டிராஃபிக் ராமசாமிக்கு பதவி கொடுங்கள்

சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டிய கட்டிடங்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிலிருந்து கட்டிடங்களைக் காப்பாற்றும் முயற்சியாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைத்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை நியாயமற்றது, ரங்கநாதன் தெரு பணமுதலைகளைக் காப்பாற்ற முயற்சிக்கிறது என பரவலான குற்றசாட்டு எழுந்துள்ளது. நடைபாதை வியாபாரம் செய்து பிழைக்கும் சாமான்யன் 'சரோஜாக்கா சாமாநிகாலோ' என நொடியில் அகற்றப்படுகிறான். ஆனால் ஜனசந்தடிமிக்க வணிக பகுதியில் விதிகள் அலட்சியமாக மீறப்பட்டுள்ளது. சென்னையில் இவர்கள் காப்பாற்றப்பட்டால் தமிழகத்தின் பிற பெருநகரங்களின் விதிமுறைமீறல்களுக்கும் இது ஒரு முன்மாதிரி ஆகிவிடும் அபாயம் இருக்கிறது.

இம்மாதிரி கட்டிடங்களை அவரவர் சொந்த செலவில் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் இடித்துவிடவும், இடிப்பதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் விதிமீறல்களுக்கு தக்க தண்டனையும் வழங்கப்படவேண்டும். சுற்றுசூழலுக்கு ஏற்படும் மாசிற்கு ஒவ்வொருவரும் ஆயிரம் மரங்களை நட்டு பராமரிக்கவும் உத்தரவிடுவதுதான் நியாயமான நடவடிக்கை. ப்ரைம் டைமில் பல லட்சம் கொட்டிக்கொடுக்கும் இந்த முதலைகள் தாங்கள் செய்த குற்றங்களுக்காகவும் கொஞ்சம் செலவழிக்கட்டுமே.

வாழ்க்கை நெருக்கடியில், சொந்த வீட்டுக்கனவில் அரும்பாடு பட்டு வீட்டுக்கடன் வாங்கி கட்டிய வீட்டை பறிகொடுக்க வேண்டுமே என பதைபதைப்பில் இருக்கும் நடுத்தரவர்க்கங்கள் பாதிக்கப்படாமல் விதிமுறை மீறல்களுக்கு அபாரதம் மட்டும் வாங்கிகொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீட்டு உரிமையாளருக்கு ஒன்றுக்கு மேல் வீடு இருந்தால் கருணை காட்டாமல் இடித்துவிட வேண்டும்.

"அலட்சியம் ஒரு பொது எதிரி" இந்த விதிமீறல்களுக்கு காரணமாய் இருந்த பல்வேறு அதிகாரிகள் தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்கள் என்கிறார்கள். உடனடியாக அவர்கள் சேர்த்த சொத்துக்களை முடக்குவதுடன், பென்ஷன் பணத்தையும் நிறுத்திவிட வேண்டும். அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் இது போன்ற உண்மைகளை வெளியுலகத்திற்கு எடுத்து வந்த டிராஃபிக் ராமசாமிக்கு 'சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில்' உயர்பதவி அளிக்கப்படவேண்டும்.

'சட்டம் தன் கடமையை செய்ய சட்டசபை தடையாக இருக்ககூடாது'

Comments

Anonymous said…
nallaa irukku! :)
"அலட்சியம் ஒரு பொது எதிரி"

அருமையான வரி.

சிறப்பாக எழுதி உள்ளீர்கள்.

ஆனால் நம் எண்ணெமெல்லாம் நிலாவிற்கு ஆசை படும் சின்ன குழந்தையைப் போல் தான்.
நந்தா said…
முதன் முதலாக உங்கள் வலைப் பூவிற்கு வருகிறேன். நஅல்ல பதிவு இது.

ஆனால் இது நடக்குமா என்ற ஆதங்கம் எழுகிறது. இந்த கமிட்டி பற்றி கேட்டதிற்கு இதில் முதல்வர் "மக்களின் நலம் கருதியும்" என்ற வர்த்தையையும் சேர்த்து போட்டுள்ளார். எனக்கு பற்றிக் கொண்டு வருகிறது.

1 கொலையை பண்ணா ஆயுள்தண்டனை. 10 கொலையை பண்ணா பொது மன்னிப்பு எனும் கிறுக்குத்தனமாய்தான் தோன்றுகிறது.
Unknown said…
NO ONE RECOGNISES Thiru.TRAFFIC RAMASAMY .His life was in danger some months back but he still continues the public service.Not even an NGO or a Service Organisation is morally supporting his cause as HIGH COURT could only render justice but not intervene in the day to day activities of the corrupt people.
Hats off to Trffic Ramasamy !