பயண இலக்கியங்களின் பயன்மதிப்பு


 எனக்கு மேடையில் பேச பிடிக்கும்; ஆனால், உரை நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டு ஆற்றொழுக்காக நிகழ்த்த வேண்டுமென்பது கடப்பாடு. கல்வி நிறுவனங்கள் தவிர பிற எங்கு பேச அழைத்தாலும் தயங்குவேன். கட்டுரை தயாரிக்க கால அவகாசம் இருந்தால் மட்டுமே ஒப்புக்கொள்வேன்.

மேடை உரைகளை அவதானிப்பது என் வழமை. ஜெயமோகனும் திருமாவளவனும் எனக்கு மிகப் பிடித்த பேச்சாளர்கள். அரங்கில் எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் ஓர் ஆன்மிகமான அமைதியை உருவாக்க வல்ல எஸ்.ராமகிருஷ்ணன், தன் தரப்பை ஆணித்தரமாக நிறுவுவதில் வல்லவரான சு.வெங்கடேசன், தர்க்க ஒழுங்கை கட்டியெழுப்பி திடீரென கலைத்து அடுக்கும் பேராசிரியர் டி. தர்மராஜ், உரையை ஒரு கம்ப்ளீட் பேக்கேஜாக முன்வைக்கும் நாஞ்சில் நாடன், சோ. தருமன், கண்மணி குணசேகரன், வெடிச்சிரிப்பில் அரங்கை அதிரவைக்கும் சாம்ராஜ், ரமேஷ் வைத்யா ஆகியோர் என்னை வியப்பில் ஆழ்த்துபவர்கள்.
இவர்கள் தவிர வெவ்வேறு காரணங்களுக்காக பழனி பாபா, சீமான், ஜான் ஜெபராஜ், திருச்சி கல்யாணராமன், ஆ. ராசா, நெல்லை கண்ணன், மிஷ்கின் உள்ளிட்டோரது மேடை உரைகளைக் கேட்பதுண்டு.

ஒவ்வொரு நாள் இரவிலும் உரைகள் கேட்டுவிட்டு உறங்கச் செல்வது என் வழக்கம். என் நோக்கில் தமிழ் மேடைகள் கூர்மையடைந்து வருகின்றன. குறிப்பாக விஷ்ணுபுரம் நண்பர்கள் அசத்துகிறார்கள்.

சிறந்த பேச்சுக்கு நல்ல தூக்கம் அவசியம். இல்லையெனில், டெலிவரி ஸ்பிரிட் இருக்காது. ஜெயமோகன் தன் மேடை உரைகளுக்கு முன் ஒரு மணி நேரமாவது தூங்கி எழுவார். எனக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. இரவெல்லாம் ஏ.ஆர்.ரஹ்மானாகி பகலில் வீங்கின முகத்தோடும் குழம்பின மூளையோடும் திரிவது என் வாழ்முறை.

அவ்வகையில் அளவான தூக்கமும் சரியான தயாரிப்பும் இல்லாமல் மரு.கு.சிவராமனின் நூல் வெளியீட்டு விழாவில் பேசினேன். ழகரப் பிரச்னைகளோடு கொஞ்சம் துடுக்கும் கலந்திருக்கிறது. குறைத்துக்கொள்ள வேண்டும்.

உரலி: https://www.youtube.com/watch?v=ah7dSbrVrAQ 

Comments