என்னுரை
அனைவருக்கும் வணக்கம்.
எழுத்துலகில் தவழும் குழந்தையான என்னை இங்கே பேச அழைத்திருப்பது பாஸ்கர் சக்தி என் மீது கொண்டிருக்கும் அன்பின் உச்சகட்ட வெளிப்பாடாகவேக் கொள்கிறேன். முன்மேடை சம்பிரதாயங்கள் நீண்டபடி இருக்க பின்னிருக்கையில் அமர்ந்து மாணவர் கணேசன் எழுதிய புத்தகத்தைப் படித்து முடித்தேன். பத்திரிகைகளில் வந்த அறிவியல் துணுக்குகளைத் தானே தொகுத்திருக்கிறான் என்று அலட்சியத்தோடு அணுகிய நான் ஆச்சர்யப்பட்டுப்போனேன். அந்த ஆச்சர்யங்களை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.
ஜெலட்டின் என்பது தூய கொழுப்பாம். ஆம், கொழுப்பு கொஞ்சம் தூக்கலாக இருக்கின்ற இடங்களில்தானே இன்றைக்கு ஜெலட்டின்கள் வெடித்துக்கொண்டிருக்கின்றன. சுத்தமான தங்கத்தை கையால் பிசையலாம், சுப்பிரமணியசிவா பிறந்த ஊர் வத்தலக்குண்டு, நமது தேசிய பழம் மாம்பழம் ஆகிய தகவல்கள் எனக்கு நிச்சயம் புதுசு. இந்தப் புத்தகத்திற்குப் பின் இருக்கிற மாணவன் கணேசனின் உழைப்பு சாமான்யமானதல்ல என்பது புத்தகம் முழுவதும் நிரம்பி இருக்கிற ஆச்சர்யங்களில் தெரியவருகிறது. அவரைப் போலவே வளர்ந்து வரும் சக எழுத்தாளனாக எனது பேனாவை தம்பி கணேசனுக்கு பரிசளிக்கிறேன். இந்தப் பேனா என் எழுத்துக்களுக்காக எனக்குக் கிடைத்த முதல் பரிசு. நேற்று என் விடுதியறை ஏகிய நண்பனொருவன் பரிசளித்துச் சென்ற பேனா இது.
விழா துவங்குகையில் திடீரென்று மின்சாரம் தடைபட்டது. என் பக்கத்தில் இருந்தவரிடம் சொன்னேன் "சார் தலையக் குனிஞ்சுக்கங்க... மேடையில் பூரா வாத்திமாரா இருக்காங்க... பயலுக கல்லை, கில்லை தூக்கி ஏறிஞ்சுட போறானுங்க. இருட்டுல எவன் பண்ணினான்னும் தெரியாது." அதைச் சொன்னதற்காக வெட்கப்படுகிறேன். ஆசிரியர்கள் பரிசு வாங்கும்போது இத்தனைக் கொண்டாட்டமாய் ஆரவாரம் செய்கிற மாணவர்களை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. தவிர, ஓர் இலக்கியக் கூட்டத்தில் இத்தனைச் சிறார்கள் இருப்பதும் வேறெங்கும் காணக்கிடைக்காதது.
முத்தாலம்மன் பள்ளி. என்னய்யா பள்ளிக்கூடம் இது? பத்தாம் வகுப்பு துவங்கிய முதல் வருடத்திலேயே நூறு சதவீத தேர்ச்சி அதிலும் எட்டு மாணவர்கள் 450க்கு மேல். கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கு தங்க மோதிரம் பரிசு. வெளியூர் பள்ளிக்கூடங்களில் படித்து நல்ல மார்க் பெற்ற மாணவர்களுக்கும் பரிசு. நாளொன்றுக்கு குறைந்தது பத்து பள்ளிக்கூடங்களுக்காவது பணிநிமித்தம் போகிறேன். இத்தனை ஜனநாயகமான பள்ளியை வேறெங்கும் பார்த்ததில்லை. கல்வி முற்றிலும் வணிகமயமாகிப் போன சூழலில், வகுப்பில் ஒரு மாணவன் படித்த விஷயங்களைக் குறிப்பெடுக்கிறான். அவனைப் பாராட்டுகிற ஆசிரியர் தன் முயற்சியில் அதைப் புத்தகமாய்க் கொண்டுவந்து பெரும்சபைதனில் அதை வெளியிட்டு, பாராட்டி, பரிசளித்து.... நானெல்லாம் கவிதை எழுதுவது குற்றமென்று கருதப்படுகிற கல்விச் சுழலிலிருந்து வந்தவன். ஒருவேளை முத்தாலம்மன் பள்ளியில் படித்திருந்தால் என்னாலும் ஒரு புத்தகம் போட்டிருக்க முடியுமோ என்னவோ?!
பாஸ்கர்சக்தியைப் பற்றிப் பேசும் அளவிற்கு நான் இலக்கியவாதியும் அல்ல. இலக்கிய வாசகனும் அல்ல. என்னளவில்,
பாஸ்கர் என்றால் அன்பு
பாஸ்கர் என்றால் கண்ணியம்
பாஸ்கர் என்றால் உற்சாகம்
பாஸ்கர் என்றால் ஊக்கம்
பாஸ்கர் என்றால் நகைச்சுவை
இந்தத் தருணத்தில் பாஸ்கர் சக்தி எனும் தலைப்பில் ஜெயமோகன் எழுதிய கட்டுரையொன்றின் பத்தியை இங்கே நினைவு கூர்கிறேன்.
"பாஸ்கர் சக்தி வெண்ணிலா கபடிக்குழுவில்தான் வெளிப்பட்டிருக்கிறார். அவரது எழுத்துக்களில் உள்ள சிரிப்பை நகைச்சுவை அங்கதம் என்றெல்லாம் சொல்லமுடியாது. அது ஒருவகை குசும்பு. தேனி வட்டார ஆட்களுக்கு அந்த ‘ங்ய‘ உச்சரிப்பின் மூலம் அந்தக்குசும்பை உருவாக்க முடியும். பாலாவிடம் அது உண்டு. இயக்குநர் சிங்கம்புலி அதில் ஒரு மாஸ்டர். ஏன்,நான்கடவுளின் ‘எலி‘ செந்தில் கூட அபாரமான குசும்பு உள்ளவன்தான்.
பலகாட்சிகளில் அந்த ‘நாட்டுக்‘ குசும்பு வெளிப்படுவதை அரங்கில் ரசிகர்கள் சிரித்து மகிழ்வதைக் கண்டேன். வசனம் என்னும்போது அது வசனம் மட்டுமல்ல, அந்தச்சந்தர்ப்பத்தை எழுதியமைத்திருக்கும் விதம்தான். குறிப்பாக அந்த பரோட்டா வீரரின் மனைவியும் அவரும் பேசிக்கொள்ளும் இடங்களைச் சொல்லலாம்.
எழுத்தாளராக பாஸ்கர் சக்தி தமிழ் சினிமாவுக்கு பெரும் பங்களிப்பை ஆற்றமுடியும். வாழ்த்துக்கள்."
எழுத்தின் சகல பரிமாணங்களிலும் பாஸ்கர் பல வெற்றிகளைக் குவிப்பார் என நானும் வாழ்த்தி அமைகிறேன். வணக்கம்.
தேனி இலக்கிய விழாவில் நான் பேசியவற்றில் என் ஞாபக அறைகளிலிருந்து சேகரம் செய்து எழுதி இருக்கிறேன். இதெல்லாம் எங்களுக்கு ரொம்ப அவசியமா என்று கேட்கக்கூடாது. நானெல்லாம் எழுத்தாளனாக்கும் என்ன எழுதினாலும் நீங்க படிச்சுத்தானே ஆகணும்?!
Comments
vaazththukaL sagaa
இல்லையா பின்னே? எழுத்தாளர், நாளைய திரை நட்சத்ரம், என்னும் எவ்வளோ இருக்கு..
வாழ்த்துக்கள் பாஸ்கர் சக்தி. வாழ்த்துகள் எழுத்தாளர்..
ஆனா கேரளா பக்கம் மட்டும் போயிராதிங்க, கட்அவுட் வச்சிருவானுங்க!
ஆனா கேரளா பக்கம் மட்டும் போயிராதிங்க, கட்அவுட் வச்சிருவானுங்க!//
ரிப்பீட்டே.........!
:)
அது சரி :)
வாழ்த்துக்கள்!!!
ஒண்ணியும் புரியலை.. சை.! (முதல் தடவையா வார்றதுக்கு வாய்ப்பு கிடைச்சு அத விட்டுட்டா அப்புறம் நா என்ன எழுத்தாளன்.? ஹிஹி)
மயில், கலாய்க்கறீங்களா?!
அடடே வாங்க மார்க்ஸிம் கார்க்கி, எப்படி இருக்கிறார் ஆர். செல்வேந்திரன்?! அவருடனான உறவு இழை அறுந்து போய் இருக்கிறது. ரொம்ப கேட்டேன் என்று சொல்லுங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுங்கள்.
நண்பா பிரேம், பெங்களூருக்கு வருகிறேன். ரூம் போட்டு கொண்டாடுவோம்.
வாங்க லவ்டேல்
வாங்க தண்டோரண்ணே
தங்கமணி, பதிவு போடறதுக்கு எழுதி வச்சதை பின்னூட்டமா உபயோகப்படுத்தக் கூடாது.
வால், ஓரே நேரத்துல ரெண்டு பேரை குத்துறதை உம்மகிட்டதாம்யா படிக்கணும்.
வாங்க கோவியார்
நன்றி அருணா
நன்றி பட்டாம்பூச்சி
ஆமுகியண்ணே, பத்து வருஷத்துக்கு ஒருக்கா நம்ம கடைபக்கத்துக்கு வந்தா இப்படித்தான்.
தமிழ்நதி, 'சார்லி ஏஞ்சல்ஸ்' பாத்தீட்டிங்களா?!
அணானி, இதுவரை மூன்று புத்தகங்கள் 1) சத்திய சோதனை 2) அக்னி சிறகுகள் 3) என் பெயர் எஸ்கோபர்
மெய்யாலுமே, உங்க மேல அன்பு அதிகமாகி உரிமையோட கொஞ்சம் கூடுதலா எழுதினது உண்மைதான்! பதிலுக்கு இப்படி அறிவுரை சொன்ன கையோட என்னவோ செரமப்பட்டு சொல்லிருக்காப்பிலயே! அதுக்கொரு பதில சொல்லுவமேன்னு தோனுச்சா? சரி ரைட்டு, விடுங்க! இத பதிவாவே போட்டுர்றேன்
இவற்றை எங்கே வாங்கலாம் ? சுமாராக என்னவிலை இருக்கும் ?