சகஹிருதயர்களே!

நீயா? நானா? - 1

நீயா? நானா? - 2

இந்த வரிகளைத் தட்டச்சு செய்யும் நிமிடத்தில், விடாது ஓலிக்கும் என் செல்ஃபோனை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொள்கிறேன். ஞாயிறு இரவிலிருந்து இப்படித்தான் இது ஓலித்துக்கொண்டிருக்கிறது. உறவினர்கள், ஊர்க்காரர்கள், பள்ளித் தோழர்கள், எழுத்தாள நண்பர்கள், சக ஊழியர்கள், ஊடக நண்பர்கள், பதிவுலக சொந்தங்கள் என்று எத்தனையெத்தனை பேர்கள்?! பல பேர்களிடம் முதல் முறையாக இபோதுதான் பேசுகிறேன். அத்தனை உரிமையாக என்னிடத்தில் தங்களது வாழ்த்துக்களையும், விமர்சனங்களையும் சுட்டி விட்டுப் போகும் இவர்களை நினைத்து நானும் சொல்கிறேன் 'என்ன தவம் செய்தனை?'

நள்ளிரவு முழுவதும் பேசித் தீர்த்துவிட்டு விடிகாலையில் கணிணியைத் திறந்தால் நான்கைந்து நண்பர்கள் வீடியோவுடன் பதிவுகள் போட்டிருந்தார்கள். ஆச்சர்யம் தீரவில்லை. இவைகளைத் தவிர்த்து குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், நேரில் என சகல வழிகளிலும் எனக்கு வாழ்த்துக்களைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

தொலைபேசியில் பல பதிவர்களின் மனைவிமார்கள் நன்றி சொன்னார்கள். நம்மைச் சுற்றியுள்ளவர்களைக் கவனிக்காமல் ஆர்க்குட்டிலும், ஃபேஷ் புக்கிலும், பதிவுலகிலும் நண்பர்களைத் தேடி அலைவதைப் பதிவு செய்தமைக்காகத்தான் இந்த நன்றிகள். "ஆபிஸ் விட்டு வந்ததும் நேரே கம்யூட்டர்தாங்க. நடுராத்திரி ஆனாலும் எந்திரிக்கறதில்லை. சாப்பிட்டியா, பசங்க சாப்பிட்டாங்களான்னு கூட கேட்பதில்லை. இப்ப உங்க செல்வேந்திரனே சொல்லிட்டாரு... திருந்துற வழிய பாருங்கன்னு சொல்லிருக்கேன்" என்றொரு மிஸர். பதிவர் சொன்னபோது சிரிப்பு வந்தது. நம் வீட்டுப் பெண்கள் விரும்புவதெல்லாம் அன்பான விசாரணைகளும், அனுசரணையான பேச்சும்தானே? 'மவனே, உனக்கென்ன நீ ஈஸியா சொல்லிட்ட... கல்யாணமானா தெரியும்' என்று என்னிடத்தில் முண்டாவை முறுக்கியவர்களும் உண்டு. அவர்களுக்கு என் ஓரே பதில் 'அன்பானவர்களிடம் அடங்கித் தோற்றுவிடுவதே நன்று'.

வெளியூர்ப் பிரயாணம் முடித்து அவசரமாக வீடு திரும்புகையில், கார் ரிப்பேராகி நிகழ்ச்சியைப் பார்க்க முடியாமல் போய்விடும் என்பதால் டிவி இருக்கிற விடுதியறையை வாடகைக்கு எடுத்து நிகழ்ச்சியைப் பார்த்தவர், வீட்டு டி.வி ரிப்பேராகிவிட முடி திருத்துனர் கடையை திறக்கச் சொல்லி நிகழ்ச்சியைப் பார்த்தவர், உள்ளூர் கேபிளில் விஜய் வராததால் டி.டி.எச் வாங்கியவர் என்று நெகிழ வைக்கும் சம்பவங்கள் ஏராளம். யாரையும் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்ல முடிகிற நிலையில் இல்லை. 'பேரன்புத் திணறல்' எனும் நோயால் பீடிக்கப்பட்டு இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் தனி மடல் நன்றிகளை அனுப்பும் பெருவேலையில் ஈடுபட்டிருக்கிறேன்.

தங்களில் ஒருவனுக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது அதைத் தனக்கே கிடைத்ததெனக் கொண்டாடும் என் சகஹிருதயர்களே, இவன் என் நண்பன் என நீங்கள் உற்சாகமாய்ச் சொல்லிக்கொள்ளும்படியானக் காரியங்களில் தொடர்ந்து ஈடுபடுவதொன்றே என் நன்றியைக் காட்டும் வழியென்கிறேன் நான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?!

Comments

விஜயம் தொடரட்டும்......
வாழ்த்துக்கள் நண்பா..
ஆவலுடன் இருந்தும்
பயணத்திலிருந்ததால் பார்க்க இயலவில்லை.மீண்டும் ஒளிபரப்பு செய்வார்களா?..

//தனியாகக் குறிப்பிட்டுச் சொல்ல முடிகிற நிலையில் இருக்கிறேன்//

சரியாகத்தான் எழுதப்பட்டுள்ளதா?
ஞாயிறு அன்று நிகழ்ச்சியில் நன்றாகவே பேசினீர்கள்... வாழ்த்துக்கள்...

அப்புறம் பாக்கறதுக்கு கொஞ்சம் ஒல்லியாக தெரிந்தீர்கள்... சுப்பு மெஸ்ஸுக்கும் அன்னபூர்னாக்கும் அடிக்கடி சென்று வரவும்...

தோழமையுடன்,
ஒவ்வாக்காசு.
புத்தகங்கள் வாங்குவதெற்கென ஸ்பென்சர் பிளாஸாவிற்கு நண்பர் ஞாயிறன்று அழைத்துச் சென்றுவிட்டார்.மணி ஒன்பதைத் தாண்டியதும் "நீயா நானா"பார்க்கும் அவசரத்தில் இருந்த நான் அவரை நிதானமாக பர்சேஸ் செய்யவிடாமல் அழைத்து வந்துவிட்டேன்.
நீங்க பேசி முடிக்குவரை கொஞ்சம் பதட்டமாகவே இருந்தீர்கள் அதே பதட்டம் என்னையும் தொத்திக்கொன்டது.

ரொம்ப பெருமையா இருக்குங்க நானும் உங்ககிட்ட ஒருமுறை தொலைபேசியிருக்கிறேன் என்பதை நினைக்கும்போது.
Belated Wishes Brother!!!! All the very best for ur bright future!!!
வாழ்த்துக்கள் செல்வேந்திரன்..

அந்த நிகழ்ச்சியில் உங்கள் கருத்துகளும் உங்கள் ஆளுமையும் அழகு..
Ken said…
வாழ்த்துகள் செல்வேந்திரன்

குட்டி சாத்தான்குளத்தான் :)
ஆர்வா said…
நிஜமான பதிவு... Cool
வாழ்த்துகள் செல்வேந்திரன்.

//இவன் என் நண்பன் என நீங்கள் உற்சாகமாய்ச் சொல்லிக்கொள்ளும்படியானக் காரியங்களில் தொடர்ந்து ஈடுபடுவதொன்றே என் நன்றியைக் காட்டும் வழியென்கிறேன் நான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?! //

அதையே வழிமொழிகிறோம் :)

அப்புறம், புது டெம்ப்ளேட் நல்லா இருக்கு ....
கலக்கறீங்க போலிருக்கே... நடத்துங்க
//இவன் என் நண்பன் என நீங்கள் உற்சாகமாய்ச் சொல்லிக்கொள்ளும்படியானக் காரியங்களில் தொடர்ந்து ஈடுபடுவதொன்றே என் நன்றியைக் காட்டும் வழியென்கிறேன் நான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?!//

அதே தான்!
வேறென்ன!
வாழ்த்துக்கள் செல்வேந்திரன்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
Excellent, Me too watched the show. U r awesome and the way you put your points were incredible. And I liked the way, how Gopi introduced you to the show ( ie. to us). Best wishes to all your dreams to come true.
Raj said…
ஆமென்!
நண்பர் நா.ரமேஷ்குமார் சமீபத்தில் அறிமுகப்படுத்தியதிலிருந்து தங்கள் பதிவைப் படிக்க ஆரம்பித்துள்ளேன். இந்தப் பதிவைப் பொறுத்தவரையில் முன் எப்போதோ பதிவிட்ட ஒன்றின் தொடர்ச்சியாகத் தெரிகிறது. எனக்கு விளங்கவில்லை. எனினும், அதிகம் பிழையில்லாத தமிழ், தெளிவான நடை, கூர்மையான சிந்தனைப்போக்கு ஆகியவை உங்கள் பதிவுகள் தெரிகிறது. வாழ்த்துக்கள். தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கிறேன்.
RaGhaV said…
ரொம்ப Feel-பன்ன வச்சுடீங்க செல்வா.. :-(

அருமையான பதிவு..

வலைபூவின் புதிய பரிமாணம் அட்டகாசம்.. :-))
ICANAVENUE said…
வாழ்த்துக்கள் செல்வேந்திரன்!You tube லிங்க் கொடுத்தால் நாங்களும் பார்த்து மகிழ்வோமே
Joe said…
வாழ்த்துக்கள் செல்வேந்திரன்!
//இவன் என் நண்பன் என நீங்கள் உற்சாகமாய்ச் சொல்லிக்கொள்ளும்படியானக் காரியங்களில் தொடர்ந்து ஈடுபடுவதொன்றே என் நன்றியைக் காட்டும் வழியென்கிறேன் நான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?!//

இப்போவே எல்லாத்துக்கும் என் வாழ்த்துகள பதிவு செஞ்சுக்குறேன் :)
surapathi said…
வாழ்த்துக்கள் செல்வேந்திரன் மற்றும்

புது ப்ளாக் டிசைன் நன்றாக உள்ளது ...........
selventhiran said…
பிரியமுடன் வசந்த்

சங்கணேசன்

ஒவ்வாக்காசு

நாடோடி இலக்கியன்

தமிழ்ப்ரியா

கண்ணா

முரளிகண்ணன்

கென்

கவிதைக்காதலன்

பாலகுமார்

கார்க்கி

வால் பையன்

அகநாழிகை

நானாக நான்

ராஜ்

ரவிப்ரகாஷ்

ராகவேந்திரன்

அப்துல்லா

ஐகேன்

ஜோ

ப்ரேம்

உங்கள் அன்பிற்கு நன்றி.

காண முடியாத நண்பர்களின் வசதிக்காக யூ ட்யூப் லிங்கினை இணைக்கிறேன்.
Thamiz Priyan said…
வாழ்த்துக்கள் செல்வா! நல்லா வந்திருக்கு!
Vidhoosh said…
வாழ்த்துக்கள் செல்வேந்திரன்..
Thamira said…
எனக்கு இன்னும் நன்றி மடல் வந்துசேரவில்லை அழகனே.!
திரு செல்வேந்திரன்,

வாழ்த்துக்கள் உங்கள் புகழ் உலகமெங்கும் ஒலி(ளி)க்கட்டும்..

எனது ப்ரார்த்தனைகள்.
Arun Nadesh said…
சுய சொறிதல்!!
அல்லது
சுய இன்பம்!!

//'பேரன்புத் திணறல்' எனும் நோயால் பீடிக்கப்பட்டு இருக்கிறேன். //

தவறு!! "புகழ் போதை தலைக்கேறுதல்" எனும் கொடிய நோயால் பீடிக்கப்பட்டு இருக்கிறீர்கள். லக்கி மற்றும் சாருவை தாக்கிய பதிவுகளும், இந்த பதிவும் உதாரணம்.
வாழ்த்துக்கள் செல்வேந்திரன்.

:)
வாழ்த்துகள் நண்பரே.
உங்கள் பயணம் தொடந்து சிரப்புறட்டும்
ம்.. நடக்கட்டும்,, நடக்கட்டும்ம்....
வாழ்த்துக்கள் செல்வேந்திரன். tubetamilல பார்த்தேன். ;)
வாழ்த்துக்கள் செல்வேந்திரன்..
anujanya said…
வாழ்த்துகள் செல்வா.

என் மனைவி எப்போதுமே 'நீயா நானா' என்பாள். நான் 'நீதான்' என்று ஒதுங்கி விடுவது வழக்கம். போன ஞாயிறு இரவு ஒன்பதரையிலிருந்து ஒரே பரபரப்பு. ஏதோ நானே வருவது போல் ஒரே அலட்டல். முதலில் கொஞ்சம் பதட்டமாக இருந்தது போல இருந்தீர்கள் இல்லையா. எனக்கும் அப்படியே. சினேகன் நீங்க பேசினதுக்கு கை தட்டினதும் தான் சகஜமாச்சு. அப்புறம் நீங்க பின்னிட்டீங்க செல்வா! காலரை தூக்கி கொண்ட என்னைப் பார்த்து, 'உங்க நண்பர் தானே. சும்மா ப்ளாக், ஆர்கூட், ஃ பேஸ்புக் னு நேரத்த வீணாக்காமல், இந்த மாதிரி டிவி ஷோல வரப் பாருங்க. வெளிய சொல்லிக்கற மாதிரியாவது இருக்கும். நீங்களும் உங்க புரியாத கவிதைகளும்' என்று வழமையான அர்ச்சனை துவங்கியது.

உங்களை நொந்துகொண்டே திரும்பவும் தமிழ்மணம் பார்க்க ஆரம்பித்தேன்.

அனுஜன்யா
பாபு said…
//'அன்பானவர்களிடம் அடங்கித் தோற்றுவிடுவதே நன்று'. //

well said
பாபு said…
பத்து மணி வரையில் எல்லாம் முழித்திருக்கவே மாட்டேன், அன்று நிகழ்ச்சி முழுதும் பார்த்தேன், உங்களுடைய அந்த திருவிழா சமயத்தில் ஒரு சிறுமிக்கு நேர்ந்த அந்த அவலம் (தாயோளி -சரியா?) பற்றிய பதிவை படித்தவுடனே ,கண்டிப்பாக ஒரு சமூக அக்கறை உள்ளவரின் பதிவு என்று நினைத்திருந்தேன் ,அதன் பிறகுதான் உங்களை
பற்றிய விவரங்கள் தெரிந்தன.வாழ்த்துக்கள்
Karthikeyan G said…
Selventhiran, Congrats a lot and wishing u many more heights. :)

Can some one help me find out When the program will be re-telecasted?
வாழ்த்துக்கள் செல்வேந்திரன்!!

நியாஸ்
http://niyazpaarvai.blogspot.com/
இப்பத்தான் நீங்க கொடுத்த லிங்க் மூலமா பார்த்தேன்

வாழ்த்துக்கள் செல்வேந்திரன்.
Niru said…
நீயா நானா-வில் கொஞ்சம் தயக்கத்துடன் பேசினாலும் சில நல்ல கருத்துக்களை பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்.

பின்னூட்டத்தில் ஒரே ஒருவர் குறிப்பிட்டதுள்ளது போல் 'பேரன்பு திணறல்' 'புகழ் போதை' ஆக மாறிவிடாமல் பார்த்து கொள்வது உங்களிடம் தான் உள்ளது.

தங்களுக்கு கிடைத்த இந்த புகழை நீங்கள் சாதரணமாக ஏற்றுக்கொள்வதிலிருக்கிறது உங்களுடைய ஆளுமை.

தவறினால், அப்புறம், தன்னைவிட பெரிய எழுத்தாளன் எவனுமில்லை என்ற தொனியில் கூறும் சாருவிற்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடக்கூடும். ஏனெனில், விஜய் தொலைக்காட்சியில் தோன்றி பேசியதோடு உங்களுடைய கருத்துக்கள் போய்விடப்போவது கிடையாது.

நீங்கள் இயல்பாக இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

மீண்டும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் அண்ணா..
உங்களின் நிகழ்ச்சியை அன்றைய திடீர் தவிர்க்கமுடியாத பயணத்தால் காணமுடியவில்லை.. எனினும் அதனை உங்களின் லிங்க் மூலம் யூடியூபில் கண்டு ரசித்தேன்..
உங்களின் கருத்துக்களும் அருமை..
இது பதிவுலகிற்கு கிடைத்த பெருமை..
அந்த உலகில் நானும் சிறு துரும்பாய் ஒட்டிக்கொண்டு இருப்பதில் பெருமையும் கூட..
மீண்டும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா..
Anonymous said…
என் வாழ்த்துக்களும் நண்பா!

அன்புடன்
ஷீ-நிசி
//இவன் என் நண்பன் என நீங்கள் உற்சாகமாய்ச் சொல்லிக்கொள்ளும்படியானக் காரியங்களில் தொடர்ந்து ஈடுபடுவதொன்றே//

ஆமா ஆமா :)
இத இத இதத்தான் நாங்க எதிர்பாக்கறோம்.