சுவாமினி விமலானந்தா

இலக்கிய வாசகன் ஆன்மிகவாதிகளின் மேல் கொள்ளும் அசிரத்தையோடுதான் சுவாமினி விமலானந்தாவின் உரையினைக் கேட்கச் சென்றிருந்தேன். சுவாமி சின்மயானந்தரின் பிரதான சீடரான விமலானந்தா சின்மயா மிஷனின் பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட ஏற்று செயல்படுத்தியவர். தற்போது,  சின்மயா இண்டர்நேசனல் பள்ளியின் இயக்குனராக செயல்படுகிறார். உலகெங்கிலும் பயணித்து பல்வேறு தலைப்புகளில் உரையாற்றிய அனுபவம் உடையவர். பிரபலமான ‘In Indian Culture – Why do We?’ மற்றும் 'Why do we.. in Hinduism?' ஆகிய நூல்களின் ஆசிரியர்.

பிழைத்துக் கிடத்தல், வாழ்தல், பொருள்பட வாழ்தல் ஆகியவற்றிற்கிடையேயான வேறுபாட்டை விளக்கி உரையைத் துவக்கினார். துல்லியமான ஆங்கிலத்தில் வரலாற்றுணர்வுடனும் சமகாலத்தன்மையுடனும் கூடிய உரை. பேச்சில் தெறிக்கும் அபாரமான நகைச்சுவை அயற்சியின்றி உரையோடு ஒன்றச் செய்கிறது. பொருள்முதல்வாத உலகில் நவீன மனம் அடையும் பல்வேறு நெருக்கடிகளுக்கான விடை வேதாந்தங்களில் இருப்பதைக் கண்டு ஆச்சர்யமடைந்தேன். பஜகோவிந்தத்திலிருந்து பல்வேறு மேற்கோள்களைச் சுட்டிப் பேசினார். செறிவான கச்சிதமான உரை.

சுவாமினி விமலானந்தாவின் புகழ்மிக்க பல்வேறு உரைகள் யூ ட்யுபில் காணக்கிடைக்கின்றன. உதாரணத்திற்கு: https://www.youtube.com/watch?v=EXniWH9dMf8 


Comments

பதிவுகளை படித்ததோடு மட்டுமல்லாமல், "Labels:" ஐயும் படிக்க வைத்த பெருமை உங்களையே சேரும்.

பதிவை படித்தவுடன், அவசரமாக தேடி Labels: யும் படித்தேன். அதனால் தான் இந்த பின்னூட்டம்.