பெஞ்சமின் ஸஃபானியா

அந்த அமெரிக்க பள்ளி ஆசிரியை ஒரு மாணவனிடம் கேட்டார் " கொலம்பஸ் எப்போது அமெரிக்காவை கண்டுபிடித்தார்?". "கொலம்பஸூக்கு முன்பும் அங்கு மக்கள் வசித்தார்கள். ஆக கண்டுபிடிப்பு என்பது என்ன? "என்று பதில் வந்தது. அந்த பதிலுக்காக மாணவன் தண்டிக்கப்பட்டான். அவன் பெயர் பெஞ்சமின் ஸஃபானியா. ஜமைக்காவில் பிறந்த ஸஃபானியா, தன் குடிகார தந்தை தாயை துன்புறுத்துவதை பொறுக்க முடியாமல் அவரைக் குத்தி கொலை செய்து விட்டு சிறைக்கு சென்றார். "மக்களை அரசியல் ரீதியாக உலுக்கவும், அவர்களுடைய உரிமைக்காகப் போராடவும் தூண்டுகிற திட்டம்தான் கவிதை" என்ற ஆர்ப்பரிப்போடு வெளிவந்தது ஸஃபானியாவின் கவிதைகள்.

கருப்பு வீடு திரும்புதல்
அந்த நாள்
மோசமான நாள்
மைல் கணக்காய்
நடந்தேன் நான்
நானாக இல்லை நான்
புன்னகை எதையும்
திருப்பித்தர முடியவில்லை
சோர்ந்தேன்
பலவீனம்
பசி
ஆனாலும்
நான் திரும்பி
போகமாட்டேன்
சில நேரங்களில்
ஒரு டாக்ஸி கிடைப்பது சிரமம்
நீங்கள் கருப்பரெனில்!

சுதந்திரம்

வீடு இல்லை
பணம் இல்லை
பால் இல்லை
தேன் இல்லை

ஆனால்
இந்த நிலம் எங்களுடையது
கடலோடிப் போங்கள்
இந்த நிலம் எங்களுடையது!

Comments

ஜி said…
//ஆயிரம் யானைகளின் பலம் பொருந்தியவன். சூரியனுக்கு நிகரானவன். ஒரே ஷாட்டில் 100 பேரை பந்தாடக்கூடியவன். //

ஹீரோவா நீங்க? எந்தப் படத்துல நடிச்சிருக்கீங்க???
பெஞ்சமின் செஃபானியாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

என்னுடைய பழைய இடுகை -


Benjamin Zephaniah

வினோபா என்ற வலைப்பதிவர் ஒரு கவிதையை மொழிபெயர்த்திருந்தார்.

நீங்கள் இங்கேயிட்டிருக்கும் கவிதைகளை நீங்கள்தான் மொழிபெயர்த்தீர்களா? இல்லையென்றால் மேலதிக விவரங்கள் கொடுக்க முடியுமா?

நன்றி

-மதி
selventhiran said…
இல்லை மதி சார். இது சுகுமாரன் என்கின்ற எழுத்தாளரால் மொழிபெயர்க்கப்பட்டது. கவிதைகளை மொழிபெயர்க்கும் அளவிற்கு ஆங்கில அறிவு போதாது எனக்கு.
பெஞ்சமின் செஃபானியாவை பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லிருக்கலாமே?!

பதிவிற்கு நன்றி!

/இல்லை மதி சார். இது சுகுமாரன் என்கின்ற எழுத்தாளரால் /

செல்வேந்திரன், மதி அவர்கள் மூத்த பெண் வலைப்பதிவர்.... சிவக்குமாரின், மதி கந்தசாமி - வலை மகுடம்
பதிவைப் பாருங்கள்!

Popular Posts