நீங்க என்ன சொல்றீங்க?


வாஷிங்டனிலிருந்து நண்பர் ராஜன் அழைத்திருந்தார். மூன்று வயதுப் பெண் தமிழ் பேச தடுமாறுகிறாள் என்று வருத்தப்பட்டார். உடனடியாக இசையருவியைப் பொழியச் செய்யுங்கள். மூன்றே வாரத்தில் 'யம்மாடி...ஆத்தாடி' என தெள்ளுதமிழ் தெறிக்குமென்றேன். உண்மை. மூன்றுமாதங்கள்தாம் 'கிரா டேலி' என்னோடு தங்கி இருந்தாள். வான்கூவர் திரும்பு முன் அன்றைய சூப்பர் ஹிட்டான 'சரக்கு வெச்சிருக்கேன்...எறக்கி வச்சிருக்கேனை...' பிரமாதமாய்ப் பாட கற்றுக்கொண்டு விட்டாள்.

தமிழ்நாட்டுத் தகப்பன்களுக்கு குழந்தை ஆங்கிலம் பேச வேண்டுமென்கிற கவலை. அமெரிக்க ஆர்.ஆருக்குத் தன் குழந்தை தமிழ் பேச வேண்டுமே என்கிற கவலை. எனக்கோ குழந்தைகள் கதை கேட்டு வளர்கிறார்களா என்கிற ஒரே கவலைதான்.

திரும்ப திரும்ப கதைகள் கதைகள் என்றே பிரச்சாரம் செய்கிறாயே....கதைகள் அப்படியென்ன செய்துவிடும் என்கிற கேள்வியை எப்போதும் எதிர்கொள்கிறேன். கதைகள் ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடச் செய்யும், கதைகள் பீரங்கிகளையும், துப்பாக்கிகளையும் அஹிம்சையால் தலை குனியச் செய்யும், மாபெரும் தேசத்திற்கு விடுதலை வாங்கிக் கொடுக்கும்.

***

'வேர்களை மறத்தல்' என்ற எனது கருத்திற்கு திரு. கோவிக்கண்ணன் எதிர்வினை ஆற்றியிருந்தார். திரும்பவும் சொல்கிறேன் பெருமைகளை மட்டுமல்ல சிறுமைகளையும் ஒருவன் தெரிந்தே தீரவேண்டும். பாரம்பரிய பெருமைகள் உடையவன் அதைக் குலைக்காமல் நடந்துகொள்ளவும், ஒடுக்கப்பட்ட வரலாற்றினை உடையவன் தனக்கு நேர்ந்தது பிறிதொருவனுக்கு நேர்ந்துவிடாமல் போராடவும் நிச்சயம் வரலாறு அவசியம். "வரலாற்றினை மறப்பவர்கள் அதை திரும்பவும் எதிர்கொள்ள வேண்டிய நிலை வந்துவிடும்" என்று ஒருவரும் "வரலாறு நமக்கு நினைவூட்டலாம், எச்சரிக்கலாம். ஆனால் தடுக்கக்கூடாது" என்று இன்னொருவரும் வார்த்தை யுத்தம் நடத்தியது என் நினைவூக்கு வருகிறது. ஒருவர் அடல் பிஹாரி வாஜ்பாய். இன்னொருவர் யாரென்று சரியாகச் சொல்பவருக்கு ஒரு முடியலத்துவம் பரிசு.

***

சுற்றுச்சுழல் ஆர்வலர்களுக்கு வழங்கப்படும் உயரிய ஓயிட்லி விருது இவ்வாண்டு கர்நாடகாவைச் சேர்ந்த எம்.டி மதுசுதனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்காருக்கு நிகரான இவ்விருதுச் செய்தி பெரிதாகக் கொண்டாடப்படாதது எனக்கு பெரிய ஆச்சர்யத்தையும் வருத்தத்தையும் ஒருசேர அளிக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே நிகழும் போராட்டங்களைக் குறித்த அவரது ஆய்வுகளுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. மதுசுதன் குறித்து முன்னணி இதழ் ஒன்றிற்காக நெடும் கட்டுரையொன்று எழுதிக்கொண்டிருக்கிறேன்.

ஒயிட்லி விருதின் இன்னொரு உபபிரிவிற்கான விருதைப் பெற்றிருப்பவர் கடல் ஆமைகளுக்காகப் போராடும் தமிழகத்தின் சுரஜா தாரிணி. காஞ்சிபுரத்துக்காரர்.

***

"எங்க தலைவரை எப்படியெல்லாம் திட்டினீங்க... ராஜம் கிருஷ்ணனுக்கு மூணு லெட்சம் கொடுத்ததப் பத்தி எதுனா எழுதினீங்களா...?" என்று கேட்டு எழுதியிருந்தார் ஒரு பெயரிலி.

ஐய்யா கனவானே, மூத்த குடிமக்களுக்காக தேசிய வங்கிகள் வழங்கும் அதிகபட்ச வட்டி விகிதம் ஆண்டொன்றுக்கு 12 %. அதன்படி மாதம் மூன்றாயிரம் ரூபாய் கிடைக்கும். சென்னையில் இந்தப் பணத்திற்கு ஒண்ட ஓரிடம் கிடைக்காது. சாப்பாடு, மருத்துவச் செலவுகளுக்கு எங்கே போவது? எழுத்தாளர்களும் சமூகத்திற்காக உழைத்து ஓய்ந்து போன தொழிலாளர்கள்தாம். எழுத்தாளர்கள் நல வாரியம் அமைத்து வறுமையின் பிடியில் இருக்கும் எழுத்தாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் பத்தாயிரம் ரூபாயாவது கொடுத்தால் மானத்தோடு சாவார்கள். படைப்பாளிகளுக்கு மட்டுமல்ல நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை வைத்துக்கொண்டு குருவி ரொட்டிதான் வாங்க முடியும். இதுல உங்களுக்கு பாராட்டு வேற கேட்குதா?!

***
தமிழகம் எதிர்கொள்கிற எல்லா பிரச்சனைகளுக்கும் ஒட்டுமொத்த தீர்வு கிடைத்துவிட்டது. கடவுள் ஒன்றும் இரக்கம் இல்லாதவன் இல்லை. ஒருவழியாக நம் பிரார்த்தனைகளுக்குச் செவி சாய்த்து ஒரு விடிவெள்ளியை அனுப்பி வைத்திருக்கிறார். இவர் ஊழலை, அராஜகத்தை ஒழிப்பார். எங்கள் உங்கள் வீதிகளில் பாலாறு ஓடும், கிழவிகள் பாம்படத்தைக் கழற்றி வீசி பறவையினங்களைத் துரத்துவார்கள், வயசுப்பெண்களோ பின் தொடரும் நாய்களை செல்போனை வீசி துரத்துவார்கள். பஞ்சம் எனும் வார்த்தையும் பசி எனும் வார்த்தையும் தமிழகராதியிலிருந்து நீக்கப்படும். குழந்தைத் தொழிலாளர்களின் விலங்குகள் உடைபடும். இந்தியக் கடன்களனைத்தும் அடைபடும்.

விடிவெள்ளி விஜயைத் தொடர்ந்து அல்வா வாசு, செல் முருகன், போண்டா மணி ஆகியோரும் அரசியலில் குதித்தால் உலக நாடுகளோடு, செவ்வாய் கிரகத்தையும் நமது காலணி நாடாக்கி விடலாமென்கிறேன் நான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?!

Comments

Indian said…
//"வரலாற்றினை மறப்பவர்கள் அதை திரும்பவும் எதிர்கொள்ள வேண்டிய நிலை வந்துவிடும்" என்று ஒருவரும் //

It was for the first time used by Mr George Santayana, a Spanish born American author of the late nineteenth & early twentieth centuries,in his book Life of Reason, Reason in common sense.
/
தமிழகம் எதிர்கொள்கிற எல்லா பிரச்சனைகளுக்கும் ஒட்டுமொத்த தீர்வு கிடைத்துவிட்டது. கடவுள் ஒன்றும் இரக்கம் இல்லாதவன் இல்லை. ஒருவழியாக நம் பிரார்த்தனைகளுக்குச் செவி சாய்த்து ஒரு விடிவெள்ளியை அனுப்பி வைத்திருக்கிறார். இவர் ஊழலை, அராஜகத்தை ஒழிப்பார். எங்கள் உங்கள் வீதிகளில் பாலாறு ஓடும், கிழவிகள் பாம்படத்தைக் கழற்றி வீசி பறவையினங்களைத் துரத்துவார்கள், வயசுப்பெண்களோ பின் தொடரும் நாய்களை செல்போனை வீசி துரத்துவார்கள். பஞ்சம் எனும் வார்த்தையும் பசி எனும் வார்த்தையும் தமிழகராதியிலிருந்து நீக்கப்படும். குழந்தைத் தொழிலாளர்களின் விலங்குகள் உடைபடும். இந்தியக் கடன்களனைத்தும் அடைபடும்.

விடிவெள்ளி விஜயைத் தொடர்ந்து அல்வா வாசு, செல் முருகன், போண்டா மணி ஆகியோரும் அரசியலில் குதித்தால் உலக நாடுகளோடு, செவ்வாய் கிரகத்தையும் நமது காலணி நாடாக்கி விடலாமென்கிறேன்
/

well said!
கலக்கல்!!
முடியலத்துவம் என்கிற பெயரிலேயே செல்வா தலைமையில் நாமளும் ஒரு கட்சி ஆரம்பிக்கலாம். கட்சியோட பெயரிலே கொள்கையும் இருக்கிறதினால பிரச்சினை இருக்காது. என்ன சொல்றீங்க மக்களே....?
//"விடிவெள்ளி விஜயைத் தொடர்ந்து அல்வா வாசு, செல் முருகன், போண்டா மணி ஆகியோரும் அரசியலில் குதித்தால் உலக நாடுகளோடு, செவ்வாய் கிரகத்தையும் நமது காலணி நாடாக்கி விடலாமென்கிறேன் நான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?! "//

இந்த கொடுமையெல்லாம் தாங்க முடியாமத்தான் நாங்கெல்லாம் நாடு விட்டு நாடு வந்திட்டோம்.
ரொம்ப கோவமா இருக்கீங்க போல.. என் கோவம் நான் சொல்லியும் கேட்காம அவரு கட்சி ஆரம்பிக்கறதுல முனைப்பா இருக்காறேன்னுதான்.

ஹூம்.. நம்ம தலையெழுத்து அப்படி!

எழுத்தாளர்களைக் கொண்டாடாத சமூகம்...

சரி வேணாம் விடுங்க...
Anonymous said…
முடியலத்துவம் என்றால் என்னன்னா?
//இன்னொருவர் யாரென்று சரியாகச் சொல்பவருக்கு ஒரு முடியலத்துவம் பரிசு.//
ஆஹா வட போச்சே :(
யாருன்னு தெரியலையே...

தெரியலன்னு முதல்ல தைரியமா ஒத்துகிட்டதுக்காக முடியலத்துவம் கிடைக்குமா? :)
RRSLM said…
//எனக்கோ குழந்தைகள் கதை கேட்டு வளர்கிறார்களா என்கிற ஒரே கவலைதான்..//
நன்றி நண்பரே! எனது மன ஓட்டமும் இதுவேதான். தங்களிடம் பேசிய பிறகு மேலும் தெளிவடிந்தேன். தமிழ் இசையையும், நீதி கதைகளையும் புத்தகம் மற்றும் ஒளி/ஒலி வடிவிலும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம்.....கண்டிப்பாக தமிழ் பேசி வளர்வாள்....நன்றி மீண்டும்......
Thamira said…
ஒவ்வொன்றும் ரசனையான பகுதிகள். குறிப்பாக வரலாறு குறித்த சொல்லாடல் மிக அருமை..
அல்வா வாசு, செல் முருகன், போண்டா மணி ??
இந்த கொடுமை வேறயா?
உண்மை தான். கதைகள் தான் குழந்தைகளை உருவாக்கும் எளிய, சக்தி மிகுந்த விஷயம்.

கண்டிப்பாக அந்த இன்னொருவர் செல்வேந்திரன் தான்.

அப்படியானால் சீக்கிரம் உங்களின் ஓயிட்லி பற்றிய கட்டுரையை பசுமை விகடனில் எதிர்பார்க்கலாம்.

சரி தான். பல எழுத்தாளர்களின் கடைசி காலங்கள் வறுமையில் கொடுமையாகவே செல்கின்றன.

என்ன கொடுமை இது... விஜய்க்கு தான் இவ்வளவு பில்டப்பா....
selventhiran said…
இந்தியன், அவரும் சொல்லி இருக்கலாம். நான் சொல்வது இரண்டு இந்திய தலைவர்களை...

மங்களூரார் வாங்க

கட்சியோட பெயரிலேயே கொள்கையும் // சூப்பர் வசந்த்

துபாய் ராஜா, இப்ப ஆசிப் இல்லாததால நீங்க நிம்மதியா இருக்கீங்க... சீக்கிரத்துல அனுப்பி வைக்கிறோம்.

பரிசல், 'மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்னு' அவருகிட்ட சொல்லிப் பார்த்தேன். கேட்கலையே...

மயில், முடியலத்துவம் குறித்து பிரதியங்காரக மாசானமுத்து "முடியலத்துவம் ஓர் எளிய அறிமுகம்" எனும் நூலை வெளியிட்டுள்ளார். 450 பக்கங்களைக் கொண்ட அந்த நூலை வாங்கிப் படிக்கவும்.

பட்டாம்பூச்சி, உங்க நேர்மையை பாராட்டுறேன்.

ஆர்.ஆர், நான் ஒன்றும் உங்களை கோபப்படுத்தி விடவில்லையே...?!

ஆமுகி அண்ணா, விரைவில் வீட்டுச்சாப்பாடினை எதிர்கொள்ள இருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துகள்!

வாங்க மகேஷ், கடைசியா வந்த தகவல்களின்படி லொள்ளு சபா மனோகரும் கட்சி துவங்குகிறாராம்!

வா விக்கி, "கண்டிப்பாக அந்த இன்னொருவர் செல்வேந்திரன் தான்" இன்னுமா இந்த உலகம் நம்மளை....
Unknown said…
//.. உலக நாடுகளோடு, செவ்வாய் கிரகத்தையும் நமது காலணி நாடாக்கி விடலாமென்கிறேன் நான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?! ..//

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது..??!!
//தமிழகத்தின் சுரஜா தாரிணி. காஞ்சிபுரத்துக்காரர்.//

இதெல்லாம் கண்டுக்க எங்களுக்கு நேரம் இல்லைங்க ):
ஆமா நமீதாவோட நாய் குட்டிக்கு ஒடம்பு சரியில்லையாமே என்னாச்சு? ஒரே கவலையா இருக்கு.. :‍)

நாம இன்னும் இப்படிதான் இருக்கோம்.

Popular Posts