விழிதிகழ் அழகி!

ன்னதான் நம்மைச் சுற்றி இந்திரசுந்தரிகள் இருந்தாலும், நடிகை என்றால் ஏற்படும் பரவசம் அலாதியானதுதானே?! அலுவலக விழா ஒன்றிற்கு எதிர்பாராத விருந்தாளியாக சினேகா வந்திருந்தார். நேரில் பார்ப்பதற்கு எதிர்வீட்டு முருகேஸ்வரி மாதிரி சாதாரணமாகத்தான் இருக்கிறார். வியூபைண்டரின் வழியே பார்க்கையில் பேரழகியாய் தெரிகிறார். ஃபோட்டோஜெனிக்!

மூச்சுக்கு முன்னூறு தரம் புன்னகைக்கிறார். அடியேன் அடித்த ‘விபரீத கிச்சடி’ கமெண்டிற்கு ரூஜ் தாண்டியும் கன்னம் சிவந்தார். சிரித்துச் சிரித்து என்னை சிறையிலிட்டாய்…

ள்ளக்காதலன்’ என்கிற பதம் சரியானதுதானா?! ஆதுரமாய் அவள் கை பற்றி கனவுகளைக் கேட்கிறவனாக, அவளது மென்னுணர்வுகளை நசுக்காதவனாக, பெண்மையைப் போற்றுபவனாக அவன் இருக்கக்கூடாதா?! காதலென்று வந்தபின்னே கள்ளம் ஏதய்யா?!

ப்பேர்ப்பட்ட நிர்வாக அமைப்பிலும் ஊழியக்காரன் வெறும் ஊழியன் மட்டுமே. அதை தாண்டி வெற்றியில் உரிமை கொண்டாடினால் மோசமாகத் தண்டிக்கப்படுவான் என்பதற்கு லட்சத்துப் பத்தாவது உதாரணம் பொன்சேகா.

போரை முடித்தோமா மிச்சம் மிஞ்சாடி இருக்கும் தமிழர்களையும் ‘என் கடன் கொலை செய்து கிடப்பதே’ என போட்டுத்தள்ளினோமா என்றில்லாமல் வெற்றிக்கு சொந்தம் கொண்டாடப் போக களி தின்கிறார். முஷரப் மாதிரி நாட்டையே ஆட்டை போட்டுவிடலாம் என்கிற அவரது திட்டம் மழையில் நனைந்த பொட்டு வெடியைப் போல ஆகிவிட்டது. பொன்சேகா போர் விதிகளை மீறி படுகொலைகள் புரிந்தார் / அதிபரைக் கொலை செய்ய சதி செய்தார் என ராணுவ நீதிமன்றத்தில் தீர்ப்பளித்து அதிகபட்சமாக தூக்கு / குறைந்தபட்சமாக நாடு கடத்தல் இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

ராஜபக்சேயின் போர்க்குற்றங்களை சர்வதேச சமூகத்தின் (அப்படி ஒன்று இருக்கிறதா என்ன?!) முன் பறைசாற்ற பொன்சேகா காப்பாற்றப்பட வேண்டும் என்கிறார்கள் சிலர். இரண்டு பேர்களுமே கூட்டுச் சேர்ந்து கொதவாளையைக் கடிக்கிற களவாணிப்பயல்கள் என்பதால் எவன் செத்தாலும் பரவாயில்லை என்பதுதான் என் அவா.

லையுலகில் தலித்தியம், செக்யூலரிஸம் விவகாரங்களில் ஜபர்தஸ்த் காட்டும் சில ‘எலிஜிபிள் பேச்சலர்கள்’ சொந்தச் சாதியில், நல்ல ‘சல்லி’யில் வரன்களைத் தேடிவருவதைக் கேள்விப்பட்ட சகவலைஞர் ஒருவர் துணுக்குற்று என்னை அழைத்தார். ‘யோவ் நீய்யி… அவனுங்களை போலி செக்யூலரிஸ்ட்டுகள்னு கிண்டல் பண்றது சரியாத்தாம்யா இருக்கு…’என்றார்.

‘எழுதுகிறவன் இப்படித்தான் இருப்பான் என்பது வாசகனுக்குத்தானேயன்றி எழுத்தாளனுக்கு இல்லை’ என்று அய்யனாரையும் ‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ என வள்ளுவரையும் துணைக்கழைத்து விளக்கினேன்.

காஃபி மாதிரியான ஒரு காஃபியைக் குடிப்பது கும்பமேளா மாதிரி. தண்ணியாக / கடுங்கசப்பாக / திகட்டலாக / முறுகலாக / வெங்காய வாசனையோடு / விரல் நுழையாத அளவு கெட்டியாக / கண்ட கருமாந்திரங்களெல்லாம் நீந்தும் நீச்சல் குளமாக என காஃபியின் இலக்கணத்தைச் சாகடிப்பவர்கள் வீடு, ஹோட்டல் என்றில்லாமல் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.

நெடுநாட்களுக்குப் பின் என்னைக் கண்ட பரவசத்தில் காஃபி கலந்து கொடுத்தாள் அத்தை மகள். அதுதான் என் வாழ்நாளின் உன்னத காஃபி. நல்ல காபிஃக்கு முதலில் அன்பைக் கலக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

த்தி எழுத்து என்றானபின் எழுத்தாளன் தன் இருப்பையும் மெலிதாக எழுத்தில் திணித்தே ஆகவேண்டி இருக்கிறது. தன்னிலே மகிழ்ந்து முகிழ்ந்து எழுதுவது பரமானுபவம்தான் இல்லையா?!

ன்
விழி வீச்சில்
விழுகிறதென்
விக்கெட்!
சொல் கண்ணே
உனக்கு நான்
எத்தனையாவது விக்கெட்?!
டிவியில் ஈரோடு மகேஷ் கச்சாவாகச் சொன்னதை நான் கொஞ்சம் தரித்திருக்கிறேன்.

மிழ்ப்படத்தில் ஒரு துக்கடா கேரக்டரில் விக்கிரமாதித்யன் நம்பியைப் பார்த்தபோது அதிர்ந்தேன். அருவியை நீர்வீழ்ச்சியென்றால் கோபம் கொள்ளுகிற தாமிரபரணி தந்த அசலான கவிஞன் பேட்டாவுக்குக் காத்திருப்பது தமிழ்ச்சமூகத்தின் தோல்விகளுள் ஒன்று. அன்றைய தினம் முழுவதும் ‘கல்வெள்ளிக் கொலுசு’ எனும் பதம் மனசுக்குள் ஊறிக்கொண்டே இருந்தது.

Comments

Anonymous said…
//காதலென்று வந்தபின்னே கள்ளம் ஏதய்யா?!//

அதானே....இதை நானும் எழுதனும் என்பது பல நாள் எண்ணம்...

//நெடுநாட்களுக்குப் பின் என்னைக் கண்ட பரவசத்தில் காஃபி கலந்து கொடுத்தாள் அத்தை மகள். அதுதான் என் வாழ்நாளின் உன்னத காஃபி. நல்ல காபிஃக்கு முதலில் அன்பைக் கலக்கவேண்டும் என்று தோன்றுகிறது.//

ஆமாங்க அன்பை கலந்து கொடுத்தால் காஃபி நிறம் சுவை திடம் தேடாது...
Venkat M said…
//நெடுநாட்களுக்குப் பின் என்னைக் கண்ட பரவசத்தில் காஃபி கலந்து கொடுத்தாள் அத்தை மகள். அதுதான் என் வாழ்நாளின் உன்னத காஃபி. நல்ல காபிஃக்கு முதலில் அன்பைக் கலக்கவேண்டும் என்று தோன்றுகிறது//

The coffee was "உன்னத காஃபி" because of the preparer :-)
// ‘எழுதுகிறவன் இப்படித்தான் இருப்பான் என்பது வாசகனுக்குத்தானேயன்றி எழுத்தாளனுக்கு இல்லை’ என்று அய்யனாரையும் //

:))
taaru said…
//கொதவாளையைக் கடிக்கிற களவாணிப்பயல்கள் என்பதால் எவன் செத்தாலும் பரவாயில்லை என்பதுதான் என் அவா//
என்னோட பேரவா..அது..
// நல்ல காபிஃக்கு முதலில் அன்பைக் கலக்கவேண்டும் என்று தோன்றுகிறது.//
உங்களுக்கு அத்தை மகள்.. எமக்கு அத்தை... அன்பு கலந்ததே, ஒழிய வேறொன்றும் இல்லை..
Ashok D said…
காக்டெயில்... அதிஅற்புதம்..பல சுவை :)
நல்லா சினேகாவை மட்டும் தான் சைட் அடிச்சீங்கன்னு பார்த்தா, அத்தை மகளுக்குக் ஐஸா...

நடத்துப்பா... நடத்து.
க ரா said…
அருமையான எழுத்து நடை.
Kumky said…
யோசித்து யோசித்து கவனமாக வார்த்தைகளை கோர்த்தும்... காப்பியிலும், அத்தை மகளின்மீதான கரிசனத்தின் மீதுமே கவனம் குவிகிறது.
:--))

எனக்கும் ஒரே ஒரு நிமிடம் வந்து செல்லும் பெரிசைப்பார்த்து வருத்தமாகத்தானிருந்தது..
நல்ல ஃப்ளோ தம்பி. ரொம்ப கால கழித்து உன் பதிவில் பார்க்கிறேன்.
ஆனாலும்...
//காதலென்று வந்தபின்னே கள்ளம் ஏதய்யா?!//

என்பதுதான் சட்டெனப் பற்றியது.
கள்ளம் வந்தபின் தானய்யா காதலே...!
:-)))))
Sanjai Gandhi said…
தமிழ்படம் பார்த்து கேப்பே விடாம சிரிச்சிட்டு விக்கிரமாதித்தன் நினைச்சி கண்ணீர் விட்டாராம்.. நீர் என்ன முதலையா?.. இப்போ நானும் அய்யனாரையும் வள்ளுவரையும் துணைக்கழைச்சிக்கிறேன்.. :))
அன்பின் செல்வேந்திரன் - விழி திகழ் அழகி அருமை.

பல்வேறு கருத்துகளைக் கூட்டாக சமைத்தது நன்று. விபரீதக் கிச்சடி இங்கேயும் சொல்லலாமே !

கள்ளக்காதலன் என்பது பத்திரிகைகளில் மட்டுமே பயன்படுத்தும் சொற்றொடர்.

காபி மட்டும் அல்ல - எதிலுமே அன்பினைக் கலந்தால் அது தேவாமிர்தம்

எத்தனையாவது விக்கெட் என்றெல்லாம் கணக்குப் பார்க்க வேண்டுமா என்ன

நன்று நன்று நல்வாழ்த்துகள்
anujanya said…
நல்லா இருக்கு செல்வா. அழகு தமிழில் துள்ளி ஓடும் நடை.

அனுஜன்யா
‘கள்ளக்காதலன்’ என்கிற பதம் சரியானதுதானா?! ஆதுரமாய் அவள் கை பற்றி கனவுகளைக் கேட்கிறவனாக, அவளது மென்னுணர்வுகளை நசுக்காதவனாக, பெண்மையைப் போற்றுபவனாக அவன் இருக்கக்கூடாதா?! காதலென்று வந்தபின்னே கள்ளம் ஏதய்யா?!


அவள் மென்னுணர்வுகளை நசுக்காதவனுடன், அவள் கொள்வது காதல் தான். ஆனால் அவள் பெயருக்குப் பின்னால் இருப்பவனை(யும்) விலக மறுத்தால், அதுதான் கள்ளக் காதல்.
Thilakavathi said…
aeeeeeeeeee
aethavathu thamizhla ezhuthuppa onnume puriyalai
Thilakavathi said…
aeeeeeeeeee
aethavathu thamizhla ezhuthuppa onnume puriyalai