நேயர் விருப்பம்

கதைகள்
வாழ்க்கையிலிருந்தே
சுரண்டப்படுகிறதென
சாகும் வரை சொல்லிக்கொண்டிருந்த
கிழட்டு எழுத்தாளனொருவனை
பிணவறையில் சந்தித்தேன்
அவன் நகக்கண்களில்
சுரண்டிய கதைகள்
தேங்கி இருந்தது.
முட்டாப்பய
ஒழுங்கா கைகழுவுனா என்னடே?!

பக்கா முடியலத்துவம்
வேண்டுமென வந்தவளிடம்
எத்தனை பக்காவென? வினவினேன்
முழித்த முழி
மூணு பக்கா தேறும்.

மைதானத்தில்
வாய்பிளந்து கிடக்கும்
ரப்பர் பந்துகளுக்குள்
தேங்கி நிற்கும் மழைநீருக்கும்
மைதுனத்தை தாங்கி நிற்கும்
நிறம் மங்கிய நிரோத்திற்கும்
தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது
எவனாவது கோட்டிக்காரன்
கையில் கம்ப்யூட்டர்
சிக்குகையில்...

ரமேஷ்
என்றைக்காவது
செத்துவிடுவான்
என்பதை விட
இன்றைக்கு அவன்
சாகவில்லை என்பதில்
எத்தனை ஆறுதல்?!
போடலாம் என்றுதான்
போகிறார்கள்
போட்டுக்கொண்டிருந்ததால்
போட்டுத்தள்ளிவிடுகிறார்கள்
வந்தே மாதரம்.
- செல்வேந்திரன்.

Comments

Indian said…
//பக்கா முடியலத்துவம்
வேண்டுமென வந்தவளிடம்
எத்தனை பக்காவென? வினவினேன்
முழித்த முழி
மூணு பக்கா தேறும்.//

ஜூப்பர் அண்ணே!!!
Anonymous said…
என்ன இது! முடியலத்துவமே பரவாயில்லை போல!
பிணக்குழியிலிருந்து பின்னூட்டுவேன்.
ரமேஷ்
selventhiran said…
வாங்க இந்தியன், வெயிலான்.
ரமேஷ் அண்ணே, எலக்ட்ரிக் சுடுகாடுதான் உங்களுக்கு... மறந்துடுடாதீங்க