எப்பவும் மேலே...
கடைக்கு வந்த ஒரிரு நாட்களிலே சூடான பக்கோடா போல விற்றுத் தீர்ந்துவிட்ட விகடன் தீபாவளிமலர், தற்போது 'விகடன் தீபாவளி மின்மலர்' என்ற ஹைடெக் வடிவம் கொண்டு வெளிவந்திருக்கிறது. உலகெங்கிலுமிருக்கிற தமிழ் நெஞ்சங்கள் அச்சுப்புத்தகத்தைபடிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் இந்த அரிய முயற்சி இந்திய பத்திரிகை வரலாற்றில் ஒரு புதிய புரட்சி. ஒவ்வொரு பக்கமாய் புத்தகம் போல புரளும் மின் மலருடன் அசத்தலான வீடியோ மற்றும் ஆடியோ இணைக்கப்பட்டிருப்பது சுகமான வாசிப்பனுபவத்தை ஏற்படுத்துகிறது. மேலதிக விபரங்களுக்கு சொடுக்குங்கள்.
Comments
படித்துக் கொண்டிருக்கும்போதே நிறையவாட்டி Login செய்யவேண்டி வரும்.
தவறுதலாக பிரவுசரை மூடிவிட்டால் மீண்டும் பாஸ்வேர்ட் செட்டப் செய்ய வேண்டும். பிரவுசரை Back செய்தால் மீண்டும் Login செய்ய வேண்டும்.
இது போன்ற விடயங்கள் எரிச்சலையே ஏற்படுத்துகின்றன.
விகடன் சந்தாவை இனி புதுப்பிப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறேன்.
என்ன பாதுகாப்பு முறையோ தெரியவில்லை. எனது வங்கிக் கணக்கில்கூட இப்படி இல்லை.
மாயாவி வருகைக்கு நன்றி... தாங்கள் தெரிவித்த குறை அதற்குரிய நபர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது மின்னஞ்சல் முகவரியை தெரியப்படுத்துங்கள்.