புலவர் நாஞ்சில் நாடன்!
இலக்கிய விழாக்கள் நடத்துவதில் நன்றாகத் தொழிற்பட்டவர் விஜயா வேலாயுதம் அவர்கள். ஆனால், நாஞ்சிலுக்காக அவர் நடத்திய பாராட்டு விழா அத்தனைச் சுவையாக இல்லை. முத்தையாவையும், குணசேகரனையும் தவிர பேசியவர்கள் எவருக்கும் நாஞ்சிலைப் பற்றிய முழுச்சித்திரம் தெரியவில்லை. ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருத்தி ‘புலவர் நாஞ்சில்நாடன் இன்னும் பல பாடல்கள் படைத்து விடுதலை நெருப்பை அணையாமல் காக்கவேண்டும்’ என்று முழங்கினார். எய்த தமிழாசிரியை இருக்க அம்புச் சிறுமியை மன்னிக்கலாம்தான். ஆனால், அடுத்துப் பேசிய ஒரு கொடியோன் நாஞ்சில் நாடனைத் தமிழ் இலக்கிய உலகிற்கு முதன் முறையாக அறிமுகப்படுத்துவது போலப் பேசினார். தான் ஏற்கனவே வாரமலரிலும், குடும்ப மலரிலும் படித்துச் சுவைத்த சிறுகதைகளோடு ஒப்பிட்டு நாஞ்சிலார் இன்னும் கடுமையாக உழைத்து இலக்கியத்தில் அடைய வேண்டிய இடங்களைச் சுட்டிக் காட்டினார். சுடுமணற் புழுவெனத் துடித்துப் போயினர் பார்வையாளர்கள். கேண்டி செல்போனை எடுத்து வீசட்டுமாவென கேட்டுக்கொண்டே இருந்தாள். பேச்சாளர் அடுத்து நாஞ்சில் படிக்க வேண்டிய நூல்கள், தெரிந்து கொள்ள வேண்டிய எழுத்தாளர்களுக்குத் தாண்டினார். உள்ளூர்ப் பிரமுகர்களில் சிலர் வேலாயுதத்திடம் ‘இது பாராட்டு விழாதானே...?!’ என்கிற நியாயமான ஐயத்தை நிவர்த்தி செய்து கொண்டனர். இதற்கு மேல் உட்கார்ந்திருந்தால் நாஞ்சிலுக்கு நிகழும் அவமானத்தைக் கண்டு நான் வாளாவிருந்தேனென வரலாறு நிந்திக்குமென்பதால் கிளம்ப முடிவெடுத்து பக்கத்திலிருந்தவரிடம் பேச்சாளர் யாருங்க என்றேன் ‘தமிழ்த்துறைத் தலைவர் - பாரதியார் பல்கலைக்கழகம்’ என்று பதில் வந்தது!
***
ஊடகங்கள், கல்வி நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றின் பெருக்கத்தால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ‘ஹேப்பனிங் சிட்டி’ ஆகி இருக்கிறது கோவை. சொற்பொழிவு, உபன்யாசம், கர்நாடக சங்கீதம், மெல்லிசை, துள்ளிசை, நாம சங்கீர்த்தனம், நூல் அறிமுகம், பாராடு விழா, பொருட்காட்சி, விண்டேஜ் கார், ஏரோ ஷோ, உணவுத் திருவிழா, விளையாட்டு போட்டிகளென தினமும் எண்ணற்ற நிகழ்ச்சிகள் நகருக்குள் நடந்து கொண்டே இருக்கின்றது. பார்க்கத்தான் நேரம் இல்லை.
***
தேகம் படித்தேன். க்ரியேட்டிவிட்டி என்றால் கிலோ என்ன விலையெனக் கேட்கும் சின்னத்தனமான எழுத்து. மொன்னையான சாணி நடை. சுத்தைக் கடலையைச் சவைப்பது போலிருந்தது வாசிப்பனுபவம். நேற்றைக்கு பிலாக் எழுத ஆரம்பித்த இளம்பதிவன் கூட இதைக்காட்டிலும் சுவாரஸ்யமாய் எழுதுவான். மொத்த நாவலிலும் இலக்கியத்தரத்தில் ஒரு வாக்கியம்... அட.. ஒரு வார்த்தைக் கூட தட்டுப்படவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்தைக் கடக்கையிலும் ‘வெங்கப்பய காவடி விழுந்து விழுந்து ஆடிச்சாம்...’ என்றுதான் தோன்றியது.
இதுமாதிரி அசிங்கங்களைக் கூட்டி அள்ளவேண்டிய தலையெழுத்து மனுஷ்யபுத்திரனுக்கு. விரும்பிச் செய்திருப்பாரென்று என்னால் நம்பவே முடியவில்லை. ரோட்டில் வீசினால் கூட பிறிதொரு நபருக்கு துன்பம் நேரிடும் அபாயம் இருப்பதால் அடுப்பில் வீசினேன்.
***
வாழ்வியற் கலையின் பிதாமகனென நான் கருதும் பெர்னார்ட் ஷா; 800 ஆண்டு கால விடுதலைப் போராட்ட சரிதம்; டப்ளின் உலகிற்களித்த அரசியல் சிந்தனையாளர்கள்; பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை; செழுமையான அரசியலமைப்புச் சட்டமென அயர்லாந்து மண் எனை ஈர்க்க இருந்த நூற்றுக்கணக்கான காரணங்களுள் புதியதாக அந்நாட்டின் கிரிக்கெட் அணியும் சேர்ந்திருக்கிறது. ஜென்ம விரோதியான இங்கிலாந்துடனான வெற்றி மொத்த ஐரீஷையும் பெருமை கொள்ளச் செய்திருக்கிறது.
இந்தியாவுடனான ஆட்டம். 5 ஓவர்களுக்கு 9 ரன்கள்தாம் தேவை என்கிற சல்பி சிச்சுவேஷன். 46வது ஓவரை வீச வருகிற பவுலர், கேப்டனோடு விவாதித்து மொத்த பீல்டிங்கையும் மாற்றி அமைத்து ஆக்ரோஷத்துடன் பந்தை வீசுகிறார். இந்த ‘நெவர் கிவ்-அப்’தான் ஐரீஷ் மண்ணின் ஆதார குணம்.
***
கோவையில் மீண்டும் ஒரு சிறுமி சிதைக்கப்பட்டிருக்கிறாள். கொலையாளி ஏற்கனவே ஒரு பெண்ணைக் கொன்று புணர்ந்தவன் என்கிறார்கள். நெக்ரோபிலியா!
கமிஷனர் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார். எட்டு வயதுச் சிறுமியிடம் வீட்டின் கார் டிரைவர் வேலையைக் காட்டி இருக்கிறான். முஷ்டியை முறுக்கி மூக்கில் ஓரே குத்து. மூக்குடைந்து ரத்தம் கொட்டி டிரைவர் நிலை குலைந்த நேரத்தில் சிறுமி தப்பித்து விட்டாள். விசாரித்ததில் சிறுமி மலேசியாவில் படித்தவள் என்பது தெரிய வந்தது. மார்ஷியல் ஆர்ட்ஸ் மலேசிய கல்வி முறையில் கட்டாய பாடமாம்.
குட் டச், பேட் டச்; தற்காப்புக் கலைகள், நீச்சல் போன்றன கலிமிகு வாழ்வின் கட்டாய தேவைகள். நீச்சல் தெரிந்திருந்தால் கால்வாயில் தள்ளி விடப்பட்ட முஸ்கினும், ரித்திக்கும் பிழைத்திருக்க வாய்ப்புண்டு.

Comments
http://kopunniavan.blogspot.com
அன்புடன்
வெங்கட்ரமணன்
விழாவில் மரண மொக்கை போட்டவர் த.து. தலைவர் இல்லையாம். அவர் வர முடியாததால் அவர் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட நபராம்!
எதிர்பாராதவிதமாக அப்பொழுது யுவராஜ் பவர்பிளே எடுத்ததனால் மொத்த ஃபீல்டிங்கையும் மாற்றவேண்டிய கட்டாயம்
---------
நலமா நண்பரே!
இன்னும் சாருவிடம் இருந்து எதிர்வினை வரவில்லையா..?!#டவுட்டு
தோல்வியடைந்திருந்தாலும் அவர்கள் பெருமைப்பட வேண்டிய ஆட்டம் அது.
யூசுப் பதான் வந்து 2 சிக்ஸ் அடிக்கும் வரைக்கு டென்ஷனாவே இருந்திச்சு
உங்கள் விமர்சனத்தைப் பற்றிச் சொல்ல எனக்கு எதுவும் இல்லை.
ஆனால் நாவலில் நாக்குப்போடுவதைப் பற்றிய இடமொன்றில் சாரு சொல்லும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் மூச்சுப் பிடிப்பேன் என்பது போன்ற வரிகள் மிகவும் நுண்ணியவை.
பாரதியின் “பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை”யை எப்படிப்பட்ட நுண்ணுணர்வுடன் உணர்ந்தேனோ அப்படிப்பட்ட உணர்வுடனேயே, சாருவின் மூச்சுப் பிடிப்பு பற்றிய வரிகளை உணர்ந்தேன்.
நாவலில் அந்த வரிகளைத் சுலபமாய்த் தாண்டிப் போகக் கூட நிலை தான் பெரும்பாலானோர்க்கு வரும் என்று உணர்கிறேன்.
PS: நீங்க விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தில் ஒருவர் தானே!
//
யுவராஜ் எடுக்கவில்லை. பேட்டிங் அணி 45வது ஓவர் வரை பவர்ப்ளே எடுக்காவிட்டால், 46வது ஓவர் ஆட்டோமேட்டிக்கா பவர்ப்ளே ஆக மாறிவிடும்.
செல்வா, கடைசி ரன் வரை ஃபீல்டிங் மாற்றுவது எல்லா அணியும் செய்யும் ஒன்றுதான்.இதை நெவர் கிவ் அப்க்கான சிக்னலா எடுக்க முடியுமான்னு தெரில.. ஆனா அயர்லாந்து நல்லா டீம். அதை மறுக்கவில்லை.
நான் கல் எடுத்து நிச்சயம் வீசியிருப்பேன்.ஆழ்ந்த வாசிப்பு இல்லாமல் இருப்பவரிடம் மைக் கிடைப்பதன் விளைவு. இந்த கொடுமைகளும் நாட்டில் நடக்கின்றன.
தேகம் - உண்மைதான் நானும் வாசித்தேன். எனக்கு பிடிக்காத ஒரு நபருக்கு பரிசளித்து தண்டித்து விட்டேன்.
\\பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை....// - எனக்கு தெரியாத தகவல் நன்றி!
நண்பரே , நாக்குப்போட்ட அனுபவம் உள்ள எல்லோருக்கும் மூச்சுமுட்டும் அனுபவம் இருக்கும் , இதில் என்ன எழவு நுண்ணுனர்வு ?
கண்டதையும் , கேட்டதையும் , பகல் கற்பனைகளையும் தாண்டி சாரு எந்த புனைவில் என்ன கற்பனை செய்து எழுதியிருக்கிறார் ?
செக்ஸ் எழுதுவதுதான் இலக்கியம் என்றால் உங்கள் இடம் காமலோகம்தான்.
இன்னும் கொஞ்சம் கற்பனை செய்ய பழகுங்கள் ,
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை வரியில் தெரிவது ஆன்மாவின் உயர்வு.
சில்வியாபிளாத்தை சிபாரிக்கிறேன் .

மூக்கில் குத்தியதற்கு பதிலாக வேறு இடத்தில் குத்தியிருக்க வேண்டும்.
நாய் இனிமே யார்ட்டையும் வால்யாட்டியிருக்காது..
இதெல்லாம் இருக்கட்டும், எங்கப்பா அடுத்த சிறுகதை. ஏதோ புது மாப்பிள்ளையாச்சேன்னு கொஞ்சம் ரெஸ்டு குடுத்தா, சுத்தமாவே மறந்துட்டியே! அடுத்த கதையை சீக்கிரம் எழுதுப்பா.
PS: நீங்க விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தில் ஒருவர் தானே!
//
பின் குறிப்பு வன்(முறை) குறிப்பால்ல இருக்கு
(எல்லாம் சரிதான், அவர்கள் ஆங்கில உச்சரிப்பை புரிந்து கொள்வது, உங்கள் மண் மொழியில் சொன்னால்..'சாமி, நெம்ப கஷ்டம்..!')
அது என்ன, 'வெங்கப்பய காவடி'?
Essex சிவா