Saturday, December 15, 2007

பாராட்டு விழாவில் செல்வேந்திரன்

"ஐயா கவிஞரே, எங்க இருக்கீங்கன்னு?" அனுசுயாவிடமிருந்து மெஸெஜ் வந்த போது கிணத்துகடவு தக்காளி மார்க்கட் பக்கத்துல இருக்கிற டீக்கடையில பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். அவ்வளவு டீடெயிலா பதில் சொல்ல வேண்டாமேன்னு "மார்க்கட் வொர்க்"னு ரிப்ளை பண்ணேன். கால் மீ அர்ஜண்ட்னு அடுத்த மெஸெஜ் வந்தது. பஜ்ஜி திங்கவுடாம என்னடா இது எழவுன்னு கூப்பிட்டா " கவிஞரே ஆனந்த விகடனில் ஒங்க கவிதை தொடர் படித்து மகிழ்ந்த பதிவர்கள் சின்னதா பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு பண்ணி இருக்கோம். தலைமை விருந்தினரா சென்னையிலருந்து தேவ் ஆனந்த் வந்திருக்கார்... பீப்பிள்ஸ் பார்க் அன்னபூர்ணாவில் சாயங்கலாம் ஆறு மணிக்கு... லேட் பண்ணிடாதீங்க"ன்னு அனுசுயா சொன்னதைக் கேட்டு காலுக்கு கீழே பூமி நழுவ தொடங்கியது. நம்மள கவிஞர்னு கூப்பிட்டதே ஈர வெளக்குமாற தலையில வச்சாப்பல இருக்கே... பாராட்டு விழான்னா?! புறப்படு செல்வேந்திரா... புறப்படு.... கால் டாக்ஸி, போக்கு லாரி, பைக் எதையாவது பிடித்து கெளம்புடா என் செல்வமேன்னு அடிச்சி புடிச்சி 5.55க்கு அன்னபூர்ணா வாசலுக்கு வந்தா அரைமணி நேரமா ஒரு பயலையும் காணோம். ஆஹா வழக்கம்போல நம்மளை பீன்ஸ் ஆக்கிட்டாங்களேன்னு கிளம்ப நெணைச்சப்ப அண்ணன் சிவகுமாருடன் வந்து சேர்ந்தார் அனுசுயா. சாரிங்க கிளம்ப லேட்டாயிடுச்சின்னு ஒரு வார்த்தை சொல்லுவாங்கன்னு எதிர்பார்த்தேன். ம்ஹூம்.

தேவ் ஆனந்தும், தேவர் பிரானும் வர இன்னும் அரைமணி நேரம் ஆகும் என தகவல் வந்தது. அவர்கள் வருவதற்குள் பாராட்டு விழாவில் ஏற்புரை வழங்க 'கவிதை என்பது கற்பூரம் போன்றது' என ஏதாவது ஜல்லியடிக்க குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தேன். இனி நல்லதாக நாலு ஜிப்பாக்கள் வாங்கி வைத்துக்கொண்டால் இலக்கிய கூட்டங்களுக்கு செல்ல வசதியாக இருக்கும் என நிணைத்துக்கொண்டிருந்த நேரத்தில் தேவர்பிரான், அருண்பிரசாத், தேவ் ஆனந்த் என ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். ஒரு பெரிய வட்ட டேபிளில் அமர்ந்து கொஞ்ச நேரம் பதிவுகள், தமிழ்மணம், தேன்கூடு, யூனிகோடு என வழக்கமான தலைப்புகளில் ஒருவருக்கொருவர் பேச ஆரம்பித்தனர். சரி எல்லாம் முடித்துவிட்டு நமது கவிதையை சிலாகிப்பார்கள். புகழும்போது முகத்தை எப்படி வைத்துக்கொள்வது என யோசித்துக்கொண்டிருந்த வேளையில் ரவா ரோஸ்ட் வேண்டும் என்றார் அனுசுயா. ரவா தோசை ஒரு ரவுண்டு முடிந்தபின் சாம்பார் வடை ஒரு ரவுண்டு ஓடியது. நான் ஒரு தடவை தொண்டையை செருமி எனது இருப்பையும், நாம் கூடிய நோக்கத்தையும் நிணைவுறுத்த முயன்றேன். 'என்ன செல்வேந்திரன் தொண்டைல ஏதாவது பிரச்சனையா? இங்கே மிளகு பால் வாங்கி குடிங்க சரியாயிடும் என்றார் சிவகுமார். மணி எட்டாகிவிட்டது. தேவ் ஆனந்த தாம் எழுத வந்த காலத்திலிருந்து தமிழ் பதிவுலகில் ஏற்பட்ட சர்ச்சைகள், மாற்றங்கள், தில்லாலங்கடி குழி பறிப்புகள், சாக்கிரதையா இருக்க வேண்டிய சமாச்சாரங்கள் குறித்த நெடிய பயனுள்ள குறிப்புகளை வழங்கி கொண்டிந்தவர் திடீரென குமுதமும் விகடனும் என ஓப்பிட்டை ஆரம்பித்தார். ஆஹா கிளம்பற நேரத்துல சப்ஜெக்டுக்கு வந்துட்டாங்கய்யான்னு நிமிர்ந்து உட்கார்ந்தா அப்படியே கலைஞர் டிவிக்கு கைமாறியது பேச்சு. அட போங்கப்பான்னு வெறுத்த நேரத்துல உங்க 'ரஜினியும் அப்பாவும்' விகடன்ல படிச்சேன். நல்லா இருந்ததுன்னு சொன்னது கொஞ்சம் ஆறுதலா இருந்தது. இதற்கிடையில் டேபிளை எப்படா காலி பண்ணுவீங்கன்னு பேரர் பதினைஞ்சு தடவை சுத்தி வந்ததுல அவரே ஒரு வலைப்பூ எழுதற அளவுக்கு விஷய ஞானம் அடைஞ்சுட்டாருங்கற உண்மைய தெரிஞ்ச நான் கிளம்பலாமான்னு முதல் தடவையா என் பவளவாய் திறந்தேன். அப்பகூட ஒரு வரி நம்ம கவுஜையை பாராட்டாம, கிளம்பலாம்னு கோரஸா சொல்லிட்டு ஆளுக்கொரு திசையா அப்பீட் ஆனாங்க. ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா போன் போட்டு விசாரிச்சதுல ஒரு உண்மை தெரிஞ்சது அவங்க யாருமே 'முடியலத்துவம்' படிக்கலங்றது. சும்மா சந்திச்சு பேசலாம்னு முடிவெடுத்துட்டு நம்மள மாக்கானா ஆக்கின அனுசுயாவை பசித்த புலி தின்னட்டும்.

14 comments:

அனுசுயா said...

அட நான் எப்போ உங்கள கவிஞரேனு கூப்பிட்டு இருக்கிறேன். அப்புறம் ரவா ரோஸ்ட் சாப்பிட்டது யாரு. அதெல்லாத்தையும்விட என் கவிதைய படிச்சீங்கள படிச்சீங்களானு கேட்டு எல்லாருக்கும் புத்தகத்த இலவசமா குடுத்து படிக்க வெச்சு. கடைசில சர்வர் தாத்தாகூட நின்னு படிச்சுட்டு போனாரே இதெல்லாம் மற்நது போச்சா. அது மட்டும் இல்லாம நீங்க இப்டி சொல்லுவீங்கனுதான் புகைப்படத்துல கூட நீங்க குடுத்த புத்தகத்த தேவ் பொறுப்பா புடிச்சுட்டு இருக்காரே. அதுக்கும் மேல விளக்கம் வேனுமா??

குசும்பன் said...

"என் கவிதைய படிச்சீங்கள படிச்சீங்களானு கேட்டு எல்லாருக்கும் புத்தகத்த இலவசமா குடுத்து படிக்க வெச்சு."

எங்க அப்பா கூட ஆனந்தவிகடன் படிப்பார் அவருக்கும் ஒரு ஆண்டு சந்தா கட்டிவிடுங்களேன், முடிஞ்சா ஆயுல் சந்தா என்றால் 5 வருடம் கழித்து பிறக்க போகும் என் குழந்தை பேரில் எடுக்கவும்:)))

குசும்பன் said...

இது பாராட்டு விழா மாதிரி தெரியவில்லையே சாப்பாட்டு விழாமாதி அல்லவா தெரிகிறது.

குசும்பன் said...

" நமது கவிதையை சிலாகிப்பார்கள்."

உங்க கவிதையை, அய்யனார் கவிதையை எல்லாம் சிலாகிக்க முடியாது கலாய்கதான் முடியும்:)))

கோபிநாத் said...

\\கவிஞரே, எங்க இருக்கீங்கன்னு?" \\

இதுக்கு மேல வேற உங்களை பாராட்டுவாங்களா! ;))

\\உங்க கவிதையை, அய்யனார் கவிதையை எல்லாம் சிலாகிக்க முடியாது கலாய்கதான் முடியும்:)))\\

சூப்பர் அண்ணே ;))

செல்வேந்திரன் said...

புகைப்படத்துல கூட நீங்க குடுத்த புத்தகத்த தேவ் பொறுப்பா புடிச்சுட்டு இருக்காரே // அனு, புடிச்சாரு சரி படிச்சாரா?!
குசும்பன் அண்ணாச்சிக்கு இன்னிக்கு நாந்தான் இரையா?
வாங்க கோபிநாத்

Seemachu said...

என்ன செல்வேந்திரன்,
கவிதைக்குப் பாராட்டுவிழா இங்க அமெரிக்காவில் ஏற்பாடு செஞ்சுடறேன்..

googletalk மூலமா வந்து சேர்ந்துடுங்க...

உங்கள் கவிதகைள் பிரமாதம்.. 'படிச்சவன்' என்கிற முறையில் சொல்லிக்கிறேன்..

அன்புடன்,
சீமாச்சு...

வெங்கட்ராமன் said...

இது பாராட்டு விழா மாதிரி தெரியவில்லையே சாப்பாட்டு விழாமாதி அல்லவா தெரிகிறது.

குசும்பன் அண்ணன் சொல்றது சரி,
தலைப்பை.

"ரவா தோசை விழாவில் செல்வேந்திரன்" அப்படீன்னு வச்சிருக்கலாம்.

செல்வேந்திரன் said...

'படிச்சவன்' என்கிற முறையில் சொல்லிக்கிறேன் // ஆஹா என் அன்பு தலைவா சீமாச்சு நீவீர் நீடுழி வாழ்க...

வெங்கட்ராமன் 'அதகள விருந்தில் அப்பாவி செல்வேந்திரன்'னு மாத்தலாம்னு இருக்கேன்.

தங்ஸ் said...

ஆ.வி-ல ஒவ்வொரு வாரமும் கலக்குறிங்க தலைவா..'நச்' கவிதைகள்..

//கிணத்துகடவு தக்காளி மார்க்கட்//கூடை என்ன விலை??நானும் கி.கடவு வட்டாரம் தான்...

எம்.ரிஷான் ஷெரீப் said...

முடியலத்துவம் அருமை நண்பரே...
நிறுத்திடாதேள்...
அடுத்த முறை சென்னை வரும் போது மொளகா பஜ்ஜியும்,டீயும் வாங்கித் தர்ரேன்னு வாக்குக் குடுத்திருக்கீங்க.
அதனால கண்டிப்பா உங்களுக்கு ஒரு விழா எடுப்பேன்.

ஆமா கடைசி வரைக்கும் அந்த ஹோட்டல் பில் யார் கட்டினாங்கன்னு சொல்லவேயில்லையே?

அய்யனார் said...

நண்பா கலங்காதே நாளைய வரலாறு நம்மைப் பேசும் (வைரமுத்து ஸ்டைல்ல படிச்சிக்கப்பா)

செல்வேந்திரன் said...

ஆமா கடைசி வரைக்கும் அந்த ஹோட்டல் பில் யார் கட்டினாங்கன்னு சொல்லவேயில்லையே? // வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீங்க ரிஷான்.

அய்யனார் கண்ணு ரெண்டையும் மேல் நோக்கி வச்சி வடுகப்பட்டியார் ஸ்டைல்ல வாசிச்சிட்டேன்.

வருகைக்கு நன்றி தங்ஸ்

MyPhotogrphy said...

eppu varthapatiya. Nammakku sappadu