அறிவிப்பு

நமது அண்டை நாடான இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மீது வெளிநாடுகளில் தாக்குதல்கள் நிகழ்த்தப்படுவது எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. என்னதான் இந்தியா பிற நாடுகளின் உள்விவகாரங்களில் மூக்கையோ, நாக்கையோ நுழைக்காது என்றாலும் நாம் அப்படி இருந்துவிட முடியுமா?! குறைந்தபட்சம் ரூம் போட்டு அழலாம் என்று போனால் சிங்கிள் 1200/- டபுள் 2500/- என்கிறார்கள். சிக்கன நடவடிக்கையைக் கருத்தில் கொண்டு எங்கேயாவது குளக்கரையில் உட்கார்ந்து கதறலாம் என்று முடிவு செய்து ஊர் முழுக்க திரிந்தேன். எல்லா குளங்களையும் பிளாட் போட்டு விட்டார்கள்.

அஞ்சுகிராமம், பூதப்பாண்டி, வட்டக்கோட்டை பகுதிகளில் கொஞ்சம் தாமரை பூத்த குளங்கள் இருப்பதால் நாளை (14-06-09) மதியம் வரை குளக்கரைகளிலும், மாலை கன்னியாகுமரி கடற்கரையிலும் நின்று கதறி அழுவதாக உத்தேசம். நாளைய தினம் எதையும் கிழித்தோ, நெம்பியோ, புரட்டியோ போட வேண்டிய கட்டாயம் இல்லாத நாஞ்சில் நாட்டு பதிவர்கள் எவரேனும் வந்தால் 'சிறப்பு கூட்டுக் கதறலு'க்கு ஏற்பாடு செய்யலாம்.நன்றி. வணக்கம்.

Comments

Karthik said…
//நமது அண்டை நாடான இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மீது

???
நல்ல பகடி "நமது அண்டை நாடான இந்தியா
//அண்டை நாடு//
ம்.. அப்படித்தான் ஆகிடும் போலிருக்கு...
//நமது அண்டை நாடான இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மீது //

என்ன இது? சொற்பிழையா?
selventhiran said…
"அண்டை நாடு இந்தியா" எனும் பதம் ஆதவன் தீட்சண்யாவின் சமீபத்திய கதையொன்றில் இருந்து கையாடல் செய்யப்பட்டது. ஸோ, ஆல் கிரெடிட் கோஸ் டூ ஆதவன் தீட்சண்யா.
Suresh said…
:-) ஹா ஹா
செல்வா,

உங்களுக்கான எனது முதல் பதிவு. தொடர்ந்து உங்களை வாசித்து வருகிறேன். எதிலும் வித்தியாசம், இளைஞர்களுக்கேயான இறுமாப்பு, வாலிபத்துக்கேற்ற வக்கணைகள், இளமையிலும் சற்று அறிவு முதிர்ச்சி என பல உங்களிடம் கவருகிறது.

வெளியே இருந்தாலும் எல்லோரையும் சமமாக நடத்தும் ஒரு நாட்டில் பிரச்சனை இன்றி இருப்பதால், வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலிருந்தே உங்களின் கருத்தினை ஏற்று 'தனிக் கதறல்' செய்தேன்.

பிரபாகர்.
Unknown said…
அடங்கொன்னியா .....!!! இப்புடியும் பிட்ட போடுராங்கையா....!!!!!

நெம்ப சிறப்பா இருக்குதுங்கோவ் ....!!!!!!!!!
அந்நிய நாடாகவும் மாறிக்கொண்டிருக்கிறது எனக்கு....

இந்த ஆங்கில ஊடகங்கள் ஊழையிட்டுக்கொண்டேயிருக்கின்றன இந்தத் தாக்குதல்கள் பற்றி.
ம்ம்ம்...
அது சரி :)
வெளி said…
selva,you are rocking.keep going
//
நமது அண்டை நாடான இந்தியாவைச் சேர்ந்தவர்கள்
//

இந்த வார்த்தைகளுக்காகவே உங்களுக்கு பத்து ஓட்டு போடலாம்...ஆனால், இருப்பது ஒரே ஒரு தமிழ்மண ஓட்டு...அதை இப்பொழுது...
நண்பரே..
அவர்கள் ஒன்றும் நம் நாட்டு நலனுக்காக செல்லவில்லை.. அதற்காக அவர்கள் அடி வாங்குவது தவறென்றும் சொல்ல இயலாது..
நம் நாட்டிலேயே , மகாராஷ்டிராவில் அண்ணிய மாநிலத்தவரை வெளியேறச்சொல்லி போராட்டம், கர்நாடகாவில் தமிழர் நிலை தாங்கள் அறியாததா? பிறகு எப்படி பிற நாட்டவரை நாம்??????????
Unknown said…
விழா நாயகரை விட விழாவுக்கு வந்தவர் அசத்தலாக போஸ் கொடுக்கிறார்.
selventhiran said…
கார்த்திக்
நேசமித்திரன்
நாடோடி இலக்கியன்
சென்ஷி
தேவன்மயம்
சுரேஷ்
பிரபாகர்
லவ்டேல் மேடி
அருணா
ஊர்சுற்றி
பட்டாம்பூச்சி
மார்க்ஸிம்
நந்தா
அதுசரி
குறையொன்றுமில்லை
வேலாயுதம்
வருகைக்கு நன்றிகள் பல.