அய்யோடிகளின் கதை

பள்ளிக்கூடம் க்ளைமாக்ஸில் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார்? - ஊரிலிருக்கும் ஜெபராஜ் செல்போனில் அழைத்து கேட்டபோது நேரம் நள்ளிரவைத் தாண்டி இருந்தது. நவரஸாவில் வருவானே ஒரு சந்தேகங்கள் பீடித்த சோடாபுட்டி சிறுவன் அவனும் ஜெபராஜூம் ஒன்றுதான். தனது ஐயங்களை இடம், பொருள், ஏவல் பார்க்காமல் கேட்க தயங்காதவன். சதா சந்தேகங்களுடன் அலையும் கேள்வியின் நாயகன்! சரி விஷயத்துக்கு வருகிறேன். தங்கரின் மூன்று ஹீரோக்களில் ஒருவன் நல்ல படிப்பாளி. வறுமை இறுக்கியபோதும், காதலில் தோற்றபோதும் களைத்து விடாமல், சளைக்காமல் படித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி. மற்றொருவர் எட்டு படங்கள் இயக்கி விட்ட சினிமா இயக்குனர், மூன்றாமவர் மாப்பிள்ளை பெஞ்சு வகையரா. படிப்பு ஏறாமல் விவசாயக்கூலி ஆனவர். இறுதி காட்சியில் அய்யோடியின் நிணைவோட்டத்தில் வகுப்பாசிரியர் "நீங்கள்ளெல்லாம் படிக்க வந்து ஏண்டா எங்க உயிரை வாங்கறீங்க... எங்கயாவது கூலி வேலைக்கு போக வேண்டியதுதானே?" என ஆத்திரத்தோடு இரையும் காட்சி வந்து போகும். பின் அந்த பள்ளியின் மீது மெல்ல இருள் கவிய, படம் முடிந்து போகும்.

அய்யோடி பள்ளியின் மீதும், பாடங்கள் மீதும் தீராத பயம் உடையவன். உண்மையில் பள்ளிக்கூடத்திற்கு வருவதற்கே விரும்பாத அய்யோடி, அதனாலேயே கல்வியை இழந்து விவசாய கூலி ஆகிப்போனவன் என்பது அவனது சுய சரித்திரம். ஆனால் பள்ளியின் சரித்திரத்தில் அந்த கலெக்டரைவிடவும் மிக முக்கியமானவன் இந்த அய்யோடி. பாழடைந்த பள்ளியை மீட்க தொலைந்த தோழர்களை தன் அன்பால் இழுத்து வந்த அய்யோடிதான் அந்த பள்ளியின் மிக முக்கிய மாணவன். பள்ளிகளால் புறக்கணிக்கப்பட்ட, ஆனால் பள்ளிக்கூட நிணைவுகளை என்றும் மறக்காத, மாறாத அன்பு கொள்ளும் எங்கள் ஜெபராஜைப் போன்ற அய்யோடிகள் நிணைவுக்கு வந்து அன்றிரவு தூக்கம் தொலைத்ததை ஜெபராஜிடமே எப்படி சொல்லி விளக்குவது?

Comments

வாங்க செல்வேந்திரன்,
என்ன ஆளையே பார்க்க முடியல. . .
நினைவுகளை அசைத்து நம்மை பின் திரும்ப வைக்கும் சில படங்களில் இதுவும் ஒன்று. இங்கே தொடுப்பும் கொடுத்துள்ளேன்.
selventhiran said…
வாங்க முகவை மைந்தன், வெங்கட்ராமன்
Jazeela said…
நீங்கள் பதிக்கும் போது நான் 'பள்ளிக்கூடம்' பார்க்கவில்லை அதனால் புரியவில்லை பதிவும். இன்று படிக்கும் போது படம் பார்த்த இரவு நான் தூக்கத்தில் என் பள்ளிக்கூடம் போனது சொல்ல வந்தேன் :-). நீங்களும் அப்படியே உங்க ஜெபராஜை சந்தித்து சொல்லிவிடுங்கள்.
selventhiran said…
ஜெஸிலா சொல்லிட்டேன்... ஊருக்கு வரும்போது சொல்லிட்டு வாடா பயனி (பதநீர்) எடுத்து வைக்கிறேன்னு சொன்னான்

Popular Posts