பதிவுலக கிசுகிசுக்கள்

சமீப காலமாக ஆசிரம நடமாட்டம் அதிகம் இருப்பதால், விரைவில் ஆசிரமத்தின் அதிகாரப்பூர்வ இதழில் பச்சை, பச்சையாய் பேசும் தொடரை 'கும்பமுனி ரசிகர்' எழுதலாம் என அதிகார வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிகின்றன.

***

நேரில் 'ஒங்க காலடி மண் எனக்கு பிரசாதம்' என பாமாலைப் பாடி பூமாலை சூடும் 'ஐஸ் திலகம்' மறைமுகமாக 'இவர் எப்பிடியாபட்டவரென' தாய்க்குலங்களிடம் விசாரணையைப் போட ஏகவருத்தத்தில் இருக்கிறாராம் 'ஏகபத்தினி விரதர்'.

***

யுகப்புரட்சியாளர்கள் சந்திப்பு, நெம்புகோலர்கள் கூட்டம் என தவறாமல் எண்ட்ரி கொடுக்கும் ஹீரோவுக்கு ஆபிஸில் ஆப்பு காத்திருக்கிறதாம். லீவு என்று சிட்டையை நீட்டினால் கட்டையைக் கொடுக்க உத்தேசமாம்.

***

நவீன இலக்கிய தாத்தா ஒருநாள் 'ஐம்பது கட்டுரைகளுக்கு மேல படிச்சிட்டேன். ஒண்ணுகூட ரசிக்கலை' எனச் சொல்ல 'ரசிக்கலன்னா ஏனய்யா ஐம்பது கட்டுரைகள். ஒன்றிரண்டோடு நிப்பாட்ட வேண்டியதுதானே என அந்த 'முந்திரிக்கொட்டை பதிவர்' சொல்ல...அதன்பிறகுதான் முத்துக்கள், குத்துக்கள் என கும்மாங்குத்து பதிவுகள் போட ஆரம்பித்தாராம் அந்த 'ஞான-ரிவர்'.

***


'இவர்தான் உங்க ஹீரோ' தொடரை வெறித்தனமாய்ப் படித்து முறுக்கேறிப் போயிருக்கும் பதிவர் 'இவர்தான் உங்க பதிவர்' எனும் பரபரப்புத் தொடரை எழுதப்போகிறாராம். நெம்ப பரபரப்பைக் கிளப்பும் என்கிறார்கள் சைபர் தேசத்தவர்கள்.

***

அச்சில் ஏறும் கதைகளின் கருவும் உருவும்தாம் நம்ம 'சட்ட திட்டமான' பதிவருக்கு ஏக்கத்தையும் தேக்கத்தையும் கொடுத்திருக்கிறதாம். ஆவி, பாவியென பதிவர்கள் பிஸியாக இருக்கும் சமயத்தில் பரபரப்பு பதிவுகள் போட்டு முதலிடத்தைப் பிடிக்கும் திட்டமாம். வட்டிக்கு வாங்கி மடிப்பொட்டி வாங்கி இருக்கிறார்.

***
நேரில் 'பிரபுக்களவை' ஆசாமி போல தோற்றமளிக்கும் டிப்-டாப் ஆசாமி அவர். ஆனால், எந்த நட்பையும் தெருமுனையோடு நிறுத்தி விடுவார். காரணம் வேறொன்றுமில்லை. இவரது குடியிருப்பு கற்காலத்தை நினைவூட்டுவதாக இருப்பதால்தானாம்.

***
பரமேஸ்வரனின் கடாட்சம் பெற்ற குருக்களின் கதை 'ஓ.ஹென்றிக்கு' இணையானது என ஓயாமல் சொல்லி வரும் 'தெக்கத்தி ஆளு' விரைவில் உள்ளூர் தொலைக்காட்சி தொகுப்பாளிகள், விளம்பர மாடல்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆவண படமாக்க போகிறாராம். ஜில்பான்ஸியெல்லாம் இல்லாத கண்ணீர் காவியமாக இருக்கும் என்கிறார்கள் மாம்பழ ஊர்க்காரர்கள்.

***
'எப்ப பாத்தாலும் பொட்டிய கட்டிக்கிட்டு அழறீங்களே' என ஏகவசனம் பேசும் தன் சரிபாதிக்கும் ஒரு கடையைத் துவக்கிவைத்து தப்பிக்க நாள் குறித்திருத்திருக்கிறாராம் ஜோடியாய்த் திரியும் 'கேடி' பதிவர்.

***
மாய்ந்து மாய்ந்து வலையை அலங்கரித்த தன் பெயரை எங்கேயும் குறிப்பிடாததால் வடக்குப் பக்கம் கரை ஓதுங்கியவர் கடும் கோபத்தில் இருக்கிறாராம். விரைவில் வீட்டுக்கு அழைந்து விருந்து வைத்தாலும் ஆச்சர்யமில்லை.

Comments

Vaa.Manikandan said…
காசுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லாத பதிவர் ஒருத்தர் பின்னூட்டம் போடவில்லை என்றால் கிசுகிசு எழுதும் பதிவரிடம் சொல்லி உங்களின் பெயரையும் பட்டியலில் இணைத்துவிடச் சொல்வேன் என்று 'புள்ள பூச்சி' பதிவர்களை' மிரட்டுகிறாராம்.
Anonymous said…
செல்வா... எல்லா சாலைகளும் ரோமுக்கு.. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் உங்களபத்தி இதனை கிசுகிசுவா?
/
மயில் said...

செல்வா... எல்லா சாலைகளும் ரோமுக்கு.. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் உங்களபத்தி இதனை கிசுகிசுவா?
/

ஓ.ஓக்கே
என்னடா ஒன்னுமே புரியலையேன்னு நினைச்சேன். இப்பதான் புரியுது!
:)))
ஒன்னுமே பிரியல..
ஒன்றிரண்டு மட்டுமே யாரை பற்றியது என புரிந்தது.
மற்றவை சிற்றறிவுக்கு எட்டவில்லை (ஏணி வைத்தும் கூடத்தான்...ஹிஹிஹி)
இருப்பினும் எழுதிய விதம் சில இடங்களில் சிரிப்பையும் பல இடங்களில் சுவாரசியத்தையும் கூட்டியது :)
Thamira said…
தனது பெயர் 'my blog list' ல் இல்லாததால் கடும் கோபத்திலிருக்கிறாராம் இங்கே அடிக்கடி வரும் ஒரு பதிவர்.
Thamira said…
கடையில் கல் விடவும் அவரிடம் திட்டமிருப்பதாகவும் கேள்வி.
ஒன்னுமே புரியல!
ஒத்துக்கிறேன் நான் இன்னும் குழந்தை தான்!
Unknown said…
ஸ்ஸ்ஸப்பப்பப்பா........!! இப்பவே கண்ண கட்டுதே..........!!!!!


எத்தன நாளா இந்தத் திட்டம்......???
என்ன தம்பி...!
இப்படி ஆரம்பிச்சுட்டீங்க!
Kumky said…
நாக்கு தள்ளுது...சாரி நாக்கு தெளீது.
விகடனல வர்ர 'இத படிக்காதீங்க' மாதிரி நீங்களுமா!!
Unknown said…
//.. கார்க்கி said...

ஒன்னுமே பிரியல.. //

இங்கயும் அதே கதைதான்..

//.. வால்பையன் said...

ஒன்னுமே புரியல! ..//

//.. கும்க்கி said...

நாக்கு தள்ளுது.. //

கூட்டணிக்கு நிறைய தல இருக்குது..
வெளி said…
its intersting.but small disappointment.my email id [stalin_lenin79@yahoo.com]
Unknown said…
தன் பெயர் எப்படியாவது கிசுகிசுவில்
வர வேண்டும் என்று ஒரு சூரிய பதிவர்
“ரூம்” போட்டு புட்டி பெட்டிகளுடன்
காத்திருக்கிறேன் என்று தூது விடுகிறராம்.

ஆனால் அவ்விடத்தில் “கேப்பிடேஷன் பீஸ்” கணக்கில் “அன்பளிப்பு” கேட்பதால்
கிர்ர்ர் அடித்து “சூரிய பதிவர்” ICU வில் இருக்கிறராம்.
Saminathan said…
//டிஸ்கி: போனில் உறும வேண்டாம் //

அதனால தான் பின்னூட்டத்தில் கேக்கறேன், எதுக்கு தனக்கு தானே கிசு கிசு எழுதினீங்க..?
ஒன்னுமே பிரியல..
/

கார்க்கி சார்.


நீங்க பிதாமகன் படம் பாக்கலியோ? நாட்டு வைத்தியர் சூர்யாவோட மருந்த வாங்கி சாப்பிட்டா நல்லா பிரியும்.
Sanjai Gandhi said…
அடிங்க.. உங்கள பத்தி பில்டப் குடுக்க கிசுகிசு பதிவா? பிச்சிபுடுவேன் பிச்சி. :)

மயில் மட்டும் தான் சரியா கண்டுபிடிச்சி இருக்காங்க போல.. :)

ஆக, சில அரசியல் ஓடிட்டு இருக்கு.. வனவாசம் போகாம இருந்தா சரி..

( நாங்களும் கிசுகிசு பின்னூட்டம் போடுவோம்டி.. :)) )
இது வேறயா ? யு டூ செல்வா.........!!!!!
’தான்’ என்ற அகம்பாவத்தில் அடுத்தவர் வலைதளத்தில் உபதேசமிட்டு வந்த பதிவர், சமீபத்திய சிறுகதைப் போட்டி சிறுகதையில், ‘தான்’ என்ற வார்த்தையை அதிகம் உபயோகித்து எழுதியிருக்கிறார்.
முதல்ல ஒன்னுமே புரியல! சரி நாம் ப்ளாக்ல எல்கேஜிதானே படிக்கிறோம்னு சமாதானப்படுத்திட்டேன். அப்புறமா நேரடி நோட்ஸ் விளக்கம் கேட்டு, இப்போ மற்படி படிச்சதுலயும் பாதிதானே புரியுதுன்னு பின்னூட்டமிட வந்தா... அட என்னைமாதிரியே பலபேருக்கு பாதி புரியாலே. ஆன்னால் ஒன்னு படிக்க படிக்க சிரிப்புக்கு உத்தரவாதமிருக்கு. போட்டு தாக்குங்க செல்வா!
பகாசுரன் என்ற பெயரில் `உயிரா’ன இதழில் பச்சை `மை’தோய்த்து ஒரு ஒரு பெருசு எழுதப் போதாமே தெரியுமா