்ல என்பதை நிரூபிக்கும்படி...

* அவனவனுக்கு அவனவனே பெருஞ்சுமை. பெருமை கச்சாத்துக்கு உறவு கொண்டாடுகிறோம்.

* தட் 'தம் கட்டி ஏழு பாரா அடித்து அனுப்புகிற மெயிலுக்கு 'வெவ்வெவ்வெவ்வே...'ன்னு ஒரே வார்த்தையில் ரிப்ளை வந்தால்' மொமண்ட்!

* நாய்களுக்கு மங்கிக் குல்லாய் அணிந்தவர்கள் மீது  கொலைவெறி ஏற்படுவதற்கு வரலாற்று ரீதியிலான காரணங்கள் இருக்குமா எனும் சிந்தனையோடு இந்தநாளை துவங்குகிறேன்.

* என் அபிப்ராயத்தில் எக்ஸைல்-2 வெளியீட்டு விழா நடத்த சேப்பாக்கம்தான் சரியாக இருக்கும்.

* தொடர்ந்து ஒரு எழுத்தாளனை வாசிக்கிறவன், அவரைக் கண்காணிக்கிறவனாகிறான் - மூக்கையா

* 4 ஓவர்களில் 120 ரன்கள் கொடுத்து புதிய சாதனை படைப்பதே லட்சியம்! - அசோக் டிண்டா

* முதலில் சோட்டா பீமாக நடிக்க பார்த்தீவ் படேலைத்தான் அணுகினார்களாம்.

* தோழர் விஜய் சைவம் என்றொரு படம் எடுத்திருக்கிறாராம்; மூலப்படம் எதுவென்று சொன்னால், இப்போதே தேடிப் பார்த்து விடலாம்.

* ஒவ்வொரு முறை நீங்கள் என்னைச் சந்திக்கும் போதும் உங்கள் அறிவு 50% அதிகரித்திருப்பதைக் கவனிக்கிறீர்களா?

* ஏ பொட்ட புள்ள பெத்ததுமே கொட்டம் அடங்கிடுச்சே...

* அவன்: வெயில்ல போட்டா சார்ஜ் ஆகுற மாதிரி போன் இருக்கா சார்...

இவன்: ம்ம்.. இருக்கு சார்.. பட் டிரஸ் போட்டுட்டு யூஸ் பண்ணா வேல செய்யாது பரவால்லயா..

* கூடை மேல கூடை வச்சி குப்ப அள்ள போறவளே...

* என் மகள் மான் பார்க்க வேண்டுமென ஆசைப்படுகிறாள்; கொஞ்சம் வீடு வரைக்கும் வந்து போக முடியுமா? #  வெட்கப்பட வைக்கும் பிக்கப் லைன்கள் :-)

* நெட் பிராக்டீஸ் டிவில காட்டினான்; எல்லா பாகிஸ்தான் பவுலர்ஸூம் அஃப்ரிடிக்குப் பவுலிங் போட்டு பழகுறானுக.. பொறவு எப்படிடா வெளங்குவீங்க...

Comments

shivatma said…
onrai onru minjum thuLLal varigaL.

selventhiran vaazhga.