அந்த ஒரு கோடியை யாரிடம் கொடுக்க வேண்டும்?

பசுமை விகடனில் ரஜினிக்கு கோவணாண்டி கடிதம் எழுதியுள்ளார். அதை தென்றல் 'ரஜினி ரசிகர்களின் அறியாமையை காசாக்கி சம்பாதிக்கிறார்' என்ற குற்றசாட்டுடன் பதிவிட்டுள்ளார். அதைப்படிக்கும்போது அடியேனுக்கு ஏற்படும் சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு நண்பர் தென்றலுக்கு எழுதியிருக்கிறேன்.

1. காவிரி ஆறும் கைகுத்தல் அரிசியும் - பாடலை எழுத சொன்னவர் - ஷங்கர்; எழுதியவர் - வைரமுத்து; அதற்கான காசு கொடுத்தவர் - சரவணன்; இசை அமைத்தவர் - ரஹ்மான்; வாயசைக்க மட்டும் போவது ரஜினி! - இந்த வரிகளுக்கு ரஜினி மட்டும்தான் பொறுப்பா?

2. நதி நீர் இணைப்பிற்கென்று முறையான அமைப்புகள் ஏதேனும் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா? அல்லது ஏதேனும் நிதிகள் திரட்டுப்பட்டு வருகின்றதா? அந்த ஒரு கோடி ரூபாய் பணத்தை தென்றலாகிய உங்களிடம் கொடுக்க வேண்டுமா அல்லது கோவணாண்டியிடம் கொடுத்து ரசீது பெற்றுக்கொள்ளவேண்டுமா?

3. "பெற்ற தாயை வீட்டுக்குள்ளே பூட்டி பட்டினி போட்டுட்டு புது அண்ணி ஸ்ரேயாவுக்கு மன்றம்னு" எழுதியிருக்கே அது எங்கன்னு கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்க..

4. இமய மலைக்கோ, ஆல்ப்ஸ் மலைக்கோ ரஜினி ஓடிப்போனால் உங்களுக்கென்ன? தமிழ்நாட்டில் நடந்துவரும் அரசியல் கூத்துக்கள், குடும்ப சண்டைகளை விட இவரது இமயமலைப் பயணத்தால் தமிழனுக்கு ஆபத்து வந்து சேர்ந்துவிடுமா?

5. "பண்டாரம் வேஷம் கட்டிகிட்டு இமயமலைக்கு ஒடுறத..." ஒட்டுமொத்த தமிழினத்தின் தலைவனாக தன்னைக் காட்டிக்கொண்டு தமிழகத்தை குடும்பசொத்தாக்குவதை விட இது மேலானதா? கீழானதா?

6. மத்தியில் 13 மந்திரிகள், 40 எம்.பிக்கள் வச்சுருந்தாலும், சுத்தி இருக்கிற கேரள, கர்நாடக, ஆந்திர மாநிலங்கள்கிட்ட பப்பு வேக மாட்டேங்குதே அதுக்கும் ரஜினிதான் காரணமா?

7. ரஜினி நாளைக்கு காலைல ஒரு கோடி ரூபாய் செக் கொடுத்தா... நதிநீர் இணைப்பு வேலையை என்னைக்கு ஆரம்பிப்பிங்க?

8. தொடரட்டும் இந்த பொற்காலம்னு கழுத்துல போர்டு மாட்டிகிட்டு திரிஞ்ச ஐந்து வருஷமும், இப்ப ஆட்சிக்கு வந்த பின்னாடியும் தமிழ்நாட்டில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது, எத்தனை குளங்கள் தூர்வாறப்பட்டுள்ளது. காவிரியை மட்டும் நம்பியுள்ள பகுதிகளில் அதற்கு மாற்று விவசாய வழிமுறைகள் ஏதேனும் புகுத்தப்பட்டுள்ளதா?

9. ஒரு நடிகன் வந்துதான் நதிகளை இணைத்துக் கொடுக்க வேண்டும் என்றால் இவர்கள் ஏதற்கு?

10. ரஜினி நடிக்கிறார். மக்கள் ரசிக்கிறார்கள். பணம் சம்பாதிக்கிறார்.அது அவரது தொழில். அரசியல்வாதிகளின் பணி மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றுவது. அதை எப்போது செய்யப்போகிறார்கள்?

நண்பர்களே பதில் சொல்லுங்கள்.

Comments

Anonymous said…
ரஜினிய ஓரு நடிகராக பாக்காம
அவர நமக்கு போட்டியா வந்துடுவாரோன்னு அரசியல் வாதிகள் நெனக்கிறது தான் இவ்வளவு பிரச்சனையும்
Anonymous said…
ரொம்ப கஸ்டம்.....
your points are very valid. It has become a trend to blame actors for social problems. That said, A situation where in these sort of entertainers making crores of money also needs to be corrected.
VSK said…
அங்கேயே படித்து மகிழ்ந்தேன்.

இப்போது தனிப்பதிவாகவேவா!

இதெல்லாம் சொல்லியா கேட்கப் போகிறார்கள்?

விற்பனைக்குக் கூட ரஜினிதான் வேண்டியிருக்கு அவங்களுக்கும்!

சரி, விடுங்க!
"சிவாஜி" டிக்கட் வாங்கியாச்சா?
:))))))))))))))))
selventhiran said…
நன்றி பாலசந்தர், வி.எஸ்.கே. எங்கே வாங்க விடுறாங்க... நம்ம கண்மணிகள்..கோவை எட்டு தியேட்டர்ல ரிலீஸ்.. நேத்திக்கு மட்டும் ஒரு திராபை தியேட்டர்லயே 1750 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்திருக்கிறது. நண்பர் ஒருவரிடம் பணம் கொடுத்து அனுப்பியுள்ளேன். முதல் ஷோ பார்க்காவிட்டால் அது எனக்கு அவமானம்
ஜோ/Joe said…
//முதல் ஷோ பார்க்காவிட்டால் அது எனக்கு அவமானம்//
புல்லரிக்குது.
//காவிரி ஆறும் கைகுத்தல் அரிசியும் - பாடலை எழுத சொன்னவர் - ஷங்கர்; எழுதியவர் - வைரமுத்து; அதற்கான காசு கொடுத்தவர் - சரவணன்; இசை அமைத்தவர் - ரஹ்மான்; வாயசைக்க மட்டும் போவது ரஜினி! - இந்த வரிகளுக்கு ரஜினி மட்டும்தான் பொறுப்பா?
//
இந்த கருத்தை ஒட்டு மொத்தமாக ஒத்துக் கொள்ளா முடியலீங்க.... ரஜினி என்றதும் ஒரு எதிர்பார்ப்பு இருக்குது. அதற்கேற்றார் போல் தான் வடிவமைக்கிறார்கள். அது படித்தவர்க்கு மட்டுமில்லாது, பாமரர்களுக்கும் தெரியும். அதனால் தான் மக்களிடையே எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. அவர் மட்டும் தான் பொறுப்பா என்பதற்கு பதில் உங்களுக்கே தெரியும். அவரும் பொறுப்பு என்பது தான் என் கருத்து.

//ரஜினி நாளைக்கு காலைல ஒரு கோடி ரூபாய் செக் கொடுத்தா... நதிநீர் இணைப்பு வேலையை என்னைக்கு ஆரம்பிப்பிங்க?
//

இது கேள்வி!
//விற்பனைக்குக் கூட ரஜினிதான் வேண்டியிருக்கு அவங்களுக்கும்!//

exactly..
-L-L-D-a-s-u said…
அண்ணாச்சி..

'நான் ஒரு முறை சொன்னா..', 'என் வழி..' போன்ற கிறுக்குத்னமான வசனங்களையெல்லாம் ரஜினி பஞ்ச் டயலாக்குன்னு என்னாத்துக்கு சொல்றீங்க!! இன்னாரு எழுதி, இன்னாரு காசு கொடுத்து, ரஜினி வாயசைச வசனமுன்னு ஏன் சொல்றதில்லை.


சமூகப்பிரச்சினைகளுக்கு தீர்வை நடிகனிடம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். ஆனால் காவிரிக்காக உண்ணாவிரதம் , ஒரு கோடி என அறிவிக்காமல் மூடிக்கொண்டு இருந்திருந்தால் யார் என்ன இப்போது கேட்கப்போகிறார்கள்!!
selventhiran said…
காட்டாறு, மனதின் ஓசை, ஜோ, சிங்கப்பூர் தாஸ் அனைவரது வருகைக்கும் நன்றி. ரஜினியும் அவரது இமேஜூம் தமிழ் மக்களால் ஏற்பட்டதேயன்றி, திட்டமிட்ட பிரச்சாரத்தால் உருவானதல்ல. அவரது ஸ்டைல், ஜிம்மிக்ஸ், ஊடகங்கள் ஏற்படுத்திய பில்டப், தனிவாழ்வில் அவரது எளிமையும் பிறருக்கு உதவும் குணம் எல்லாம் சேர்த்து ஏற்படுத்திய அந்த பிம்பத்தை பார்த்து ரசிப்பது மட்டுமே நல்லது. நம் பிரச்சனைகளுக்கு அவரை இழுப்பது. பிரச்சனையின் போக்கை திசை திருப்புவதேயன்றி தீர்வாகாது. தமிழ்நாட்டின் முக்கிய ஆளுமைகளுல் ஒருவர் என்கின்ற முறையில் அவரும் இதற்கான முயற்சியில் ஈடுபடுவது நதிநீர் இணைப்பு போன்ற இமாலய பணிகளுக்கு உதவியாக இருக்கும் என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை. அந்த முயற்சிகளுக்கு அவர் பக்கபலமாக இருப்பார் என்று நம்பலாம். ஆனால் தொடர்ந்து ரஜினியை குறிவைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
செல்வேந்திரன் இப்படி தெளிவா கேள்வி கேட்டா மக்களிக்கு புரியாது.

கலைஞர் கூட நாடாளுமன்ற தேர்தலின் போது நதி நீர் இணைப்பு விஷயம் பத்தி சொன்னாரே . . . . .

அவர்கிட்ட கேள்வி கேட்க மட்டாங்க. . .

பசுமை விகடனை கூட சினிமா இல்லாம ஓட்ட முடியாது போலிருக்கு இவங்களால.

நல்ல பதிவு.
selventhiran said…
வெங்கட்ராமன் சார் வருகைக்கு நன்றி! கலைஞரின் வயதும், அரசியல் சாதுர்யமும், வார்த்தைகளை வைத்து அவர் ஆடும் சிலம்பும் அவருக்கு வசதியாக போய்விடுகிறது. நதிகளை எல்லாம் இணைப்பது இருக்கட்டும் பக்கத்து ஸ்டேட்காரங்க தண்ணி கேட்டா மூக்கிலயே குத்துறாங்களே.. அதுக்கு முத்தமிழ் வித்தகர் ஏதாவது ஏற்பாடு பண்ணட்டும் முதலில்...
நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் தருவதை விடுத்து, ஒரு மாவட்டத்தின் ஏரிகளைத் தூர்வார அந்த பணத்தை கொடுக்கதயாரானால் அது உண்மையிலே மக்களுக்கு பயனளிக்கதக்கதாய் இருக்கும். தூர்வார அவர் ரசிகர்கள் தங்கள் உழைப்பினைத் தரலாம். ரஜினிக்கு அரசியல் வருதோ இல்லையோ அரசியல்வாதிகளைப் போல் போலி வாக்குறுதிகள் தரத் தெரிகிறது.
selventhiran said…
முத்துக்குமரன் வருகைக்கு நன்றி.
என்ன சாமி நீங்க , பழுத்தமரம் தான் கல்லடிபடும்ன்னு தெரியலையா ? இப்போதைக்கு எனக்கே ரஜினி மேல பொறாமை இருக்கு! என்ன பண்றது என்னோட விதி இப்படி இருக்கேன் ஹம்..........

Popular Posts