ஆசிப் மீரான் வீட்டருகே காண்டா மிருகம்

சு.கி. ஜெயகரன், இவர் ஒரு மண்ணியல் நிபுணர். சாத்தான்குளத்தின் காராமணி என்ற ஆற்றின் கரையில் மண் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, களிமண் படிவத்திலிருந்து ஒரு பெரிய எலும்புக்கூடு இவரிடம் அகப்பட்டது. அரை மீட்டர் நீளம் கொண்ட அந்த மண்டை ஓட்டு எலும்பை ஆய்வுகளுக்குட்படுத்தியதில் ஆச்சர்யமூட்டும் தகவல்கள் கிடைத்தன. பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த காண்டாமிருகத்தின் எலும்பு அது. அந்த எலும்பின் அளவுகளை வைத்து கணிக்கும்போது அந்த காண்டாமிருகம் கிட்டத்தட்ட ஒரு யானையின் அளவிற்கு பெரிதாக இருந்திருக்க வேண்டும் எனக் கணித்திருக்கின்றனர் ஆய்வாளர்கள். தற்போது அந்த எலும்பு சென்னை அருங்காட்சியகத்தில் புவியியல் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. "உலகம் ஒரு காலத்தில் ஹோல்சேல் காடு, நாமெல்லாம் அந்தக் காட்டை திருத்தி அதன் மேல் வசதியா வாழ்ந்துகிட்டு இருக்கோம்"னு என் தந்தை அடிக்கடி சொல்வார். இப்ப விஷயம் அதுவல்ல சாத்தான்குளம்கிறது சாதாரண காடு இல்லை. காண்டாமிருகம் மாதிரி படா, படா விலங்குகள் உலவுன காடு. அந்த காட்டின் டார்ஜான்கள்தான் நானும் ஆசிப் மீரானும்! சாக்கிரதை......

Comments

ilavanji said…
செல்வு,

இப்ப என்ன? "அண்ணாச்சி ஒரு காட்டுப்பய!" இதத்தானே சொல்லவர்றீங்க?! இதுக்கு என்னத்துக்கு இப்படி சுத்திவளைச்சு கற்காலம் எலும்புக்கூடுன்னு தவிக்கறீங்க?

கூட ஊருக்காரவுகளை விட்டுக் கொடுக்கக்கூடாதுன்னுட்டு நீங்களும் சேர்ந்துக்கிட்டீங்களாக்கும்! :)))
selventhiran said…
வாங்க ஜாம்பவான் இளவஞ்சி, அண்ணாச்சிகூட நம்மள கோர்த்துவிட்டுடுவீங்க போலருக்கே. அவர் ஒரு டார்ஜான்!
Jazeela said…
அட நானும் தலைப்ப பார்த்துட்டு, நீங்கதான் ஆசிப் வீட்டருகே போன கதைய சொல்லியிருக்கீங்கன்னு நினச்சிட்டேன். அப்ப அந்த காண்டாமிருகம் நீங்க இல்லையா?
selventhiran said…
வாங்க ஜெஸிலா இதுதான் துபாய் குசும்பா?