முத்தமிழை விற்றவராம்

அலுவலக நண்பர் ஒருவர் கலைஞரின் தீவிர அபிமானி. கலைஞரின் பிறந்த நாளுக்கு தாம் குடியிருக்கும் பகுதியில் ஒரு ஹோர்டிங் வைக்க இருப்பதாகவும் அதற்கு ஒரு நல்ல கவிதை எழுதி தாருங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். கொஞ்சம் எழுத தெரிந்தவனாக காட்டிக்கொள்வதில் இருக்கும் பெரிய அவதி. நண்பருக்கு கல்யாணம் நோட்டிஸ் அடிக்கனும் 'கவித' வேணும் என்பார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் 'பூமாலை கழுத்திலாட, புன்னகை உதட்டிலாட, அடுத்த வருஷம் தொட்டிலாட' கவிதைகளை எழுதும் அளவிற்கு எனக்கு புலமை பத்தாது என எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார்கள். இவரும் அந்த ரகம். நான் ஒன்றும் பெரிய கவிஞன் அல்ல தவிரவும் எனக்கு கலைஞர் மேல் ஒன்றும் நல்ல அபிப்ராயம் எல்லாம் கிடையாது என எவ்வளோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. நீங்க எழுதினா நல்லத்தான் இருக்கும் எதுனா எளுதி கூடுங்க சார் என அவர் கேட்க,

"உத்தமராம் கலைஞர்
முத்தமிழ் வித்தகராம்
முத்தமிழையும் விற்றவராம்

மும்மனைவி கண்டவன்
முனைப்பான முன்னவன்
தமிழ் நாட்டின் மன்னவன்"

என்று இரண்டு வரிதான் எழுதி இருப்பேன். பேப்பரை பிடுங்கி கடாசி 'ங்கொய்யால' குறிச்சி பக்கம் வந்தன்னா சீவகட்டை பிஞ்சிடும் என கத்திவிட்டு போனார். சீவகட்டை என்பது 'விளக்குமாறு' என்பதை விசாரித்து தெரிந்துகொண்டேன். 'ங்கொய்யால' என்றால்...!

Comments

Anonymous said…
//'ங்கொய்யால' என்றால்...!//

போடா பொறம்போக்கு-ன்னு அர்த்தம் :)
Anonymous said…
பன்றி போல்
பல குட்டி பெற்றவனாம்,
குட்டிகளால் பல
உயிர்களை பறித்தவனாம்.

தொண்டர்க்கு நெஞ்சிலே
இடம் தந்தவனாம்,
குண்டர்களுக்கு
பதவிசுகம் தந்தவனாம்.
Anonymous said…
may be auto come to your home
Anonymous said…
///////
selvendhiran said...
may be auto come to your home
///////

this is wrong

selvendhiran said...
auto will come to your home
Anonymous said…
பேர சொன்னா nantru
////////////
this is wrong ???????
////////////////

did u mean to say grammer or certainty of auto ?????

if certainty there then we can use "will" .

(ok i used present ..as grammer it may wrong ..)
Anonymous said…
///
பேர சொன்னா வம்பு said...
this is wrong???
///

Auto may come to u r home!!
is it right ?????
with out certainty ..ha haahaa

"Nakeera" solum pathilai !!!!!

Popular Posts