ரமேஷ் வைத்யா
தமிழ் சினிமாவில் நா. முத்துக்குமார் இருக்கிற இடத்திற்கு நிகரான இடத்தைப் பிடித்திருக்க வேண்டியவர் ரமேஷ் வைத்யா. குறைந்த பட்சம் ஒரு பத்திரிகையில் பொறுப்பாசிரியர் அளவிற்காவது உயர்ந்திருக்க முடியும். அதற்கான அத்தனைத் தகுதிகளும் அவரிடத்தில் இருந்தது, இருக்கிறது. குடியினால் குடும்பம், ஆரோக்கியம், வேலை, சேமிப்பு என அனைத்தையும் இழந்த பின்னும் நாவில் சரஸ்வதி எழுதிய தமிழ் இருக்கிறது. உலகை வெல்ல தமிழ் போதும் என்கிற நம்பிக்கையை பாஸ்கர் சக்தி விதைத்திருக்கிறார். அவரது தொடர்ந்த வற்புறுத்தலின் பேரில் குடிப்பழக்கத்திலிருந்து மீளூம் சிகிச்சையை அடையாறு மருத்துவமனையில் பெற்று வருகிறார். அரை இட்லியிலிருந்து மூன்று இட்லிக்கு முன்னேறி இருக்கிறார். தூரத்தில் வெளிச்சம் தெரிகிறது.
துரோகமும், புறக்கணிப்புமே வாழ்வின் மீதான அவநம்பிக்கையை அவருக்கு ஏற்படுத்தியது. மருத்துவமனையில் அருகிலிருந்து கவனித்துக்கொள்ள நபர்களில்லை. மீண்டும் அவரை தனிமையும்,வெறுமையும் சூழ்கிறது. தனிமை என்னை வதைக்கும்போது குடி எண்ணம் மீண்டும் தலை தூக்குகிறது என்கிறார். சாப்பாடு, பழங்கள் வாங்கி வர... உடனிருந்து கதைக்க... துணை இல்லாத ஆஸ்பத்திரி தினங்கள் எத்தனை இரக்கமற்றது?!
மரணத்தை விட கொடுமையானது மறக்கப்படுவது என ஒரு நேர்காணலில் மம்மூட்டி சொன்னது நினைவுக்கு வருகிறது. வேலையில் இருந்தபோது கொண்டாடிய நண்பர்களில் பலரிடம் இருந்து தொலைபேசி குசல விசாரிப்புகள் கூட இல்லை என்பது எத்தனை சோகம்?! பதிவர்கள் அவருக்கு எப்போதுமே பிரியமானவர்கள். பிரியமானவர்கள் மட்டுமில்லை நெருக்கடி தருணங்கள் பலவற்றிலும் உதவியவர்கள். அவர்களில் பலர் அவரை நேரில் பார்க்காததற்கு அன்றாடங்கள் ஏற்படுத்தும் நெருக்கடிகள் மட்டுமே காரணமாக இருக்க முடியும். ஒரு வார இறுதியை அவருக்காக ஒதுக்குங்களேன். ப்ளீஸ்!

Comments
கொடுங்க அடிக்கடி போன் பண்ணி பேசுறேன்!
அவர்கள் அனுமதிக்கும் நேரம் சிக்கலாய் இருக்கிறது.
இனி அடிக்கடி நண்பர்களுடன் சென்று சந்திக்கிறேன்.
முகத்தில் அடிக்கும் உண்மை....
"switch off" la irukku
piRaku muyarsikkireen.
nanri nanba.
என்னோட தனிப்பட்ட மெயிலுக்கு அவரின் தொலைப் பேசி எண்ணை தெரிவியுங்களேன். நான் பேசுகின்றேன்.
raghavannigeria@gmail.com
அங்கே விஸிட்டர் நேரக் கெடுபிடிகள் வேறு..இரண்டுமுறை திரும்ப நேர்ந்தது.
தொலைபேசிப் பேச்சு அவருக்கு ஆறுதல்.
mrishanshareef@gmail.com
அனுப்பிவையுங்கள் !
அவரை தொலைபேசியில் பிடிக்கமுடியுமாயின், எண்ணைக் கொடுங்களேன்... (chinnappaiyan@gmail.com)
அண்ணன் மணிஜீ அடிக்கடி சென்று பார்த்து வருவதாக அறிந்தேன். நானும் தொலை பேசினேன்.
கண்டிப்பாக செய்வோம்.
ravi.antone at gmail.com