அது செல்வேந்திரன்தான்...!

பேயோன் என்ற பெயரில் எஸ்ராவைக் கிண்டலடிக்கிறார்களா...?!
நர்சிமை நக்கலடித்து பதிவு வருகிறதா...?!
பதிவர்களைக் கிண்டல் செய்து விகடனில் வருகிறதா...?!
லதானந்தைப் பற்றி எழுதி இருக்கிறார்களா...?!
பரிசல்காரனைத் திட்டியிருக்கிறார்களா...?!
சந்தேகமே இல்லை; அது செல்வேந்திரன்தான்...!

யாராவது புனைப்பெயருக்குள் ஒளிந்துகொண்டு இன்னொருவரைத் தாக்கி விட்டால், உடனே என்னை கைக்காட்டும் பிச்சைக்காரப் பயல்களின் கூட்டம் வலையுலகில் அதிகரித்து விட்டது. தின்ன சோறு செரிக்காமல் இணையத்தில் பீராய்ந்து கொண்டிருக்கும் வெட்டிப் பயல்களின் சிண்டு முடிக்கும் வேலையை அப்படியே உண்மையென நம்பி பாயைப் பிராண்டும் பதிவர்களைப் பார்க்கையில் எரிச்சலாக வருகிறது.

உண்மையில் எழுத்தின் மூலம் ஒவ்வொரு எழுத்தாளனும் தனது ஆளுமையையே மென்மையாகவோ அல்லது வன்மையாகவோ கட்டமைக்கிறான். எந்த விமர்சனத்தையும் முகத்திற்கு எதிரில் பேசுகிறவனாக, எந்த ஆத்திரத்தையும் எழுத்தில் வடித்து விடுகிறவனாகத்தான் இதுகாறும் இருந்திருக்கிறேன். இப்போது அதற்கும் நேரம் இல்லை. எழுதுகிற ஆர்வமும் இல்லை. சில அசிங்கச் சம்பவங்கள் வலையுலகில் அரங்கேறிய பிறகு பதிவன் என்று சொல்லிக்கொள்வதில் ஏற்பட்ட பெரும்கூச்சத்தால் எழுத்தூக்கமே சூம்பிப் போய்விட்டது.

தவிர, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட நட்பு வட்டத்தால் எழுதுவதைக் காட்டிலும் வாசிப்பதும், விவாதிப்பதும், பயணிப்பதுமே களிபேருவுவகை தருவதாக இருக்கிறது. வம்பு, அக்கப்போர், தெருச்சண்டை, முறைவாசல், எதைச் செய்தாவது தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளுதல், பெண்களை ஈனப்படுத்துதல் போன்ற அயோக்கியத்தனங்களின் கூடாரமாக இருக்கும் பதிவுலகில் இருந்து வெற்றிகரமாகத் தப்பித்து வெளிவந்திருக்கிறேன்.

நிம்மதியா இருக்க விடுங்கப்பூ...! ப்ளீஸ்...!

Comments

RRSLM said…
இங்கேயும் இவ்வளவு அசிங்க அரசியல் என்று வருத்தமாக உள்ளது!
// சில அசிங்கச் சம்பவங்கள் வலையுலகில் அரங்கேறிய பிறகு பதிவன் என்று சொல்லிக்கொள்வதில் ஏற்பட்ட பெரும்கூச்சத்தால் எழுத்தூக்கமே சூம்பிப் போய்விட்டது

//

வரிக்கு வரி வழிமொழிகின்றேன்.
எங்களுக்கு எதாவது பிரச்சனைன்னா தெய்வத்துகிட்ட முறையிடலாம், ஆனா அந்த தெய்வத்துக்கே ஒரு பிரச்சனைன்னா!? எங்கண்ணே போறது!
Venkatramanan said…
//புனைப்பெயருக்குள்// புனைபெயருக்குள்!

"தம்பி டீ இன்னும் வரலை!"

அன்புடன்
வெங்கட்ரமணன்
விஜி said…
நோ டென்சன் செல்வா...
sakthi said…
வால்பையன் said...
எங்களுக்கு எதாவது பிரச்சனைன்னா தெய்வத்துகிட்ட முறையிடலாம், ஆனா அந்த தெய்வத்துக்கே ஒரு பிரச்சனைன்னா!? எங்கண்ணே போறது!

கன்னாபின்னாவென ரீப்பிட்டுகிறேன்
//பேயோன் என்ற பெயரில் எஸ்ராவைக் கிண்டலடிக்கிறார்களா...?!
நர்சிமை நக்கலடித்து பதிவு வருகிறதா...?!
பதிவர்களைக் கிண்டல் செய்து விகடனில் வருகிறதா...?!
லதானந்தைப் பற்றி எழுதி இருக்கிறார்களா...?!
பரிசல்காரனைத் திட்டியிருக்கிறார்களா...?! //

நந்தா படத்தில் கருனாஸ் கோர்ட்டில் ஜட்ஜ் கிட்ட சொல்லுவாரு...ஐயா வண்ணாந்தொறயில் உள்பாவாடை காணாபோனாலும் என் மேல் கேஸ் போடுறாங்கய்யா...அத களவாடிக்கிட்டு போய் நான் என்ன செய்யப்போகிறேன் என்பார். அதுமாதிரி இந்த பதிவை படிக்கும் பொழுது புதுமாப்பிள்ளை நிலமைய நினைச்சி நினைச்சி சிப்பு சிப்பா வருது:)))
இவர்களைப் புறக்கணிப்பதே சரி.கண்டு கொள்ளவே கூடாது.
Unknown said…
selva.. come and speak with me if u see me in bus stop..
ADMIN said…
நேர் கொண்ட பார்வை.. தங்களுக்கு அர்த்தம் தெரியும் என்று நினைக்கிறேன்..!
மோனி said…
ஏன் செல்வா?
இதுக்கெல்லாம் பதில் சொல்ல ஆரம்பிச்சிட்டே?
Thamira said…
உம்மை யாரு வெளியப் போய் ‘நான் பதிவன்’ என்று சொல்லச்சொன்னது.?
Ganesan said…
விடுங்கபூ.

நீங்க எழுதுங்க,படிக்க நாங்கள் இருக்கிறோம்.

Popular Posts