ரூல்ஸ் ராமானுஜன்களுக்கு மரியாதை!
சாலை விதிகளை மதிக்காதவர்களின் உயிரையோ, உடல் உறுப்புகளையோ ஆண்டவன் பறிக்கிறான். காவல்துறையோ அபராதம் விதிக்கிறது. என்னைப் போன்ற அம்மாஞ்சிகள் சபிக்கிறார்கள். கட்டுப்பட்டு நடப்பவர்களுக்கு...?!
யாருக்கும் உபத்திரவம் கொடுக்காமல் சாலை விதிகளை சப்ஜார்டாக கடைபிடிப்பவர்களுக்கு சின்ன அங்கீகாரம் கொடுத்து உற்சாகப்படுத்தலாமேயென யோசித்தோம். கோவை போக்குவரத்து காவல்துறையுடன் கைகோர்த்து மிஸ்டர். பெர்பெஃக்ட்களுக்கு பரிசுகளை வழங்க முடிவெடுத்து சிக்னல்களில் களம் இறங்கினோம்.
* மஞ்சள் விளக்கு ஒளிரும் போதே மட்டை போடும் திராவிட்களுக்கு...
* எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடாத அஹிம்சாவாதிகளுக்கு...
* தலைக்கவசம் சூடியவர்களுக்கு... (பின்னிருக்கை தங்கமணியும் அணிந்திருந்தால் 'டபுள் போனான்ஸா'!)
* நான்கு சக்கர வாகனமெனில் சீட் பெல்ட் அணிந்திருந்தவர்களூக்கு...
* எமிஷன் சர்டிபிகெட், லைசென்ஸ், இன்ஸூரன்ஸ் இத்யாதிகள்...
* காதுகளை இயர் போன்களுக்கு கடன் கொடுக்காதவர்களுக்கு
பரிசுகள் மட்டுமின்றி, "சாலை விதிகளை மதிக்கும் வாகன ஓட்டி" எனும் ஸ்டிக்கரையும் வாகனங்களின் பின்புறம் ஒட்டினோம். மறுநாள் (நாளை) விழாவிற்கு ஏற்பாடு செய்து கோவை மாநகர கமிஷனர் முன்னிலையில் பாராட்டும், பரிசுகளும் வழங்க இருக்கிறோம்.
இருசக்கர வாகன ஓட்டிகளைத் தேர்வு செய்வது எளிதாக இருந்தது. ஆனால், கோயம்புத்தூர் முழுக்க நிகழ்ந்த இந்த தேடுதல் வேட்டையில் சீட் பெல்ட் அணிந்த காரோட்டிகள்தாம் காணக்கிடைக்கவில்லை. வெகுநேரம் காத்திருந்த பின் ஒருவர் சீட்பெல்ட்டுடன் சிக்கினார். நான் ஓடோடிப் போய் "சார் ஹிந்துலருந்து வர்றோம். சாலை விதிகளைக் கடைபிடிக்கிறவங்களுக்கு பரிசுகள் வழங்குகிறோம் சார். சீட்பெல்ட் மாட்டிக்கிட்டு வண்டி ஓட்டுன ஓரே ஆளு நீங்கதான் சார். கங்கிராட்ஸ் சார். நாளைக்கு கமிஷனர் கையால சிறப்புப் பரிசு இருக்கு சார். நீங்க கண்டிப்பா வரணும் சார். உங்க பேரைச் சொல்லுங்க சார். எழுதிக்கறேன்" படபடப்பாய் பேசி முடித்தேன்.
சலனமற்று இருந்தது அவரது முகம்.
"என்னாச்சு சார்?!"
"நாக்கு தமிலு தெளிது... தெலுகுல செப்பண்டி"
Comments
எந்த சிக்னலுனு சொல்லவே இல்ல
இருந்தாலும் நல்ல முயற்சி பாராட்டுகள்
சீட் பெல்ட் அணிந்த காரோட்டிகள்தாம் காணக்கிடைக்கவில்லை. வெகுநேரம் காத்திருந்த பின் ஒருவர் சீட்பெல்ட்டுடன் சிக்கினார். நான் ஓடோடிப் போய் "சார் ஹிந்துலருந்து வர்றோம். சாலை விதிகளைக் கடைபிடிக்கிறவங்களுக்கு பரிசுகள் வழங்குகிறோம் சார். சீட்பெல்ட் மாட்டிக்கிட்டு வண்டி ஓட்டுன ஓரே ஆளு நீங்கதான் சார். கங்கிராட்ஸ் சார். நாளைக்கு கமிஷனர் கையால சிறப்புப் பரிசு இருக்கு சார். நீங்க கண்டிப்பா வரணும் சார். உங்க பேரைச் சொல்லுங்க சார். எழுதிக்கறேன்" படபடப்பாய் பேசி முடித்தேன்.
சலனமற்று இருந்தது அவரது முகம்.
"என்னாச்சு சார்?!"
"நாக்கு தமிலு தெளிது... தெலுகுல செப்பண்டி"
/
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:))
"என்னாச்சு சார்?!"
"நாக்கு தமிலு தெளிது... தெலுகுல செப்பண்டி"
சபாஷ் சரியான குத்து.
//This is dedicated to all the inconsiderate, idiotic morons, who think
that the entire road is their property, that signals are meant for
breaking, and that standing on the f$%^& horn will make even potholes
move out of their way...
Gussa mujhe bhi aata hai,
Dil mera bhi gurrata hai,
Abe moron, don't push your luck,
Nahi to kaise rahaga ek-piece kal tak?
http://ihrishi.blogspot.com
//
:))
//வால்பையன் said...
ஈரோட்டுக்கு வரும் போது முன்னாடியே சொல்லிருங்க, நான் உஷாரா இருந்துக்கிறேன்!
//
:)))
ஹாஹாஹா...
ரசித்தேன்..
நல்ல முயற்சி..
அனைவருக்கும் பாராட்டுகள்..
பகிர்தல் மகிழ்ச்சி அழிக்கின்றது
வாழ்த்துக்கள்.
செயல் வீரர் நீங்க..
நல்ல முயற்சிங்க பகிர்வுக்கு நன்றி..!