'பிரியாணி' என்று ஒரு பெண்ணின் பெயர்

சிவா, பூங்கொடி கல்யாண வைபோகமே... (லேட்டஸ்ட் லைவ் ரிப்போர்ட்)என் கல்யாணத்துக்கு நான் கல்யாணத்தன்றுதான் போனேன் என்கிற கதையைச் சொல்ல இது உகந்த தருணமல்ல. நான் சொல்லியிருந்தபடி காலை ஆறு மணிக்கே அம்மா எழுப்பிவிட, மிளகாய்த்தூள் பற்று போட்டது போல் கண்கள் கனல எழுந்து குளித்துவிட்டு (எத்தனை வருஷமாச்சு... அட சீக்கிரம் எழுந்ததைச் சொன்னேன்யா) புறப்பட்டேன். காபியை- சரவணபவனில் வாங்கிக் கொடுப்பார்கள்- மறுத்துவிட்டேன். அங்கே கூட்டம் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். 'ஒரே நாளில் பத்தாயிரம் கல்யாணம்' என்று பத்து வருடங்களுக்கு முன்பே வடபழனி கோயிலைப் பற்றிக் கட்டுரை எழுதியிருக்கிறேன். போகிற வழியில் போன். தம்பி செல்வேந்திரன். கல்யாணத்துக்குப் போவதாகச் சொன்னதும் 'ம்... ஜாலி' என்றான். (அவன் வாக்கு பலித்த விதத்தைக் கடைசியில் விளக்குகிறேன்.) 'இங்கே', 'அங்கே' என்று தாக்காட்டி, கோயிலிலிருந்து ஒன்றரை கி.மீ. தள்ளித்தான் வண்டியை பார்க் செய்ய முடிந்தது. வண்டியை நிறுத்தியதுதான் தாமதம் எதிரிலிருந்த கடைக்காரர் வண்டி எடு வண்டி எடு என்று கத்த ஆரம்பித்தார். பதற்றம் அதிகரிக்க அஞ்சே நிமிஷம் என்றேன். கடைக்காரர் பிடிவாதம் பிடிக்கவே, போய்யா என்று விட்டு நடந்தேன். வண்டியில் PRESஸ் ஸ்டிக்கர் ஒட்டியிருந்த தைரியம். எதிர்பார்த்ததைவிடக் கூட்டம். ஆச்சர்யகரமாக இளம்பெண்கள் தொகை ஜாஸ்தியாக இருந்தது. நெரிசல். மணமக்களை அடையாளம் தெரியாது. எனக்கே தெரியாமல் என்னிடம் இருந்த பாசத்தால் புறப்பட்டு வந்துவிட்டேன். என் இரண்டே நம்பிக்கைகள்: பாலபாரதி, லக்கிலுக். அவர்களின் முகத்தைக் கண்டுபிடிக்க கூட்டத்துள் முண்டினேன். பெண்களிடம் இடிபடுவதுதான் சிரமமாக இருந்தது (வயிற்றில் கொஞ்சம் குளிர்ந்த தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும்). ம்ஹூம்... இந்தப் பெருங்கூட்டத்தில் கண்டுபிடிப்பது சாத்தியமே இல்லை என்று புரிந்து போயிற்று. கையிலிருந்த பரிசோடு (நம்பவும்) வால்பையன், பரிசல்காரன் ஆகியோரின் வாழ்த்துக்களும் சேர்ந்து கனத்தது. இப்போது என்ன செய்வது? பெண்களின் அன்பான அநுமதியின் அடிப்படையில் ஒரு மூலையில் ஒண்டி யோசிக்க ஆரம்பித்தேன். பெருமளவில் செல்கள் சிதைந்திருந்த மூளை சிந்திக்க மறுத்தது. கடைசியாகத் தொலைத்து, சமீபத்தில்தான் மொபைல் வாங்கியிருந்ததால் கான்டாக்ட் எண் எதுவும் இல்லை. நினைவிலும் எண்கள் இல்லை (செல் பிராபளம்). அப்போதுதான் சிறு கூட்டம் ஒன்று கோயில் தூணைப் பார்த்துக் கொண்டிருப்பது தென்பட்டது. அதில் ரிசர்வேஷன் சார்ட் போல மணமக்கள் பெயர்களும் சந்நிதி எண்களும் கொண்ட பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது. ஓ.கே. 'ரிபீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்' என்று மணமேடையில் கத்துவேன் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு வந்ததை நிறைவேற்றிவிடலாம். பெயர்களை ஒவ்வொன்றாகப் பார்த்தேன். மங்களூர் சிவா என்பது புனைபெயர் என்பதும் அவருடைய இயற்பெயர் சிவ சம்திங் என்பதும் ஒருசேர நினைவுக்கு வந்தது. மணமகளின் பெயர் block ஆகிவிட்டது. 'விளங்கும்" என்று நினைத்துக்கொண்டு பட்டியலில் சிவ வைத் தேடத் தொடங்கினேன். இன்று காலை எழரை ஒன்பது முகூர்த்தத்தில் மட்டும் 147 கல்யாணங்கள். நல்லது. விதவிதமான பெய‌ர்கள். 43‍வது ரமேஷ் என்று கண்டிருந்தது. சில விநாடிகளில் தலையை உலுப்பி சுதாரித்துக்கொண்டு... ஹ... பெண்ணின் பெயர் பூங்கொடி... மணமகள் பட்டியலில் தேடத் தொடங்கினேன். ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பெயர்களில் பல விநோதமாக இருந்தன. தேஜஸ்தா, அன்னமணி, கல்பசுரிதா ஆகியவை சில உதாரணங்கள். 'பிரியாணி' என்று ஒரு பெண்ணின் பெயர். உற்றுப்பார்த்ததில் 'பிரியாரணி' என்று இருந்தது. (பிரியராணியின் ஸ்பெல்லிங் மிஸ்டேக்.)பூங்கொடி பெயர் இல்லை. சிவாவைக் கல்யாணக் கோலத்தில் பார்க்கும் ஆசை, வீம்பாகவே மாறிவிட்டது. புலனாய்வுப் பத்திரிகையாளர் விடுவேனா..? சரவணபவனில் நுழைந்தேன். அங்கே முந்தைய முகூர்த்தத்தின் 147 கல்யாண கோஷ்டி சாப்பிட்டுக்கொண்டிருந்தது. சந்தோஷம். கண்ணுக்கெட்டியவரை தென்பட்ட முகங்களில் பார்வையை ஓட்டினேன். அப்பாவி முகங்கள், கெத்தான முகங்கள்... பதிவருக்குண்டான ரெண்டுங்கெட்டான் முகங்கள் எதுவும் தென்படவில்லை. ஓ.கே. எப்படியும் ரெண்டு பதிவராவது ஆபீசுக்கு மட்டம் போடுவார்கள், ஒரு நல்ல கடையாகப் பார்த்து உட்கார்ந்து, ஒரு நாலு மணி நேரம் நாட்டைக் காப்பாற்றுவதைப் பற்றி விவாதிக்கலாம் என்று நேறு ராத்திரி வாங்கி வண்டியின் சைடு பாக்ஸில் வைத்திருந்ததைத் தனி மனித ராணுவமாகவே காலி செய்யவேண்டியதுதான் என்று, வண்டியை எங்கே நிறுத்தினோம் என்று யோசித்தபடி நடந்தேன். அனிச்சையாக வண்டிச்சாவிக்காக பாக்கெட்டுக்குள் கை போனது. ஆம், சாவி இல்லை. வண்டி இருக்குமா என்று அடுத்த பதற்றம். நடையை எட்டிப் போட்டேன். ஹ... வண்டி இருந்தது. வண்டியிலேயே சாவியும் இருந்தது. ஆனால் இரண்டு சக்கரங்களிலும் காற்றுத்தான் இல்லை. லோக்கல் ஆட்களைப் பகையேல்!ஆபீஸுக்கு போன் போட்டு "வடபழனி முருகன் கோயிலில் கல்யாணம் வைத்தால் உணவு வகையறா செலவைப் பெருமளவு குறைக்கலாம்" என்று நாணயம் விகடனுக்கு ஒரு துணுக்கு சொல்லிவிட்டு, சந்தடி சாக்கில் வொர்க்கிங் ஃப்ரம் ஹோம் சொல்லி பங்க்ச்சர் வண்டியின் சைடு பாக்ஸைத் திறந்தேன். By: ரமேஷ் வைத்யா.

Comments

Anonymous said…
//எப்படியும் ரெண்டு பதிவராவது ஆபீசுக்கு மட்டம் போடுவார்கள், ஒரு நல்ல கடையாகப் பார்த்து உட்கார்ந்து, ஒரு நாலு மணி நேரம் நாட்டைக் காப்பாற்றுவதைப் பற்றி விவாதிக்கலாம் //

:-)))))))))
ஹலோ நாங்க எளுதினதையும் படிக்க ஆளிருக்கப்பா...
வடகரை வேலன் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேனென்றே தெரியவில்லை...
Thamiz Priyan said…
நல்ல வேளை! வண்டி கிடைச்சதேன்னு சந்தோசப்படுங்க... :) லோக்கல் ஆட்களைப் பகைச்சுக்கிட்டா இப்படித்தான்.. :)
Thamiz Priyan said…
ஆமா... அந்த பரிசுப்பொதியை என்ன செஞ்சீங்கனு சொல்லையே?... ;)))
Thamira said…
படித்தேன். மிஸ் பண்ணிட்டீங்களே தல.. தனி மெயில்லயாவது சொல்லலாமில்லையா? 'விடமாட்டேன்'னு பாத்தவுடனேயே ஓடிர்றது. மேலும் விளக்கமாக நாளை பிற பதிவுகளையும் படித்துவிட்டு வருகிறேன். அப்புறம் ஒரு சந்தேகம். நீங்க எனக்கு கமென்ட் போடணுமா? இல்ல நான் உங்களுக்கா.. நல்ல கதையா இருக்கே.!
Thamira said…
ஓகோ.! மீண்டும் அவசரப்பட்டுட்டேன், செல்வேந்திரன் வேற, 'விடமாட்டேன்' வேற, ரமேஷ் வேறயா? ஏதோ புரிஞ்சா மாதிரி இருக்குது. சரி பதிவைப்பத்தி கேட்டீங்களா? உண்மையைச்சொல்றேன். கோவப்பட்டுக்காதீங்க, நானே வேற ஆங்கிளில எழுதின மாதிரி இருந்தது. மேலும் பதிவ விட வண்டியின் சைட் பாக்ஸில் இருந்ததை மிஸ் பண்ணிட்டமே என்ற எண்ணம்தான் மேலோங்கியிருக்குது..
சகலகலா வித்தகர், வேத விற்பன்னர் ‘நான் எழுதினத என்னாலயே படிக்க முடியலடா ராஸ்கலு' என்றபோது நம்பவில்லை. இப்போதும் நம்பவில்லை.

ஜி, அண்ணன்கிட்ட சொல்லுங்க. ஒண்ணும் மோசமில்லை.

கூடிய சீக்கிரம் அட்சரபாத்திரத்தைத் திறக்கச் சொல்லுங்க. அடிக்கடி தண்ணிலை விளக்கம் கொடுக்கச் சொல்லுங்க.

இல்லீன்னா...
.
.
.
.
.
.
.

விடமாட்டேன்!
இதுக்கு ஒரு பின்னூட்டம் போட்டேனே.. வரலியே..

வராம...... விடமாட்டேன்!
இதை எப்போ எழுதினார்?
என்னிடம் சொல்லவேயில்லையே!

Popular Posts