சோர்விலன்

சோர்விலன் எனும் வள்ளுவப்பதம் அட்சர சுத்தமாகப் பொருந்திப் போவது ஜ்யோவ், சிவராமன் இணைக்குத்தான். வாழ்வு தரும் நெருக்கடிகளுக்கு மத்தியில், வியாபார நோக்கங்கள் இல்லாமல், விமர்சனங்களையும் சகித்துக்கொண்டு ஒரு நிகழ்வை நடத்தி அல்லது நடாத்தி முடிப்பதென்பது சாமான்ய காரியம் அல்ல.

இணைய தமிழின் வரலாற்றை நேர்மையாகப் பதிவு செய்தால் எழுத்துரு, திரட்டிகள், பதிவர் பட்டறை வரிசைகளில் சிறுகதைப் போட்டிக்கும், சிறுகதைப் பட்டறைக்கும் நிச்சய இடம் உண்டு. ஆக்கப்பூர்வமான இப்பணிகளுக்கு இவர்களிருவரும் தங்கள் கைக்காசைக் கரைப்பது கவலை அளிக்கிறது. உரையாடல் அமைப்பின் உறுப்பினர்களையும், புரவலர்களையும் அதிகப்படுத்துவதன் மூலம் ஓரளவு சுமையைக் குறைக்கலாம் என்பதை ஓர் அபிப்ராயமாகச் சொல்லிக்கொள்கிறேன்.

சிறுகதை சிருஷ்டி பூர்வமானது. அதைக் கற்றுக்கொடுக்க முடியாது என்பது என் நம்பிக்கை. ஆனால், அதன் தொழில்நுட்பங்களும், சூத்திரங்களும் பகிர்வுக்குறியவை என்பதை பட்டறையில் கலந்து கொண்ட பதிவர்களின் பத்திகள் மூலமாகத் தெரிந்து கொண்டேன். அவர்களது பொறுப்பான பதிவுகளுக்கும் வந்தனங்கள்.

***

கோவை வருவதற்கான ரயிலில் ஓப்பன் டிக்கெட் எடுத்து, டி.டி.ஆரைப் பார்த்து அதை ஸ்லிப்பர் கிளாஸாக மாற்றி ஊர் வந்து சேர்ந்தாள் கேண்டி. இந்த நைச்சியம் சர்வ நிச்சயமாக சென்னை கற்றுக்கொடுத்தது. மிரண்ட மான் குட்டியைப் போல இருக்கும் இவளைப் போய் சென்னைக்கு அனுப்பி விட்டீர்களே என்று கேட்காத நபரில்லை. ஆனாலும், அவளது குழந்தைத் தன்மையை சாகடிக்க சென்னையைக் காட்டிலும் பெரிய களம் எது?!

மிஷ்கினின் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தால், "நீங்கள் கேட்கிற சமாச்சாரத்திற்கு என்னைக் காட்டிலும் இன்னார் பொருத்தமாக இருப்பார்" என்று கைகாட்டி விடுகிற பொழைக்கத் தெரியாத கோயிந்துக் குணம் குடும்பத்திற்கு கேடு. ஒரு வீட்டில் இரண்டு கோயிந்துகள் வேண்டாமே என்றுதான் உலகைப் படித்து வர அவளை சென்னைக்கு அனுப்பினேன்.

***

தமிழ்ப் பதிப்புலகம் பற்றிய ஆர்.வெங்கடேஷின் கட்டுரையும், தமிழ் வலையுலகம் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணணின் கட்டுரையும் சமீபத்தில் படித்த முக்கிய பதிவுகள்.

***
சன் பிக்ஸர்ஸின் சச்சின் டெண்டுல்கர் 'விஜய் ஆண்டனி'தான். அவர் குத்துற குத்தில் தியேட்டரில் கூட்டம் அம்முகிறது. இயக்குனர்களோ வருகிற ரசிகர்களை கும்மி அனுப்புகிறார்கள். 'நினைத்தாலே இனிக்கும்' படத்திற்கு சகபதிவர்கள் எழுதிய விமர்சனங்களை நம்பி தியேட்டருக்குப் போனால் உதை காத்திருக்கிறது.

படத்தில் கல்லூரியெங்கும் திரியும் 'ரிச்சி கேர்ள்ஸ்'களை விட சுமாராக இருக்கிறார் பிரியாமணி. அம்மையாரின் குரல்வளமும் அமோகம். அவரை எவ்வித முகாந்திரமும் இன்றி காதலிக்கிறார் சிக்ஸ்பேக் லிஸ்டில் லேட்டஸ்ட் வரவான பிரித்வி. பாஸ்போர்ட் சைஸ் போட்டாவை பாக்கெட்டில் வைத்துக்கொண்டே திரிகிற ஒரு காரணம் போதாதா அம்மையாருக்கும் காதல் வைரஸ் தொற்றிக்கொள்ள... சரி விடுங்கள் கதையை வேறு விமர்சனங்களில் படித்திருப்பீர்கள்.

காதலி எலெக்சனில் தன்னை எதிர்த்து நிற்கிறாரென்றால் உடனே வேட்பு மனுவை வாபஸ் வாங்கிக்கொண்டு போடுங்கம்மா ஓட்டு பிரியாமணியைப் பார்த்துன்னு கூவுகிறவன்தானே ஐடியல் காதலன். அதை விட்டுட்டு புண்ணாக்கு மாதிரி...

காதலிப்பது எப்படின்னு ஒரு பொஸ்தவம் போட்டாத்தான் சரிப்படும் போலருக்கு...

படங்கள்: ஆதிமூலகிருஷ்ணன்

Comments

Anonymous said…
//கோவை வருவதற்கான ரயிலில் ஓப்பன் டிக்கெட் எடுத்து, டி.டி.ஆரைப் பார்த்து அதை ஸ்லிப்பர் கிளாஸாக மாற்றி ஊர் வந்து சேர்ந்தாள் கேண்டி.//

என்ன இப்படி சொல்லிட்டீங்க. பதினைந்து வருடத்துக்கு முன்னாடி ஒரு ட்ரெய்னிங்குக்காக கோவை-சென்னை-க்கு நான் தனியா ரயிலில் பிரயாணம் செய்தேன். இன்னைக்கு அந்த அளவுக்கு பயம் இல்லைன்னு நினைக்கிறேன்.
செல்வா,
சிவராமன், ஜ்யோவ் இருவருடைய முயற்சியும் குறிப்பிடப்பட வேண்டியதுதான். எதிர்பார்ப்புகளற்று செயலாற்றும் இவர்களைப் போன்றவர்கள் மிகச்சிலரே.
000
ஆர்.வெங்கடேஷின் கட்டுரையையும் வாசித்தேன். பல புதிய சிந்தனைகளை ஏற்படுத்திய பகிர்வு அது.
000
//குழந்தைத் தன்மையை சாகடிக்க சென்னையைக் காட்டிலும் பெரிய களம் எது?!//

இதற்கு சென்னை என்றெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை, பெரும்பாலும் முளைக்கும் போதே வீடுகளிலேயே குழந்தைமையை நசுக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
000
பகிர்தலுக்கு நன்றி.


‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
//அதை ஸ்லிப்பர் கிளாஸாக மாற்றி//

மழை அதிகமா இருந்திருக்கும் போல.. அதான் ஸ்லிப்பர் க்ளாஸ்?

தூங்கிட்டே வரணும்னா ஸ்லீப்பர் க்ளாஸ்தான் பெஸ்ட் நண்பா!
சிவராமன் - ஜ்யோவ் குறித்த உங்கள் பார்வை நூறு சதம் உண்மை.
Thamira said…
கிளாஸ்.. அவ்வப்போது சுயபுராணமும் கொஞ்சம் ஜாஸ்தியாகத்தான் இருக்குதுபா.!
ஜ்யோவ், சிவராமன் இணைக்கு வாழ்த்துக்கள்

/// காதலிப்பது எப்படின்னு ஒரு பொஸ்தவம் போட்டாத்தான் சரிப்படும் போலருக்கு...////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
esra sonnathupool sarithaan

sirukathai pattarai nalla muyarsi atharku avarkalukku en vanthanangkal
//சன் பிக்ஸர்ஸின் சச்சின் டெண்டுல்கர் 'விஜய் ஆண்டனி'தான். அவர் குத்துற குத்தில் தியேட்டரில் கூட்டம் அம்முகிறது. இயக்குனர்களோ வருகிற ரசிகர்களை கும்மி அனுப்புகிறார்கள். 'நினைத்தாலே இனிக்கும்' படத்திற்கு சகபதிவர்கள் எழுதிய விமர்சனங்களை நம்பி தியேட்டருக்குப் போனால் உதை காத்திருக்கிறது. //

நானும் உணர்ந்தேன்.....வியாபார யுக்தியில் இதெல்லாம் கரைந்து போகும்..
நல்ல கலவை

//காதலிப்பது எப்படின்னு ஒரு பொஸ்தவம் போட்டாத்தான் சரிப்படும் போலருக்கு.//

அடுத்த பதிவுல முன்னோட்டம் வருமா
Unknown said…
I was about to go & See that movie tommorrow.

Thanks for saving my time Selvan.
Kumky said…
நல்லது...
வேறொன்றும் சொல்வதற்கில்லை.
அவர்கள் இருவருக்கும் கலந்துகொண்ட/ கொள்ளாத பதிவர்கள் சார்பாக உளமார்ந்த பாராட்டுதல்களைச்சொல்லவேண்டும்!
உங்கள் சொற்பதம் அழகு!

குழந்தைத்தனத்தை மீட்கத்தான் மறுபடியும் கோவை வந்துவிட்டார்களே கேண்டி!

நினைத்தாலே -யாருக்கு - இனிக்கும்?

:)
Ashok D said…
//என்றுதான் உலகைப் படித்து வர அவளை சென்னைக்கு அனுப்பினேன்//

சென்னையில எங்கள மாதிரி பேக்குகளும் உண்டு. (உதா:அஷோக், கேபிளார், சாரு அப்படின்னு அடிக்கிக்கிட்ட போகலாம்) :)))
//பொழைக்கத் தெரியாத கோயிந்துக் குணம் குடும்பத்திற்கு கேடு.//

பெரிய தத்துவமாவுல்ல இருக்கு!
இம்புட்டு நாளா தெரியாம போச்சே!
மிஷ்கினின் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தால், "நீங்கள் கேட்கிற சமாச்சாரத்திற்கு என்னைக் காட்டிலும் இன்னார் பொருத்தமாக இருப்பார்" என்று என்னைக் கை கைகாட்டி விட்டீர்கள்.
அவர்களும் தொடர்பு கொண்டார்கள்.
ஆனாலும் நாசூக்காய் அதைத் தவிர்த்த நானும் கோயிந்துவா?
Saminathan said…
அப்போ மிஷ்கினோட அடுத்த படத்துல நீங்க ஹீரோ இல்லையா...?
selventhiran said…
வாங்க சின்ன அம்மிணி

வாங்க வாசு.

பரிசல், பிழை சுட்டியமைக்கும் வருகைக்கும் நன்றி

ஆமூகி வருகைக்கு நன்றி... சுயபுராணம் - இதன் சைக்காலஜி குறித்து தனிக்கட்டுரை விரைவில்...

வாங்க நாஞ்சில்.

வாங்க பித்தன்

வாங்க கார்க்கி, ஸாரின் பின்னூட்டம் பாருங்கள் புரியும்.

வாங்க தாரணி பிரியா

வாங்க செல்வராஜ்

வாங்க கும்கீ

வாங்க சுரேகா, வார்த்தை விளையாட்டு அருமை!

வாங்க அசோக்

வாங்க வால்

வாங்க லதானந்த் சார், மிஷ்கின் அலுவலக அழைப்பு விவகாரங்களை இங்கே உரையாடுவது சரியாக இருக்காது இல்லையா?!

எப்பவோ வர்ற ஈரவெங்காயத்துக்கு நக்கல பாருங்க :)
மிஷ்கின் அழைப்பு விவகாரத்தை ஆரம்பித்தது யார்? நானா?
There is reaction for every action.
//சோர்விலன் எனும் வள்ளுவப்பதம் அட்சர சுத்தமாகப் பொருந்திப் போவது ஜ்யோவ், சிவராமன் இணைக்குத்தான்.//

அம்புட்டு நிஜம்.
//சோர்விலன் எனும் வள்ளுவப்பதம் அட்சர சுத்தமாகப் பொருந்திப் போவது ஜ்யோவ், சிவராமன் இணைக்குத்தான். // உண்மை.