சென்னை புத்தகக் காட்சியை செம்மையாகப் பயன்படுத்திக்கொள்வது எப்படி?
தமிழ்நாட்டின் பிரதான கலாச்சார நிகழ்வு சென்னை புத்தகக் காட்சி. இதைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் பொது வாசகர்களுக்கு சில ஆலோசனைகள்.
ஆண்டு வருமானத்தில் குறைந்தது 5% புத்தகங்களில் முதலீடு செய்யலாம். அது நிச்சயம் நமது சிந்தனையில் செயல்பாடுகளில் முடிவெடுக்கும் ஆற்றலில் எழுத்தில் பேச்சில் எதிரொலிக்கும். Power of Paper folding என்றொரு அறிவியல் தியரி இருக்கிறது. ஒரு காகிதத்தை 42 தடவை மடிக்க முடிந்தால் அதன் உயரம் பூமிக்கும் நிலவுக்குமான தொலைவு. உலகின் தலைசிறந்த 42 புத்தகங்களை வாசித்தால் அறிவுஜீவிகளில் ஒருவராகி விடலாம்.
எடுத்த எடுப்பில் கைக்கு வந்த புத்தகங்களை வாங்கக்கூடாது. அப்படிச் செய்தால் நமது பட்ஜெட் ஐந்தே கடைகளில் தீர்ந்து விடும். முதல் விசிட்டில் ஒரு சின்ன பாக்கெட் டைரியில் ஸ்டால் வாரியாக வாங்க விரும்பும் புத்தகங்களையும் அதன் விலையையும் குறித்துக்கொள்ள வேண்டும். வீட்டிற்குத் திரும்பிய பிறகு அந்த நெடும்பட்டியலில் எவை நமது Priorities எனும் குறும்பட்டியலை உருவாக்கலாம்.
அதிகக் கூட்டம் இல்லாத நாட்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்வது நல்லது. டெபிட் கார்டு, ஜீபே விட ரொக்கப்பணம் கொண்டு வருவது உசிதம்.
ஒரே கடையில் பெரிய தொகைக்கு புத்தகங்கள் வாங்குவதாக இருந்தால் சிறிது கூடுதல் டிஸ்கவுண்ட் கேட்டுப்பார்க்கலாம். 10% மேல் கொடுக்கக்கூடாது என்பது பபாசி விதிமுறை. புக்செல்லர்களால் அதற்கு மேல் கொடுக்கவும் முடியாது. ஆனால், நல்வாய்ப்பாக பதிப்பாளரே கல்லாவில் இருந்தால் நிச்சயம் கொடுப்பார்.
ஓரிரு ஸ்டால்களில் சில இளம் எழுத்தாளர்கள் புதிதாக வந்திருக்கும் தங்களது படைப்புகளை உங்களுக்கு அறிமுகம் செய்யலாம். அந்தத் தன்முனைப்பை குறை சொல்ல முடியாது. ‘என்னை வாசியுங்கள்’ என்பதே எந்த எழுத்தாளனும் சமூகத்திடம் கோருவது. பஷீரே தோளில் பையை மாட்டிக்கொண்டு பேருந்து நிலையங்களில் தனது சிறுகதைகளை விற்றதுண்டு. உங்களுக்கு அந்நூலை வாங்க பிரியம் இல்லை எனில், ‘எனது இப்போதைய வாசிப்பு ஷெட்யூல் இதை அனுமதிக்காது; பிறிதொரு சமயம் நானே வாங்கி வாசித்து கருத்துரைக்கிறேன்’ என நாசூக்காகச் சொல்லலாம்.
தனியாக, குடும்பத்துடன், தோழியர் புடை சூழ, சக ஊழியர்களோடு, பால்ய நண்பர்களோடு என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆடியன்ஸோடு புத்தகக் காட்சி வரலாம். புதுவீடு கட்டினால் விருந்துக்கு நண்பர்களை அழைப்போம் இல்லையா, சென்னை புத்தகக் காட்சி வாசகர்களுக்காகவே கட்டியெழுப்பப்படும் மாளிகை. கூட்டி வந்து பெருமையுடன் காட்டுங்கள்.
பிரியப்பட்ட எழுத்தாளரிடம் கையெழுத்து பெறுவது எந்த வாசகருக்கும் இனிமையானது. ஆனால், அவரெழுதாத ஒரு நூலை நீட்டி கையெழுத்திடச் சொல்வது சிலருக்குச் சங்கடமளிக்கும்.
வாங்கிய புத்தகங்களை சோஷியல் மீடியாவில் பட்டியலிடுவது நல்லது. ஏன் வாங்கினேன் என்று இரண்டு வரி சேர்த்து எழுதினால் இன்னும் நல்லது.
கழிவறைகளும், பலகாரங்களும் மொக்கையாகத்தான் இருக்கும். சிணுங்கப்படாது. காதலியைப் பெண் கேட்டுப் போகும் பையன் போல பவ்யமாக நடந்துகொள்ள வேண்டும்.
புத்திசாலிகள் ஏதேனும் கொறிக்க விரும்பினால் ஸீரோ டிகிரி பக்கம் வருவார்கள். ‘எப்படி காயத்ரி… உங்களுக்கு மட்டும் வயசே ஆகமாட்டேங்குது?’ என்றால் செலவு மிச்சம். வீடு திரும்பும் வழியில் சாப்பிடவும் பார்சல் கட்டித் தருவார்.
சரி, இனி விளம்பரம்.
இந்தப் புத்தகக் காட்சிக்கு நியாயமாக என்னுடைய நான்கைந்து நூல்கள் வெளியாகி இருக்க வேண்டும். ‘பூட்டி வச்ச குதிரை ஒண்ணு புட்டுக்கிச்சு மாமா’வில் சிக்கியதில் பிந்திவிட்டது. விரைவில் அறிவிப்புகள் வரும்.
ஏதேனும் Stress-ல் தவிப்பவர்களுக்கு ‘நகுமோ லேய் பயலே’ மற்றும் ‘பெரும்வெற்றுக் காலம்’
அசலான பயணப் பிரியர்களுக்கு ‘பாலை நிலப் பயணம்’
பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு ‘மேடைப் பேச்சின் பொன்விதிகள்’
இளையோருக்குப் பரிசளிக்க, வாசிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்க ‘வாசிப்பது எப்படி?’
மேற்கண்ட நூல்கள் F 19 - ஸீரோ டிகிரி ஸ்டாலில் கிடைக்கும்.
#Chennaibookfair #selventhiran #bapasi #chennaibookfestival #chennaireads

Comments