ரிலாக்ஸ்!
'பேப்பர் விக்கிறதுக்காக கடைகளில் பத்து கவர்ச்சிக்கன்னிகளைக் கூட நிற்க வைச்சுடுவார்' என்று இவரைப் பற்றி வேடிக்கையாகவோ அல்லது வினையமாகவோச் சொல்வார்கள். 32 வருடங்களாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வில் பழம் தின்று கொட்டை போட்ட கிழட்டுச் சிங்கம் 'சின்னன் தாஸ்'தான் அவர். சர்க்குலேஷன் எனும் கல்லில் நார் உரிக்கிற சமாச்சாரத்தில் இவர் ஒரு தாதா!
பென்னட் & கால்மென் பதிப்பகத்தின் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவரை தெற்குப் பிராந்தியத்தின் 'பிஸினஸ் டெவலப்மெண்ட் இயக்குனராக' டை.ஆ.இ நியமனம் செய்திருப்பதுதான் நியூஸ் பேப்பர் இண்டஸ்ட்ரீயின் தற்போதைய பரபரப்புச் செய்தி. இவரது வருகையை அடுத்து சென்னையில் நிகழும் 'தி ஹிந்து - டைம்ஸ் ஆஃப் இந்தியா - டெக்கான் க்ரோனிக்கல்' - மும்முனைப் போட்டிகள் தீவிரமடையும் என்பதையும், கோயம்புத்தூரில் கால் பதிக்கும் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் போன ஜென்மத்துத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்பதையும் ஆரூடமாகச் சொல்கிறேன்.
இவரது தாத்தா வி.எம். நாயர் மலையாள மனோராமாவில் எடிட்டராகவும், பாட்டி பாலாமணி கேரளாவின் புகழ் பெற்ற கவிஞராகவும் இருந்தவர். அம்மா மாபெரும் கவிஞர் கமலா சுரையா (கமலா தாஸ்)!
சின்னன் தாஸூக்கு கோவையில் பலத்த சவால் காத்திருக்கிறது :)
***
அரிந்தம் சவுத்ரியின் சகாக்கள் அஜ்மல் கசாப்பின் ஒரெயொரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, எர்டெல் இணைப்பு, கோடக் மஹிந்திரா வங்கியில் கணக்கு, நீதிமன்ற முத்திரைத்தாளில் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தம் (இதில் அபு சலீமின் புகைப்படமும் ஒட்டப்பட்டிருந்தது) ஆகியவற்றை வெறும் எட்டாயிரம் ரூபாய் செலவில் செய்து முடித்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் செலவழித்தால் ரேஷன் கார்டே கிடைத்திருக்கும் என்கிறார்கள் சண்டே இந்தியன் ஆசாமிகள்.
இந்தியாவைப் போன்ற ஊழல் மலிந்த தேசத்தில் இதுமாதிரியான கேலிக்கூத்துக்கள் ஆச்சர்யமில்லை. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களும் கூட திறந்த மடமாகி விட்டது என்பதற்கான எளிய உதாரணங்கள் ஏர்டெல்லும், கோடக் மஹிந்திராவும்.
பார்த்துக்கொண்டே இருங்கள் முகம்மது அப்சலுக்கும், அஜ்மல் கசாப்பிற்கும் எவனாவது ஒருவன் ஜாமீனே வாங்கிக் காட்டுவான். சில்லாயிரம் செலவில்...
****
மத்திய கரும்பு ஆராய்ச்சி நிலையம் ஆண்டுதோறும் நடத்தும் உழவர் திருவிழாவிற்கு தேசம் முழுவதிலும் இருந்து விவசாயிகள் வருவார்கள். எனக்கு மூன்று நாட்களாக அங்கேதான் பட்டறை. கர்நாடாகா, ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் பலரோடும் உரையாடிக்கொண்டிருந்ததில் தமிழ்நாட்டு விவசாயிகள் அளவிற்கு அவர்களுக்குத் துயரங்கள் இல்லை என்பதை உணர முடிந்தது. விவசாயத்தில் அரசாங்கத்தின் பங்களிப்பு எப்படி என்று ஒரு டர்பனிடம் கேட்டேன் லேசாக முறைத்து "நாங்கள்தானய்யா அரசாங்கம்" என்றார்.
கர்நாடகாவிலிருந்து தன் பேரப்பிள்ளைகளோடு வந்திருந்த எண்பது வயதுப் பெரியவர் கோபிச்செட்டிப்பாளையத்திலிருக்கும் ஒரு கரும்புத் தோட்டத்தைத் தாம் பார்க்க விரும்புவதாகவும் உடனே ஏற்பாடு செய்யும்படியும் அதிகாரி ஒருவரோடு வாதாடிக்கொண்டிருந்தார். எண்பது வயசுக்கு மேலேயும் செய்தொழிலில் இருக்கிற பிடிப்பை வாய்பிளந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
'கோக்கனட் ஸ்வீட் சிப்ஸ்' தந்தார்கள். உலர வைக்கப்பட்ட தேங்காயை கும்பகோணம் சீவல் தடிமனுக்கு சீவி, அதில் இனிப்பு உள்ளிட்ட ஜாலக்குகளைச் சேர்த்து தயாரிக்கப்பட்ட சிப்ஸின் சுவை 'டாப் கிளாஸ்'. மத்திய அரசின் தேசிய விவசாயப் புதுமைப் பொருள் திட்டத்தின் தயாரிப்பாம். அரசாங்க தயாரிப்பொன்று இவ்வளவு சுவையாகவும், தரமாகவும் இருந்தது ஆச்சர்யம்!
***
ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாடு கோவையில் நடக்க இருக்கிறது. உலகெங்கிலும் இருந்து வருகிற நண்பர்களின் வசதிக்காக அண்ணாச்சி ஏற்பாட்டில் மருதமலை அடிவாரத்தில் ஒரு பங்களாவைப் பிடித்திருக்கிறோம். சேக்காளிகள் மட்டுமல்ல 'டூ' விட்டவர்களையும் இருகரம் நீட்டி அன்போடு அழைக்கிறோம்.
***
ஆக்கிரமிப்பிற்கு எதிரான மாவோவின் 'ஹிப்-ஹாப்' திருவிழா வருகிற 26, 27 தேதிகளில் (சனி, ஞாயிறு) வான்கூவர் நகரில் நிகழ்கிறது. கனடாவாழ் நண்பர்கள் வாய்ப்பிருந்தால் கலந்து கொள்ளும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
***
சசவுரி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் மேலாண்மை மாணவர்களிடத்தில் பேச அழைக்கப்பட்டிருந்தேன். தலைப்பு வழக்கம் போல 'ஹேபிட் ஆஃப் ரிடீங்'. இந்த முறை பேச்சைத் துவங்குவதற்கு முன் விரல் வித்தை நடிகர், வில் நடிகர், பெரிய இடத்து மாப்பிள்ளை, கண்ணழகி, உச்ச நட்சத்திரம் என்றெல்லாம் பத்திரிகைகளில் பிரசித்தி பெற்ற கேள்விகளைக் கேட்டேன். பெரும்பாலும் பெண்கள் பகுதிகளில் இருந்து பட், பட்டென்று பதில்கள் வந்தன. ஆக, வார இதழ்களில் வரும் சினிமாச் செய்திகளையேனும் மாணவர்கள் வாசிக்கிறார்கள் என்பதை உறுதி செய்து கொண்டு செய்தித்தாள்கள் எப்படித் தயாராகின்றன? செய்தி அச்சில் இடம் பெயர்வதற்கு முன் நிகழ்கிற சங்கிலித் தொடர் சுழற்சிகள், அதிகாலையில் வீடு தேடி பேப்பர் வரும் மெக்கானிஸம், கல்விக்கும் எதிர்காலத்திற்கும் செய்தித்தாள்களைப் பயன்படுத்தும் விதம் என்பது பற்றியெல்லாம் தீவிரமாகப் பேசினேன். அரங்கத்தில் இருந்த பாதிப்பேர் உறங்கிப் போனார்கள்.
Comments
// அரங்கத்தில் இருந்த பாதிப்பேர் உறங்கிப் போனார்கள். //
நீங்க கல்லூரி விரிவுரையாளார இருக்கவேண்டியவர், பராவயில்லை ஜயா, இது ஒரு சிலரால் மட்டும்தான் முடியும்.(சும்மா).
தங்கள் கட்டுரை அருமை.
அட! என்னை மறந்திட்டீங்களே செல்வா. :)
அவ்வ்வ்வ்..
அஜ்மல் மேட்டர் .. பாப்கார்னுக்காக பாதி எழுதி வைத்திருந்தேன்..வேற எழுதணும்.. வட போச்சே...
அரசாங்க தயாரிப்பொன்று இவ்வளவு சுவையாகவும், தரமாகவும் இருந்தது ஆச்சர்யம்!//// சென்னை காதியில் தேன் இனிப்பாக இருக்கும்..
அரங்கத்தில் இருந்த பாதிப்பேர் உறங்கிப் போனார்கள்.
இது செல்வா பன்ச்...
இது... அழகு...
பல சுவராசிய தகவல்கள், அனைவருக்கும் பயன் தரும் வகையில்.
ரீலாக்ஸ்...but remember
என்பதுபோல் இருந்தது.
மீதிப் பேர் எழுந்து வெளியே போனார்களாமே.. யாருமே இல்லாத டீ கடைல யாருக்குய்யா டீ ஆத்தினிங்க?..:)
டை ஆ இ விரவில் கோவைக்கு வந்துடும்ல... முதல் ஆளாய் வரவேற்க ரெடி..:))
இப்ப தான் நிம்மதியா இருக்கு :)
பதிவை படிக்குபோது நானும்.. :-(
//'கோக்கனட் ஸ்வீட் சிப்ஸ்'//
நானும் சுவைத்திருக்கிறேன்.. அவ்வளவு அருமையாக இருக்கும்.. :-)
//உலகத்தமிழ் மாநாடு//
சொல்லிட்டீங்கள.. ரெண்டு நாள் முன்னபின்ன இருந்து தங்கிட்டுதான் கிளம்புவோம்.. :-)
மறுபடியும் முதல்லயிருந்தா!?
நல்லாத்தாங்க இருக்கு!
நீங்கதான் கொஞ்சம் மெனக்கடணும்..!
பாத்துக்குங்க!
மேலும் கோவை மக்கள்
ஒரு மாற்று நாளிதழுக்காக
காத்துக்கிட்டிருக்காங்க!
சஞ்சய்தான் சாட்சி!
:)
செல்வா சவாலுக்கு தயார் ஆகிவிட்டார் போலிருக்கிறது.