பட்டி தொட்டியெங்கும் பட்டியலடி

ட்டியல் கவிதை எழுதுவது

பாம்புக்கு பேன் பார்ப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

பல்புகளை உடைத்து பச்சடி சமைப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

பாட்டிக்கு பாலே கற்றுக்கொடுப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

யானையின் கால்களுக்கு ஆடிடாஸ் தெரிவு செய்வது போல


பட்டியல் கவிதை எழுதுவது

பூனைக்கு பாஸ்போர்ட் எடுப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

ஜக்கி வாசுதேவுக்கு ழகரம் சொல்லிக்கொடுப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

பத்திரத்தை படித்து புரிந்துகொள்வது போல


பட்டியல் கவிதை எழுதுவது

ராகுல்காந்திக்கு பெண் பார்ப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

எம்.எல்.எம் ஆசாமியிடம் இலக்கியம் பேசுவது போல


பட்டியல் கவிதை எழுதுவது

லேவாதேவிக்காரியைக் காதலிப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

பெண்பிள்ளைகளுடைய எதிர்வீட்டுக்காரனின் புன்னகை கிடைப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

கல்யாணம் கழிஞ்ச நடிகைக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

மரவட்டைக்கு மலைப்பாம்பின் சட்டையை அணிவிப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

பேச்சுப்போட்டிக்கு மன்மோகனை நடுவராக இருத்துவது போல


பட்டியல் கவிதை எழுதுவது

வீட்டுக்கடன் கிடைப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

பட்டி டிங்கரிங் பார்ப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

பட்டாயாவில் பஞ்சாமிர்தம் விற்பது போல


ஒரு நக்கல் சிரிப்பு

ஒரு மொன்னை கத்தி

ஒரு முருங்கைக்காய்

ஒரு டயாப்பர்

ஒரு அனால்ஜின்

ஒரு எஸ்.எம்.எஸ்

பட்டியலுக்கு போதுமானதாயிருக்கிறது


சிறு தும்மல்

சிறு கதறல்

சிறு பிளிறல்

சிறு கமறல்

சிறு உதறல்

சிறு சலம்பல்

பட்டியலுக்கு காரணமாயிருக்கிறது


சின்ன பலப்பம்

சின்ன கரித்துண்டு

சின்ன செங்கல்

சின்ன நாமக்கட்டி

சின்ன ஆணி

சின்ன பிரஷ்

பட்டியலுக்கு வேண்டியதாயிருக்கிறது


பெரும் நப்பாசை

பெரும் பதட்டம்

பெரும் உஷ்ணக்கடுப்பு

பெரும் நெஞ்செரிச்சல்

பெரும் பவுத்திரம்

பெரும் கொலவெறி

பட்டியலுக்கு தேவையாயிருக்கிறது


பட்டியல் ஒரு சமகால சீற்றம்

பட்டியல் ஒரு சமகால அவஸ்தை

பட்டியல் ஒரு சமகால துர்கனவு

பட்டியல் ஒரு சமகால சைத்தான்

பட்டியல் ஒரு சமகால சரவல்

பட்டியல் ஒரு சமகால சங்கடம்


பட்டி

தொட்டியெங்கும்

பட்டியலடிப்போம்!


(மாதாமாதம் 15 பக்கங்களுக்கு மேல் பட்டியலிட்டு மரங்களின் தியாகத்தை அர்த்தப்படுத்தும் சமகால பட்டியல் உச்சத்திற்கு சமர்ப்பணம்)

Comments

சிரிக்க வைக்கும் உவமைகள்..!! அருமை..!!
Prabu Krishna said…
ஹா ஹா ஹா அருமை சார்.
shri Prajna said…
why this கொலவெறி boss பட்டியல் கவிதை மேல..ஆனாலும் நல்லாயிருக்கு உங்க பட்டியல்..
vanila said…
//(மாதாமாதம் 15 பக்கங்களுக்கு மேல் பட்டியலிட்டு மரங்களின் தியாகத்தை அர்த்தப்படுத்தும் சமகால பட்டியல் உச்சத்திற்கு சமர்ப்பணம்)//

புரிபடவில்லை.புரியவேண்டும் என்று கண்டிப்பாக அவசியமுமில்லை.