மனக்காளான்
ஒரு ‘மேண்டில்’ உடைபடும்போது ஓர் அறிவாளி உருவாகிறான்!
பரவசமடைகிற விஷயங்கள் சாதாரணமாகிப் போவதும், சாதாரண விஷயங்களில் பரவசம் கொள்வதும்தான் வயதாவதன் அடையாளமா...?! தீபாவளி வாழ்த்துகள்...!
கிடை மட்டமாக ராக்கெட் விடும் சிறுவர்களை கொஞ்சம் எச்சரிக்கையாக வளர்க்க வேண்டும்.
எத்தனை பேரால் காதலிக்கப்பட்டிருக்கிறோமென்பது திருமண அழைப்பிதழை விநியோகிக்கையில்தான் தெரிய வருகிறது!
ஊறுகாய் சில்லிட்டிருக்கிறதென்றால் புதியதாக ரெஃப்ரிஜிரேட்டர் வாங்கி இருக்கிறார்களென்று அர்த்தம்.
நாஞ்சிலுக்கு விருது கொடுத்தால் ஜெயன் ‘சமையல்கட்டின் கலைஞன்’ என்று புக் எழுத வேண்டி இருக்கும்.
எதிரி கூட உங்களைக் கண்டால் புன்னகைக்க பென்சில் மீசை வைத்துக்கொள்ளுங்கள்.
2010ம் ஆண்டின் சிறந்த ட்வீட்டுரையாளர் என்கிற விருதினை சொக்கனுக்கு வழங்குகிறேன். அவரும் திரும்ப எனக்கு வழங்குவாரென நம்புகிறேன்.
அதிகமாக லிங்க் கொடுப்பவர்களை ‘லிங்கரர்கள்’ என்றழைக்கலாமென்றிருக்கிறேன் # தமிழ்க் கொடை 56
தமிழிலக்கியத்தின் எதிர்காலமாக குப்பன் யாஹூவை அவதானிக்கிறேன்.
இரண்டு மணி நேரமாக சொக்கனின் ட்வீட் எதும் வரவில்லை. வேலை ஏதும் செய்கிறாரோ என்று பயமாக இருக்கிறது.
ஜாக்கி சேகரின் நூல்கள் எங்கு கிடைக்கும். அமேஸானில் கிடைக்கவில்லை.
அதிகாலையில் மனதில் ஒரு கவித்தீற்றல் தோன்றியது. மனைவியிடம் சொல்ல ஆரம்பித்தேன். ‘அடுப்புல பால் வச்சிருக்கேன்’ என பதறியபடி ஓடுகிறாள்.
தொப்பை என்பது ஞானத்தின் அடையாளம்!
முடியலத்துவம் தன் கூர்ம இடத்தை நோக்கி நகர்வதை அவதானிக்கிறேன். தற்பெருமையற்ற கவித்துவத்தின் சாதனை.
எவரேனும் என் முடியலத்துவ வரிகளைத் திருடி சென்னை சங்கமத்தில் வாசித்து கைதட்டல் வாங்கி விடக்கூடாதென்பதே என் வருத்தம்.
50கிராம் கோல்கேட் மீது புல்டோசரையே ஏற்றினாலும் அதிலிருந்து 100கிராம் பேஸ்ட் எடுக்க முடியாதென்பதை கேண்டிக்கு எப்படி புரியவைப்பது # குழப்பம்
லாலா மிட்டாய் கடைக்காரர்கள் விஜி விரைவில் குணமடைய கூட்டு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்...
***
முகநூல் தீற்றல்கள்
நாஞ்சிலுக்கு விருது எனும் செய்தியை முதலில் ஜெயன்தான் போனில் சொன்னார். ‘போங்க சார்... நான் பேப்பர்ல வந்தாதான் நம்புவேன். நாளைக்கு காலைல திடீர்னு ‘கூடுவாஞ்சேரி கோயிந்தனுக்குன்னு’ சொன்னாலும் சொல்லிடுவாய்ங்க சார்...’ என்றேன்.
‘நீங்களாவது பரவாயில்லை... நாஞ்சில் செக் வந்தாதான் நம்புவேன்னுட்டாரு...’
***
பரமபக்தனிடம் கோபம் கொள்வது தெய்வத்திற்கு வேண்டுமானால் திருவிளையாடலாய் இருக்கலாம். தேவதைகளுக்கல்ல. # காதல் பித்து
***
‘எனக்கு வாசிப்பு வலது கண். எழுதுதல் இடது கண்’ என்றார் இலக்கிய நண்பரொருவர். ‘சுயமதிப்பீடு இருதயம்’ எனச் சொல்ல நினைத்துச் சொல்லவில்லை.
***
புத்தாண்டு சமரச உடன்படிக்கை: கேண்டி கோபமாக இருக்கும்போது ‘ஓ... ஒரு தென்றல் புயலாகி...’ பாடலை நானும், நான் ஆபிஸூக்குக் கிளம்பும்போது ‘ஒரு நாயகன் உதயமாகிறான்...’ பாடலை அவளும் பரஸ்பரம் பாடுவதில்லையென்று ஒப்பந்தம்.
***
சயனைடின் சுவையைச் சொன்னவர் இல்லை.
***
வீட்டிற்க்குள்ளேயே விபத்துக்குள்ளாகி அறுவைச் சிகிட்சைக்குட்பட்டிருக்கிறார் விஜி. தகவல் கிடைத்ததும் பதறியடித்து விஜியை அழைத்தேன்.
நான்: விஜி, எங்கம்மா இருக்கே… என்னாச்சி…?!
விஜி: கங்கா ஹாஸ்பிடல்ல இருக்கேண்டா…
நான்: எங்க விழுந்த…?!
விஜி: வீட்டுக்குள்ளதான் விழுந்தேன். கை ஒடஞ்சி போச்சி… ரெண்டு சர்ஜரி… பிளேட் வச்சி ஸ்க்ரூ போட்டிருக்காங்க…
நான்: அச்சச்சோ… என்னம்மா இது… எந்த வார்டுன்னு சொல்லு… உடனே கிளம்பி வர்றேன்…
விஜி: 213 - செகண்ட் ஃப்ளோர்… வரும்போது கால்கிலோ முந்திரி பக்கோடா வாங்கிட்டு வாடா…!
***
ஜான்சன் தூக்கியெறிந்த பொருட்களைக்கொண்டு சுந்தரி அமைத்திருந்த காதல் அரங்கத்தை ஒரு நாள் சுந்தரவேல் கண்டுபிடித்து சுருட்டால் சுடு வைத்தார். வலி தாளாமல் 'போல பொன்னஞ்செட்டிப் பயல... ஒத்த ரூபா சம்பாதிக்க துப்பில்லாத தாயோளீ... நூறு கிலோ நக போட்டு கெட்டிக்கொடுக்கதுமாதில்லா அடிக்காங்...' என்று சுந்தரி சீற அன்றோடு சுந்தரவேல் தன்... பெண்களின் மீதான ஆளுகையை விட்டு விட்டார்.(வெளிவரவே வாய்ப்பில்லாத எனது நாவலின் ஒரு பகுதி)
***
சமையலில் மனைவிக்கு உதவுகிறவர்களெல்லாம் பிற்காலத்தில் பெரிய எழுத்தாளர்களாகி இருக்கிறார்கள். இம்மீடியட் உதாரணம்: நாஞ்சில் & ஜெமோ; உருப்படியாய் எழுத முதலில் வெங்காயம் நறுக்கு’ - கேண்டி
***
நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த நண்பர் 5 கிராம் தங்க நாணயம் கொணர்ந்தார். நேற்று நண்பரொருவர் பிளாக்பெர்ரி பரிசளித்தார். இன்று வீட்டுக்கு வந்தவர் விலையுயர்ந்த ஓவியத்தைச் சுவரில் மாட்டிச் சென்றார். சமூகம் எழுத்தாளனைக் கொண்டாடத் துவங்கியிருப்பதன் அடையாளம். இக்கொண்டாட்டம் ஐபாட், ஐபேட், ஐ10 என நீட்சி கொள்வது சமூகத்திற்கு நல்லது. யோசிக்கவும்.
***
Comments
செல்வே!!! விடாதீங்க.. இதே போல கொஞ்சம் கொஞ்சாமாவது இங்கன சொல்லுங்க......
pleasssssse.....
கண்ணாலம் ஆனதுமே ஞானம் அதிகமாயிருச்சோ ?
நமது உணவகத்தில் மட்டுமே கிடைக்கும் ஸ்பெஷல் உணவு ஜப்பான் சிக்கன்!
ஹிஹிஹி, ஒரு விளம்பரம் தான்!
ட்விட்டுரையில் கட்டிப்போட்டதால்
இனிமேல் மக்கள் உங்களை
ட்விட்டர் பட்டர் என அழைப்பார்களாக :)
-Toto
அடேங்கப்பா... என்ன ஒரு கண்டுபிடிப்பு...அருமையோ அருமை
வெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கங்கள்
விவிசி
/ஒரு ‘மேண்டில்’ உடைபடும்போது ஓர் அறிவாளி உருவாகிறான்!//
‘கேண்டி’யிடம் அடிவாங்கும் போது ஒருவன் என்னவாகுவான்?