பொறுக்கியான பொழுதில்

பொறுக்கியான பொழுதில்

எதிர்வீட்டில்
பள்ளிக்கூடத்தில்
கல்லூரியில்
பணியிடத்தில்
இணையப் பெருவெளியில்
இடம் எதுவாயிருந்தாலும்
நீங்களே புன்னகைக்கிறீர்கள்
நலம் விசாரிக்கிறீர்கள்
எண்களைக் கேட்டு வாங்கி கொள்கிறீர்கள்
குறுஞ்செய்திகளால் குளிப்பாட்டுகிறீர்கள்
காலநேரமின்றி ஓயாது வாயாடுகிறீர்கள்
உங்கள் விருப்ப இடங்களுக்கு
நாய்க்குட்டிபோல் இழுத்து செல்கிறீர்கள்
தொட்டு பேசுகிறீர்கள்
சண்டையிடுகிறீர்கள்
சபிக்கிறீர்கள்
பின் எனை விட்டு பிரிகிறீர்கள்
இந்த உலகம்
என்னை 'பொறுக்கி' என்கிறது.....

Comments

"விஸ்லவா சிம்போர்ஸ்கா"
-இந்த நோர்வே கவிஞரின் 'காலாட்படை நினைவுகள்' கவிதைத் தொகுப்பை என்னால் மறக்கவே முடியாது.
அந்த நீங்கள் யாருப்பா!! :)
//
@கோபிநாத் said...
அந்த நீங்கள் யாருப்பா!! :)
//

ரிப்பீட்
selventhiran said…
நீங்களின் பட்டியல்
நீளமானது
தற்போதைய காதலியின் நாக்கை போலவே....வருகைக்கு நன்றி ஆழி, கோபி, சிவா
Anonymous said…
//இந்த நோர்வே கவிஞரின்//

போலந்து நாட்டு கவிதாயினி.
நல்லாருக்கு செல்வா. முடியலத்துவத்துல வந்ததோ...

Popular Posts