
கவுஜயே மடத்தனமானது என்ற போதிலும் சங்கர மடத்திற்கு இணையாக கவிமடத்தை வளர்த்தெடுத்த நம் அன்புத்தலைவன் ஆசீப்மீரான் என்கிற சாத்தான்குளத்தான் என்கிற அண்ணாச்சியின் 'சாத்தான்குளத்து வேதம்' வலைப்பூ நடப்பு இதழ் (12-12-07) ஆனந்த விகடன் வரவேற்பறையில் இடம்பெற்றுள்ளது. இது கவிமட வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதியப்பட வேண்டிய நாள். பெண்ணாதிக்கம் பெருத்துவிட்ட வலைப்பூ உலகில் ஓங்கி ஒலிக்கும் தனித்த ஆணீய குரலுக்கு சொந்தக்காரர் நம் அன்பு அண்ணாச்சி என்பது தாங்கள் அனைவரும் அறிந்ததே. அவரது போராட்டங்கள் நிறைந்த இந்த ஆணீய வாழ்வை கவுரவிக்கும் விதமாக 'ஆணீய சிந்தனையாளர்' அல்லது 'ஆணீய தளபதி' அல்லது ஆணீய ஆசான் போன்ற பட்டங்களைக் கொடுத்து அவரைக் கவுரவிக்கலாம் என கவிமடத்தின் தலைமைக் கொத்தனான நான் நிணைக்கிறேன். மேற்படி கருத்தோடு உடன்பாடுள்ள கவிமடக்கவுஜர்கள் உடனடியாக தங்களது ஆலோசனைகளை சொன்னால் ஸ்டாலினுக்கு போட்டியாக நெல்லையிலே மாநாடு கூட்டி பட்டமளித்து நாம் பெருமையடையலாம். என்ன சொல்றீங்க....?
Comments
கவி
மடத்தலைவா..
உன்னால் இன்று
பெருமைப்படுகிறது விகடன்..
உன் கவிதை படிப்பது
முன் ஜென்மக் கடன்!
மூடிக் கிடக்கிறது
கவிமடம்..
எடுக்கவேண்டும் நீ
புதுப்பாடம்..
முதன்மை மடச்சீடன்
பினாத்தல்.
பினாத்தலாரே தங்களது கவுஜயில் பொருட்குற்றம் இருக்கிறது... மூடிக்கிடக்கிறது கவிமடம் என தவறான தகவல் இடம்பெற்றிருக்கிறது தங்கள் கவுஜயில்.... கொஞ்சம் காலம் புழங்காமல் இருந்ததில் பாம்பு, பல்லிகள் புகுந்து விட்ட கவிமடத்தை அதன் தலைமைக் கொத்தனாகிய நான் முடியலத்துவ சிமெண்ட் கொண்டு செப்பனிட்டு வருகிறேன் என்பதை தங்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறேன்
இதுக்கு மேல என்ன சொல்ல ?
அவருதான் என்ன கவநிக்கவே மாட்டேங்கிராரே !!
அய்யா கவிமதத்தில் நானும் கொத்தலாமா கூடாதா?
அப்புறம் செல்வேந்திரன் மாமா விகடன்ல உங்கள் முடியலத்துவம் சூப்பரோ சூப்பர். வீட்ல எங்கப்பா என்ன பாத்து நீதான் முடியலத்துவத்துக்கு பெரிய எக்சாம்பில்ன்னு சொல்றாரு
எப்ப கேட்டாலும் திறக்கிறேன் திறக்கிறேன்னே சொல்றாரே ஒழிய வேலை நடக்க மாட்டேங்குது :-(
நிலா // என்னது மாமாவா?!
சுரேஷ் // அவரு தொறக்கலண்ணா என்ன நாம நாயன்மார் மாதிரி ஒரு கவுஜ பாடி தொறந்துடுலாம்....