எதை நீங்கள் நாடகத்தனம் என்கிறீர்கள்?
எதை நீங்கள் நாடகத்தனம் என்கிறீர்கள்?
நாகரீகம் (அ) கெளரவம் போன்ற காரணங்களுக்காகச் செய்யும் இயல்பை மீறிய செயல்களையும், வாழ்வியல் தேவைகளுக்கான வேடிக்கை மிகுந்த பிரயத்தனங்களையும் நாடகத்தனமென்று நான் கருதிக்கொள்கிறேன்.
அன்றாட வாழ்வில் நாடகத்தனம் இருக்கிறதா?
ஆம்; சர்வ நிச்சயமாக இருக்கிறது.
எங்கெல்லாம் இருக்கிறது?
ஒன்றிற்கு மேற்பட்ட மனிதர்கள் சேர்ந்து வாழ தலைப்பட்ட எல்லா இடங்களிலும்.
உதாரணங்கள்
இந்த உரையாடல் அல்லது இதன் நோக்கம்கூட.
நீங்கள் நாடகத்தனத்தோடுதான் உரையாடிக்கொண்டிருக்கிறீர்களா?
ஆம்; கொஞ்சம் சிக்கலாக யோசித்துப்பார்த்தால் பூமியின் சகலபாகங்களிலும் நாடகத்தன்மை வழிந்து கொண்டிருக்கிறது.
எதை நீங்கள் அதிகபட்ச நாடகமென்பீர்கள்?
கடவுள் பக்தி
அதற்கடுத்து?
காதல்
காதலில் நாடகத்தனமா?
ஆம்; அது காதலைச் சொல்கையில் துவங்கி விடுகிறது.
நாடகத்தனம் தேவைதானா ஆம் எனில் அதன் அளவுகோலாக தாங்கள் நினைப்பது?
நாடகத்தனம் ஒரு சமூக உயவுப்பொருள். அளவுகோல்: 'புரை தீர்ந்த நன்மை பயக்குமெனில்'
குடும்ப வரலாறு அத்தனை முக்கியமானதா?
எல்லா வரலாறும் முக்கியமானது. குடும்ப வரலாற்றினையாவது தெரிந்துகொள்வது குறைந்தபட்ச தகுதி.
தமிழ் வாழ்வியலில் போலித்தனங்கள் மிகுந்திருக்க காரணங்கள் இருக்கிறதா?
நாடகக்காரர்கள் சினிமாக்காரர்களாக அவதாரம் எடுத்தார்கள். பின் அவர்களே அரசியல் தலைவர்களானார்கள். அதனால்தான் சினிமாவிலும், அரசியல் மேடைகளிலும் மிகை உணர்ச்சி நாடகங்கள் நிகழ்ந்தேறின. தமிழர்களின் வாழ்வில் சினிமாவும் அரசியலும் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தனித்து சொல்ல வேண்டியதில்லை.
மலேசியாவில் இருக்கும் ராஜஸ்ரீயோடு சாட்டில் நிகழ்த்திய உரையாடலை எழுதுவதற்கு எதுமற்ற காரணத்தினால் பதிவாக்கி இருக்கிறேன். அசுவாரஸ்யமில்லையென்றால் சொல்லுங்கள். மீதத்தையும் பதிவிடுகிறேன்.

Comments
உண்மை,இது மாதிரியே நானும் யோசித்ததுண்டு. ஆனால் உங்கள் அளவிற்கு வார்த்தைகள் வரமாட்டேங்குதே.
குடும்ப வரலாறு நம் மூதாதையர்கள் பற்றிய அடிப்படை அறிவு அது போன்றே நாம் பிறந்து வாழ்ந்து வரும் இடங்கள் பற்றியும் கண்டிப்பாக தெரிந்துவைத்திருக்கவேண்டும் !
:))
இது உண்மை என தோன்றுகின்றது அல்லது உண்மையாகவும் இருக்கலாம்
இன்று என் கம்பனியில் புதிதாக ஒருப் பெண் பணிக்கு அமர்த்தப்பட்டாள் அவளின் இருப்பு நிரைய பேரிடம் புதிதான தோற்றத்தை புனைய வைத்தது.
//
செல்வா, சினிமாக்காரன் போட்டு கொடுத்த Templateல் தான் நம் மக்கள் இன்னும் காதலித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னாயே. அதை பற்றி நான் இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். சரி தான் என்றே தோன்றுகிறது :-)))))))))))))
இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா....(பழைய சினிமாப் பாட்டு)
- kavi.
மொதல்ல படிக்க ஆர்மிச்சவுடனே ஏதோ chair அப்படினு நெனைச்சிடேன்.
(டி.வி. நிகழ்ச்சிகள்ல ரெண்டு பெருசுங்க நாற்காலிங்களில ஒக்காந்துக்கிட்டு சீரியஸாப் பேசிகிட்டிருக்கிற நிகழ்ச்சிக்கு chair அப்படினு லதா பேரு வெச்சிருக்கா.)
கடவுள் பக்தியை எப்படி அதிகபட்ச நாடகமென்கிறீர்கள்?
சாட்டில் அலசப்பட்டது என்பதை இங்கு சொல்லியிருக்கவேண்டிய அவசியம் இல்லை..அந்த வார்த்தைகள் இந்தப் பதிவின் ஆழத்தை கூட்டாத பட்சத்தில்.
அதைவிட முக்கியமாய் அவரின் பெயர்..
என்னதான் நீங்கள் அவரிடம் பர்மிஷன் வாங்கியிருப்பீர்களானாலும்...
//உண்மை,இது மாதிரியே நானும் யோசித்ததுண்டு. ஆனால் உங்கள் அளவிற்கு வார்த்தைகள் வரமாட்டேங்குதே//
அதுக்கு தானே நான் ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டிருக்கேன்.
\\எதை நீங்கள் அதிகபட்ச நாடகமென்பீர்கள்?
கடவுள் பக்தி
அதற்கடுத்து?
காதல்
காதலில் நாடகத்தனமா?
ஆம்; அது காதலைச் சொல்கையில் துவங்கி விடுகிறது\\
உண்மை. ஒருவகையில் பின்னூட்டங்கள் கூட நாடத்தனம் கொண்டவை தானோ. தலையைப் பிய்த்துக்கொள்ள வைத்துவிட்டீர்கள். வாழ்க வளமுடன்.
சுந்தர்
ருவாண்டா
கிழ்க்கு ஆப்பிரிக்கா
சாட்டில் அலசப்பட்டது என்பதை இங்கு சொல்லியிருக்கவேண்டிய அவசியம் இல்லை..அந்த வார்த்தைகள் இந்தப் பதிவின் ஆழத்தை கூட்டாத பட்சத்தில்.
அதைவிட முக்கியமாய் அவரின் பெயர்..
என்னதான் நீங்கள் அவரிடம் பர்மிஷன் வாங்கியிருப்பீர்களானாலும்...//
this is my opinion also....
தமிழில் எத்தனை அர்த்தங்கள்,
எத்தனை விளக்கங்கள்..
வாழ்க்கையில் எத்தனை நிகழ்வுகள்
எத்தனை நடிப்புகள்...
மனிதன் இருக்கும் வரை தொடருமே..
நாடகம் அவசியம்...வாழ்க்கைக்கும் தேவை இருக்கத்தான் செய்கிறது...
தண்ணியடிசவனால் தான் அப்பட்டமாக வேட்டிக்குள் புதிதாய் ஒன்றுமில்லை என்று தனையறிவித்தல் சாத்தியம்.
மற்றவர்கள் அவர்களை சற்றே தான் நெருங்கமுடியும்
*****************************
கண்டேன்... என் பரம்பரை வரைபடத்தை ஓராண்டாக நான் தயார் செய்துவரும் வேளையில்
உங்கள் பேச்சை கேட்டதில் கர்வமெனக்கு...உண்மையன 'வாழ்த்துகள்'
தமிழர்களின் வாழ்வில் சினிமாவின் தாக்கம் இருப்பது உண்மைதான். ஆனால், பெரும்பாலோர் நினைப்பது போன்று அது ஒரு முழுமையான தாக்கம் அல்ல. அப்படி முழுமையான தாக்கம் எனில், அரசியலுக்கு வந்த சினிமாக்காரர்கள் எல்லாருமே வெற்றி பெற்று தலைவர்களாகியிருக்க வேண்டும். அவ்வாறு வெற்றி பெற்றவர்கள் மிகச் சிலரே. அவர்கள் யாரெல்லாம் என்று தனித்து சொல்ல வேண்டியதில்லை. அதேபோல் தோல்வியுற்றவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அவற்றையும் உங்களுக்கு தனித்து சொல்ல வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றவர்களின் பின்னணி வேண்டுமானால், நாடகம் - சினிமாவாக இருக்கலாம். ஆனால், அவர்களை நிலை நிறுத்தியது அவர்களது செயல்பாடுகள் மட்டுமே. எதையும் மேலோட்டமாக பார்க்கக் கூடாது என்றே கருதுகிறேன்.
சிலவற்றை தவிர்க்கவும் முடியாது.
உங்கள் கருத்துடன் நான் ஒத்து போகிறேன்.