நமக்கு நாமே மாமே!
உலகின் தலைசிறந்த லேப்டாப் எது? விடை கடைசியில்...
***
நமீதா2002 என்கிற ஜிமெயில் ஐடியில் வந்த மெயிலை ஏதோ ஸ்பாம் எனக்கருதி தெரியாமல் அழித்த பாவியானேன். சாட்சாத் நமீதாதான் தன் மச்சான்கள் புளகாங்கிதமடையட்டும் என முதல் கட்டமாக இருபது லட்சம் பேருக்கு அனுப்பி அதில் 22,000 பேரிடமிருந்து பதிலும் பெற்றிருக்கிறார். என் கோபமெல்லாம் என்னைக் கேட்காமல் மெயில் ஐ.டியைக் கொடுத்த சினேகா மீதுதான்.
***
‘நமக்கு நாமே மாமே’ திட்டத்தின்படி எழுதப்பட்ட கிசுகிசுக்கள் அனைத்தும் குறிப்பிடுவது என்னையே என்பதை முதலில் கண்டுபிடித்த மயிலுக்கு இ.வா.பூ வைக் கொடுக்கச் சொல்லி ஞாநிக்கு வேண்டுகோள் வைக்கிறேன். மற்றபடி பதிவைப்படித்து ‘மெய்தான் அரும்பி விதிர்விதித்தவர்களுக்கு... “இவர்தான் உங்க ஹீரோ”-வை சிபாரிசு செய்கிறேன்.
***
சர்ச்சைகள் அண்ணன்மார்களுக்கு பதற்றத்தையும், நண்பர்களுக்கு தர்மசங்கடத்தையும் தருவதால் அவற்றிற்கு பதில் சொல்லி சமர் செய்ய கிஞ்சித்தும் விருப்பமில்லை. இருபதிவர்களுக்கு இடையே விவாதங்கள் நிகழ்கையில் கரையோரத்தில் நிற்கிறவர்கள் ‘ஸ்வாஹா’ என நெய்யூற்றுவதில் பரஸ்பரம் இரண்டு தரப்பும் வெறியேறி...கடைசியில் இந்த உலகம் என்னைத்தான் குறை சொல்லும்.
***
இரண்டு காவலர்களோடு சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்தேன். டிவிஎஸ்50ல் ஒரு மத்திம வயதைக் கடந்த பெண்மணி வேகமாக வந்து என்னருகே நிறுத்தி “போலீஸ்காரனுவ இப்படி மீட்டிங் போட்டு பேசினா...நாடு உருப்படுமாய்யா...அவனவன் இங்கே செத்துகிட்டு இருக்கான்...போய் வேலையப் பாருங்கய்யா...” எனப் பொரிந்து தள்ளிவிட்டுப்போனார். அவர் பேசும்போது இருகாவலர்களும் முதுகைக் காட்டிக்கொண்டு திரும்பிக்கொண்டனர். அவள் போனதும்தான் திரும்பினர்.
“யார் சார் அவங்க? உங்க டிபார்ட்மெண்டா?!”
“இல்லீங்க...பப்ளிக் வெல்ஃபேர் டிபார்ட்மெண்ட்”
“அட... அப்படியா!”
“ம்ஹூக்கும்...நீங்க வேற... ஐயிட்டங்க அது"
அதுசரி நீங்க எதுக்கு திரும்புனீங்கன்னு கேட்க நினைத்து... முழுங்கினேன்.
***
கேள்விக்கான விடை: டெல் இன்ஸ்பிரான் 16 – ஏனென்றால் அதைத்தானே நான் வாங்கி இருக்கிறேன்.

Comments
இரு தரப்பு விவகாரங்களையும்/ (வி)வாதங்களையும் படிக்கும்போதே இதுதான் தோன்றியது.
ம்..
-- விபின்
ஒரு போஸ்டுக்கு ஒரு கவிதையும் எழுதி வைங்க.. புண்ணியமாப் போகும்..
பதிவரசியல் புரிவதில்லை சில நேரம் :)
நல்ல முடிவு! என்னை போன்ற சிலர் எதிர் பார்த்த, இந்த முடிவினை எடுத்ததற்கு நன்றி.
கேள்விக்கான விடை: டெல் இன்ஸ்பிரான் 16 – ஏனென்றால் அதைத்தானே நான் வாங்கி இருக்கிறேன் //
தவறு : தோஷிபா சேட்டிலைட் எல் - 310 தான் உலகின் தலைசிறந்த லேப்டாப் .
// நமீதா2002 என்கிற ஜிமெயில் ஐடியில் வந்த மெயிலை ஏதோ ஸ்பாம் எனக்கருதி தெரியாமல் அழித்த பாவியானேன். //
அட ... கவலைய விடுங்க....!!! அம்முனியோட அடுத்த படத்துக்கு இதே மாதிரி ஒரு மெயில் அனுப்பாமலா போயிரும்........!! கண்டிப்பா இன்னும் சில கவர்ச்சி படங்களோட அனுப்புவாங்க....!!!!!
அது ஒரு தமிழ் சினிமா போர்டலில் இருந்து வந்தது ;) அதே ஐடி தான்
உண்மை தான் ;) கைகட்டி வேட்டிக்கை பாக்கிற கூட்டம் அண்ணே நம்ம கூட்டாம் போர் அடிச்சா ஏத்தி விட்டு எங்க அண்ணனை அடிச்சிடுவியா என்று சொல்லி அடிவாங்க வைப்பாங்க
அம்புட்டு நல்லவங்க
லாப் டாப் வாங்கினதுக்கு treat எங்க? எப்ப?
அப்ப நிறைய எழுதுவீங்க ...
நல்லது ..
வாழ்த்துக்கள்
You could write lot more on socila issues, unemployment, male female relations, environment, energy etc.
இந்த நயந்தாரா பொண்ணு என் மெயில் ஐடிய ஏன் நமீதாகிட்ட தரலை?
எப்பூடி?
:-D